விடுதலை 2; வெற்றிமாறனுக்கு மாலை அணிவித்த படக்குழுவினர்!

  ‘விடுதலை பாகம் 2’ படத்தின் பிரம்மாண்ட வெற்றியை ஒட்டுமொத்த படக்குழுவினரும் சிறப்பாகக் கொண்டாடியுள்ளனர். இந்த நிகழ்வில் படக்குழுவினர் அனைவரும் கலந்து கொண்டனர். ‘விடுதலை பாகம்2’ படம் மாபெரும் வெற்றியடையச் செய்ததற்காக, குழுவில் உள்ள அனைவருக்கும் ஆர்எஸ் இன்ஃபோடெயின்மெண்ட் நிறுவனத்தின் தயாரிப்பாளர் எல்ரெட் குமார் நன்றி தெரிவித்தார். இப்படம் டிசம்பர் 20, 2024 அன்று உலகம் முழுவதும் வெளியானது. உலகம் முழுவதும் உள்ள விமர்சகர்கள் மற்றும் பார்வையாளர்களிடமிருந்து நல்ல வரவேற்பைப் பெற்றது.  

Read More

பெரும் எதிர்பார்ப்பிலிருக்கும்  “கேம் சேஞ்சர்” படத்தின் டிரெய்லர் ஜனவரி 1 ஆம் தேதி வெளியாகிறது !!

குளோபல் ஸ்டார் ராம்சரண், பிரம்மாண்ட இயக்குநர் ஷங்கர் கூட்டணியில், மிகவும் எதிர்பார்க்கப்படும் பான்-இந்தியா திரைப்படமான “கேம் சேஞ்சர்” படத்தின் அதிரடி டிரெய்லர் ஜனவரி 1 ஆம் தேதி வெளியாகிறது. இப்படம் ஜனவரி 10 ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியாகிறது. சமீபத்தில், தயாரிப்பாளர்கள் டல்லாஸில் பிரமாண்டமான முன் வெளியீட்டு நிகழ்வை நடத்தினர். அந்நிகழ்வு ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றது. அமெரிக்காவில் நடைபெற்ற ஒரு இந்தியப் படத்தின் முதல் ப்ரீ-ரிலீஸ் நிகழ்வு இதுதான். தற்போது, கேம் சேஞ்சர் மற்றொரு சாதனையைப் படைத்துள்ளது. விஜயவாடா பிருந்தாவன் காலனியில் உள்ள, வஜ்ரா மைதானத்தில் 256 அடி உயரத்தில் ராம் சரண் நிற்கும் வகையில் மிக உயரமான கட்-அவுட், இன்று ஆயிரக்கணக்கான மெகா ரசிகர்கள் முன்னிலையில் அமைக்கப்பட்டது. இந்த விழாவில் படத்தின் தயாரிப்பாளர் தில் ராஜு சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டார்.…

Read More

பா.இரஞ்சித் முன்னெடுக்கும் மார்கழியில் மக்களிசை நிகழ்ச்சி முக்கியமான ஒரு பண்பாட்டு முயற்சி -விஜய்சேதுபதி

இயக்குனர் பா.இரஞ்சித்தின் நீலம் பண்பாட்டு மையம் நடத்தும் மார்கழியில் மக்களிசை எனும் இசை நிகழ்ச்சி ஒவ்வொரு வருடமும் மார்கழிமாதத்தில் நடைபெற்றுவருகிறது. ஐந்தாவது வருடமாக 2024 ம் வருடத்திற்கான நிகழ்ச்சி டிசம்பர் 27, 28, 29 ஆகிய நாட்களில் சென்னை மைலாப்பூர் சாந்தோம் பள்ளியில் நடைபெற்றது. ஐநூறுக்கும் மேற்பட்ட கலைஞர்கள் கலந்துகொண்ட இந்த நிகழ்வில் மேடையேற்றப்படாத கலைஞர்கள் பலர் கலந்துகொண்டனர். பல்வேறு அரசியல் தலைவர்கள், சமூக ஆர்வலர்கள் பலரும் நிகழ்ச்சிக்கு வந்து கலந்துகொண்டனர். நிறைவு நாளில் நடிகர் விஜய்சேதுபதி கலந்துகொண்டு மக்களிசை மாமணி விருதுகளை கூத்து ஆசிரியர் செல்லமுத்து, ராஜாராணி ஆட்டக்கலைஞர் முப்பிலி இருவருக்கும் வழங்கினார். இது போன்ற மக்களிசை நிகழ்ச்சிக்கு என்னை அழைத்ததற்கு மிக்க நன்றி . மிகவும் பெருமையாக இருக்கிறது கவனிக்கப்படாத கலைஞர்களை கவனித்து அவர்களுக்கு மேடை அமைத்து கொடுப்பது மிகவும் பெருமைக்குறிய விசயம். இயக்குனர்…

