காமராஜ்’, ‘WELCOME BACK GANDHI’ திரைப்படங்களைத் தயாரித்த ரமணா கம்யூனிகேஷன்ஸ் நிறுவனம் தமிழரின் பெருமைமிகு அடையாளம் திருக்குறள்–ஐத் திரைப்படமாகத் தயாரித்துள்ளது. இசைஞானி இளையராஜா இசையமைத்துள்ளார். திரைப்படம் விரைவில் வெளியாகிறது. இளையராஜா எழுதி இசையமைத்துள்ள ‘முல்லை வாசம்’ பாடலை முதல்வர் வெளியிட்டார்கள். இந்தப் பாடலின் ராகத்தில் இதுவரை இசைஞானி எந்தப்பாடலும் இயற்றவில்லை எனத் தெரிவித்தார். வெளியீட்டுவிழா நிகழ்வில் இயக்குனர் A.J.பாலகிருஷ்ணன், முதன்மைக் கொடையாளர் T.P.இராஜேந்திரன், VIT வேந்தர், தலைவர் தமிழியக்கம், டாக்டர் கோ.விசுவநாதன், வள்ளுவராக நடித்துள்ள கலைச்சோழன், வாசுகியாக நடித்துள்ள தனலட்சுமி, ஒளிப்பதிவாளர் A.M.எட்வின் சகாய் முதலியோர் பங்கு பெற்றனர். பாடலை முதல்வர் கண்டு பாராட்டினார்
Read MoreCategory: சினி-நிகழ்வுகள்
தயாரிப்பாளர், இயக்குனர் TM.ஜெயமுருகன் மாரடைப்பால் காலமானார்.
நடிகர் முரளி நடித்த ரோஜா மலரே, அடடா என்ன அழகு மற்றும் நவரச நாயகன் கார்த்திக், சுகன்யா நடித்த தீ இவன் போன்ற படங்களை தயாரித்து இயக்கிய T.M. ஜெயமுருகன் சற்று முன்பு மாரடைப்பு காரணமாக காலமானார். அவரது இறுதி ஊர்வலம் திருப்பூர், தென்னம்பாளையத்தில் உள்ள அவரது இல்லத்தில் நாளை (18.01.2025) நடைபெற இருக்கிறது.
Read More“மதகஜராஜா எந்த ஸ்டேஷனிலும் நிற்காமல் போகும் டிரெயின்” ; விஷால் உற்சாகம்
12 வருடங்களுக்கு முன் தயாரான ஒரு படம் சில காரணங்களால் வெளிவராமல் தடைபட்டு, இப்போது காலம் எவ்வளவோ மாறியிருக்கும் சூழலில் வெளியாகி, அனைத்து தரப்பு ரசிகர்களையும் கவர்ந்து பிளாக் பஸ்டர் ஹிட் ஆகிறது என்றால் இது சினிமா வரலாற்றிலேயே இதுவரை நிகழாத அதிசயம்.. அதை நிகழ்த்தி காட்டி இருக்கிறது இந்த பொங்கல் பண்டிகைக்கு வெளியான ‘மதகஜராஜா, திரைப்படம். சுந்தர்.சி இயக்கத்தில் விஷால், சந்தானம், அஞ்சலி, வரலட்சுமி, விஜய் ஆண்டனி (இசை) உள்ளிட்டோரின் கூட்டணியில் பாரம்பரியம் மிக்க ஜெமினி பிலிம்ஸ் சர்க்யூட் தயாரிப்பில் உருவான ‘மதகஜராஜா’ (MGR) திரைப்படம் தடைகள் பல கடந்து லேட்டாக வந்தாலும் லேட்டஸ்ட் என்பது போல வெளியாகி இந்த பொங்கல் ரேஸில் நம்பர் 1 குதிரையாக ஓடிகொண்டு இருக்கிறது.. அந்தவகையில் பொதுமக்களுக்கு உண்மையான பொங்கல் கொண்டாட்டமாக ‘மதகஜராஜா’ படம் அமைந்துவிட்டது என்றே சொல்லலாம். 13…
Read More‘கள்ள நோட்டு’ திரைப்படத்தின் டீசரை சேலம் மாநகராட்சி மேயர் மாண்புமிகு ஆ.இராமச்சந்திரன் அவர்கள் ஏ.ஆர். அறக்கட்டளை திரு எஸ்.சுரேஷ்மோகன் அவர்களுடன் இணைந்து வெளியிட்டார்.
