சசிகுமார், சத்யராஜ் மற்றும் பரத் நடிக்கும் குடும்பத்துடன் காணக்கூடிய பொழுதுபோக்கு திரைப்படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் தொடங்கியது

நடிகர் சசிகுமார் கதாநாயகனாக நடிக்கும் மிகவும் எதிர்பார்க்கப்படும் குடும்பத்துடன் காணக்கூடிய திரைப்படத்தின் படக்குழு பாரம்பரியமான பூஜையுடன் அதிகாரப்பூர்வமாக படப்பிடிப்பை தொடங்கியுள்ளது. யதார்த்தமான மற்றும் உணர்ச்சிகரமான படங்களுக்கு பெயர் பெற்ற சசிகுமார், மூத்த நடிகர் சத்யராஜ் மற்றும் பரத் ஆகியோருடன் முக்கிய வேடங்களில் இத்திரைப்படத்தின் மூலம் இணைந்து மற்றொரு இதயத்தைத் தொடும் கதையை பெரிய திரைக்கு கொண்டு வர உள்ளார். இத்திரைப்படத்தின் மூலம் மேகா ஷெட்டி மற்றும் மாளவிகா ஆகியோர் கதாநாயகிகளாக தமிழ் சினிமாவில் அறிமுகமாகிறார்கள். அனுபவமிக்க கலைஞர்களான M.S. பாஸ்கர், ‘ஆடுகளம்’ நரேன், சரவணன், ‘கஞ்சா’ கருப்பு, இந்துமதி மற்றும் ஜோ மல்லோரி ஆகியோர் திறமையான மற்றும் சிறப்பான நடிப்பு ஆகியவை ஒருசேர உருவாகும் ஒரு தரமான திரைப்படத்திற்கு உத்தரவாதம் அளிக்கின்றனர். இத்திரைப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமாகும். M. குரு, இதற்கு முன்னர் இயக்குனர் இரா. சரவணனிடம்…

Read More

துஷ்யந்த் ஜெயப்பிரகாஷ் நடித்திருக்கும் ‘வருணன்- காட் ஆஃப் வாட்டர் ‘ திரைப்படத்தின் முன்னோட்டம் சென்னையில் வெளியீடு

யாக்கை பிலிம்ஸ் பேனரில் கார்த்திக் ஸ்ரீதரன் தயாரிப்பில், வான் புரொடக்ஷன்ஸ் நிறுவனத்தின் இணை தயாரிப்பில், நடிகர்கள் ராதாரவி – சரண்ராஜ் நடிப்பில் உருவாகியுள்ள ‘வருணன் – காட் ஆப் வாட்டர்” திரைப்படத்தின் முன்னோட்ட வெளியீட்டு விழா சென்னையில் சிறப்பாக நடைபெற்றது. இயக்குநர் ஜெயவேல் முருகன் இயக்கத்தில் உருவாகி உள்ள ‘வருணன் – காட் ஆஃப் வாட்டர்’ திரைப்படத்தில் டத்தோ ராதாரவி, சரண்ராஜ் , துஷ்யந்த் ஜெயப்பிரகாஷ், கேப்ரியல்லா, சங்கர் நாக் விஜயன், ஹரிப்பிரியா, மகேஸ்வரி, ஜீவா ரவி, அர்ஜுனா கீர்த்தி வாசன், ஹைடு கார்த்தி, பிரியதர்ஷன், கௌஷிக், துங்கன் மாரி, கிரண் மயி, பேபி ஜாயிஸ் , ஐஸ்வர்யா உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். ஸ்ரீ ராம சந்தோஷ் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு போபோ சசி இசையமைத்திருக்கிறார். படத்தொகுப்பை யு. முத்தையன் கையாள, கலை இயக்கத்தை பத்து…

Read More

“கயல் வின்சன்ட்” மற்றும் காதலிக்க நேரமில்லை TJ.பானுவால் இணைந்தது இந்தியாவும் இலங்கையும்…

