ஆகாயத்தில் ஒரு தாரகை விமர்சனம் 4.5/5

கதை…

அடிப்படை வசதிகள் இல்லாத ஒரு கிராமத்தில் வாழும் சாத்விகாவை அவரது 16 வயதினிலே திருமணம் செய்து கொள்கிறார் துல்கர் சல்மான்.. முதலிரவு அன்றுதான் தன் மனைவி சாத்வீகாவுக்கு ஒரு லட்சியம் இருப்பதை அறிகிறார்.. விண்வெளி வீராங்கனை ஆக வேண்டும் அதற்காக படிக்க வேண்டும் என்கிறார் மனைவி..

மனைவியின் விண்வெளி ஆசையை நிறைவேற்றினாரா கணவன்.? என்ன நடந்தது.? அந்த கிராமத்தில் இருந்து அவர்களால் தங்களுடைய லட்சியக் கனவு எட்ட முடிந்ததா.? என்பதெல்லாம் சிறப்பான திரைக்கதை..

நடிகர்கள்…

நாயகன் – துல்கர் சல்மான்..
நாயகி – சாத்விகா வீரவல்லி (அறிமுகம்)

பஞ்சு வசனங்கள் பேசி பறந்து பறந்து ஃபைட் செய்து என எந்த ஹீரோயிசம் இல்லாமல் மனைவிக்காக போராடும் கணவன் கேரக்டர்.. அதில் தூள் கிளப்பி இருக்கிறார் துல்கர் சல்மான்.. பல கணவர்களுக்கு துல்கர் கேரக்டர் பொறாமையை ஏற்படுத்தும் எனலாம்..

சாத்விகா வீரவல்லி – இவருக்கு இதுதான் அறிமுகப்படம்.. ஆனால் எந்த விதத்திலும் நம்பும்படியாக இல்லை.. அப்படி ஒரு அருமையான நடிப்பை கொடுத்திருக்கிற நிச்சயம் இவர் விருதுகளை பெறுவார்..

அப்பாவியாக தோன்றி ஒரு கட்டத்தில் அதிரடியாக மாறி எந்த விதத்திலும் குடும்பத்தை விட்டுக் கொடுக்காத வீரவள்ளியாக வீராங்கனையாக அசத்தியிருக்கிறார்…

மற்றொரு சயின்டிஸ்ட் கேரக்டரில் ஸ்ருதிஹாசன்.. நீண்ட நாட்களுக்குப் பிறகு கனமான கேரக்டரில் கலக்கியிருக்கிறார்.. துல்கரின் அக்கா கேரக்டரில் சுவாசிக்கா.. அக்கா கணவர் மற்றும் சாத்விகா அப்பா அம்மா ஆகியோரின் நடிப்பும் சிறப்பு..

தொழில் நுட்பக் குழு…

ஒளிப்பதிவாளர் பலரின் பாராட்டுக்கு உரியவர்.. அதுபோல விண்வெளி கிராபிக்ஸ் காட்சிகளும் மனதை கொள்ளை அடிக்கிறது..

ஜிவி பிரகாஷ் இசையமைத்திருக்கிறார் பாடல்களும் பின்னணியில் செய்யும் உயிரோட்டம் கொடுத்துள்ளது… முக்கியமாக விண்வெளியில் பாயும் ராக்கெட்டை பார்க்கும் போது நமக்குள் ஜிவி பிரகாஷின் இசை பரவசத்தை ஏற்படுத்தும்..

பவன் என்பவர் இயக்கியிருக்கிறார்.. மனைவியின் லட்சிய கனவை நிறைவேற்றும் கணவன் என ஒரு வரியில் சொல்லப்பட்டாலும் அதை உணர்வுபூர்வமாக ஆழமான தாக்கத்தை ஏற்படுத்தும் வகையில் படமாக்கி இருக்கிறார்..

Related posts

Leave a Comment