HOPE (ஹோப்) – விமர்சனம்

ஹோப் என்ற கொரியன் படம், தமிழில் மொழிமாற்றம் செய்யப்பட்டு வெளியாகியுள்ளது. பதினைந்து அடி உயரமுள்ள வினோதமான மிருகம் ஒன்று, ஹோப் ஹார்பர் எனும் கிராமத்தைக் கன்னாபின்னாவெனச் சிதிலமடையச் செய்கிறது. அந்தக் கிராமத்து மனிதர்களை மிதித்தும், அறைந்தும், வீசி எறிந்து கொன்றும், அவர்கள் மீது கையில் கிடைக்கும் டூ-வீலர், கார் முதலிய கனமான பொருட்களைத் தூக்கிப் போட்டும் வெறித்தனமாகக் கொல்கிறது. துப்பாக்கிக் குண்டுகளால் சராமரியாகச் சுட்டாலும், அதன் வலு குன்றாமல் மேலும் வீரியமாகத் தாக்கத் தொடங்குகிறது அம்மிருகம். அந்தக் கிராமத்தின் தலைமை போலீஸ் அதிகாரியும், அவரது பெண் அசிஸ்டென்ட்டும் மிகவும் போராடி அம்மிருகத்தைத் துரத்திக் கொல்கின்றனர். காட்டுக்குள் செல்லும் வேட்டையர்கள், காட்டுக்கு நடுவில் வேற்றுக்கிரகவாசிகளின் விண்கலத்தைக் காண்கின்றனர். அப்பொழுது, ஐடோவர் எனும் வேற்றுக்கிரகவாசியையும், அவர்களது மகாராணியான ஜாவூரையும் காண்கின்றனர். பதற்றத்தில் வேட்டையர்கள் வேற்றுக்கிரகவாசியைச் சுட, மாவேயோ எனும் வேற்றுக்கிரகத்துப்…

Read More