விஷ்ணு விஷால் ஸ்டூடியோஸ் மற்றும் வேல்ஸ் பிலிம் இன்டர்நேஷனல் தயாரிப்பில், விஷ்ணு விஷால் – ஐஸ்வர்யா லட்சுமி ஜோடி நடிப்பில், செல்லா அய்யாவு இயக்கத்தில், 2022 ஆம் ஆண்டு வெளியாகி பிளாக்பஸ்டர் வெற்றி பெற்ற “கட்டா குஸ்தி” படத்தின் இரண்டாம் பாகம் “கட்டா குஸ்தி 2” இன்று பிரம்மாண்டமான பூஜையுடன் இனிதே துவங்கியது. முன்னதாக, நேற்று இப்படத்தின் அறிவிப்பையொட்டி வெளியிடப்பட்ட ப்ரொமோ வீடியோ, ரசிகர்களிடம் பெரும் வரவேற்பைப் பெற்று, இணையம் முழுவதும் வைரலாகியது. இதில் விஷ்ணு விஷால், ஐசரி கே கணேஷ் , ஐஸ்வர்யா லட்சுமி, கருணாஸ், காளி வெங்கட், முனீஷ்காந்த் ஆகியோருடன் இயக்குநர் செல்லா அய்யாவும் தோன்றினார். வயிறு குலுங்கச் சிரிக்க வைக்கும் நகைச்சுவையுடன் அமைந்த அந்த ப்ரொமோ, இப்படமும் மிரட்டலாக இருக்கும் என்பதை வெளிப்படுத்தியது. முந்தைய பாகத்தின் கதை முடிந்திருந்தாலும், அதன் தொடர்ச்சியாக, ஸ்போர்ட்ஸ்…
Read MoreCategory: சினி-நிகழ்வுகள்
Vijay Antony Film Corporation தயாரிப்பில், அஜய் திஷன் நடிக்கும் “பூக்கி” பூஜையுடன் துவங்கியது!!
Vijay Antony Film Corporation சார்பில், ஃபாத்திமா விஜய் ஆண்டனி தயாரிப்பில், அஜய் திஷன் நடிப்பில், அறிமுக இயக்குநர் கணேஷ் சந்திரா இயக்கத்தில், ரொமான்ஸ் காமெடி ஜானரில் இளைஞர்களை கவரும் படைப்பாக உருவாகும் புதிய திரைப்படம் “பூக்கி”. இப்படத்தின் பூஜை இன்று படக்குழுவினருடன் திரை பிரபலங்கள் கலந்துகொண்டதுடன், வெகு விமர்சையாக நடைபெற்றது. இந்நிகழ்வில் இயக்குநர்கள் வசந்தபாலன், ரத்னகுமார், ‘ஓஹோ எந்தன் பேபி’ பட நாயகன் ருத்ரா, ஒளிப்பதிவாளர் சக்திவேல், இயக்குநர் ராம் மகேந்திரா ஆகியோர் கலந்து கொண்டு படக்குழுவினரை வாழ்த்தினர். இன்றைய தலைமுறை தங்களுக்குள் செல்லமாக, கொஞ்சி அழைக்கும் வார்த்தையே “பூக்கி”. அது கதைக்கு பொருத்தமாகவும் கதைக்குள்ளும் வருவதால் இப்படத்திற்கு பூக்கி என தலைப்பிடப்பட்டுள்ளது. விஜய் ஆண்டனி நடிப்பில் பெருவெற்றி பெற்ற சலீம் படத்தில் அறிமுகமாகி, ஜெயில், காரி, Miss Match (தெலுங்குப் படம்) உள்ளிட்ட படங்களுக்கு…
Read Moreகாந்தி கண்ணாடி படத்தின் செய்தியாளர் சந்திப்பில் இயக்குனருக்கு நடிகை அர்ச்சனா புகழாரம்
ஜெய் கிரண் தயாரிக்க, ஷெரிஃப் இயக்க, பாலா கதாநாயகனாக அறிமுகமாகும் படம் காந்தி கண்ணாடி. இப்படத்தில் முக்கிய வேடங்களில் நடிகை அர்ச்சனாவும், இயக்குனர் பாலாஜி சக்திவேலும் நடிக்கிறார்கள். இப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு சென்னையில் நடைபெற்றது. அதில் கலந்து கொண்ட பிரபலங்கள் பேசியதாவது : தயாரிப்பாளர் ஜெய் கிரண் பேசும் போது, “அனைவருக்கும் வணக்கம். என்னுடைய அப்பா ஸ்தபதி. 50 வருடங்களாக கோவில் கட்டும் பணியில் இருக்கிறார். அவருடைய 13 வயதிலிருந்து இந்த பணியை செய்து கொண்டிருக்கிறார். அவர் தேசிய விருது வாங்கும் போது எங்களுக்கு மிகவும் பெருமையாக இருந்தது. நான் அவருடன் இணைந்து பல வேலைகள் செய்து இருக்கிறேன். இப்போது இப்படத்தை தயாரித்திருக்கிறேன். பலர் என்னிடம் ஆம்புலன்ஸ் படத்தை தொடர்ந்து காந்தி கண்ணாடியா?என்று கேட்கிறார்கள். அதற்கும் இதற்கும் எந்த சம்பந்தமும் இல்லை. இந்த இரண்டு படங்களுமே வெவ்வேறு…
Read Moreநடிகர்கள் அசோக் செல்வன்- மிர்ணா நடிப்பில் உருவாகியுள்ள ’18 மைல்ஸ்’. இதன் புரோலாக், செலிபிரிட்டி ப்ரீமியர் ஷோவில் பாராட்டுக்களை பெற்று வருகிறது!