“கயல் வின்சன்ட்” மற்றும் காதலிக்க நேரமில்லை படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்த T.J.பானு நடிக்கும் “அந்தோனி” என்கிற புதிய திரைப்பட படப்பிடிப்பு, பூஜையுடன் இலங்கையில் ஆரம்பமாகியது. ஓசை பிலிம்சின் கலை வளரி சக இரமணா – சுகா , விஜய் பாலசிங்கம் பிலிம்சின் விஜய் சங்கர், டிரீம் லைன் புரடக்‌ஷன்சின் சிரீஸ்கந்தராஜா மற்றும் கனா புரொடக்சன்ஸ் இணைந்து இப்படத்தை தயாரிக்கின்றனர்.   இலங்கையின் பல்வேறு பகுதிகளில் படப்பிடிப்புகள் நடைபெறயிருக்கும் இப்படத்தை சுகிர்தன் கிறிஸ்துராஜா மற்றும் ஜெனோசன் ராஜேஸ்வர் ஆகிய இரு நண்பர்கள் இணைந்து இயக்குகின்றனர். இத்திரைப்படத்தை கயல் வின்சன்ட் மற்றும் T.J பானுவுடன் சேர்ந்து இலங்கை நடிகர்களான சுதர்சன் ரவீந்திரன், செளமி போன்றோரும் தமிழகத்திலிருந்து அருள்தாஸ் போன்ற நடிகர்கள் என இரு நாட்டினரும் சேர்ந்து நடிக்கிறார்கள். இத்திரைப்படத்தை “மணல்” என்கிற திரைப்படத்தினூடாக சர்வதேச விருதுகளை வென்ற ஒளிப்பதிவாளர்…

Read More

ராபர் இசை வெளியீடு செய்தி. தயாரிப்பாளர் தாணு, நடிகர்கள் தியாகராஜன்,பாக்யராஜ், அம்பிகா,ரம்பா கலந்து கொண்ட “ராபர்” படத்தின் இசை வெளியீட்டு விழா!

பெண் பத்திரிகையாளர் கவிதாவின் தயாரிப்பில் , பெண்கள் பிரச்னைகளை மையமாக கொண்டு உருவாகியிருக்கும் படம் ராபர். இப்படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் (07.03.2025) அன்று நடைபெற்றது. இவ்விழாவில் திரையுலக நட்சத்திரங்கள் கலந்து கொண்டு பேசியதாவது : முதலில் தயாரிப்பாளர் கவிதா பேசும்போது: எனக்கு இந்த மேடை புதியதல்ல. எடுத்தவுடனேயே தயாரிப்பாளர் ஆக வேண்டும் என்ற எண்ணமில்லை. இதற்கு முன்பு 3 குறும்படம் எடுத்திருக்கிறேன். என்னுடைய ஒவ்வொரு கட்டத்திலும் இந்த மேடையில் இருப்பவர்கள், முன்னாடி இருப்பவர்கள், மேடைக்கு பின்னால் இருப்பவர்கள் அனைவரும் இருந்திருக்கீர்கள். அவர்கள் அனைவருக்கும் நன்றி. விமர்சனங்களும் வரவேற்பும் ஒருவரை அடுத்த தளத்திற்கு கொண்டு போகும். அதுபோல் என்னை ஊக்குவித்து இந்த இடத்திற்கு கொண்டு வந்திருக்கும் உங்கள் அத்தனை பேருக்கும் நன்றி. எப்போதும் கனவு இருக்க வேண்டும். அந்த கனவு மெய்ப்பட கடுமையாக உழைக்க வேண்டும்,…

Read More

உதயா, அஜ்மல், யோகி பாபு இணைந்து நடிக்கும் ‘அக்யூஸ்ட்’ பிரம்மாண்ட‌ திரைப்படத்தின் படிப்பிடிப்பு சிறப்பான திட்டமிடல் காரணமாக ஒரே ஷெட்யூலில் 54 நாட்களில் நிறைவு

ஜேஷன் ஸ்டுடியோஸ் சச்சின் சினிமாஸோடு இணைந்து, ஸ்ரீதயாகாரன் சினி புரொடக்ஷன் மற்றும் MIY ஸ்டுடியோஸ் பேனர்களில் ஏ.எல்.உதயா, தயா என்.பன்னீர்செல்வம், எம்.தங்கவேல் ஆகியோர் இணைந்து தயாரிக்கும் பிரம்மாண்ட திரைப்படம் ‘அக்யூஸ்ட்’. உதயாவின் கலைப் பயணத்தில் வெள்ளி விழா வருடத்தை குறிக்கும் விதமாக உருவாகி வரும் ‘அக்யூஸ்ட்’ படத்தில் அஜ்மல் மற்றும் யோகி பாபுவுடன் இணைந்து அவர் நடிக்கிறார். இப்படத்தை கன்னட திரையுலகில் வெற்றி படங்களை இயக்கிய பிரபு ஶ்ரீநிவாஸ் இயக்குகிறார். பிரபல கன்னட நடிகை ஜான்விகா நாயகியாக நடிக்கிறார். பிரம்மாண்ட பட்ஜெட்டில் படமாக்கப்பட்டுள்ள ‘அக்யூஸ்ட்’ திரைப்படத்தின் படிப்பிடிப்பு ஜனவரி 2 அன்று சென்னை ஆல்பர்ட் திரையரங்கில் தொடங்கியது. சிறப்பான திட்டமிடலின் காரணமாக ஒரே ஷெட்யூலில் 54 நாட்களில் படப்பிடிப்பு நிறைவு பெற்றுள்ளது. படப்பிடிப்பு மகளிர் தினத்தன்று நிறைவுற்ற நிலையில் குழுவிலுள்ள பெண்களுக்கும் மற்றும் அனைத்து மகளிருக்கும் ‘அக்யூஸ்ட்’…

Read More

வைபவ் நடித்த ‘பெருசு’ படத்தின் டிரைலர் வெளியீடு!!

