கலப்பை மக்கள் இயக்க நிறுவன தலைவரும், திமுக’வில் தன்னை இணைத்துகொண்டு அரசியல் களத்தில் கால் பதித்துள்ளவரும், நடிகர் விஜய்யின் முன்னாள் மேலாளருமான பி டி செல்வகுமார் அவர்களுக்கு திரையுலகம் சார்பில் கடந்த 23.1.2026 அன்று சென்னை வடபழனி பரணி ஸ்டுடியோவில் பாராட்டு விழா சென்னையில் நடைபெற்றது. திரைப்படத்துறையில் மக்கள் தொடர்பாளராக பணியாற்றிய காலத்தில் 100க்கும் மேற்பட்ட திரைப்படங்கள் வெளிவர துணையாக இருந்தவர் என்பதற்காகவும், கலப்பை மக்கள் இயக்கத்தின் மூலமாக கன்னியாகுமரி மாவட்டத்தில் 25 அரசுப்பள்ளிகளுக்கு கலையரங்கம், வகுப்பறைகள் கட்டித் தந்ததற்காகவும் இந்த பாராட்டு விழாவுக்கு ஏற்பாடாகியிருந்தது. நிகழ்வில் தமிழ்நாடு சட்டப்பேரவை சபாநாயகர் மு அப்பாவு, திரைப்பட இயக்குநரும் நடிகருமான கே பாக்யராஜ், இயக்குநர் விக்ரமன், பத்திரிகையாளர் நக்கீரன் கோபால், நடிகர் எஸ் வி சேகர், நடிகை தேவயானி, படத் தயாரிப்பாளர் ஃபைவ் ஸ்டார் கதிரேசன் உள்ளிட்டோர் கலந்துகொண்டு…
Read MoreCategory: சினி-நிகழ்வுகள்
நடிகர் சதீஷ் நினாசம் நடிக்கும் ‘ரைஸ் ஆஃப் அசோகா ‘ படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு
கன்னடத்தில் பிரபலமான நடிகர் சதீஷ் நினாசம் கதையின் நாயகனாக நடித்திருக்கும் ‘ரைஸ் ஆஃப் அசோகா’ எனும் திரைப்படம்- தாழ்த்தப்பட்ட சமுதாயத்தை சேர்ந்த இளைஞனின் போராட்டத்தை மையப்படுத்தி தயாராகி இருக்கிறது என படக் குழுவினர் தெரிவித்துள்ளனர். இயக்குநர் வினோத் வி. தோந்த்ளே ( வினோத் வி. தோண்ட்லே) இயக்கத்தில் உருவாகியுள்ள ‘ரைஸ் ஆஃப் அசோகா’ எனும் திரைப்படத்தில் சதீஷ் நினாசம், சப்தமி கௌடா, பி. சுரேஷ், சம்பத் மைத்ரேயா, கோபாலகிருஷ்ணா தேஷ்பாண்டே, யஷ் ஷெட்டி, ரவிசங்கர் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். லவித் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு பூர்ணசந்திர தேஜஸ்வி இசையமைத்திருக்கிறார். பீரியாட்டிக் ஆக்சன் என்டர்டெய்னராக தயாராகி இருக்கும் இந்த திரைப்படத்தை விருத்தி கிரியேசன் – சதீஷ் பிக்சர் ஹவுஸ் ஆகிய நிறுவனங்கள் சார்பில் தயாரிப்பாளர்கள் வர்தன் ஹரி, ஜெய்ஷ்ணவி, சதீஷ் நினாசம் ஆகியோர் இணைந்து தயாரித்திருக்கிறார்கள். விரைவில்…
Read More‘லட்சுமிகாந்தன் கொலை வழக்கு’ திரைப்படத்தின் முழுமையான படப்பிடிப்பு வெற்றிகரமாக நிறைவடைந்துள்ளது. இது படக்குழுவிற்கு முக்கியமான மைல்கல்லாக அமைந்துள்ளது. சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் படமாக்கப்பட்ட இந்தப் படம், தற்போது Post-Production பணிகளில் மும்முரமாக நுழைந்துள்ளது. முன்னதாக, திரைப்படத்தின் முதல் பார்வை (First Look) பிரபல இயக்குநர் வெற்றிமாறன் அவர்களால் வெளியிடப்பட்டது. தேர்ந்தெடுக்கப்பட்ட காட்சிகளை பார்த்த பின்னர், படக்குழுவின் உறுதியையும் நேர்மையையும் பாராட்டிய அவர், படத்தின் வெற்றிக்காக தனது