அர்ஜுன் நடித்த ‘வாத்தியார்’, ஆர்யா நடித்த ‘ஓரம் போ’, சத்யராஜ் நடித்த ‘6.2’, மற்றும் ‘நீ வேணும்டா செல்லம்’ உள்ளிட்ட வெற்றிப் படங்களை வைத்தியநாதன் ஃபிலிம் கார்டன் பேனரில் தயாரித்த வி. பழனிவேல் தற்போது ‘டாக்டர் அம்பேத்கர்’ படத்தை பிரம்மாண்ட பொருட்செலவில் தயாரிக்கிறார். இப்படத்தில் விரைவில் வெளியாக உள்ள ‘தேசியத் தலைவர்’ படத்தில் பசும்பொன் முத்துராமலிங்கத் தேவராக வாழ்ந்திருக்கும் ஜெ.எம்.பஷீர் அம்பேத்கராக நடிக்கிறார். வி. செந்தில்குமார் இயக்கத்தில் உருவாகும் இந்த வாழ்க்கை வரலாற்று திரைப்படத்திற்கு தேனிசைத் தென்றல் தேவா இசையமைக்கிறார். டாக்டர் அம்பேத்கர் பிறந்த ஊரான மத்திய பிரதேசத்தில் உள்ள மோவ், பயின்ற புனே, வாழ்ந்த மும்பை, அமைச்சராக பணியாற்றிய தில்லி, பாரிஸ்டர் பட்டம் பெற்ற லண்டன் மற்றும் அமெரிக்கா உள்ளிட்ட இடங்களில் இப்படம் படமாக்கப்பட உள்ளது. இந்திய அரசமைப்பு சட்டத்தை இயற்றியது டாக்டர் அம்பேத்கர் என்பது…
Read MoreCategory: சினி-நிகழ்வுகள்
பிரபல பாடகி சித்ரா பங்குபெறும் பிரம்மாண்ட இசை நிகழ்ச்சி
இந்நிகழ்ச்சியை முன்னிட்டு குழுவினர் பத்திரிக்கை ஊடக நண்பர்களைச் சந்தித்தனர். திரையுலகில் 47 வருடங்களைக் கடந்து, 20 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பாடல்களைப் பாடி, மக்கள் மனதில் நீங்காத இடம் பிடித்தவர் பாடகி சித்ரா. “சின்னக்குயில் பாடும் பாட்டு கேட்குதா” பாடல் பட்டி தொட்டியெங்கும் புகழ்பெற்ற நிலையில், இவர் சின்னக்குயில் சித்ரா என்றே மக்களால் அன்போடு அழைக்கப்பட்டு வருகிறார். இவர் முதன் முறையாகத் தனது ரசிகர்களைக் குஷிப்படுத்தும் வகையில், இந்த இன்னிசை நிகழ்ச்சியில் கலந்து கொள்ளவுள்ளார். இந்த பத்திரிக்கை சந்திப்பு நிகழ்வினில்…. *E Lounge Events சார்பில் வெங்கட் பேசியதாவது…* இந்த ஆண்டில் வரும் பிப்ரவரி 8ம் தேதி சென்னை YMCA நந்தனம் மைதானத்தில், இந்த லைவ் இன் கான்சர்ட் நடக்கவுள்ளது. இது இன்னிசை நிகழ்ச்சி அல்ல, நம் அனைவருக்கும் பிடித்த சித்ரா அம்மாவைக் கொண்டாடும் ஒரு விழா. 47…
Read Moreசுபாஸ்கரனின் லைகா புரொடக்ஷன்ஸ், தயாரிப்பில் உருவாகியுள்ள, முதல் மலையாளத் திரைப்படம் “L2: எம்புரான்” பட டீஸர் வெளியீடு!!