‘பணம் ஆறாம் அறிவு போன்றது, அது இல்லாமல் மற்ற ஐந்து அறிவுகளையும் நீங்கள் பயன்படுத்த முடியாது’ என்றார் பெர்னாட்ஷா. ‘பணம் நமக்கு எல்லாவற்றையும் கொடுக்கலாம், ஆனால் வறுமை நம்மிடம் இருந்து பறித்த சிலவற்றைப் பணத்தால் திருப்பித் தர முடியாது ‘என்றார் சார்லி சாப்ளின். இப்படிப் பணத்தைப் பற்றிய ஏராளமான பொன்மொழிகள், பழமொழிகள் உண்டு. ஆனால் பணம் பற்றிப் பேசும் அனைவர் மனதிலும் ரூபாய் நோட்டைப் போலவே கள்ள நோட்டைப் பற்றிய ஒரு கறுப்பு நிழலும் வந்து போகும். அப்படிக் கள்ள நோட்டு பற்றிய ஒரு கதையை மையமாக வைத்து ‘கள்ள நோட்டு ‘என்கிற பெயரிலேயே ஒரு திரைப்படம் உருவாகி இருக்கிறது. இப் படத்தினை எம்.ஜி. ராயன் எழுதி இயக்கியுள்ளார். சம்பத்குமார் .ஆ ஒளிப்பதிவு செய்துள்ளார். முத்து கொடப்பா படத்தொகுப்பு செய்துள்ளார் .பாடல்களை செல்வராஜா எழுதியுள்ளார். எம் ஜி…
Read Moreபிரபுதேவாவின் பிரம்மாண்ட நடன நிகழ்ச்சி ‘பிரபுதேவாஸ் வைப்’ என்ற பெயரில் பிரமாண்டமாக நடைபெறுகிறது.
இந்தியாவின் மைக்கேல் ஜாக்சன், நடனப் புயல் பிரபுதேவாவின், பிரம்மாண்டமான நடன நிகழ்ச்சி, இந்தியாவில் முதல் முறையாக நடக்கவுள்ளது. பிரபல நிறுவனமான அருண் ஈவண்ட்ஸ் அருண் நடத்த, V.M.R.ரமேஷ், G Star. உமாபதி மற்றும் ஜெய்சங்கர் முக்கிய பங்கு வகிக்கின்றனர். இந்த நடன நிகழ்ச்சி வரும் 2025 பிப்ரவரி 23 ஆம் தேதி சென்னையில் நந்தனம் YMCA மைதானத்தில் நடைபெறுகிறது. நடிகரும், நடனக் கலைஞரும் இயக்குனருமான ஹரிகுமார் இந்த பிரம்மாண்டமான ஷோவை இயக்குகிறார். ஆர்ட் டைரக்டர் கிரண் கைவண்ணத்தில் பல்வேறு விதமான செட்டுகள் அமைக்கப்பட உள்ளது. இந்நிகழ்ச்சிக்கான பத்திரிகையாளர் சந்திப்பு மற்றும் டிக்கெட்களை அறிமுகப்படுத்தும் விழா, பத்திரிகை ஊடக நண்பர்கள் முன்னிலையில் சென்னையில் நடைபெற்றது. முன்னதாக iBa ( ஐபா) நிறுவனத்தின் ticket iBa என்ற இணையதளத்தை பிரபுதேவா துவக்கி வைத்து முதல் 25000 டிக்கெட்டுகளை iBa நிறுவனத்தின்…
Read Moreஅகத்தியா கேம் மற்றும் இரண்டாவது சிங்கிள் வெளியீட்டு நிகழ்வு, கொண்டாட்டம் !!