இயக்குநர் கார்த்திக் சுப்புராஜின் ஸ்டோன் பெஞ்ச் தயாரிப்பில், இளங்கோ ராம் இயக்கத்தில் வைபவ், சுனில், பால சரவணன், ரெடின் கிங்க்ஸ்லி, நிஹாரிகா உள்ளிட்டப் பலர் நடித்திருக்கும் படம் ‘பெருசு’. திரையரங்குகளில் மார்ச் 14 அன்று திரையரங்குகளில் வெளியாகிறது. இதன் டிரெய்லர் வெளியீட்டு விழா இன்று நடைபெற்றது. தயாரிப்பாளர் கார்த்திகேயன் சந்தானம், “‘ஜிகர்தண்டா டபுள் எக்ஸ்’ படத்திற்குப் பிறகு இன்னும் பெரிதாக என்ன செய்யலாம் என்று நாங்கள் காத்திருந்தபோது வந்த படம் தான் ‘பெருசு’. இளங்கோவுக்கு அதற்கு நன்றி. ஸ்டோன் பெஞ்ச் நிறுவனத்தின் 16ஆவது படம் இது. அடல்ட் ஃபிலிம் என்றாலே சில விஷயங்களை டார்கெட் பண்ணி தான் இந்தியாவில் படங்கள் இருக்கும். ஆனால், மேற்கத்திய நாடுகளில் இதை இந்த சுவாரசியமாகவும் முகம் சுழிக்காத விதமாகவும் எடுப்பார்கள். இந்த விஷயங்களை ‘பெருசு’ படத்தில் உடைத்து சிறப்பாக கொண்டு வந்திருக்கிறோம்.…

Read More

சாந்தி டாக்கீஸ் அருண் விஸ்வா வழங்கும், ‘8 தோட்டாக்கள்’ புகழ் ஸ்ரீ கணேஷ் இயக்கத்தில் நடிகர் சித்தார்த்தின் ‘3 BHK’ படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்தது!

‘3 BHK’ படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது. படப்பிடிப்பு நிறைவடைந்ததை படக்குழு கேக் வெட்டி கொண்டாடிய வீடியோ இணையத்தில் வைரலானது குறிப்பிடத்தக்கது. ஃபீல் குட் திரைப்படமாக உருவாகி இருக்கும் இந்தப் படத்தின் டைட்டில் அறிவித்ததில் இருந்தே ரசிகர்கள் மத்தியில் அதிக எதிர்பார்ப்பு நிலவி வருகிறது. மேலும், இதன் டீசரும் உலகம் முழுவதும் உள்ள பார்வையாளர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. சாந்தி டாக்கீஸ், அருண் விஸ்வா தெரிவித்திருப்பதாவது, “மனதை வருடும் இதமான, திருப்தியான கதைகளைத் தயாரிப்பது தயாரிப்பாளராக எனக்கு மகிழ்ச்சியான விஷயம். அந்த அனுபவத்தைக் கொடுத்த ‘3 BHK’ படத்திற்கும், படக்குழுவினருக்கும் நன்றி. நாங்கள் திட்டமிட்டபடியே சரியான நேரத்தில் படப்பிடிப்பை முடித்து தற்போது போஸ்ட் புரொடக்‌ஷன் பணிகளும் விறுவிறுப்பாகத் தொடங்கியுள்ளது. படத்தின் டிரெய்லர், இசை வெளியீடு மற்றும் உலகளவில் படத்தின் திரையரங்க வெளியீட்டு தேதி குறித்து விரைவில் அறிவிப்போம்.…

Read More

100 கோடி பட்ஜெட்டில் பிரம்மாண்டமாக உருவாகும் ‘மூக்குத்தி அம்மன் 2’ திரைப்படம்!!