வாழ்த்துகளை தெரிவித்தார். அவரது ஊக்கமும் ஆதரவும் வழங்கியதற்கு படக்குழு மீண்டும் தனது மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறது. தயாள் பத்மநாபன் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘லட்சுமிகாந்தன் கொலை வழக்கு’ திரைப்படத்தை 2M Cinemas நிறுவனத்தின் சார்பாக K.V. சபரீஷ் தயாரித்துள்ளார். D Pictures நிறுவனத்தின் சார்பாக இயக்குநர் தயாள் பத்மநாபனும் இணை தயாரிப்பாளராக இணைந்து தயாரித்துள்ள இந்தப் படத்தில் வெற்றி, ரங்கராஜ் பாண்டே, பிரகிடா, லிஸ்சி ஆண்டனி, சரவணன், ‘லொள்ளு சபா’ மாறன், இளவரசு, கவிதா பாரதி மற்றும் சுப. வீரபாண்டியன் உட்பட பலர் நடித்துள்ளனர். இதில் பெரியாரிய சிந்தனையாளரான சுப. வீரபாண்டியன், கதைக்கு வலுவான சித்தாந்த ஆழத்தை சேர்க்கும் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இயக்குநர் தயாள் பத்மநாபன் கூறும் பொழுது, “‘லட்சுமிகாந்தன் கொலை வழக்கு’ தீர்மானமான நம்பிக்கையிலிருந்து பிறந்த திரைப்படம். முழு படக்குழுவும் இந்தக் கதையின் மீது நேர்மையுடனும் நம்பிக்கையுடனும் பணியாற்றியது, படப்பிடிப்பு நிறைவடைந்தது மிகுந்த திருப்தியை அளிக்கிறது.மேலும் இந்தப் படம் பார்வையாளர்களை ஆழமாக பாதித்து, சிந்திக்க வைக்கும் என்று நாங்கள் நம்புகிறோம்.” தயாரிப்பாளர் K.V. சபரீஷ் கூறும் பொழுது, “இந்தப் படம் முதல் நாளிலிருந்தே அர்ப்பணிப்பு, உறுதி மற்றும் தெளிவான நோக்கத்தை எதிர்பார்த்தது. இந்தக் கதையின் உண்மைத்தன்மையைப் புரிந்து கொண்டு முழு அர்ப்பணிப்போடு பணிபுரிந்து நேர்மையுடன் அதை நிறைவேற்றிய படக்குழுவை நினைத்து பெருமைப்படுகிறேன். Post production பணிகளில் மும்முரமாக உள்ளோம். பார்வையாளர்களுக்கு அர்த்தமுள்ள ஒரு திரைப்பட அனுபவத்தை வழங்க ஆவலுடன் காத்திருக்கிறோம்.” தொழில்நுட்பக் குழு கதை & இயக்கம்: தயாள் பத்மநாபன் திரைக்கதை & வசனம்: கவிதா பாரதி & தயாள் பத்மநாபன் ஒளிப்பதிவு: எம்.வி. பன்னீர்செல்வம் எடிட்டிங்: வி. பூபதி இசை & பின்னணி இசை: தர்புகா சிவா கலை இயக்கம்: அன்பு மேக்கப்: குப்புசாமி உடை வடிவமைப்பு: ரமேஷ் தயாரிப்பு நிர்வாகம்: மாரியப்பன் மற்றும் குட்டி கிருஷ்ணன் மக்கள் தொடர்பு: ரேகா Post production பணிகள் தீவிரமாக நடைபெற்று வரும் நிலையில், ‘லகட்சுமிகாந்தன் கொலை வழக்கு’ ஒரு வலுவான, சமூகப் பொறுப்புள்ள திரைப்படமாக உருவெடுத்து வருகிறது. மேலும் தகவல்கள் விரைவில் வெளியிடப்படும்
‘லட்சுமிகாந்தன் கொலை வழக்கு’ திரைப்படத்தின் முழுமையான படப்பிடிப்பு வெற்றிகரமாக நிறைவடைந்துள்ளது. இது படக்குழுவிற்கு முக்கியமான மைல்கல்லாக அமைந்துள்ளது. சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் படமாக்கப்பட்ட இந்தப் படம், தற்போது Post-Production பணிகளில் மும்முரமாக நுழைந்துள்ளது. முன்னதாக, திரைப்படத்தின் முதல் பார்வை (First Look) பிரபல