ஓம் – திரை விமர்சனம் 4.5/5

கதை…

ஆந்திராவில் இருந்து விலைமதிப்பு மிக்க செம்மரங்களை கடத்தி வெளிநாட்டுக்கு விற்று கோடிக்கணக்கில் சம்பாதிக்கிறார் மம்முட்டி.. இவரின் கூட்டத்தை அடியோடு ஒழிக்க திட்டமிடுகிறார் போலீஸ் சாய் பல்லவி.. OM ஆப்ரேஷன் மோல் என்ற திட்டத்தின் மூலம் செயல்படும் சாய்பல்லவிக்கு உதவியாக தனுஷ் இருக்கிறார்..

ஒரு கட்டத்தில் மம்மூட்டியின் ரகசிய திட்டங்களை அறிந்து கொள்ள அவரிடம் தனுஷை சேர சொல்லி அதன் மூலம் கடத்தல் ரகசியங்களை அறிந்து கொள்கிறார்..

மம்மூட்டியின் கூட்டத்திற்குள் செல்லும் தனுஷ்.. அந்தக் கூட்டத்தின் திட்டங்களை அறிந்து கொண்டாரா.? ஆந்திர போலீஸ் சாய்பல்லவிக்கு அவர் எப்படி உதவினார்.? இறுதியில் என்ன ஆனது என்பதெல்லாம் கிளைமாக்ஸ்..

நடிகர்கள்…

தனுஷ் மம்மூட்டி சாய் பல்லவி மூவரும் போட்டி போட்டு நடித்துள்ளனர் ஆனால் இரண்டு நடிகர்களை காட்டிலும் சாய் பல்லவி சபாஷ் பெறுகிறார்..

தனுஷ் வழக்கம் போல ஆட்டம் பாட்டம் என இல்லாமல் பொறுப்பான கணவனாக அதிரடியான அண்டர் கவர் போலீசாக அசத்தியிருக்கிறார்..

நீண்ட நாட்களுக்கு பிறகு தமிழில் மம்முட்டி தன் நடிப்பால் ரசிகர்களை காந்தமாய் ஈர்த்து விடுகிறார்.. ஒரு கட்டத்தில் நம்பிக்கை துரோகத்தை பார்க்கும் போது தன் கண்களால் உணர்வுகளை உணர்த்தி இருக்கிறார்..

தனுஷின் தந்தையாக இந்திரன்ஸ்.. தனுஷின் மனைவியாக ஸ்ரீலீலா நடிப்பு சிறப்பு.. ஆனால் ஸ்ரீலிலாவின் வசன உச்சரிப்பு அந்த திருவண்ணாமலை பெண் கேரக்டருக்கு பொருத்தமில்லை..

தொழில்நுட்ப கலைஞர்கள்…

திருவண்ணாமலை மற்றும் ஆந்திர செம்மர கடத்தல் பகுதி உள்ளிட்டவைகளை துல்லியமாக அழகாக படம் பிடித்திருக்கிறார் ஒளிப்பதிவாளர்.. முக்கியமாக என்கவுண்டர் செய்யும் காட்சிகளில் ஒளிப்பதிவாளரின் கேமரா கைவண்ணம் வேற லெவல்..

சாய் அபயங்கர் இசையமைத்திருக்கிறார்.. வீழா வீரா பாடல் ரசிகர்களை ஆட்டம் போட வைக்கும்.. பின்னணி இசையில் தெறிக்க விட்டுள்ளார்..

அமரன் என்ற பட மாபெரும் வெற்றிக்குப் பிறகு ஓம் திரைப்படத்தை இயக்கி இருக்கிறார் ராஜ்குமார் பெரியசாமி..

வழக்கமான செம்மர கடத்தல் கதையாக இல்லாமல் அதில் தமிழர்களின் வாழ்வியல் முறை ஆந்திர காவல்துறையின் பழிவாங்கல்.. நேர்மையான மம்முட்டியின் பாசமிக்க குடும்பம்.. கணவனை தந்தையை இழந்த சாய் பல்லவியின் வாழ்க்கை முறை காவலர்களின் கண்ணியம் நேர்மை என அனைத்தையும் கலந்து ஒரு உணர்வு பூர்வமான காவியத்தை கொடுத்திருக்கிறார் இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி..

Related posts

Leave a Comment