‘பேச்சுலர்’ படப்புகழ் சதீஷ் செல்வகுமார் இயக்கத்தில், திங்க் மியூசிக் உருவாக்கத்தில், நடிகர்கள் அசோக்செல்வன், மிர்ணா நடிப்பில் உருவாகியுள்ளது ’18 மைல்ஸ்’. இதன் புரோலாக், செலிபிரிட்டி ப்ரீமியர் சமீபத்தில் திரையிடப்பட்டது. இந்த பாடலின் கவிதைத்துவமான மனதை வருடும் உணர்வுகளுடன் கூடிய ’18 மைல்ஸ்’ஸின் பல புரோமோக்கள் வெளியாகி கடந்த சில வாரங்களாக ரசிகர்கள் மத்தியில் மிகுந்த எதிர்பார்ப்பை உண்டாக்கியது. பாடலில் கதை இடம்பெற்ற 15 நிமிட புரோலோக் காட்சிகள் ’18 மைல்ஸ்’ கதையின் காதல், நம்பிக்கை, மீண்டு வருதல் போன்ற உணர்வுகள் பற்றிய பார்வையை வழங்கியதோடு உற்சாகத்தையும் அதிகப்படுத்தியது. நடிகர் மற்றும் தயாரிப்பாளர் விஷ்ணு விஷால், ஒளிப்பதிவாளர் ரவி கே. சந்திரன், இயக்குநர்கள் ‘பூ’ சசி மற்றும் அஸ்வத் மாரிமுத்து, ஒளிப்பதிவாளர் திருநாவுக்கரசு, நடிகர்கள் கிஷன் தாஸ் மற்றும் கீர்த்தி பாண்டியன் என திரைத்துறையைச் சேர்ந்த புகழ்பெற்ற பல…
Read Moreதேசிய கிக் பாக்ஸிங் சாம்பியன்ஷிப் கோப்பை 2025, குழந்தைகள் பிரிவில் தமிழ்நாடு ஒட்டுமொத்த கோப்பையை வென்றது!
சென்னை, நேரு உள்விளையாட்டு அரங்கில் நடைபெற்ற தேசிய கிக் பாக்ஸிங் சாம்பியன்ஷிப் – குழந்தைகள் மற்றும் கேடட்கள் 2025 இல், குழந்தைகள் பிரிவில் மாநில அணி ஒட்டுமொத்த சாம்பியன்ஷிப் கோப்பையை வென்றது. இதுமட்டுமல்லாது, கேடட் பிரிவில் இரண்டாம் இடத்தைப் பிடித்ததன் மூலம் தமிழ்நாட்டு விளையாட்டு துறைக்கும் பெருமை சேர்த்துள்ளது. நாடு முழுவதிலுமிருந்து இளம் திறமையாளர்களை இந்த சாம்பியன்ஷிப் ஒன்றிணைத்துள்ளது. இதன் மூலம், கிக் பாக்ஸிங்கில் தமிழ்நாட்டின் வளர்ந்து வரும் தனது ஆதிக்கத்தையும் எடுத்துக்காட்டியுள்ளது. மாண்புமிகு துணை முதல்வர் திரு. உதயநிதி ஸ்டாலினின் தலைமை மற்றும் வழிகாட்டுதலின் கீழ் விளையாட்டு துறையை மேம்படுத்தி, இளம் விளையாட்டு வீரர்களை ஊக்குவித்து வளர்ப்பதில் நம் மாநிலம் கவனம் செலுத்தி வருகிறது. நிறைவு விழாவில் திரு. ஜே. மேகநாத ரெட்டி, ஐஏஎஸ், மெம்பர் செக்ரட்ரி ஆஃப் எஸ்டிஏடி கலந்து கொண்டு நிகழ்வுக்கு மேலும்…
Read More“கமல் சாருடன் ஒரு மீட்டிங்கிற்கு ஏற்பாடு செய்யுங்கள்” ; நூல் வெளியீட்டு விழாவில் பகிரங்கமாகவே கோரிக்கை வைத்த இயக்குநர் லிங்குசாமி
