ஹர்ஷ் மற்றும் சந்தனா தம்பதியினரின் திருமண வரவேற்பு நிகழ்வை கோலாகலமாக நடத்திய லால்வானி குடும்பம்!

சென்னை: லால்வானி குடும்பம் சார்பில் சென்னை ஈஞ்சம்பாக்கத்தில் உள்ள ஆர்.கே. கன்வென்ஷன் சென்டரில் திங்கள்கிழமை ஹர்ஷ் மற்றும் சந்தனா ஆகியோரின் பிரம்மாண்டமான திருமண வரவேற்பு நிகழ்வு நடைபெற்றது. இந்த நிகழ்வில் தமிழ்த் திரைப்படத்துறை, தொழில், சட்டத் துறை என பல்வேறு துறைகளைச சேர்ந்த முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினர். இந்த வரவேற்பு விழாவை பிரகாஷ் சந்த் லால்வானி, சஞ்சய் லால்வானி, பிரவீன் லால்வானி, சுஷில் லால்வானி மற்றும் அவர்களது குடும்பத்தினர் இணைந்து ஏற்பாடு செய்திருந்தனர். விழாவில் கலந்து கொண்ட விருந்தினர்களை அன்புடன் வரவேற்று, இனிய விருந்தோம்பலுடன் உபசரித்தனர். நிகழ்வில் சிறப்பு விருந்தினராக நாடாளுமன்ற உறுப்பினர் கோபிநாத் கலந்து கொண்டு, மணமக்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினருக்கு தனது மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்தார். தமிழ் திரையுலகில் இருந்து, நடிகர்கள் ஜெயம் ரவி, பாபி சிம்ஹா, சதீஷ், ஸ்ரீகாந்த்,…

Read More

துல்கர் சல்மான் – பூஜா ஹெக்டே காம்போவின் ‘ஸ்ரீ ஸ்ரீ’ அசத்தலான ஃபர்ஸ்ட் லுக் !!

துல்கர் சல்மான் – பூஜா ஹெக்டே ஜோடியாக நடிக்கும் பான் இந்தியா திரைப்படத்திற்கு ‘ஸ்ரீ ஸ்ரீ’ என பெயரிடப்பட்டுள்ளது… ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் புத்துணர்ச்சியும் பாஸிடிவ் உணர்வுகளும் நிறைந்ததாக வெளியாகியுள்ளது! பன்முகத் திறமை கொண்ட நடிகர் துல்கர் சல்மான் தற்போது அறிமுக இயக்குநர் ரவி நேலகுதிடி இயக்கும் புதிய பொழுதுபோக்கு திரைப்படமான #DQ41-ல் நடித்து வருகிறார். பிரபல தயாரிப்பு நிறுவனமான SLV Cinemas சார்பில் சுதாகர் செருகூரி தயாரிக்கும் இந்த திரைப்படம், அந்நிறுவனத்தின் 10-வது தயாரிப்பாக (#SLV10) உருவாகி வருகிறது. இப்படத்தின் இணை தயாரிப்பாளராக இஷான் சக்சேனா பணியாற்றுகிறார். இந்த மனதை வருடும் காதல் கலந்த பொழுதுபோக்கு திரைப்படத்தில் துல்கர் சல்மானுக்கு ஜோடியாக முதல் முறையாக பூஜா ஹெக்டே நடித்துள்ளார். காதல், நகைச்சுவை மற்றும் உணர்வுபூர்வமான தருணங்களை இணைக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு புகைப்படங்கள் ஏற்கனவே வெளியாகி ரசிகர்களிடம்…

Read More