தமிழ் திரையுலகின் முன்னணி படத் தயாரிப்பு நிறுவனமான வேல்ஸ் ஃபிலிம் இன்டர்நேஷனல் மற்றும் ஐவி என்டர்டெயின்மென்ட் தயாரிப்பில், அவ்னி சினிமேக்ஸ் (பி) லிமிடட் நிறுவனம் மற்றும் ரௌடி பிக்சர்ஸ் நிறுவனம் இணை தயாரிப்பில் கமர்ஷியல் கிங் இயக்குநர் சுந்தர் சி இயக்கத்தில், நடிகை நயன்தாரா நடிப்பில் ‘மூக்குத்தி அம்மன் 2’ திரைப்படம் பிரம்மாண்டமாக உருவாகவுள்ளது. 1 கோடி ரூபாயில் பிரம்மாண்டமாக அமைக்கப்பட்ட அரங்கில், படக்குழுவினருடன், திரைப்பிரபலங்கள் கலந்துகொள்ள, இப்படத்தின் பூஜை, தமிழ் சினிமா இதுவரை கண்டிராத வகையில், மிகப்பிரம்மாண்டமாக நடைபெற்றது. இந்நிகழ்வினில் … உட்படப் பல முன்னணி பிரபலங்களுடன், படக்குழுவினர் கலந்துகொண்டனர். வேல்ஸ் பிலிம் இன்டர்நேஷனல் லிமிடெட் (Vels Film International Limited) நிறுவனத்தின் டாக்டர் ஐசரி கே. கணேஷ், மற்றும் ஐவி என்டர்டெயின்மென்ட் (Ivy Entertainment) இணைந்து, முதல் பாகத்தை விட பல மடங்கு பிரம்மாண்டமாக,…

Read More

போஸ்ட் புரொடக்‌ஷன்ஸ் ஸ்டுடியோ ஆரம்பித்திருக்கும் இயக்குநர் விஜய்!

ரசிகர்கள் விரும்பும்படியான பல வெற்றிப்படங்களைக் கொடுத்த இயக்குநர் விஜய் ‘D Studios Post’ என்ற பெயரில் புதிய போஸ்ட் புரொடக்ஷன் ஸ்டுடியோவினை மார்ச் 2 அன்று தொடங்கியுள்ளார். இந்த ஸ்டுடியோவை இயக்குநர் பிரியதர்ஷன், ஒளிப்பதிவாளர் பி.சி. ஸ்ரீராம், வேல்ஸ் பல்கலைக்கழகத்தின் நிறுவனர் & வேந்தர் டாக்டர் ஐசரி கே கணேஷ் மற்றும் தயாரிப்பாளர் சுரேஷ் பாலாஜி ஆகிய பிரபலங்கள் தொடங்கி வைத்தனர்.   இந்த நிகழ்வு சென்னையின் மிகப்பெரிய போஸ்ட் புரொடக்‌ஷன் ஸ்டுடியோவின் பிரமாண்டமான தொடக்க விழா என்பது குறிப்பிடத்தக்கது. டிஐ, டால்பி அட்மாஸ் சவுண்ட் மிக்ஸ், டப்பிங், டிசிபி (DCP), ஓடிடி மாஸ்டரிங், விஎஃப்எக்ஸ் மற்றும் டிஐடி (DIT) ஸ்டோரேஜ் ஆகியவற்றிற்கான ஒரே இடமாக இந்த போஸ்ட் புரொடக்‌ஷன் ஸ்டுடியோஸ் உள்ளது. இந்த நிகழ்வில் அரசியல்வாதிகள், திரைப்பட பிரபலங்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் உள்ளிட்டப் பலர்…

Read More

கிரியா லாவின் ‘ஐபி அண்ட் மியூசிக்: ஃபீல் தி பீட் ஆஃப் ஐபி’ நிகழ்வின் தொடக்க நிகழ்வு!

கிரியா லா மார்ச் 1, 2025 அன்று ‘ஐபி அண்ட் மியூசிக்: ஃபீல் தி பீட் ஆஃப் ஐபி’ என்ற தலைப்பில் அரை நாள் நிகழ்வை ஏற்பாடு செய்துள்ளது. வரவிருக்கும் வருடாந்திர கூட்டத்திற்கு முன்னோடியாக இந்த நிகழ்வு சர்வதேச டிரேட்மார்க் சங்கத்தால் நடத்தப்பட்டது. இது மே 17 முதல் மே 21, 2025 வரை கலிபோர்னியாவின் சான் டியாகோவில் நடத்தத் திட்டமிடப்பட்டுள்ளது. இந்த நிகழ்வில் இசைத் துறையைச் சேர்ந்த பல்வேறு வல்லுநர்கள் கலந்து கொண்டனர். டர்ன்கே மியூசிக் மற்றும் பப்ளிஷிங் பிரைவேட் லிமிடெட் நிர்வாக இயக்குநர் அதுல் சுரமணி மற்றும் சரிகம இந்தியா லிமிடெட் முன்னாள் துணைத் தலைவர் சஞ்சய் வாத்வா, ஏபி இன்டர்நேஷனலின் நிர்வாக இயக்குநர் ஸ்ரீதர் ஜெ, தென்னிந்திய இசைக் கம்பெனிகள் சங்கத்தின் (SIMCA) செயலாளர் சுவாமிநாதன், தேசிய விருது பெற்ற கிளாசிக்கல் பியானோ…

Read More