இயக்குநர் வெற்றிமாறன் அவர்களால் வெளியிடப்பட்டது. தேர்ந்தெடுக்கப்பட்ட காட்சிகளை பார்த்த பின்னர், படக்குழுவின் உறுதியையும் நேர்மையையும் பாராட்டிய அவர், படத்தின் வெற்றிக்காக தனது வாழ்த்துகளை தெரிவித்தார். அவரது ஊக்கமும் ஆதரவும் வழங்கியதற்கு படக்குழு மீண்டும் தனது மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறது. தயாள் பத்மநாபன் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘லட்சுமிகாந்தன் கொலை வழக்கு’ திரைப்படத்தை 2M Cinemas நிறுவனத்தின் சார்பாக K.V. சபரீஷ் தயாரித்துள்ளார். D Pictures நிறுவனத்தின் சார்பாக இயக்குநர் தயாள் பத்மநாபனும் இணை தயாரிப்பாளராக இணைந்து தயாரித்துள்ள இந்தப் படத்தில்…
Read Moreஅஸ்வின் குமார்- ப்ரியா பவானி சங்கர் நடித்திருக்கும் ‘ஹாட் ஸ்பாட் 2 மச்’ படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு
கே ஜே பி டாக்கீஸ் சார்பில் தயாரிப்பாளர் கே. ஜே. பாலாமணி மார்பன் தயாரிப்பில் இயக்குநரும், நடிகருமான விக்னேஷ் கார்த்திக் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘ஹாட் ஸ்பாட் 2 மச் ‘ படத்தில் அஸ்வின் குமார், பிரியா பவானி சங்கர், எம். எஸ். பாஸ்கர், தம்பி ராமையா, ஆதித்யா பாஸ்கர் , ரக்சன், பவானி ஸ்ரீ , பிரிகிடா சகா, சஞ்சனா திவாரி, ‘ஆதித்யா’ கதிர், விஜய் டிவி அமர் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். ஜெகதீஷ் ரவி – ஜோசப் பால் ஆகியோர் இணைந்து ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு சதீஷ் ரகுநாதன் இசையமைத்திருக்கிறார். இந்தத் திரைப்படத்தை விஷ்ணு விஷால் ஸ்டுடியோஸ் நிறுவனம் வழங்குகிறது. ஃபீல் குட் ஃபேமிலி என்டர்டெய்னராக தயாராகி இருக்கும் இந்த திரைப்படம் ஜனவரி 23 ஆம் தேதி முதல் திரையரங்குகளில் வெளியாகிறது. இதனை விளம்பரப்படுத்தும்…
Read More“தி மம்மி ரிட்டர்ன்ஸ்” படம், பூஜையுடன் துவங்கியது !!
Pepin de Raisin Productions சார்பில், P. J. கிஷோர் தயாரிப்பில், ஜெய் அமர் சிங் இயக்கத்தில் உருவாகும், அழகான காமெடி ஃபேமிலி எண்டர்டெயினர் “தி மம்மி ரிட்டர்ன்ஸ்” திரைப்படம், படக்குழுவினருடன் திரை பிரபலங்கள் கலந்துகொள்ள, விமரிசையான பூஜையுடன், இன்று கோலாகலமாக துவங்கியது. இயக்குநர் விஷ்ணுவர்தன் மற்றும் இயக்குநர் I. அகமது இவ்விழாவில் கலந்துகொண்டு படக்குழுவுக்கு வாழ்த்து தெரிவித்தனர். பல வருட கோமாவில் இருந்து மீண்டு வரும் தன் தாயை காப்பாற்ற தன் அம்மா வாழ்ந்த 1990 களின் உலகை தன் நண்பர்களுடன் இணைந்து உருவாக்குகிறான் மகன். அதில் நடக்கும் களேபரங்கள் தான் இப்படத்தின் மையம். வயிறு வலிக்க சிரித்து மகிழும் காமெடியுடன், அனைவரும் ரசிக்கும் அழகான ஃபேமிலி எண்டர்டெயினராக இப்படத்தை உருவாக்குகிறார் ஜெய் அமர் சிங். இந்த படத்தில் கிருஷ்ணா, தேவதர்ஷினி, ஸ்வாதி, கின்ஸ்லி, லொள்ளு…
Read More“வா வாத்தியார்” திரைப்பட முன் வெளியீட்டு விழா !!
