I Nobody ஐ நோ படி – மலையாள விமர்சனம்

கதை…

பிரித்திவிராஜ் மனைவி பார்வதி இவர்களுக்கு இரண்டு பெண் குழந்தைகள்.. ஒரு அப்பார்ட்மெண்டில் வசிக்கின்றனர்.. இருவரும் வேலைக்கு செல்லும் போது குழந்தைகளை பள்ளியில் விட்டு செல்வது வழக்கம்..

ஒரு நாள் வங்கிக்கு செல்கிறார் நாயகன் பிருத்திவிராஜ்.. அப்போது அங்கு ஒரு மூன்று கொள்ளையர்கள் வந்து அந்த பேங்கில் கொள்ளை அடிக்கின்றனர்.. இவரை பிணை கைதியாக வைத்து அவர்கள் தப்பித்து செல்கின்றனர்..

சில கிலோமீட்டர் தூரம் சென்ற பிறகு மூவரும் விபத்தில் இறந்து விடுகின்றனர்.. இதனால் அவர்களின் பின்னணி என்ன தெரியவில்லை.. அது மட்டும் இல்லாமல் ₹ 17 கோடி அவர்கள் கொள்ளையடித்த பணம் எங்கே என்று விவரம் தெரியவில்லை..

இதனால் போலீசின் சந்தேக பார்வை பிரித்திவிராஜ் மீது திரும்புகிறது.. இந்த செய்தி மீடியாவில் வெளியாகும் போது மக்களின் பார்வையும் பிரித்விராஜ் மீது திரும்புகிறது. இதனால் மன உளைச்சலுக்கு ஆளாகிறார்.. இத்தனை கோடி பணத்தை எங்களுக்கும் பிரித்து கொடுங்கள் என ஒவ்வொருவரும் மிரட்ட ஆரம்பிக்கின்றனர்..

ஆனால் பிரித்விராஜ் தன்னிடம் பணம் இல்லை என்று சொல்ல மேலும் விசாரணை தீவிரமாகிறது..

அதன் பிறகு நடந்தது என்ன.? கொள்ளையடிக்கப்பட்ட பணம் எங்கே.? பிரித்விராஜ் அதில் சம்பந்தப்பட்டவரா? கடைசியாக அவருக்கு நிம்மதி கிடைத்ததா என்பதெல்லாம் மீதிக்கதை.

நடிகர்கள்…

பிருத்விராஜ் சுகுமாரன் – ராஜீவன்
பார்வதி திருவோத்து – மீரா

மதுபால் – சிஐ ஜோமோன்
சங்கர் ராமகிருஷ்ணன் – Dysp அஜித்
நக்ஷத்ரா – ஜியா

படத்தின் ஆரம்பத்திலேயே ஒற்றைக் கண்ணை மூடியப்படியே வருகிறார் பிருத்விராஜ்.. அவரது கேரக்டர் அப்போதே பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்துகிறது.. மனைவி மீது கோபம்.. பிள்ளைகள் மீது பாசம் என ராஜீவன் கேரக்டரில் உருக்கமான நடிப்பை கொடுத்திருக்கிறார்..

மேலும் சமூகத்தில் தனக்கு வரும் பிரச்சினைகளை சமாளிக்க ஓடுவதும் ஓடுவதும் ஓடிக்கொண்டே இருப்பதும் ஒரு கட்டத்தில் எதிர்த்து நிற்பதும் இப்படியாக பல பரிணாமங்களில் பிரகாசிக்கிறார் பிரித்விராஜ்..

எதிரிகளை எதிர்த்து லிப்டில் போடும் ஒரு பைட் மற்றும் பஸ்ஸில் போடும் பைட் என இரண்டும் அதிரடி ஆக்சன் ரகம்..

