கதை…
புஷ்பா பட கதையை போல காட்டுக்குள் நடக்கும் ஒரு கதை தான்.. ஆனால் அதில் சந்தன மரக் கடத்தல் இருக்கும்.. இதில் யானை தந்தங்களை கடத்தி வெளிநாட்டுக்கு விற்கும் கும்பல் கதை..
சட்டவிரோதமாக யானைகளைக் கொன்று அதன் தந்தங்களை கடத்தி வெளிநாட்டுக்கு அனுப்பி கோடி கோடியாக சம்பாதிக்கிறார் சுனில்.. இதனால் இவருக்கு பல கும்பல்கள் மிரட்டல் கொடுக்கின்றனர்.. ஒரு பக்கம் காவல்துறையும் மிரட்டுகிறது.. ஆனாலும் தன் காட்டுக்குள் தனி ஆளாக உயர்ந்து நிற்கிறார்.. ஒரு கட்டத்தில் இவருக்கு பக்கபலமாக வந்து சேர்கிறார் ஆண்டனி வர்கீஸ்.. இதனால் கடத்தல் சாம்ராஜ்யத்தில் உயர்ந்து கொடி கட்டி பறக்கிறார்..
ஒரு கட்டத்தில் தன் இன மக்களுக்கு உதவி தேவைப்பட சுனிலின் உதவியை நாடுகிறார் ஆண்டனி.. ஆனால் இவருக்கு ஏமாற்றம் வரவே சுனிலை எதிர்க்க துணிகிறார் ஆண்டனி வர்கீஸ்..
அதன் பிறகு என்ன நடந்தது.? சுனிலை இவரால் எதிர்க்க முடிந்ததா.? ஆண்டனியின் முடிவு என்ன.? என்பதெல்லாம் மீதிக்கதை..

நடிகர்கள் & தொழில்நுட்ப குழு…
நாயகன் ஆன்டனி வர்கீஸ்.. பேச்சுக் குறைவு செயல் அதிகம் என்பது போல கண்களால் மிரட்டி இருக்கிறார். பல காட்சிகளில் ரிஸ்க் எடுத்து சண்டை போட்டு இருக்கிறார்..
ஏற்கனவே புஷ்பா படத்தில் வில்லனாக மிரட்டி இருப்பார் சுனில்.. இதிலும் அதேபோல கேரக்டர் தான்… அவருக்கு அல்வா சாப்பிடுவது போல பட்டையை கிளப்பி இருக்கிறார்..
கிட்டத்தட்ட படம் முடியும்போது திடீரென என்ட்ரி கொடுக்கிறார் நாயகி துஷாரா விஜயன்.. வந்து காட்சிகளில் ஆக்ஷனில் அடித்து தூள் கிளப்பி இருக்கிறார்..
பார்த் திவாரி, ஜெகதீஷ், சித்திக், ஹனன் ஷா, ஹிப்ஸ்டெர் ஆகியோரின் நடிப்பும் படத்திற்கு பக்க பலம்..
சமீபகாலமாக மலையாள படங்கள் பான் இந்திய அளவுக்கும் உலக தரத்திற்கும் கொண்டு செல்லப்படும் வகையில் மேக்கிங் சிறப்பாக உள்ளது.. ஒரு காட்டுக்குள் நடக்கும் கதையை அழகாக தத்துரூபமாக எடுத்துள்ளனர்.. முக்கியமாக யானைகளை வெட்டும் காட்சிகளில் எந்த கிராபிக்ஸ் காட்சிகளும் இல்லாமல் அதை படமாக்கி இருப்பது படத்திற்கு மிகப்பெரிய பலம்..
முதல் பாதியை விட இடைவேளைக்கு பிறகு தான் படத்தின் கதை வேகம் பிடிக்கிறது.. அதில் கொஞ்சம் மலைவாழ் மக்களின் சென்டிமென்ட் காட்சிகளும் திணிக்கப்பட்டுள்ளது..
ரவி பஸ்ரூர் இசையமைத்துள்ளார்.. பின்னணி இசையில் படம் முழுக்க தெறிக்க விட்டுள்ளார்.. ஆனால் சில இடங்களில் அதுவே கொஞ்சம் இரைச்சல் காட்டுகிறது..
ரெனாடைவ் ஒளிப்பதிவில் யானையை வேட்டையாடும் காட்சிகளில் ஒளிப்பதிவு ரசிக்க மிரள வைக்கிறது..
பால் சார்ஜ் என்பவர் இயக்கியிருக்கிறார் ஒரு பக்க அதிரடி ஆக்சன் மசாலா படத்தை கலந்து கொடுத்து இருக்கிறார்..
ஆக்சன் காட்சிகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து அதிரடியான ஒரு சண்டை படத்தை கொடுத்திருக்கிறார்.. ரத்தம் தெறிக்க தெறிக்க ஆக்ஷன் பிரியர்களுக்கு இந்த படம் ரொம்ப பிடிக்கும்..
எண்டு கார்டு போடும்போது திடீரென்று என்ட்ரி கொடுக்கிறார் இயக்குனர் லோகேஷ் கனகராஜ்.. இந்த காட்டாளன் படத்தில் இரண்டாம் பாகத்தில் லோகேஷ் தான் ஹீரோ என்பதை தெரிவிக்கிறார்…
—-
