”கில்லர் சூஃப்”- அனைவரும் விரும்பி சுவைக்கக்கூடியது – மனோஜ் பாஜ்பாய்

நெட்ஃபிளிக்ஸ் உலகின் முன்னணி ஸ்ட்ரீமிங் பொழுதுபோக்கு சேவையாகும், 190 க்கும் மேற்பட்ட நாடுகளில் 247 மில்லியன் கட்டண உறுப்பினர்களுடன் டிவி தொடர்கள், ஆவணப்படங்கள், திரைப்படங்கள் என்று உலகளவில் மக்களின் வரவேற்பு பெற்று தரமான தொகுப்புகளை வழங்கும் நெட்ஃப்ளிக்ஸில் இப்பொழுது கில்லெர் சூப் , 2024 ஆம் ஆண்டிற்கான அட்டவணையில் இணைந்துள்ளது. ரே, சொஞ்சிரியா போன்ற இந்தி திரைப்படங்களை இயக்கிய அபிஷேக் சௌபே தற்போது, “கில்லர் சூப்” என்ற இணைய தொடர் இயக்கி இருக்கிறார். இத்தொடர், மைஞ்சூர் என்ற கற்பனை நகரத்தில் நிகழும் இக்கதையில் பல காதல் சாரம்சங்களை உள்ளடக்கி விறுவிறுப்பான திருப்புமுனைகளைக் கொண்டது. சேட்டனா கௌஷிக் மற்றும் ஹனி ட்ரெஹான் தயாரித்துள்ளனர். வரும் ஜனவரி 11ஆம் தேதி நெட்ஃப்ளிக்ஸ் – இல் வெளியாகிறது. இதில் மனோஜ் பாஜ்பாய், கொங்கோனா சென்ஷர்மா, நாசர், சாயாஜி ஷிண்டே, லால், அன்புதாசன்,…

Read More

திருவிழாவிற்கு என் திரைப்படம் வெளியாவது இதுவே முதல்முறை – அருண் விஜய் உருக்கம்

லைகா புரொடக்சன்ஸ் தயாரிப்பில் விஜய் இயக்கத்தில் நடிகர்கள் அருண் விஜய், ஏமி ஜாக்சன், நிமிஷா நடிப்பில் உருவாகியுள்ள ‘மிஷன் சாப்டர்1’ ஜனவரி 12 ஆம் தேதி வெளியாகிறது. இதன் ப்ரீ ரிலீஸ் ஈவண்ட் சென்னையில் நடைபெற்றது. எடிட்டர் ஆண்டனி பேசியதாவது, “படம் சூப்பராக வந்திருக்கிறது. அருண் விஜய் சாரும் சூப்பராக செய்திருக்கிறார். இண்டர்நேஷனல் தரத்தில் படம் வந்திருக்கிறது”. நடிகர் ருத்ரன், “தமிழில் இது என்னுடைய முதல் படம். வாய்ப்பு கொடுத்த இயக்குநர் விஜய்க்கு நன்றி. அருண் விஜய், ஏமி ஜாக்சன் இருவரும் ஆக்‌ஷனில் பின்னியுள்ளார்கள். ஆதரவு கொடுத்த படக்குழுவினருக்கு நன்றி”. நடிகர் விராஜ், “இந்தப் படத்தில் எனக்கு வாய்ப்புக் கொடுத்த இயக்குநர் விஜய் சாருக்கு நன்றி. படத்தில் வேலைப் பார்த்த நடிகர்கள் தொழில்நுட்பக் குழுவினருக்கு நன்றி”. நடிகர் பரத் கோபன்னா பேசியதாவது, “இந்தப் படம் வெளியாகும் நாளுக்காகதான்…

Read More

கொரட்டாலா சிவா – ஜூனியர் என்.டி.ஆர் கூட்டணியில் இரத்தம் தெறிக்கும் “தேவரா- பார்ட் 1” கிளிம்ப்ஸ்