தமிழ்த் திரையுலகில் புதிய வரலாற்றைப் படைக்கும் வகையில், “அகத்தியா” படக்குழு, இரண்டு புதிய அற்புதமான முயற்சிகளைத் தொடங்கியுள்ளது. மிகவும் எதிர்பார்க்கப்பட்ட அகத்தியா கேம் மற்றும் இரண்டாவது சிங்கிள் “என் இனிய பொன் நிலாவே.” பாடல் என இரண்டும் வெளியிடப்பட்டுள்ளது. இந்த பிரம்மாண்டத் திரைப்படம் ஜனவரி 31, 2025 அன்று பான்-இந்திய வெளியீடாக வெளியாகவுள்ளது. தமிழ் சினிமா வரலாற்றில் முதன்முறையாக, திரைப்படத்தின் கதாபாத்திரங்கள் மற்றும் கதைக்களத்தின் அடிப்படையில் ஒரு விளையாட்டு ஆப் (game) உருவாக்கப்பட்டுள்ளது. அகத்தியாவின் ஏஞ்சல்ஸ் அண்ட் டெவில்ஸ் இடம்பெறும் இந்த கற்பனை-சாகச விளையாட்டு, எல்லா வயதினரும் விளையாடும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த விளையாட்டு படத்தின் கதை மீதும், கதைக்களத்தின் மீதும் ஒரு முழுமையான பார்வையை வழங்கி, படத்தின் மீதான ஆவலைத் தூண்டுவதாக அமைந்துள்ளது. இந்த கேம் ஆப் வடிவமைப்பின் இணை தயாரிப்பாளரும் தொலைநோக்கு பார்வையாளருமான…
Read More“காதலிக்க நேரமில்லை” படத்தின் முன் வெளியீட்டு விழா!!
ரெட் ஜெயன்ட் மூவீஸ் தயாரிப்பில், இயக்குநர் கிருத்திகா உதயநிதி இயக்கத்தில், ஜெயம் ரவி, நித்யா மேனன் நடிப்பில் ரொமான்ஸ் திரில்லராக உருவாகியுள்ள திரைப்படம் “காதலிக்க நேரமில்லை”. பொங்கல் கொண்டாட்டமாக ஜனவரி 14 அன்று இப்படம் திரைக்கு வருகிறது. இப்படத்தின் வெளியீட்டை ஒட்டி, படக்குழுவினர் பத்திரிக்கை ஊடக நண்பர்களைச் சந்தித்து, படம் குறித்த அனுபவங்களைப் பகிர்ந்து கொண்டனர். இந்நிகழ்வினில்… ரெட் ஜெயன்ட் மூவீஸ் சார்பில் அர்ஜூன் துரை பேசியதாவது…. காதலிக்க நேரமில்லை ஜனவரி 14 ரிலீஸாகிறது. ஜெயம் ரவி சார் நீண்ட காலம் கழித்து திரையில் ரொமான்ஸ் செய்துள்ளார். பார்க்க மிக நன்றாக உள்ளது. நித்யா மேனன் ரொம்ப செலக்டிவாக தான் கதாப்பாத்திரங்கள் செய்கிறார். திருச்சிற்றம்பலம் படத்திற்குப் பிறகு, இந்தப்படம் மிக முக்கியமானதாக இருக்கும். ஜெயம் ரவி, நித்யா மேனன் ஜோடி உங்களைக் கவர்வார்கள். வினய் மிக வித்தியாசமான…
Read Moreகோலாகலத் திருவிழாவாக மாறிய ‘உழவன் ஃபவுண்டேஷனின் உழவர் விருதுகள் 2025’ – விவசாயத்துறையில் சேவைமனப்பான்மையோடு இயங்கும் 5 பேருக்கு கெளரவம்.
விவசாயத்தில் சாதனை புரிபவர்களையும், அதற்கு உறுதுணையாக இருந்து பங்களிப்பவர்களையும் கெளரவப்படுத்தி அங்கீகரிக்கும் உழவன் ஃபவுண்டேஷனின் ‘உழவர் விருதுகள் 2025’ விழா கோலகலமாக சென்னையில் நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினர்களாக நடிகர் அரவிந்த் சாமி, நடிகை சரண்யா பொன்வண்ணன், இயக்குநர் மாரி செல்வராஜ் மற்றும் எழுத்தாளர் பவா செல்லத்துரை ஆகியோர் கலந்துக் கொண்டார்கள். மேலும் இந்நிகழ்வில் வேளாண் துறைசார் வல்லுநர்கள் மற்றும் மாணவர்கள் எனப் பலரும் கலந்துக் கொண்ட இந்த விழா இனிதே நடைபெற்றது. இதில் • சிறந்த பெண் வேளான் தொழில் முனைவோர் விருது திருமதி. சுகந்திக்கும் • நீர்நிலைகளை மீட்டெடுத்தலுக்கான சிறந்த பங்களிப்பு விருது திருமதி. சியாமளாவுக்கும் • மாபெரும் வேளான் பங்களிப்புக்கான விருது – கலசப்பாக்கம் பாரம்பரிய விதைகள் மையத்திற்கும் • கால்நடை துறையில் சிறந்த பங்களிப்பு வழங்கியதற்கான விருது கால்நடை மருத்துவர் திருமிகு.…
Read More“காதலில் எத்தனை வகை உண்டு தெரியுமா”: ‘காத்துவாக்குல ஒரு காதல்’ பட விழாவில் மத்திய முன்னாள் அமைச்சர் ஆ.ராசா MP ருசிகர தகவல்!