தென்னிந்தியாவின் முன்னணி தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்றான லைகா புரொடக்ஷன்ஸ், மிகவும் எதிர்பார்க்கப்படும் “L2E எம்புரான்” திரைப்படம் மூலம், மலையாளத் திரையுலகில் கால் பதித்துள்ளது. பிருத்விராஜ் சுகுமாரன் இயக்கியுள்ள இந்த திரைப்படத்தில் “தி கம்ப்ளீட் ஆக்டர்” மோகன்லால் நாயகனாக நடித்துள்ளார். பெரும் வெற்றிப் படங்களான லூசிஃபர் மற்றும் ப்ரோ டாடிக்குப் பிறகு, இயக்குநர் மற்றும் நடிகராக அவர்களின் கூட்டணியில், உருவாகியுள்ள மூன்றாவது படம் என்பதால், இப்படத்தின் மீது பெரும் எதிர்பார்ப்பு நிலவுகிறது. 2019 ல் வெளியான லூசிஃபர் படம், இந்தியாவையே திரும்பிப்பார்க்க வைத்து, பிளாக்பஸ்டர் வெற்றி பெற்றது. இப்படத்தின் தொடர்ச்சியாக, இரண்டாம் பாகமாக, “L2E எம்புரான்” ஒரு பிரம்மாண்ட சினிமா அனுபவமாக உருவாகியுள்ளது. இப்படத்தின் டீசர் வெளியீட்டு விழா, நேற்று கொச்சியில் விமரிசையாக நடைபெற்றது, இந்நிகழ்வில் மெகாஸ்டார் மம்முட்டி தலைமை விருந்தினராக கலந்து கொண்டார், மேலும் படத்தின்…
Read Moreஅனுராக் கஷ்யப்-வெற்றிமாறன் தயாரிக்கும் Bad Girl படம்! டீசர் வெளியானது..
அனுராக் கேஷ்யப் மற்றும் வெற்றிமாறன் இணைந்து கிராஸ் ரூட் பிலிம் கம்பெனி தயாரிப்பில், அஞ்சலி சிவராமன், சாந்தி பிரியா, ஹ்ரிது ஹருண், ‘TeeJay’ அருணாசலம் மற்றும் சரண்யா ரவிச்சந்திரன் நடிப்பில், வெற்றிமாறனின் உதவி இயக்குனரான வர்ஷா பரத்தின் இயக்கத்தில் உருவான Bad Girl படத்தின் டீசர் வெளியீட்டு விழா இன்று (26.1.2025) சென்னை சத்தியம் திரையரங்கில் நடைபெற்றது. டீசர் வெளியீட்டு விழாவில் படத்தின் தயாரிப்பாளர்களான வெற்றிமாறன் மற்றும் அனுராக் கேஷ்யப், நடிகர்களான அஞ்சலி சிவராமன் சாந்தி பிரியா, ஹ்ரிது ஹருண், படத்தின் எடிட்டரான ராதா ஸ்ரீதர் மற்றும் சிறப்பு விருந்தினர்களாக கலைப்புலி S தானு, இயக்குனர் மிஷ்கின், நடிகை டாப்ஸி பண்ணு ஆகியோர் விழாவில் கலந்து கொண்டு சிறப்பித்தனர். பெண்ணின் வாழ்வியலை மையப்படுத்தி எடுக்கப்பட்ட இந்த Bad Girl படத்தின் டீசரை பார்த்தபின் விருந்தினர்கள் அனைவரும் தங்களது…
Read Moreதேசிய விருது பெற்ற ஸ்ரீகாந்த் தேவா இசையில் உருவாகும் ‘மனிதம்’ உண்மையான உறவு, நட்புகளை வெளிச்சம் போட்டு காட்டுகிறது
யுவர் பேக்கர்ஸ் புரொடக்ஷன் மற்றும் காவியம் ஸ்டூடியோஸ் பேனர்களில் கிருஷ்ணராஜு கே தயாரித்து முதன்மை வேடத்தில் நடிக்கும் ‘மனிதம்’ திரைப்படத்தை ஜே புருனோ சாவியோ இயக்குகிறார். புதுச்சேரி பின்னணியில் முழுக்க புதுச்சேரி கலைஞர்கள் நடிக்கும் முதல் தமிழ் திரைப்படமான ‘மனிதம்’ படத்திற்கு தேசிய விருது பெற்ற ஸ்ரீகாந்த் தேவா இசையமைத்துள்ளார். இப்படத்தின் இசை வெளியீட்டு விழா சமீபத்தில் நடைபெற்றது. முன்னணி இயக்குநர்கள் கே. பாக்யராஜ், ஆர்.வி. உதயகுமார், அரவிந்தராஜ் இந்நிகழ்வில் பங்கேற்றனர். படத்தின் பாடல்கள் அனைவரின் பாராட்டையும் பெற்றன. திரைப்படம் குறித்து பேசிய தயாரிப்பாளரும் நடிகருமான கிருஷ்ணராஜு, “உண்மையான உறவு, நட்புகள் யார் என்பதை ‘மனிதம்’ வெளிச்சம் போட்டு காட்டுகிறது. கதையின் நாயகனுக்கு யார் நல்லவர்கள், யார் கெட்டவர்கள் என்பது எந்த தருணத்தில் எப்படி புரிகிறது என்பது படத்தின் மையக்கரு. இதை சுவாரசியமான் முறையில் திரையில் வெளிப்படுத்தி…
Read Moreஸ்ரீ தேனாண்டாள் பிலிம்ஸ் தயாரிப்பில் ‘மிஸ்டர். ஹவுஸ்கீப்பிங்’ திரைப்படம் இம்மாதம் (ஜனவரி) 24 ஆம் தேதி உலகமெங்கும் வெளியாகிறது!!
