ராவ் பகதூர் – தெலுங்கு பட விமர்சனம்..

ஸ்டோரி..

ஒரு அரசு குடும்பத்து வாரிசு சத்யதேவ்.. இவர்தான் ராவ் பகதூர்.. இளமையில் ஆடம்பரமாக வாழ்ந்த இவர் முதுமையில் நோய்வாய் பட்டு கிடக்கிறார்..

அப்போது தனக்குத் தெரிந்த ஒரு ரகசியத்தை ஒரு சந்தேகத்தை தனது நண்பரிடம் தீர்க்க முயற்ச்சிக்கிறார்.. அதற்காக இவரது நண்பரும் மருத்துவருமான விகாஸ் முப்பாலாவை
வரவழைக்கிறார்..

இந்த சந்தேகம் தீர்ந்தால் தான் என்னால் நிம்மதியாக கண் மூட முடியும் என்கிறார்.. அந்த ரகசிய சந்தேகம் என்ன? சந்தேகத்தை தீர்த்து வைத்தாரா? இறுதியில் என்ன ஆனது என்பதெல்லாம் மீதி திரைக்கதை..

 

நடிகர்கள்…

Satya Dev as Ramappa Rao Bahadur
Vikas Muppala as Dr Achari
Deepa Thomas as Renuka
Bala Parasar as Achamma
Anand Bharathi as Inspector
Pranay Vaka as Lavana
Master Kiran as Kusuma

இளமை முதுமை என இரண்டு கேரக்டரிலும் அசத்தியிருக்கிறார் சத்யதேவ்.. ஒப்பனையிலும் உடல் மொழியிலும் நடிப்பிலும் மிகச்சிறந்த பங்களிப்பை கொடுத்திருக்கிறார்..

தீபா தாமஸ்.. கொஞ்ச நேரமே வந்தாலும் நடிப்பில் கவனிக்க வைக்கிறார்..

விகாஸ் முப்பாலா மற்றும் பாலா பரசர் ஆகியோர் தங்களுக்கான கதாபாத்திரங்களை குறையில்லாமல் செய்திருக்கின்றனர்… நண்பர் விகாஷின் பங்களிப்பு படத்திற்கு கூடுதல் பலம்..

தொழில்நுட்பக் குழு..

1960 காலகட்டங்களை மையப்படுத்தி எடுத்துள்ளனர் எனவே கதையில் கொஞ்சம் நீளம் அதிகமாகவே தென்படுகிறது.. அதை குறைத்து விறுவிறுப்பை கூட்டி இருக்கலாம்

Presented by – Mahesh Babu – GMB Entertainment

Banners – SriChakraas Entertainments, A+S Movies, Better Invest Media Vision Fund, Mahayana Motion Pictures

Producers – Chinta Gopalakrishna Reddy, Anurag Reddy, Sharath Chandra, Eshwran Vijayaraghavan

Writer, Director & Editor – Venkatesh Maha

Cinematographer – Kartik Parmar

Music – Smaran Sai

Choreographer – Shravan Muppiri

PRO – Sathish Kumar, S2 Media

பின்னணி இசையும் ஒளிப்பதிவும் காலப்பின்னணியை நம்பகமாக காட்ட உதவுகின்றன…

சமரன் சாயின் இசையமைக்க கார்த்திக் பர்மர் ஒளிப்பதிவு செய்திருக்கிறார்..

கலை இயக்குநர் ரோஹன் சிங்கின் பணி சிறப்பு.. அந்தக் கால அலங்காரப் பொருட்களை காட்டி ரசிகர்களை வேப்படையச் செய்திருக்கிறார்..

இயக்குனரான வெங்கடேஷ் மஹா படத்தொகுப்பாளராகவும் பணி செய்திருக்கிறார்.. அரசர் காலத்து கதை பழிவாங்கல் துரோகம் போர் காட்சிகள் என படத்தை நீட்டிக்கொண்டு செல்லாமல் நகைச்சுவையாக வித்தியாசமாக கொடுத்திருக்கிறார்..

அதிலும் முக்கியமாக அரசர் குடும்பத்து சாதி வெறி ஆணவம் ஆகியவை குறித்து ஒரு விழிப்புணர்வையும் ஏற்படுத்தி இருக்கிறார்..

RAO BAHADUR Movie review

Related posts

Leave a Comment