தமிழ் சினிமாவின் கமர்சியல் இயக்குநர்களில மிக முக்கியமானவர் இயக்குநர் லிங்குசாமி. ஒவ்வொரு படத்திற்கும் வித்தியாசம் காட்டி, தன் படங்களுக்கு என ஒரு தனி ரசிகர் வட்டத்தை உருவாக்கியவர். இவருக்கு இயக்குநர் என்பதையும் தாண்டி கவிஞர் என்கிற இன்னொரு முகமும் உண்டு. சொல்லப்போனால் அவருக்குள் இருந்த கவிஞர்தான் அவரை சினிமாவுக்காக சென்னைக்கு அழைத்து வந்ததே என்று சொல்லலாம். அப்படி தனக்குள் இருந்த கவிதைக்கு ஹைக்கூ வடிவம் கொடுத்து ஏற்கனவே இரண்டு தொகுப்புகளை வெளியிட்டுள்ளார் லிங்குசாமி. தற்போது அவரது ஹைக்கூ கவிதைகளின் மூன்றாவது தொகுப்பாக ‘பெயரிடப்படாத ஆறுகள்’ என்கிற பெயரில் லிங்கூ-3 புத்தகத்தை தொகுத்து எழுதியுள்ளார் இயக்குநர் லிங்குசாமி. இந்த கவிதை தொகுப்பு வெளியீட்டு விழா சென்னையில் உள்ள மியூசிக் அகாடமியில் நேற்று மாலை நடைபெற்றது இந்த நிகழ்வில் சிறப்பு விருந்தினர்களாக பட்டிமன்ற நடுவர் பேராசிரியர் கு.ஞானசம்பந்தன், இயக்குநர் கௌதம்…
Read MoreGEMBRIO PICTURES தயாரிக்கும் “பாம்” திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!!
GEMBRIO PICTURES சார்பில் சுதா சுகுமார் மற்றும் சுகுமார் பாலகிருஷ்ணன் தயாரிப்பில், அர்ஜூன் தாஸ், ஷ்வாத்மிகா ராஜசேகர், நாசர் முதன்மை பாத்திரங்களில் நடிக்க, “சில நேரங்களில் சில மனிதர்கள்” புகழ் விஷால் வெங்கட் இயக்கத்தில், வாழ்வின் வினோதங்களைப் பேசும் கமர்ஷியல் எண்டர்டெய்னர் டிரமாவாக உருவாகியுள்ள “பாம்”. வரும் செப்டம்பர் 12 ஆம் தேதி திரைக்கு வரவுள்ள இப்படத்தின் இசை மற்றும் டிரெய்லர் வெளியீடு, படக்குழுவினருடன் திரை பிரபலங்கள் கலந்துகொள்ள, பத்திரிக்கை ஊடக நண்பர்கள் முன்னிலையில் கோலாகலமாக நடைபெற்றது. GEMBRIO PICTURES சார்பில் ஷரைலி பாலகிருஷ்ணன் பேசியதாவது… எங்கள் படத்தை வாழ்த்த வந்த அனைவருக்கும் நன்றி. இது எங்கள் தயாரிப்பு நிறுவனத்தின் முதல் படம். இந்தப்படம் பார்த்தபோது எங்களுக்குப் புரிந்தது – இந்தப்படம் அனைத்து தரப்பினருக்குமானது என்பது தான்.ஒரு குறிப்பிட்ட தரப்பே பார்க்க வேண்டிய படம் அல்ல; அனைவரும்…
Read Moreயோலோ” படத்தின் இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டுவிழா !!