ஸ்டுடியோ கிரீன் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் கே. ஈ. ஞானவேல் ராஜா தயாரிப்பில், முன்னணி நட்சத்திர நடிகர் கார்த்தி நடிப்பில், இயக்குநர் நலன் குமாரசாமி இயக்கியுள்ள திரைப்படம் “வா வாத்தியார்”. இப்படம் பொங்கல் கொண்டாட்டமாக உலகமெங்கும் ஜனவரி 14 ஆம் தேதி திரைக்கு வரவுள்ள நிலையில், படக்குழுவினர் இன்று பத்திரிக்கை ஊடக பண்பலை நண்பர்களைச் சந்தித்து படம் குறித்த அனுபவங்களைப் பகிர்ந்து கொண்டனர். இந்நிகழ்வினில் *கலை இயக்குநர் கிரண் பேசியதாவது..,* எனக்கு பிடித்த இயக்குநர் நலன், அவரது இரண்டாவது படத்தில் என்னை நடிக்க வைத்தார் அவர் இப்படத்தில் ஆர்ட் டைரக்டராக வேலை செய்யச் சொன்னார். இந்தக்கதை கேட்ட போது எப்படி இப்படத்தில் கார்த்தி நடிக்கப்போகிறார் என்று தான் தோன்றியது. நான் ரஜினி ரசிகன், என் அம்மா எம் ஜி ஆர் ரசிகர். ஷீட்டிங்கில் கார்த்தியைப் பார்த்த போது…
Read Moreகவிஞர், இயக்குனர் சீனு ராமசாமியின் கவிதை நூல் வெளியீடு
திருச்சி செயின்ட் ஜோசப் கல்லூரியில் பொங்கல் தின விழா சிறப்பாக நடைபெற்றது. இவ்விழாவில் கவிஞரும் இயக்குனருமான சீனு ராமசாமி சிறப்பு விருந்தினராகப் பங்கேற்றார். இயக்குநர் சீனு ராமசாமி எழுதியுள்ள நிலத்தவள் என்னும் கவிதை நூல் இவ்விழாவில் வெளியிடப்பட்டது. நூலை கல்லூரி முதல்வர் அருள்முனைவர் சி.மரியதாஸ், சே.ச. வெளியிட, கல்லூரி அதிபர் அருள்முனைவர் பவுல்ராஜ் மைக்கேல், சே.ச. பெற்றுக் கொண்டார். கல்லூரிச் செயலர் அருள்முனைவர் ம. ஆரோக்கியசாமி சேவியர், இணை முதல்வர் முனைவர் த.குமார், ஆசிரியர் சங்கத் தலைவர் முனைவர் டோம்னிக், அலுவலக சங்கத் தலைவர் திரு இளங்கோ சேவியர் ஜோதி, முனைவர் விமல் ஜெரால்டு, முனைவர் ஜான் கென்னடி, மாணவர் பேரவைத் தலைவர் ஆசிக் டோனி உள்ளிட்டோர் இவ்விழாவில் பங்கேற்றுச் சிறப்பித்தனர்.
Read More’திரெளபதி2’ படத்தின் ப்ரீ ரிலீஸ் ஈவண்ட்!
நேதாஜி புரொடக்ஷன்ஸ் சோலா சக்ரவர்த்தி, ஜி.எம். ஃபிலிம் கார்ப்பரேஷனுடன் இணைந்து தயாரித்த ‘திரௌபதி 2’ திரைப்படம் 14 ஆம் நூற்றாண்டின் தென்னிந்தியாவில் வேரூன்றிய காலகட்டக் கதையை திரையில் பிரம்மாண்டமாக கொண்டுவரவுள்ளது. இயக்குநர் மோகன் ஜியின் வரலாற்று ஆக்ஷன் கதையான ’திரௌபதி 2’ திரைப்படத்தில் ரிச்சர்ட் ரிஷி கதாநாயகனாகவும், ரக்ஷனா இந்துசூடன் கதாநாயகியாகவும், நட்டி நடராஜ் முக்கிய கதாபாத்திரத்திலும் நடித்துள்ளனர். பலமொழிகளில் உருவாகியுள்ள இந்தப் படம் திரையரங்குகளில் வெளியாகிறது. படத்தின் ப்ரீ ரிலீஸ் ஈவண்ட் சென்னையில் நடைபெற்றது. நிகழ்வில் பேசிய நடிகர் YG மகேந்திரன், “இந்தப் படத்தில் என்னுடைய கதாபாத்திரம் சிறியது என்றாலும் கதை கேட்ட போதே வைப் நன்றாக இருந்தது. படத்தின் பாடல்களையும் ட்ரைலரையும் தற்பொழுது பார்க்கும் பொழுது மோகன் படத்தை அடுத்த லெவலுக்கு எடுத்து சென்றுள்ளார் என தெரிகிறது. ஒளிப்பதிவாளர், இசையமைப்பாளர் என படத்தில் பணிபுரிந்த…
Read Moreகண்ணன் ரவி குழுமம் சார்பில் தயாரிப்பாளர் கண்ணன் ரவி தயாரிப்பில், தீபக் ரவி இணை தயாரிப்பில் நடிகர் ஜீவா கதையின் நாயகனாக முதன்மையான கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் ‘தலைவர் தம்பி தலைமையில்’ படத்தின் முன்னோட்ட வெளியீட்டு விழா சென்னையில் சிறப்பாக நடைபெற்றது.
