இயக்குநர் ஹரியின் “குட்லக் ஸ்டுடியோஸில் புதிதாக துவங்கப்பட்ட 5.1 மிக்ஸிங்

கமர்ஷியல் சினிமாவில் தனக்கென தனி பாணி அமைத்து தனது வெற்றி படங்களின் எண்ணிக்கையை தொடர்ந்து அதிகரித்து வரும் இயக்குநர் ஹரி, டப்பிங், படக்கோர்ப்பு (மிக்ஸிங்), மற்றும் படத்தொகுப்பு (எடிட்டிங்) உள்ளிட்ட போஸ்ட் ப்ரொடக்ஷன் பணிகளை திரையுலகினர் சிறப்பாக மேற்கொள்வதற்காக அதிநவீன வசதிகள் கொண்ட குட்லக் ஸ்டுடியோஸை கடந்த வருடம் தொடங்கினார். கடந்த ஒரு வருடமாக மேற்கண்ட சேவைகளை திறம்பட வழங்கி வந்த குட்லக் ஸ்டுடியோஸ், இன்று இரண்டாம் ஆண்டுக்குள் வெற்றிகரமாக அடி எடுத்து வைத்துள்ளது. இதை கொண்டாடும் விதமாக, 5.1 மிக்ஸிங் மற்றும் டப்பிங் வசதி கொண்ட புதிய ஸ்டுடியோவை இயக்குநர் ஹரி தொடங்கினார். அதிநவீன தொழில்நுட்ப வசதிகளை குறைந்த செலவில் நிறைந்த தரத்தில் திரையுலகத்திற்கு வழங்குவதே குட் லக் ஸ்டுடியோஸ் தொடங்கப்பட்டதன் நோக்கம் என்று கூறிய இயக்குநர் ஹரி, தனக்கு தொடர்ந்து ஆதரவு அளித்து வரும்…

Read More

”பார்த்திபன் சார் பல புதிய பாதைகளை போட்டுக்கொண்டே செல்கிறார்.” – இயக்குநர் பேரரசு

உலகிலேயே முதல் முறையாக திரையரங்குகளில் தணிக்கை சான்றிதழ் உடன் முதல் பார்வை வெளியிடப்பட்டு சாதனை படைத்த இராதாகிருஷ்ணன் பார்த்திபனின் முற்றிலும் மாறுபட்ட, குழந்தைகளை மையமாகக் கொண்ட சாகச திரில்லரான ‘டீன்ஸ்’ திரைப்படத்தின் இசை மற்றும் டிரெய்லர் சென்னையில் சனிக்கிழமை அன்று வெளியிடப்பட்டது. டிரெய்லரை இயக்குநர் மணிரத்னம் வெளியிட்ட நிலையில், ‘டீன்ஸ்’ திரைப்படத்தின் இசை சென்னை கமலா திரையரங்கில் நான்கு காட்சிகளாக தொடர்ந்து வெளியிடப்பட்டு புதிய உலக சாதனையை படைத்துள்ளது. இதை தொடர்ந்து, ஒரே நாளில் ஒரே இடத்தில் அதிக இசை வெளியீட்டு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்ட படம் என்பதற்கான சான்றிதழ் ‘டீன்ஸ்’ திரைப்படத்திற்கு உலக சாதனைகள் சங்கத்தால் வழங்கப்பட்டது. பதிமூன்று குழந்தைகளை மையமாகக் கொண்ட கதை என்பதால் பல்வேறு துறைகளில் சாதனை புரிந்த 13 இளம் வயதினருக்கு நேற்று நடைபெற்ற நிகழ்ச்சியில் ‘டீன்ஸ்’ படக்குழு நேரில் பாராட்டு தெரிவித்தது.…

