ஒரு நாளில் துவங்கி ஒரே நாளில் முடியும் கதை “சிறகன்”

MAD பிலிம்ஸ் என்ற பட நிறுவனம் சார்பில் துர்கா பேட்ரிக் தயாரித்துள்ள படத்திற்கு ” சிறகன் ” என்று வித்தியாசமாக தலைப்பிட்டுள்ளனர்.

கஜராஜ், ஜீவா ரவி, அனந்த் நாக், பௌசி ஹிதாயா, வினோத் GD, ஹர்ஷிதா ராம், பாலாஜி, மாலிக், பூவேந்தன், ரயில் ரவி, சானு ஆகியோர் முக்கிய கதாபாத்திரகளில் நடித்துள்ளனர்.


கதை, திரைக்கதை, வசனம் எழுதி, எடிட்டிங் செய்து இயக்கியுள்ளார் – வெங்கடேஷ்வராஜ். S ( இவர் மதுரை காமராஜர் பல்கலைகழகத்தில் MF. Tech – மாஸ்டர் இன் பிலிம் அண்ட் எலக்ட்ரானிக் மீடியா ஸ்டடிஸ் துறையில் பட்டம் பெற்றவர் )

படம் பற்றி இயக்குனர் வெங்கடேஷ்வராஜ். S பகிர்ந்தவை..

ஹைபர் லிங்க் நான் லினியர் முறையில் கிரைம் திரில்லர் ஜானரில் 11 கோணங்களில் திரைக்கதை அமைக்கப்பட்டு எடுக்கப்பட்ட முதல் தமிழ் திரைப்படம் இது தான்.

மற்ற கிரைம் திரில்லர் படங்களை விட இதை ஒரே இரவில் நடக்கும் ஒரு ஏதார்த்தமான கிரைம் திரில்லர் படமாக உருவாக்கியிருக்கிறோம்.

 

பஞ்சன் சிறகன் எனும் வகையை சார்ந்த பட்டாம்பூச்சியின் இடது புறம் வெள்ளை மற்றும் கருப்பு நிறமும், வலது புறம் காக்கி நிறமும் இருக்கும் அதற்கும் இந்த படத்தின் திரைக்கதைக்கும் ஒரு முக்கியமான ஒற்றுமை இருப்பதாலும்,
இந்தவகை பட்டாம்பூச்சியின் வாழ்க்கை எப்படி ஒரே நாளில் துவங்கி ஒரே நாளில் முடிகிறதோ அதே போல் இந்த படத்தின் திரைக்கதையும் ஒரே இரவில் நடந்து முடிவதால் இந்த படத்திற்கு ” சிறகன் ” என்று பெயர்வைத்தோம்.

படப்பிடிப்பு முழுவதும் மதுரை மற்றும் அதனை சுற்றியுள்ள இடங்களில் நடைபெற்றது என்றார்.

மற்றும் இந்த படத்தில் பணியாற்றியுள்ள இயக்குனர் உட்பட அனைத்து தொழில்நுட்ப கலைஞர்களுக்கும் 27 வயது என்பது குறிப்பிடத்தக்கது.

சமீப காலங்களில் சிறந்த கதையம்சம் கொண்ட நல்ல திரைப்படங்களை வெளியிட்டு வரும் உத்ரா புரொடக்சன்ஸ் ஹரி உத்ரா இந்த படத்தை ஏப்ரல் 20 ம் தேதி உலகமெங்கும் திரையரங்குகளில் வெளியிடுகிறார்.

Related posts

Leave a Comment