தனித்துவமான படைப்புகள் தந்த முன்னணி தயாரிப்பு நிறுவனமான ஸ்ரீ தேனாண்டாள் பிலிம்ஸ் தயாரிப்பில், இயக்குநர் அருண் ரவிச்சந்திரன் இயக்கத்தில், முன்னணி யூடியூப் படைப்பாளியான ஹரி பாஸ்கர், பிக்பாஸ் புகழ் ரயான் மற்றும் லாஸ்லியா நடிப்பில், ஜனரஞ்சகமாக உருவாகியுள்ள திரைப்படம் ‘மிஸ்டர். ஹவுஸ்கீப்பிங்’ வரும் ஜனவரி 24 ஆம் தேதி, இப்படம் உலகமெங்கும் வெளியாகிறது. இந்நிலையில் படத்தின் வெளியீட்டை ஒட்டி, படக்குழுவினர் பத்திரிக்கை ஊடக நண்பர்களைச் சந்தித்து, படம் குறித்த தகவல்களைப் பகிர்ந்து கொண்டனர். ஸ்ரீ தேனாண்டாள் பிலிம்ஸ் உரிமையாளர் என். இராமசாமி என்கிற தேனாண்டாள் முரளி பேசியதாவது…, இயக்குநர் அருண் இந்தக்கதையைப் பலமுறை எங்களிடம் சொல்லி, இறுதியாக முடிவு செய்து தயாரித்துள்ளோம். இப்படத்தை உருவாக்கும்போதே இந்தக்கால டிரெண்ட்டுக்கு ஏற்றவாறு இருப்பதுடன், குடும்பங்கள் ரசிக்கும் படமாக இருக்க வேண்டும் என முடிவு செய்தோம். ஹரி பாஸ்கர், லாஸ்லியா, ரயான்…
Read More“2K லவ்ஸ்டோரி” டிரெய்லர் வெளியீட்டு விழா !!
City light pictures தயாரிப்பில், தமிழ் திரையுலகின் பெருமை மிகு படைப்பாளியான இயக்குநர் சுசீந்திரன் இயக்கத்தில், இன்றைய நவ நாகரீக இளைஞர்களின் வாழ்வைச் சொல்லும் படைப்பாக, ரொமான்ஸ் ஜானரில் உருவாகியுள்ள திரைப்படம் “2K லவ்ஸ்டோரி”. Creative Entertainers சார்பில் தனஞ்செயன் இப்படத்தை வெளியிடுகிறார். வரும் பிப்ரவரி 14 ஆம் தேதி உலகமெங்கும் திரையரங்குகளில் வெளியாகவுள்ள நிலையில், இப்படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழா, படக்குழுவினர் கலந்துகொள்ள பத்திரிக்கை, ஊடக நண்பர்கள் முன்னிலையில் நடைபெற்றது. இந்நிகழ்வினில்… தயாரிப்பாளர் விக்னேஷ் சுப்ரமணியன் பேசியதாவது… இது எங்கள் முதல் படம். தனஞ்செயன் சார் எங்கள் படத்தைப் பார்த்து விட்டு, நானே ரிலீஸ் செய்கிறேன் என எடுத்துக்கொண்டார். மகிழ்ச்சி. சுசி சார் அவரில்லாமல் இந்தப்படம் இல்லை, மிக அட்டகாசமாகப் படத்தை எடுத்துள்ளார். இமான் சார் படத்தை முழுதாக தாங்கியிருக்கிறார். நண்பன் ஜெகவீர்…
Read Moreயாத்திசை’ இயக்குநர் தரணி ராசேந்திரனின் அடுத்த படம் குறித்தான அறிவிப்பு!