மாஸ் ஹீரோ என்டிஆர் நடிப்பில், கொரட்டாலா சிவா இயக்கத்தில் உருவாகியுள்ள ‘தேவரா’ படத்தின் முதல் பாகத்தின் கிளிம்ப்ஸ் சர்வதேச தரத்துடன் வெளியாகியுள்ளது! மாஸான புதிய அவதாரத்தில் நடிகர் என்டிஆர் மிரட்ட உள்ள ஆக்‌ஷன் டிராமா திரைப்படம் ‘தேவரா’. இந்தப் படத்தில் ஜான்வி கபூர் கதாநாயகியாக நடித்துள்ளார். சயிஃப் அலிகான் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். ரசிகர்கள் மத்தியில் அதிக எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ள இந்தப் படத்தை இரண்டு பாகங்களாக வெளியிட இயக்குநர் கொரட்டாலா சிவா திட்டமிட்டுள்ளார். இதன் முதல் பாகமான, ‘தேவரா பார்ட்1’ உலகெங்கிலும் ஏப்ரல் 5, 2024 அன்று தெலுங்கு, தமிழ், இந்தி, கன்னடம் மற்றும் மலையாளம் ஆகிய மொழிகளில் வெளியாக இருக்கிறது. இந்தப் படத்தினை உலகெங்கிலும் உள்ள பார்வையாளர்கள் மிகுந்த ஆர்வத்துடன் எதிர்பார்த்துள்ளனர். ‘தேவரா’வின் உலகை அறிமுகப்படுத்தும் வகையிலான கிளிம்ப்ஸ் இன்று வெளியாகியுள்ளது. விஷூவல்ஸ், இசை என…

Read More

“இளைஞர்களை செருப்படியில் இருந்து காப்பாற்றியது இமெயில்” ; கே.பாக்யராஜ் கூறிய புதிய தகவல்

SR பிலிம் பேக்ட்ரி சார்பில் S.R.ராஜன் தயாரித்து இயக்கியுள்ள படம் ‘இமெயில்’. இப்படத்தில் கன்னட திரையுலகின் முன்னணி நடிகை ராகினி திரிவேதி கதாநாயகியாக நடிக்க, கதாநாயகனாக ‘முருகா’ அசோக்குமார் நடித்துள்ளார். இரண்டாவது கதாநாயகியாக போஜ்புரி மற்றும் ஹிந்தி படங்களில் நடித்து புகழ்பெற்ற ஆர்த்தி ஸ்ரீ நடிக்க, இரண்டாவது கதாநாயகனாக ஆதவ் பாலாஜி நடித்துள்ளார். இப்படம் ரிலீஸுக்கு தயாராகி வரும் நிலையில் இப்படத்தின் பிரீ ரிலீஸ் நிகழ்ச்சி நேற்று மாலை சென்னை சாலிகிராமம் பிரசாத் லேபில் நடைபெற்றது. இந்த நிகழ்வில் இயக்குனர் கே.பாக்யராஜ், தயாரிப்பாளர்கள் கே.ராஜன், மதுராஜ், நடிகர்கள் அருள்தாஸ், நடிகை வனிதா விஜயகுமார், கோமல் சர்மா, ரத்னா, லொள்ளு சபா மனோகர், சிதம்பரம், ஆரஞ்சு மிட்டாய் பிரபா, முத்துக்குமார், இந்திய தயாரிப்பாளர்கள் சங்க தலைவரும் நிறுவனருமான சாலமன், சமூக சொற்பொழிவாளர் முகிலன், தொழிலதிபர்கள் எஸ்.ஆர் பாபு, ராஜசேகர்…

Read More

நமது கோவையில் தமிழகத்திலே மிகப்பெரிய திரையரங்கம்

தமிழகத்திலேயே மிகப்பெரிய மிக நவீன வசதிகளுடன் கூடிய, திரையரங்கமாக பிராட்வே திரையரங்கம் தமிழ்நாட்டின் கோயம்புத்தூரில் அமைந்துள்ளது. இத்திரையரங்கத்தினை பார்வையிட்ட ரெட் ஜெயன்ட் மூவிஸ் இனைத் தயாரிப்பாளர் திரு செண்பகமூர்த்தி, திரையரங்கு உரிமையாளர் திரு சதீஷ்குமார் அவர்களுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். தமிழகத்தில் முதல் முறையாக அனைத்து வசதிகளுடன் கூடிய நவீன திரையரங்கமாக, பிராட்வே திரையரங்கம் அமைந்துள்ளது. 9 திரைகள் கொண்ட இந்த திரையரங்கில், தமிழகத்திலேயே மிகப்பெரிய திரை அளவைக்கொண்ட, லேசர் ஸ்கிரீன் எபிக், ஐமேக்ஸ் ஸ்கிரீன் மற்றும் மிகச்சிறந்த ஒலி அமைப்பும் புதுமையான வகையில் உயர்தரத்திலான இருக்கை வசதிகளுடன் கூடிய கோல்ட் ஸ்கிரீன் அமைந்துள்ளது. இதனுடன் 6 வழக்கமான திரைகளும் அமைந்துள்ளது. ரசிகர்களும், திரைக்காதலர்களும் வியந்து பார்க்கும் வகையிலான, இந்த மல்டிப்ளெக்ஸ் பிராட்வே திரையரங்கினை பார்த்துப் பிரமித்த, ரெட் ஜெயன்ட் மூவிஸ் இணைத் தயாரிப்பாளர் திரு செண்பகமூர்த்தி அவர்கள்,…

Read More

சிம்புவுடன் நடித்தே தீருவேன் – நடிகை தேவயானி ஷர்மா பிடிவாதம்!