நிகழ்வில் மத்திய முன்னாள் அமைச்சர் திரு ஆ . ராசா MP பேசியதாவது : “இந்த விழாவிற்கு என்னையும் அழைத்து பெருமை சேர்த்திருக்கும் தயாரிப்பாளர் எழில் இனியன் அவர்களே, இயக்குனர் மாஸ் ரவி அவர்களே இத்திரைப்படத்தின் கலைஞர்கள் மஞ்சுளா அவர்களே, ஜி. கே.வி அவர்களே, சூப்பர் சுப்பராயன் அவர்களே, சுபாஷ் மணியன் அவர்களே, ராஜ்குமார் அவர்களே, இவர்களோடு இணைந்து பணியாற்றிய ஏனைய கலைஞர்களே… பத்திரிக்கையாளர்களே, ஊடகவியல் நண்பர்களே உங்கள் அனைவருக்கும் வணக்கம் . நான் சார்ந்திருக்கின்ற திராவிட முன்னேற்ற கழகத்துக்கும் கலை இலக்கியம் – திரைத்துறைக்கும் நெருங்கிய தொடர்பு உண்டு என்பது அனைவருக்கும் தெரியும். ஆனால் நான் அரசியலுக்கு வந்த 90-களில் இருந்தே, அதிகமான நேரத்தை சினிமாவிற்கு என்னால் ஒதுக்க இயலாமல் போய்விட்டது. திரைப்பட நிகழ்வுகள் சிலவற்றில் தலைவர் கலைஞர் அவர்களுடன் பங்கேற்றது உண்டு. அவ்வளவுதான். நாங்கள்…
Read More“இது என்னடா இசைக்கு வந்த சோதனை என்கிற விதமாக விஷாலை பாட வைத்தோம்” ; மதகஜராஜா இசையமைப்பாளர் விஜய் ஆண்டனி கலாட்டா
கலகலப்பு, தீயா வேலை செய்யணும் குமாரு ஆகிய வெற்றிப் படங்களைத் தொடர்ந்து இயக்குநர் சுந்தர் சி முதன் முறையாக விஷாலுடன் கூட்டணி சேர்ந்து உருவான படம் ‘மதகஜராஜா’. ஜெமினி பிலிம் சர்க்யூட் இந்தப்படத்தை தயாரித்துள்ளது. கடந்த 2012ல் துவங்கிய இந்தப்படம் 2013லேயே ரிலீஸுக்கு தயாரானாலும் சில சந்தர்ப்ப சூழ்நிலைகளால் ரிலீஸ் ஆக முடியாத நிலை ஏற்பட்டு கிட்டத்தட்ட 12 வருடங்கள் கடந்துவிட்டன. இந்த நிலையில் தற்போது பல நல்லவர்களின் கூட்டு முயற்சியால் இந்த பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஜனவரி 12ஆம் தேதி மதகஜராஜா ரிலீஸ் ஆக இருக்கிறது. இதில் கதாநாயகிகளாக அஞ்சலி மற்றும் வரலட்சுமி இருவரும் நடித்துள்ளனர். அப்போது முன்னணி காமெடி நடிகராக வலம் வந்த சந்தானம் இந்த படத்தில் விஷாலுடன் இணைந்து முழு நீள காமெடி கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். மணிவண்ணன் மற்றும் மனோபாலா போன்ற மறைந்த…
Read More