Read More

கத்தாரில் நடிகர் யோகிபாபுவிற்கு ” SIGTA ” விருது

உலகளாவிய அளவில் சாதனைகள் புரிந்திட்ட தென்னிந்திய திறமையாளர்களை கௌரவிக்கும் SIGTA விருது கடந்த மூன்று ஆண்டுகளாக சிறப்பான முறையில் நடத்தி வருகிறார் கத்தார் வாழ் தமிழர் சாதிக்பாஷா. 2024 இந்த வருடம் கத்தாரின் தலைநகரான தோகாவில் உள்ள QNCC அரங்கத்தில் சிறப்பாக நடைபெற்றது இதில் தென்னிந்திய திரைப்பட நடிகர், நடிகைகளுக்கு விருது வழங்கப்பட்டது. தமிழில் திரையுலகில் நடிகை குஷ்பு, காமெடி நடிகர் யோகி பாபு, நடிகர் விமல், காயத்ரி, ஜீவாரவி, ரியாஸ் கான், விச்சு, T.S.K , கன்னட திரையுலகில் நடிகையாக மிகப்பெரிய சாதனையை படைத்து அரசியலில் இருந்து வரும் சுமலதா மற்றும் பிரம்மாண்ட தயாரிப்பாளர் நடிகர் ராக்லைன் வெங்கடேஷ் ஆகியோருக்கு விருது வழங்கப்பட்டது. அம்மு மற்றும் அஸார் இருவரும் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார்கள். கத்தாரில் இந்தியத் தூதரக அதிகாரிகள் மற்றும் கத்தார் அரசு அதிகாரிகள் பங்கேற்க,…

Read More

கிச்சா சுதீப் நடிப்பில் உருவாகியுள்ள ‘MAX’ திரைப்படத்தின் பிரம்மாண்ட ட்ரைலர் வெளியீடு!

தமிழ் திரைப்படமான MAX-இன் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட ட்ரெய்லர் மற்றும் பாடல்களுடைய முன்னோட்டம் சென்னையில் பிரம்மாண்டமாக வெளியிடப்பட்டது. இந்த நிகழ்வில், திரைப்படத்தின் தயாரிப்பாளர் கலைப்புலி எஸ். தாணு, புகழ்பெற்ற நடிகர்- தயாரிப்பாளர் கிச்சா சுதீப் மற்றும் படத்தின் அறிமுக இயக்குனர் விஜய் கார்த்திகேயா பங்கேற்றனர். திரைப்படத் துறையின் பல பிரபலங்கள் இந்த நிகழ்வுக்கு வந்திருந்தனர். தமிழ் திரைப்பட இயக்குனர் சங்க தலைவர் ஆர்.வி. உடையகுமார், இயக்குனர்கள் மிஸ்கின், ராஜ்குமார் பெரியசாமி, தேசிங் பெரியசாமி உள்ளிட்ட பலர் இந்நிகழ்வில் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர். மேலும், தென்னிந்திய திரைப்பட வர்த்தக சபை மற்றும் இந்திய திரைப்பட சம்மேளனத்தின் தலைவர் ரவி கோட்டாரக்காரா, முன்னாள் தலைவர் காட்ராகட்ட பிரசாத், நடிகர் இளவரசு, நடன அமைப்பாளர் ஷோபி உள்ளிட்டோர் கலந்துகொண்டு படக்குழுவினருக்கு வாழ்த்துக்கள் தெரிவித்தனர். கலைப்புலி எஸ். தாணு நிகழ்ச்சியில் பேசும்போது, படக்குழுவின்…

Read More

கவிக்கோ அப்துல் ரகுமான் குறித்த ஆவணப்படம் திரைப் பிரபலங்கள், முக்கிய பிரமுகர்கள் முன்னிலையில் சென்னையில் வெளியீடு