டெல்லியை பூர்விகமாக கொண்ட நடிகை தேவயானி ஷர்மா, ஹிந்தி மற்றும் தெலுங்கு திரையுலகங்களில் வலம் வருகிறார். 2021 ஆம் ஆண்டு , ரொமான்டிக் என்ற தெலுங்கு திரைப்படத்தின் மூலம் இணை கதாநாயகியாக திரையுலகத்திற்கு அறிமுகமான இவர் பலவிதமான நாட்டிய கலைகளில் தேர்ச்சி பெற்றிருக்கிறார். அவர் கூறுகையில், ” ஹிந்தி , தெலுங்கு என்ற மொழிகளில் நான் படங்கள் பண்ணினாலும் எனக்கு தமிழில் படம் பண்ண வேண்டும் என்று ஆசை எப்பொழுதும் உள்ளது. சாதாரண கதாநாயகியாக மட்டுமில்லாமல், என் நடிப்புத் திறனை முழுவதும் செயல்படுத்தி மக்கள் அனைவரும் விரும்பும் ஒரு நடிகையாக வலம் வர வேண்டும். கீர்த்தி சுரேஷ் சாய் பல்லவி இவர்களெல்லாம் எனக்கு மிகவும் பிடித்த நடிகைகள், இவர்கள்தான் எனக்கு முன்னுதாரணம். வாழ்வில் என்னுடைய லட்சியம் என்னவென்றால் சிம்புவிற்கு ஜோடியாக நடிப்பதே ஆகும். இதற்கான  முழு வீச்சில்…

Read More

”பட்லாபூர்” திரைப்படத்தின் ரீமேக்கில் நடிக்க ஆர்வமாக இருந்தேன் – விஜய் சேதுபதி

  பாலிவுட் இயக்குநர் ஸ்ரீராம் ராகவன் இயக்கத்தில் தயாராகி இருக்கும் திரைப்படம் ‘மெரி கிறிஸ்மஸ்’. இதில் ‘மக்கள் செல்வன்’ விஜய் சேதுபதி, பாலிவுட் நடிகை கத்ரீனா கைஃப், ராதிகா ஆப்தே, ராதிகா சரத்குமார், சண்முகராஜன், கவின் பாபு உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். மது நீலகண்டன் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு ப்ரீத்தம் இசையமைத்திருக்கிறார். தமிழ் மற்றும் இந்தி ஆகிய மொழிகளில் தயாராகி இருக்கும் இந்த திரைப்படத்தை டிப்ஸ் ஃபிலிம்ஸ் மற்றும் மேட்ச் பாக்ஸ் பிக்சர்ஸ் ஆகிய பட நிறுவனங்கள் சார்பில் தயாரிப்பாளர்கள் ரமேஷ் தௌராணி, சஞ்சய் ரௌத்ரே, ஜெயா தௌராணி, கேவல் கர்க் ஆகியோர் இணைந்து தயாரித்திருக்கிறார்கள். இந்த திரைப்படம் ஜனவரி 12ஆம் தேதியன்று வெளியாகிறது. இதை முன்னிட்டு சென்னையில் பத்திரிக்கையாளர் சந்திப்பு நடைபெற்றது. இதன்போது ‘மக்கள் செல்வன்’ விஜய் சேதுபதி, இயக்குநர் ஸ்ரீராம் ராகவன், பட…

Read More

”ராம் சரண் – புச்சி பாபு சனா” பான் இந்தியா படத்தில் இணைந்த இசைப்புயல்

‘குளோபல் ஸ்டார்’ ராம்சரண் – இயக்குநர் புச்சி பாபு சனா – தயாரிப்பாளர் வெங்கட சதீஷ் கிலாரு- விருத்தி சினிமாஸ்- மைத்திரி மூவி மேக்கர்ஸ் – சுகுமார் ரைட்டிங்ஸ் ஆகியோரின் கூட்டணியில் தயாராகும் பான் இந்திய திரைப்படத்தில் ‘ஆஸ்கார் நாயகன்’ ஏ. ஆர். ரஹ்மான் இணைந்திருக்கிறார். ‘குளோபல் ஸ்டார்’ ராம்சரண்- அடுத்ததாக இளம் மற்றும் திறமையான இயக்குநரான புச்சி பாபு சனாவுடன் இணைகிறார். இயக்குநர் புச்சி பாபு சனா – தனது முதல் படைப்பான ‘உப்பென்னா’ எனும் திரைப்படத்திற்காக தேசிய விருதை வென்றார். இந்தத் திரைப்படம் பிளாக் பஸ்டர் ஹிட்டானது. இவர்களின் கூட்டணியில் உலகளவிலான தொழில்நுட்ப தரத்தில் தயாராகும் பான் இந்திய திரைப்படத்தை முன்னணி தயாரிப்பு நிறுவனமான மைத்ரி மூவி மேக்கர்ஸ் பெருமையுடன் வழங்குகிறது. இந்தத் திரைப்படத்தை விருத்தி சினிமாஸ் மற்றும் சுகுமார் ரைட்டிங்ஸ் ஆகிய நிறுவனங்கள்…