இயக்குநர் நிதிஷ் சகாதேவ் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘தலைவர் தம்பி தலைமையில்’ படத்தில் ஜீவா, தம்பி ராமையா, இளவரசு, பிரார்த்தனா நாதன், ஜெய்வந்த், ஜென்சன் திவாகர், மணிமேகலை, சர்ஜின் குமார், ராஜேஷ் பாண்டியன், சுபாஷ் கண்ணன், அமித் மோகன், அனு ராஜ், சரத் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். பப்லு அஜு ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு விஷ்ணு விஜய் இசையமைத்திருக்கிறார். பொழுதுபோக்கு அம்சங்களுடன் ஃபீல் குட் ஃபேமிலி என்டர்டெய்னராக தயாராகி இருக்கும் இந்த திரைப்படத்தை கண்ணன் ரவி குழுமம் சார்பில் தயாரிப்பாளர் கண்ணன் ரவி, இணை தயாரிப்பாளர் தீபக் ரவி தயாரித்திருக்கிறார்கள். ஜனவரி 15 ஆம் தேதி முதல் உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகும் இந்த திரைப்படத்தின் முன்னோட்ட வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. இந்நிகழ்வில் துணை தயாரிப்பாளர் முத்துக்குமரன், சண்டை பயிற்சி இயக்குநர் பிரபு ஜாக்கி, நடிகர்கள்…
Read Moreபடைப்பாற்றல் மற்றும் வர்த்தகத்தை தொழில்நுட்பத்துடன் கலந்து புதிய உயரங்களை எட்டுவது குறித்து வல்லுநர்கள் விளக்கமளித்தனர்
ஃபிப்செயின், ரிவர் வென்ச்சர்ஸ், பியூர் சினிமா, பிராண்ட் சேஞ்ச், ஐபி கிளைம்ப், புரொடியூசர் பஜார் ஆகிய நிறுவனங்கள் இணைந்து “ஃபிலிம் இன்டஸ்ட்ரி 5.0: தி ஃபியூச்சர் ஆஃப் இந்தியன் சினிமா” எனும் கருத்தரங்கை சென்னையில் புதன்கிழமை (ஜனவரி 7) அன்று நடத்தின. கிண்டி சிட்கோ தொழிற்பேட்டையில் உள்ள புரொடியூசர் பஜார் அலுவலகத்தில் இது நடைபெற்றது. திரைப்படத் துறையின் எதிர்காலத்தை அலசி, ஆராய்ந்து, ஆலோசனைகளை வழங்கும் நோக்கில் ஏற்பாடு செய்யப்பட்ட இந்த நிகழ்ச்சியில், வல்லுநர்கள் பலர் கலந்து கொண்டு படைப்பாற்றலை தொழில்நுட்பத்துடன் கலந்து திரைப்படத் துறையில் புதிய உயரங்களை எட்டுவது குறித்து விளக்கமளித்தனர். இந்நிகழ்வில், தொழில்நுட்பம் படைப்பாற்றலுக்கு எவ்வாறு உதவும் என்பது குறித்து சிங்கப்பூரை சேர்ந்த ரிவர் வென்ச்சர்ஸ் நிறுவனத்தின் நிறுவனர் மற்றும் தலைமை செயல் அலுவலர் டாக்டர். விவேகா காளிதாசன் உரையாற்றினார். கதை எழுதுதல், படத்தொகுப்பு, மற்றும்…
Read More
