இதயம் முரளி – விமர்சனம் 4.25/5…

 கதை…

அதர்வா இவரது நண்பர்கள் ரக்சன் மற்றும் டிராவிட் — ஸ்கூல் பிரண்ட்ஸ்.. ஆனால் அவர்களுக்கே தெரியாமல் மற்றொரு நண்பன் சுதாகருடன் சென்று தான் விரும்பும் பெண்ணை சைட் அடித்து வருகிறார் நாயகன் அதர்வா..

டியூஷன் சென்டர்.. டென்னிஸ் கிரவுண்ட் என பல இடங்களில் பிரீத்தியை சைட் அடித்து ஒரு கட்டத்தில் காதலை சொல்ல முயற்சிக்கிறார்.. அப்போ ஒரு ட்விஸ்ட்.. எனவே காதலை சொல்லாமல் திரும்புகிறார்..

அதன் பின்னர் கல்லூரி படிக்கும் போது.. நெக்ஸ்ட் ஹீரோயின் கயாது லோகரை சந்திக்கிறார்.. ஒரு கட்டத்தில் அவரை காதலித்து காதலை வெளிப்படுத்தும் நினைக்கும்போது அங்கும் சொல்ல முடியாத சூழ்நிலை..

இப்படியான சூழ்நிலையில் அதர்வா என்ன செய்தார் யாரை காதலித்தார்? யாரை திருமணம் செய்தார்.? அதர்வாவின் காதலை ஏற்றுக் கொண்ட ஹீரோயின் யார்.? என்பதெல்லாம் சுவாரஸ்யமான ஸ்கிரீன் ப்ளே..

நடிகர்கள்…

அதர்வா, பிரீத்தி முகுந்தன், கயடு லோகர், நட்டி, தமன், சுதாகர், நிஹாரிக்கா, ரக்சன், டிராவிட், ஏஞ்சலின், அருவி மதன், யாசா ஸ்ரீ, ஜோனிடா, மாளவிகா மோகன்

கிளீன் ஷேவ் ஸ்கூல் பையன்.. கொஞ்சம் ட்ரிம் செய்யப்பட்ட தாடியுடன் கல்லூரி பையன்.. தோற்றத்தில் மட்டுமல்ல உடல் மொழியிலும் அதர்வா அசத்தி இருக்கிறார்.. காதலை சொல்ல முடியாமல் தவிக்கும் போது இவரது அப்பா இதயம் முரளியை நினைவுபடுத்துகிறார்..

அதர்வாவின் ஃப்ளாஷ்பேக் லவ் ஸ்டோரியை கேட்பதற்காகவே வந்தது போல கோட் சூட்டில் ஸ்டைலிஷ் ஆக வருகிறார் பகத் பாசில்.. கிளைமாக்ஸ் இல் இவரது கேரக்டரிலும் ஒரு டெஸ்ட் இருக்கிறது..

டபுள் ஹீரோயின்ஸ்.. டபுள் என்ஜாய்மென்ட் என்பது போல பிரீத்தி முகுந்தன் மற்றும் கையாடு லோகர்.. இருவரும் துள்ளலான இளமையுடன் ரசிகர்களை கவர்க்கின்றனர்..

கையாடு காட்சிகள் குறைவு.. பிரீத்தி தன்னுடைய நடிப்பில் பிரகாசிக்கிறார்.. குட்டை பாவாடையில் டென்னிஸ் ஆடும் போது நெஞ்சங்களை பந்தாடுகிறார்..

நட்டி நட்ராஜ் சின்னி ஜெயந்த் ஆகியோரும் கதைக்கு உறுதுணையாக இருந்துள்ளனர்..

பரிதாபங்கள் சுதாகர் & டிராவிட், ரக்சன், தோழியாக ஏஞ்சலின், தமன் காதலியாக நிகாரிகா, டீச்சராக ஜொனிட்டா உள்ளிட்டோர் படத்தின் கலகலப்புக்கு கை கொடுத்துள்ளனர்..

தொழில் நுட்ப கலைஞர்கள்…

தமன் இசையமைத்துள்ளார்.. பாய்ஸ் படத்தில் ஐந்து நபர்களின் ஒருவராக வந்த இவர் இந்த படத்தில் முக்கியமான கேரக்டரில் நடித்திருக்கிறார்.. அவரே ஒரு பாட்டு பாடி ரசிகர்களை ஆட்டம் போட வைக்கிறார்.. தனுஷ் குரலில் ஒலிக்கும் சொல்லாத காதல் வாமா வாமா பாட்டு ரசிக்க வைக்கிறது..

மனோஜ் பரமஹம்சா கேமராவும் பிரதீப் ராகவ் படத்தொகுப்பும் செய்துள்ளனர்.. இந்தியா முதல் அமெரிக்கா வரை காட்சிகளை அழகுபடுத்தி உள்ளனர்..

பொட்டு வைத்த வட்ட நிலா பாட்டை சரியான இடத்தில் உபயோகித்து ரசிகர்களை 1990 காலகட்டத்திற்கு கொண்டு செல்கின்றனர்..

இதயம் முரளி படத்தின் தயாரிப்பாளர் ஆகாஷ் பாஸ்கரனே இந்த படத்தை இயக்கியிருக்கிறார்.. பராசக்தி உள்ளிட்ட படங்களை தயாரித்த இவருக்கு இயக்குனராக இது முதல் படம்..

அதர்வா காதலை சொல்ல நினைக்கும் போதெல்லாம் அவருக்கு ஒரு ஏமாற்றம் கொடுத்து ட்விஸ்ட் கொடுத்து எப்போது தான் இவர் காதலை சொல்ல வைப்பார் எனது நம்மையும் ஏங்க வைத்து விட்டார் ஆகாஷ் பாஸ்கரன்..

நண்பர்கள்.. காதலர்கள்.. குடும்பங்கள் என அனைத்து தரப்பினரை கவரும் வகையிலும் காட்சிகளை வைத்து ஆனந்தப்படுத்தி இருக்கிறார் ஆகாஷ் பாஸ்கரன்

Related posts

Leave a Comment