MR Motion Pictures சார்பில் மகேஷ் செல்வராஜ் தயாரிப்பில், இயக்குநர் S. சாம் இயக்கத்தில், புதுமுகம் தேவ் நாயகனாக நடிக்க, மனதை இலகுவாக்கும் ரொமான்ஸ் காமெடி ஜானரில், ஃபேண்டஸி கலந்த கலக்கலான கமர்ஷியல் எண்டர்டெயினராக உருவாகியுள்ள திரைப்படம் “யோலோ”. வரும் செப்டம்பர் 12 ஆம் தேதி திரைக்கு வரவுள்ள இப்படத்தின் இசை மற்றும் டிரெய்லர் வெளியீடு, படக்குழுவினருடன் திரை பிரபலங்கள் கலந்துகொள்ள, பத்திரிக்கை ஊடக நண்பர்கள் முன்னிலையில் கோலாகலமாக நடைபெற்றது. நிகழ்வில் பேசியவர்கள் தயாரிப்பாளர் மகேஷ்: எங்கள் படத்தை வாழ்த்த வந்த திரை ஆளுமைகளுக்கு நன்றி. படம் இப்போது தான் ஆரம்பித்தது போல உள்ளது, முடிந்து இறுதிக்கட்டத்திற்கு வந்துவிட்டது. அமீர், சமுத்திரக்கனி சார் நிறைய ஆதரவு தந்தார்கள். ஒளிப்பதிவாளர் சூரஜ் பற்றி ஏன் அதிகம் பேசுகிறோம் என்று படம் பார்க்கும் போது உங்களுக்குத் தெரியும். ஆகாஷ் மற்றும்…
Read Moreஇசையமைப்பாளர் போபோ சசியின் ‘பிஃபோர் ஐ ஃபேட் அவே’ (Before I Fade Away) இசை ஆல்பம் வெளியீடு
Music Video▶️ https://youtu.be/gtiwb1PGOhQ?si=7B7uZBGxBH8sIRLK இசையமைப்பாளர் போபோ சசி, இயக்குநர் யூகி பிரவீன், பாடகி அக்ஷிதா சுரேஷ், இனாரா புரொடக்ஷன்ஸ் கூட்டணியில் உருவான ‘பிஃபோர் ஐ ஃபேட் அவே’ (Before I Fade Away) சுயாதீன இசை ஆல்பத்தின் வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. இந்நிகழ்வில் இசையமைப்பாளர் முரளி இசை ஆல்பத்தை வெளியிட, இசையமைப்பாளர் சி. சத்யா மற்றும் இசையமைப்பாளர் ஸ்ரீகாந்த் தேவா இணைந்து பெற்றுக் கொண்டனர். திரையிசை பாடல்களுக்கு நிகரான வரவேற்பை தற்போது சுயாதீன இசைக்கலைஞர்கள் உருவாக்கும் இசை ஆல்பங்களுக்கும் கிடைத்து வருகிறது. இந்நிலையில் திரைப்பட இசையமைப்பாளரும், பிரபல இசைக்கலைஞருமான போபோ சசியின் இசையில் ‘Before I Fade Away’ இசை ஆல்பம் தயாராகி இருக்கிறது. இந்த இசை ஆல்பத்தை யூகி பிரவீண் இயக்க, அரவிந்த் பாலாஜி ஒளிப்பதிவு செய்திருக்கிறார். இனாரா புரொடக்ஷன்ஸ் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர்…
Read Moreடூரிஸ்ட் ஃபேமிலி’ இயக்குநர் அபிஷன் ஜீவிந்த் நாயகனாக நடிக்கும் புதிய படம் !!
Zion Films சார்பில் சௌந்தர்யா ரஜினிகாந்த் மற்றும் MRP Entertainment இணைந்து வழங்கும், பசிலியான் நஸ்ரேத், மகேஷ் ராஜ் பசிலியான் தயாரிப்பில், டூரிஸ்ட் ஃபேமிலி’ இயக்குநர் அபிஷன் ஜீவிந்த் மற்றும் அனஸ்வரா ராஜன் நடிப்பில் உருவாகும் புதிய படத்தின் பூஜை, கோலாகலமாக நடைபெற்றது. பிரம்மாண்டமாக நடைபெற்ற பூஜை விழாவினில் படக்குழுவினருடன் திரை பிரபலங்கள் சசிகுமார், சிம்ரன், RJ பாலாஜி, நடிகர் மணிகண்டன், இயக்குநர் ரஞ்சித் ஜெயக்கொடி, லவ்வர் பட இயக்குநர் பிரபு ராம் வியாஸ், டிடி, ஆகியோர் கலந்துகொண்டு படக்குழுவினரை வாழ்த்தினர். முழுக்க முழுக்க நவீன கால இளைஞர்களை கவரும், அருமையான காதல் கதையாக உருவாகும் இப்படத்தை, “லவ்வர், டூரிஸ்ட் ஃபேமிலி” படங்களில் இணை இயக்குநராக பணியாற்றிய, மதன் கதை திரைக்கதை எழுதி இயக்குகிறார். இந்த வருடத்தின் மெகா பிளாக்பஸ்டர் படத்தை இயக்கிய அபிஷன் ஜீவிந்த், இப்படத்தில்…
Read More