கவிக்கோ இலக்கியக் கழகம் மற்றும் கவிக்கோ மன்றம் இணைந்து சென்னையில் இன்று (டிசம்பர் 24) மாலை நடத்திய விழாவில் கவிக்கோ அப்துல் ரகுமான் குறித்த ஆவணப்படம் திரைப் பிரபலங்கள், முக்கிய பிரமுகர்கள் முன்னிலையில் வெளியிடப்பட்டது. மயிலாப்பூர் சி ஐ டி காலனி இரண்டாவது பிரதான சாலையில் அமைந்துள்ள கவிக்கோ மன்றத்தில் நடைபெற்ற கருத்தை கவரும் நிகழ்ச்சியில் ஆவணப்படத்தை பிரபல திரைப்பட இயக்குநர் லிங்குசாமி வெளியிட சென்னை உயர்நீதிமன்ற முன்னாள் நீதியரசர் கே. பாட்சா பெற்றுக்கொண்டார். கவிக்கோ அப்துல் ரகுமானின் வாழ்க்கையையும் தமிழ்ப் பணியையும் சிறப்பாக பதிவு செய்யும் வகையில் ஆவணப்படத்தை இயக்குநர் பிருந்தா சாரதி உருவாக்கி இருந்தார். சிங்கப்பூர் முஸ்தபா தயாரிப்பில் உருவாகியுள்ள இந்த ஆவணப்படத்திற்கு தாஜ்நூர் இசையமைக்க, சி ஜே ராஜ்குமார் ஒளிப்பதிவை கவனிக்க சூர்யா படத்தொகுப்பை மேற்கொண்டிருந்தார். தமிழியக்க தலைவரும் விஐடி பல்கலைக்கழகத்தின் வேந்தருமான…

Read More

‘நான் பேசமாட்டேன், என் படம் பேசும்’: மோகன்லால்!!

Aashirvad Cinemas சார்பில், ஆண்டனி பெரும்பாவூர் தயாரிப்பில், மலையாள திரையுலகின் முன்னணி நட்சத்திர நடிகர் மோகன்லால் முதன்முறையாக இயக்கி நடித்திருக்கும், 3டி பிரம்மாண்ட ஃபேண்டஸி திரைப்படமான ” பரோஸ்”, திரைப்படம் வரும் டிசம்பர் 25 ஆம் தேதி உலகமெங்கும் வெளியாகிறது. ரவிஸ் டாக்டர்.பி.ரவி பிள்ளை வழங்கும் இப்படத்தை வழங்குகிறார். இப்படத்தின் முன் வெளியீட்டு நிகழ்வு படக்குழுவினர் கலந்துகொள்ள, பத்திரிக்கை ஊடக நண்பர்கள் முன்னிலையில் கோலாகலமாக நடைபெற்றது., இந்நிகழ்வினில்… வசனகர்த்தா ஆர் பி பாலா பேசியதாவது… மோகன்லால் சாருடன் புலிமுருகன் பணியாற்றினேன் பின்னர் இப்படத்தில் பணியாற்றியுள்ளேன். 3 வருடங்களுக்கு முன்பு பிரம்மாண்டமாக இப்படம் ஆரம்பித்தது. நான் இதுவரை 2டியில் தான் பார்த்திருக்கிறேன். இன்று தான் இங்கு டிரெய்லர் 3 டியில் பார்த்தேன். இந்தளவு நேர்த்தியாக ஒரு திரைப்படம் இந்திய சினிமாவில் வந்ததில்லை. டெக்னீசியன்ஸ் எல்லோருமே மிகப்பெரிய உழைப்பைத் தந்துள்ளனர்.…

Read More

அமெரிக்கா டல்லாஸில் நடைபெற்ற “கேம் சேஞ்சர்” முன் வெளியீட்டு நிகழ்வு !!

குளோபல் ஸ்டார் ராம் சரணின் கேம் சேஞ்சர் படத்தின் பிரமாண்டமான முன் வெளியீட்டு நிகழ்வு சனிக்கிழமை அமெரிக்காவின் டல்லாஸ் நகரின் கர்டிஸ் கல்வெல் மையத்தில் நடைபெற்றது. இந்திய திரை வரலாற்றில் அமெரிக்காவில் நடத்தப்பட்ட இந்தியத் திரைப்படத்தின் முதல் முன் வெளியீட்டு நிகழ்வு இதுவாகும். பல்லாயிரக்கணக்கான ரசிகர்கள் இந்த நிகழ்வில் கலந்து கொள்ள, மாபெரும் கொண்டாட்டமாக இந்நிகழ்வு நிகழ்ந்தேறியது. குளோபல் ஸ்டார் ராம் சரண், இயக்குநர் ஷங்கர், தயாரிப்பாளர்கள் தில் ராஜு, சிரிஷ், இசையமைப்பாளர் தமன், நடிகை அஞ்சலி உள்ளிட்ட படத்தின் முக்கிய குழுவினர் இவ்விழாவில் கலந்து கொண்டனர். குளோபல் ஸ்டார் ராம் சரணுடன் அடுத்த திரைப்படத்தில் இணைந்து பணியாற்றவுள்ள இயக்குநர் சுகுமார் மற்றும் புச்சி பாபு சானா ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக இவ்விழாவில் கலந்து கொண்டனர். இந்த அற்புதமான நிகழ்வை ராஜேஷ் கல்லேபள்ளி ஏற்பாடு செய்திருந்தார். டல்லாஸ்…

