கதை… அரசாங்க வேலைக்கு காத்திருக்கும் படித்த பட்டதாரி நாயகன் வெற்றி. குடிகார தந்தையால் வீட்டில் வறுமை வாட்டி எடுக்குறது.. இவர்களின் வீட்டு பத்திரம் வேறு கடனில் இருப்பதால் அடிக்கடி ஊர் பெரியவர் ரெட்டியார் கவிதா பாரதி மிரட்டி செல்கிறார் அப்போது வேறு வழியின்றி நண்பருடன் சேர்ந்து சின்ன சின்ன திருட்டு தொழில்களில் ஈடுபடுகிறார் வெற்றி.. அதே கிராமத்தில் வசிக்கும் பிரிகிடாவுடன் காதல் கொண்டு இருவரும் திருமணம் செய்து கொள்கின்றனர்.. இனிமேல் நீங்கள் திருட வேண்டாம் திருந்தி வாழலாம்.. கடைசியாக ஒரு முறை நம்முடைய வீட்டு பத்திரத்தை ரெட்டியாரிடம் இருந்து திருடி வாருங்கள் என கட்டளையிடுகிறார் காதல் மனைவி.. திருடு போன இடத்தில் எதிர்பாராத விதமாக ஒரு நன்மைக்காக கொலை செய்து விடுகிறார் வெற்றி.. அதன் பிறகு அவர் சிறையில் அடைக்கப்பட்டு தூக்கு தண்டனையும் விதிக்கப்படுகிறது.. அதன் பிறகு…
Read More