கணவரிடம் கருத்து வேறுபாட்டால் விவகாரத்து வரை செல்லும் பார்வதி.. பேங்க் ஊழியர் மீது காதல் கொள்வதும்.. பிள்ளைகளை பிரிய முடியாமல் தவிப்பதும் அவர்களுக்காக ஏங்குவதும் என பாசமான நடிப்பை கொடுத்திருக்கிறார்

ஹக்கிம் ஷாஜகான் – அனஸ்
அசோகன் – ஜேக்கப்
விஜயராகவன் – முதல்வர்

தந்திர கால போலீசாக ஹக்கீம் ஷாஜகான்.. செக்யூரிட்டியாக அசோகன்.. முதல்வர் விஜயராகவன்.. ஆகியோரது கேரக்டர்கள் முக்கிய தூணாக அமைந்துள்ளது..

அதுபோல வழக்கு பிரச்சினையை பிரித்விராஜ் மீது திருப்பிவிடும் அந்த மெயின் போலீஸ் கேரக்டரும் ரசிக்க வைக்கிறார்.. ஒரு கட்டத்தில் அவரை முதல்வர் திட்டுவதும் சூப்பர்..

இரண்டு குழந்தைகளின் நடிப்பும் பாராட்டுக்குரியது.. வட இந்திய செக்யூரிட்டி, செக்யூரிட்டி மனைவி என அனைவரும் நடிப்பில் கவனிக்க வைக்கின்றனர்..

தொழில்நுட்ப கலைஞர்கள் …

இயக்குநர் : நிசாம் பஷீர்
தயாரிப்பாளர்கள் : சுப்ரியா மேனன், முகேஷ் ஆர். மேத்தா, சி.வி. சாரதி

எழுத்தாளர் : சமீர் அப்துல்
ஒளிப்பதிவாளர் : தினேஷ் புருஷோத்தமன்
படத்தொகுப்பாளர் : ரமீஸ் எம்.பி.
இசை : ஜேக்ஸ் பிஜாய்

ஒரு சஸ்பென்ஸ் கதைக்கு ஏற்ற பரபரப்பான இசையை கொடுத்து நம்மை ஒரு படபடப்பிலேயே படம் முழுவதும் வைத்திருக்கிறார் இசையமைப்பாளர்..

ஒரு யதார்த்தமான குடும்ப கதையாக தொடங்கி திடீரென பணம் கொள்ளை அடிக்கப்பட்டு அத்துடன் ஜெட் வேகத்தில் பறக்கும் திரைக்கதை அமைத்திருக்கிறார் இயக்குனர்..

தினேஷ் புருஷோத்தமன் ஒளிப்பதிவு செய்து இருக்கிறார்.. காட்சிகளை எதார்த்தமாக பதிவு செய்து நம் கண்களை விட்டு அகலாமல் ஒளிப்பதிவு செய்து இருக்கிறார்..

(சண்டைப்பயிற்சி : யானிக் பென், கலை கிங்சன் & அமித் ஜாலி பாஸ்டின்).. ஒரு குடும்ப கதையில் இத்தனை ஆக்ஷனா என்று எண்ணும் அளவுக்கு அழகாக செய்து இருக்கின்றனர்..

இயக்குனர் நிசாம் பஷீர் சிக்ஸர் அடித்திருக்கிறார்..

பணம் கொள்ளையடிக்கப்படுகிறது அதன் பிறகு என்ன நடக்கும் என்பதை இப்படி ஒரு பதிவு செய்ய முடியுமா என பல கேள்விகளை கண் முன் வைக்கிறார்.. கோடிக்கணக்கில் ஒருவனிடம் பணம் இருந்தால் அவனை சுற்றி சமூகம் எப்படி செயல்படும்… அவனை மிரட்ட யாரெல்லாம் வருவார்கள்.. அவர்களின் குழந்தைகளை பள்ளிக்கூடம் மாணவர்கள் கூட மிரட்டுவார்கள்.. அவனிடம் பணம் பறிக்க எத்தனை வழிகளில் எவ்வளவு சுயநலவாதிகள் வருவார்கள் என அனைத்தையும் திரைக்கதையாக கொடுத்திருக்கிறார் இயக்குனர் நிசாம் பஷீர்..

நிச்சயம் குடும்பத்துடன் ரசிக்கும் வகையில் அருமையாக கொடுத்திருக்கிறார்.

I No Body movie review

Related posts

Leave a Comment