Read More

புஷ்பா தி ரூல்-லிருந்து வெளியான ராஷ்மிகாவின் அழகான போஸ்டர்

நடிகர் அல்லு அர்ஜூன் நடித்திருக்கும் புஷ்பா கதாபாத்திரம் ரசிகர்களின் பெரும் வரவேற்பைப் பெற்ற ஒன்று. இப்போது மீண்டும் புஷ்பாவாக அவர் நடித்திருக்கும் ‘புஷ்பா: தி ரூல்’ திரைப்படம் ஆகஸ்ட் 15, 2024 அன்று உலகம் முழுவதும் பிரமாண்டமாக வெளிவரத் தயாராகிறது. சுகுமார் இயக்கத்தில், மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரித்திருக்கும் இந்த புகழ்பெற்ற பான்-இந்தியா திரைப்படம் ரசிகர்களுக்கு நிச்சயம் சிறந்த திரை அனுபவத்தைக் கொடுக்கும். உலகெங்கிலும் உள்ள பார்வையாளர்களால் அதிகம் எதிர்பார்க்கப்படும் இந்தப் படம் அதிரடி ஆக்‌ஷன் காட்சிகளுடன் உருவாகி இருக்கிறது. இன்று ராஷ்மிகா மந்தனாவின் பிறந்தநாளையொட்டி, படத்தில் இருந்து அவரின் அழகான போஸ்டர் ஒன்றை படக்குழு வெளியிட்டுள்ளது. படத்தின் முதல் பாகத்தின் மூலம் முத்திரை பதித்த ஸ்ரீவள்ளி மீண்டும் இந்தப் பாகத்திலும் ரசிகர்களை மகிழ்விக்க வருகிறார். முதல் பாகத்தை விட இரண்டாம் பாகத்தில் அவரது கதாபாத்திரம் இன்னும்…

Read More

அனைத்துத்தரப்பு பெண்களையும் மயக்கும் டி.இமானின் ‘மாயோன்‘ பாடல் !!

இசையமைப்பாளர் டி.இமான் இசையில் உருவான புதிய பாடலான “மாயோன்” பாடல், இசை ரசிகர்களின் ஏகோபித்த வரவேற்பில் இணையம் முழுக்க வைரலாகி வருகிறது. தமிழ் சினிமாவின் முன்னணி இசையமைப்பாளர் டி.இமான். கிராமத்து இசை, மெலடி, குத்துப்பாட்டு என அனைத்து வகைகளிலும் கலக்கக்கூடியவர். அவரது இசையில் மைனா, கும்கி, வருத்தப்படாத வாலிபர் சங்கம், ரஜினிமுருகன், சீமராஜா, ரோமியோ ஜூலியட், அண்ணாத்த, விஸ்வசம் எனப் பல படங்கள் முழு ஆல்பம் ஹிட்களாக, இசை ரசிகர்களை மகிழ்வித்து வருகிறது. தமிழ் இசை உலகில், ரசிகர்களின் பாடல் பிளே லிஸ்டில் நீங்காத இடம் பிடித்துள்ளது டி.இமான் பாடல்கள். அந்த வரிசையில் தற்போது, கோபுரம் பிலிம்ஸ் G.N.அன்புச்செழியன் அவர்கள் தயாரிப்பில், நட்சத்திர நடிகர் சந்தானம் நடிப்பில் உருவாகியிருக்கும் ‘இங்க நான்தான் கிங்கு‘ என்ற படத்தின் ‘மாயோனே செல்ல மாயோனே‘ என்ற பாடல், சார்ட்பஸ்டர் ஹிட்டாக மாறியுள்ளது.…

Read More

அழகான ஒரு ஸ்போர்ட்ஸ் டிராமாவாக இந்த ‘நாற்கரப்போர்’ உருவாகி உள்ளது” – இயக்குநர் ஸ்ரீவெற்றி

V6 பிலிம் பிரைவேட் லிமிடெட் சார்பில் S.வேலாயுதம் தயாரிப்பில் உருவாகி வரும் படம் ‘நாற்கரப்போர்’. இயக்குநர் ஸ்ரீவெற்றி இப்படத்தை இயக்குகிறார். ஹெச்.வினோத், ராஜபாண்டி உள்ளிட்ட இயக்குநர்களிடம் இவர் உதவி இயக்குநராக பணியாற்றியவர். இறுகப்பற்று படம் மூலம் கவனம் பெற்ற நடிகை அபர்ணதி கதாநாயகியாக நடிக்க, படத்தின் மைய கதாபாத்திரமாக சேத்துமான் படத்தில் நடித்த அஸ்வின் நடிக்கிறார். முக்கிய வேடத்தில் கபாலி, பரியேறும் பெருமாள் புகழ் லிங்கேஷ், வில்லனாக சுரேஷ் மேனன் ஆகியோர் நடிக்கின்றனர். பிரபல மலையாள இயக்குநர் மேஜர் ரவியின் மகன் அர்ஜுன் ரவி, மற்றும் ஞானசேகரன் ஆகியோர் இப்படத்தின் மூலம் தமிழில் ஒளிப்பதிவாளராக அறிமுகமாகிறார்கள். சந்தோஷ் நாராயணனிடம் பல படங்களில் இணைந்து பணியாற்றிய தினேஷ் ஆண்டனி இந்த படத்திற்கு இசையமைக்கிறார். ரஞ்சித் சிகே என்பவர் படத்தொகுப்பை மேற்கொள்கிறார். கலை ஶ்ரீமன்ராகவன். பாடல்கள் குகை மா புகழேந்தி.…