Read More

தி ஓல்ட் மிர்ச்சி பிரியாணி கடையின் 6 வது கிளையை திறந்து வைத்த நடிகர் ஆர்யா

சென்னையின்  பாரம்பரியமிக்க பிரியாணி கடையான தி ஓல்ட் மிர்ச்சி பிரியாணி கடையின் 6 வது கிளை, சென்னை அண்ணாநகரில், கோலாகலமாக துவக்கப்பட்டது. பிரபல நடிகர் ஆர்யா இக்கடையை துவக்கி வைத்து வாழ்த்துத் தெரிவித்தார். 2009 ல் ராம்குமார், சுந்தர், காந்தினி ஆகியோரால் ஆரம்பிக்கப்பட்ட சென்னை துரைப்பாக்கத்தில், துவங்கப்பட்ட தி ஓல்ட் மிர்ச்சி பிரியாணி கடை, காரம் தூக்கலாக வித்தியாசமான சுவையில், தனித்துவமான பிரியாணியை வழங்கி, மக்களின் மனதில் இடம்பிடித்தது. இந்த 15 வருடங்களில் இக்கடை, துரைப்பாக்கம், தரமணி, ஆழ்வார்பேட்டை , வேளச்சேரி மற்றும் காட்டுப்பாக்கம் என 6 இடங்களில் கடை விரிவாக்கம் செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் இக்கடையின் 6 வது கிளை அண்ணாநகரில் நடிகர் ஆர்யா துவக்கி வைத்தார். நடிகர் ஆர்யா தெரிவித்ததாவது… எனக்கு தி ஓல்ட் பிரியாணி ரொம்ப பிடிக்கும். அண்ணாநகர் பிரியாணிக்கு பெயர் பெற்ற இடம்,…

Read More

“இரட்டை இயக்குனர்கள் இந்த படத்தை வித்தியாசமாக எடுத்துள்ளனர்” — ‘தி ஸ்மைல் மேன்’ பட விழாவில் நடிகர் சரத்குமார் புகழாரம்

மேக்னம் மூவிஸ் சார்பில் தயாரிப்பாளர் சலீல் தாஸ் தயாரிப்பில், இயக்குநர்கள் ஷ்யாம் – பிரவீன் இயக்கத்தில்,  சரத்குமார் நடிப்பில் 150 வது சிறப்பு திரைப்படமாக உருவாகியுள்ளது  “தி ஸ்மைல் மேன்” (The Smile Man). இப்படம் டிசம்பர் 27 ஆம் தேதி உலகமெங்கும் வெளியாகவுள்ள நிலையில், படக்குழுவினர் செய்தியாளர்களை  சந்தித்தனர். இந்த நிகழ்வில் தயாரிப்பாளர் சலீல் தாஸ் பேசியதாவது…. இது தயாரிப்பில் என் முதல் தமிழ்ப்படம், முழுமையான ஒத்துழைப்பு தந்த என் குழுவினருக்கு நன்றி. கண்டிப்பாக உங்கள் அனைவருக்கும் பிடிக்கும் ஆதரவு தாருங்கள் நன்றி. திரைக்கதை எழுத்தாளர் கமலா ஆல்கெமிஸ் பேசியதாவது… எங்க செட்லயே உற்சாகமான நபர் சரத்குமார் சார் தான். பவுண்ட் ஸ்க்ரிப்ட் வாங்கி வைத்துக்கொண்டு, எல்லாவற்றையும் குறித்து வைத்துக்கொண்டு, எப்பொழுதும் தயாராக இருப்பார். அவரின் 150 பட திரை அனுபவம், அறிவு எங்களை திகைக்க…

Read More