Read More

அனுமன் போல் சிறிய படமாகத் துவங்கி இன்று பான் வேர்ல்டு படமாக வளர்ந்திருக்கிறது ”ஹனு-மான்” – அம்ருதா ஐயர்

பிரைம்ஷோ என்டர்டெயின்மென்ட் தயாரிப்பில், இயக்குநர் பிரசாந்த் வர்மா இயக்கத்தில், நடிகர் தேஜா சஜ்ஜா நடிப்பில், பிரம்மாண்ட பான் இந்தியப் படைப்பாக உருவாகியுள்ள திரைப்படம் ஹனு-மான். இயக்குநர் பிரசாந்த் வர்மாவின் திரைப்பட யுனிவர்ஸின் முதல் படமாக உருவாகும் ஹனு-மான் படத்தின் கதை அடிப்படையில் “அஞ்சனாத்ரி” என்ற கற்பனை இடத்தில் நடப்பதாக அமைக்கப்பட்டுள்ளது. முழுக்க சிஜியில் உலகத்தரத்தில் இந்த ஃபேண்ட்ஸி உலகம் உருவாக்கப்பட்டுள்ளது. இப்படம் பொங்கல் கொண்டாட்டமாக திரைக்கு வரவுள்ள நிலையில், இப்படத்தினை விளம்பரப்படுத்தும் பணியில் படக்குழுவினர் பம்பரமாகச் சுழன்று வருகின்றனர். இப்படத்தின் தமிழ்ப் பதிப்பினை, விளம்பரப்படுத்தும் வகையில், படக்குழுவினர் சென்னையில், தமிழ் பத்திரிக்கை, ஊடக, பண்பலை நண்பர்களைச் சந்தித்தனர். இந்நிகழ்வினில் தயாரிப்பாளர் சைத்தன்யா பேசியதாவது… எல்லோருக்கும் அட்வான்ஸ் பொங்கல் வாழ்த்துக்கள். இந்த நேரத்தில் நிரஞ்சன் ரெட்டி, அஸ்ரின் ரெட்டி,, வெங்கட் குமார் ஜெட்டி மற்றும் இயக்குநர் பிரசாந்த் வர்மா…

Read More

”தேன்கூட்டை தொடுவது போன்ற கவனத்துடன் ‘சல்லியர்கள்’ படத்தை எடுத்துள்ளனர்” ; சீமான் பாராட்டு

ICW நிறுவனம் சார்பில் கலைமாமணி சேது கருணாஸ் மற்றும் கரிகாலன் இணைந்து தயாரித்துள்ள படம் ‘சல்லியர்கள்’. மேதகு படத்தை இயக்கிய இயக்குநர் கிட்டுவின் டைரக்சனில் உருவாகியுள்ள இரண்டாவது படம் இது. சத்யா தேவி என்பவர் டாக்டர் நந்தினியாக முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்க, அவரது தந்தையாக கருணாஸும், ஆர்மி வில்லனாக களவாணி புகழ் திருமுருகனும் மற்றும் டாக்டர் செம்பியனாக மகேந்திரனும் நடித்துள்ளனர். இன்னும் பல புதுமுகங்களும் இந்தப்படத்தில் நடித்துள்ளனர். கவிப்பேரரசு வைரமுத்து பாடல்கள் எழுதியுள்ள இந்த படத்திற்கு கருணாஸ் மகன் நடிகர் கென் மற்றும் அவரது நண்பர் ஈஸ்வர் இருவரும் இணைந்து இசையமைத்துள்ளனர். இந்தப்படத்தின் சிறப்பு நிகழ்ச்சி நேற்று மாலை சென்னை சாலிகிராமம் பிரசாத் லேபில் நடைபெற்றது. இந்த நிகழ்வில் சிறப்பு விருந்தினர்களாக தயாரிப்பாளர்கள் கலைப்புலி எஸ்.தாணு, பி.எல்.தேனப்பன், சிவா கிலாரி, இயக்குநர்கள் வ.கவுதமன், பொன்ராம் மற்றும் நாம்…

Read More