Read More

“தகுதியுள்ளவை தப்பிப் பிழைக்கும் என்பது தான் வல்லவன் வகுத்ததடா படத்தின் மையம்” – இயக்குநர் விநாயக் துரை

Focus Studios சார்பில் விநாயக் துரை தயாரித்து, இயக்க, ஹைப்பர்லிங் திரைக்கதையில், க்ரைம் டிராமா படமாக உருவாகியிருக்கும் திரைப்படம் “வல்லவன் வகுத்ததடா”. வரும் ஏப்ரல் 11 ஆம் தேதி திரைக்கு வரவுள்ள நிலையில், இப்படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு நிகழ்வு, படக்குழுவினருடன் திரைப்பிரபலங்கள் கலந்துகொள்ளப் பத்திரிக்கை, ஊடக நண்பர்கள் முன்னிலையில் கோலாகலமாக நடைபெற்றது. இந்நிகழ்வினில்… இயக்குநர் விநாயக் துரை பேசியதாவது… வாழ்த்த வந்த நல்ல உள்ளங்களுக்கு நன்றி. எங்களின் 2 வருட போராட்டம் தான் இந்தப்படம். இந்தப்படத்தின் மீது வெளிச்சம் விழக்காரணம் தனஞ்செயன் சார் தான் அவருக்கு நன்றி. தனஞ்செயன் சார் படம் பார்த்து விட்டு படம் பிடித்திருக்கிறது என்று சொன்னபோது, அவர் தான் கால் பண்ணிப்பேசுகிறாரா ? என ஆச்சரியமாக இருந்தது. எங்களை வெகுவாக பாராட்டி அவர் பேனரையும் தந்துள்ளார். பீட்சா படம் வந்த போது CV…

Read More

தெலுங்கு சினிமாவைக் கலக்கும் திருநெல்வேலிக்காரர்

  திறமையானவர்கள் எங்கிருந்தாலும், அவர்களுக்கான வாய்ப்பு தேடி வரும் என்பதை பிற மொழித் திரைப்படங்களில் பணியாற்றும் தமிழ் தொழில்நுட்ப கலைஞர்கள் நிரூபித்து வருகிறார்கள். அவர்களில் ஒருவராக தமிழ் சினிமாவில் இருந்து புறப்பட்டு தற்போது தெலுங்கு சினிமாவை கலக்கிக் கொண்டிருப்பவர் தான் இசையமைப்பாளர் நவ்பல் ராஜா (NAWFAL RAJA) திருநெல்வேலியை பூர்விகமாக கொண்ட இசையமைப்பாளர் நவ்பல் ராஜா, சிறுவயது முதலே இசை மீது தீரா காதல் கொண்டதால், தனது பள்ளி பருவத்திலேயே பல இசைக்கருவிகளை வாசிக்க கற்றுக்கொண்டார். மேலும், பள்ளிப்படிப்பை முடித்தவுடன் இசைத்துறை தான் தனது வாழ்க்கை என்று முடிவு செய்து அதில் பயணித்தவர் தற்போது தெலுங்கு சினிமாவின் முன்னணி இசையமைப்பாளர்களில் ஒருவராக பயணித்து வருகிறார். நவீன் சந்திரா, சாய்குமார் ஆகியோரது நடிப்பில் வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்ற ‘அர்த சதாப்தம்’ படத்தின் மூலம் தெலுங்கு சினிமாவில் இசையமைப்பாளராக…