இயக்குநர் தரணி ராசேந்திரன் தனது ‘யாத்திசை’ படம் மூலம் தமிழ் சினிமாவில் புது வெளிச்சத்தை பாய்ச்சியவர். அவர் படத்தை கையாளும் திறன், கதை சொல்லல் இதெல்லாம் பார்வையாளர்களையும் சினிமாவில் வர்த்தக வட்டாரத்தினரையும் கவர்ந்துள்ளது. ’யாத்திசை’ படத்தை அடுத்து அவர் புதிய படத்தை இயக்க இருக்கிறார். இன்னும் பெயரிடப்படாத இந்தப் படத்தை ஜேகே ஃபிலிம் இன்டர்நேஷனல் சார்பில் ஜே கமலக்கண்ணன் தயாரிக்கிறார். இந்தப் படத்திற்கான பூஜை எளிமையான முறையில் நடைபெற்றது. பூஜையில் சக்தி ஃபிலிம் பேக்டரியின் விநியோகஸ்தர் பி.சக்திவேலன், ஜி.தனஞ்செயன், சித்ரா லட்சுமணன், இயக்குநர் மணித்திர பி மூர்த்தி, ’அயலி’ வெப் சீரிஸ் புகழ் இயக்குநர் முத்து, தயாரிப்பாளர் கணேஷ் காமன் மேன், யூடியூபர்ஸ் மதன் கௌரி, மிஸ்டர் ஜி.கே. மற்றும் செர்ரி உள்ளிட்ட திரையுலகப் பிரபலங்கள் கலந்துகொண்டு வாழ்த்தினர். ’யாத்திசை’ படத்தில் நம்பிக்கையூட்டும் நடிப்பை வெளிப்படுத்திய நடிகர்…
Read Moreஇயக்குநர் பாலா செதுக்கிய நடிகர் மை. பா. நாராயணன்!
தூணிலும் இருப்பார் துரும்பிலும் இருப்பார் என்று இறைவனைச் சொல்வார்கள்.அப்படி எல்லா இடத்திலும் இருப்பவராக மை.பா. நாராயணனைச் சொல்லலாம். அரசியல் மேடைகளில், ஆன்மீக உரைகளில், பட்டிமன்றங்களில், தொலைக்காட்சி விவாதங்களில், இலக்கிய, உரைகளில் என்று எல்லாவற்றிலும் முகம் காட்டுபவர். கூடுதலாக அண்மைக்காலமாக திரையுலகிலும் முகம் காட்டி வருகிறார்.அண்மையில் வெளிவந்த ‘வணங்கான்’ படத்தில் நீதிபதியாக வரும் மிஷ்கினிடம் ஒரு போக்ஸோ வழக்கு வரும். அதைத் தொடுத்து மிஷ்கினிடம் மூக்குடை படும் வழக்கறிஞராக கவனிக்கத்தக்க வகையில் ஒரு பாத்திரத்தில் நடித்திருக்கும் முகத்தைப் படம் பார்த்த அனைவராலும் மறக்க முடியாது. அவர்தான் மை.பா.நாராயணன். இதற்கு முன்பு பாலாவின் , ‘நாச்சியார்’, ‘இறுகப்பற்று’ உள்ளிட்ட 13 படங்களில் நடித்துள்ளார். மை.பா. நாராயணன் ஆனந்த விகடனில் பத்திரிகையாளராகப் பணியாற்றியவர் .இந்தத் துறையில் அவருக்கு 30 ஆண்டு கால அனுபவம் உண்டு. ஊடக விளம்பரத் துறையிலும் ஈடுபட்டவர், ஒரு…
Read Moreஇடபத் தளியிலார் – புதிய மார்க்கம் அரங்கபிரவேசமாக…
இந்திய கலை மற்றும் கலாச்சாரம் பற்றிய ஆராய்ச்சி மற்றும் பயிற்சி மையம் வழங்கும் ‘இடபத் தளியிலார் ‘ எனும் புதிய மார்க்கம் அரங்கேற்ற நிகழ்வு சென்னையில் நடைபெறுகிறது. எதிர்வரும் ஜனவரி 22ஆம் தேதி மாலை 5 மணி அளவில் சென்னையில் உள்ள மயிலாப்பூர் ஃபைன் ஆர்ட்ஸ் கலையரங்கில் நடைபெறுகிறது. இந்த நிகழ்ச்சி- தேவரடியார் மரபின் கடைசி வாரிசாக இருக்கும் பத்ம ஸ்ரீ இரா. முத்து கண்ணம்மாள் அவர்களின் முன்னிலையில் நடைபெறுகிறது. மேலும் இந்த கலாச்சார நிகழ்விற்கு தமிழ்நாடு மாநில மகளிர் ஆணைய தலைவர் திருமதி ஏ. எஸ். குமரி விஜயகுமார் அவர்களும், ‘சொல்லின் செல்வர்’ முனைவர் ஐ. எஸ். பர்வீன் சுல்தானா அவர்களும் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொள்கிறார்கள். இடபத் தளியிலார் எனும் புதிய மார்க்கத்தை… தேவரடியார்களின் இறை தொண்டு குறித்து ஆய்வு செய்து வடிவமைத்த ஆசான்.…
Read More