Read More

ஏப்ரல் 14ல் மோகன் நடிக்கும் அதிரடி ஆக்‌ஷன் “ஹரா”வின் டீசர்

  பரப்பரப்பான பான் இந்தியா ஆக்ஷன் படமான ‘ஹரா’ தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் கன்னட மொழிகளில் விரைவில் திரையரங்குகளில் வெளியாகிறது இயக்குநர் விஜய் ஸ்ரீ ஜி-யின் சமீபத்திய படைப்பான ‘பவுடர்’ ஜியோ சினிமா ஓடிடி தளத்தில் கடந்த வாரம் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்று வரும் நிலையில், அவரது அடுத்த படமான ‘ஹரா’-வின் டீசர் தமிழ் புத்தாண்டான ஏப்ரல் 14 அன்று வெளியாகிறது. பதினான்கு வருடங்களுக்கு பிறகு அதிரடி ஆக்ஷன் வேடத்தில் நடிகர் மோகன் ரீ-என்ட்ரி கொடுக்கும் ‘ஹரா’ திரைப்படத்தில் அவரது ஜோடியாக பிரபல மலையாள நடிகை அனுமோல் நடிக்கிறார். டீசரை தொடர்ந்து திரைப்படம் விரைவில் திரையரங்களில் வெளியாகவுள்ளது, அதுவும் பான் இந்தியா படமாக தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் கன்னட மொழிகளில் வெளியாகிறது. ‘ஹரா’ திரைப்படத்தின் அதிரடி முதல் பார்வை மற்றும் டைட்டில் டீசர்…

Read More

சுயம்பு -வில் நிகிலுடன் இணையும் நபா நடேஷ்

பிக்சல் ஸ்டுடியோ தயாரிப்பில் பரத் கிருஷ்ணமாச்சாரி இயக்கத்தில் நிகில் நடிப்பில் உருவாகும் ‘சுயம்பு’ படத்தில் நடிகை நபா நடேஷ் இணைந்துள்ளார்!   ’கார்த்திகேயா 2’ படம் மூலம் உலகம் முழுவதும் உள்ள ரசிகர்களிடம் பிரபலமடைந்த நிகில் தற்போது நடிக்கும் ’சுயம்பு’ திரைப்படம் ரசிகர்கள் மிகவும் எதிர்பார்க்கும் படங்களில் ஒன்றாகும். பழம்பெரும் வீரராக நடிக்கும் நடிகர் நிகில் படத்தில் தன் கதாபாத்திரத்திற்காக ஆயுதம், தற்காப்பு கலை, குதிரை சவாரி போன்றவற்றில் தீவிர பயிற்சி எடுத்துள்ளார். பரத் கிருஷ்ணமாச்சாரி இயக்கத்தில் உருவாகும் இந்தப் படம் நடிகர் நிகிலின் இருபதாவது படமாகும். தாகூர் மது வழங்க, பிக்சல் ஸ்டுடியோவின் கீழ் இந்த பான் இந்தியா படத்தை புவன் மற்றும் ஸ்ரீகர் தயாரிக்கின்றனர். ’சுயம்பு’ திரைப்படம் உயர்தர தொழில்நுட்ப மற்றும் அதிக தயாரிப்பு மதிப்புகளுடன் உருவாகிறது. இப்படத்தில் சம்யுக்தா கதாநாயகிகளில் ஒருவராக நடிக்கிறார்.…

Read More

கள்வன் குடும்பங்களை கவர்ந்திழுக்கும் பொழுதுபோக்கு திரைப்படம்

தயாரிப்பாளர் ஜி. டில்லி பாபுவின் ஆக்சஸ் ஃபிலிம் ஃபேக்டரி தரம்மிக்க படைப்புகளைத் தயாரிப்பதன் மூலம் திரைப்பட ஆர்வலர்கள் மற்றும் வர்த்தக வட்டாரத்திலும் தொடர்ந்து கவனத்தை ஈர்த்து வருகிறது. இந்தத் தயாரிப்பு நிறுவனம் இப்போது வரவிருக்கும் ‘கள்வன்’ படத்தின் மூலம் பார்வையாளர்களை கவர தயாராகி வருகிறது. ஒளிப்பதிவாளர் பி.வி. ஷங்கர் இயக்கி இருக்கும் இந்தப் படத்தில் ஜி.வி. பிரகாஷ் குமார், பாரதிராஜா, இவானா மற்றும் தீனா ஆகியோர் முதன்மை கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இந்தப் படம் ஏப்ரல் 4, 2024 அன்று உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியிட திட்டமிடப்பட்டுள்ளது. ஆக்சஸ் ஃபிலிம் ஃபேக்டரி எப்போதும் பல்வேறு ஜானர் மற்றும் தனித்துவமான கதைக்களங்களைக் கொடுக்க ஆர்வமுடன் உள்ளது என்கிறார் தயாரிப்பாளர் ஜி. டில்லி பாபு. அட்வென்ச்சர் ஜானரில் ஏதாவது புது முயற்சி செய்ய வேண்டும் என காத்திருந்தபோது, ‘கள்வன்’ திரைக்கதை மூலம்…

Read More