தீபாவளி திருநாளை முன்னிட்டு எதிர்வரும் நவம்பர் 6 ஆம் தேதி முதல் உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகும் நடிகர் சூர்யா நடிக்கும் ‘சீன்’ படத்தின் இசை மற்றும் முன்னோட்ட வெளியீட்டு விழா சென்னையில் சிறப்பாக நடைபெற்றது. இயக்குநர் ஜித்து மாதவன் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘சீன்’ திரைப்படத்தில் சூர்யா, நஸ்ரியா நஜீம், நஸ்லென், ஆனந்தராஜ், லால், ராஜ் பிரியன் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். வினீத் அகஸ்டியன் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு சுஷின் ஷ்யாம் இசையமைந்திருக்கிறார். மாஸ் ஆக்ஷன் என்டர்டெய்னராக தயாராகி இருக்கும் இந்த திரைப்படத்தை ழகரம் ஸ்டுடியோஸ் மற்றும் 2 டி என்டர்டெய்ன்மென்ட் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர்கள் சூர்யா – ஜோதிகா ஆகியோர் இணைந்து தயாரித்திருக்கிறார்கள். ஜெயஸ்ரீ தாமோதரன்- ராஜசேகர் பாண்டியன் ஆகியோர் இணை தயாரிப்பாளர்களாக பொறுப்பேற்றுள்ளனர். இப்படத்தின் இசை மற்றும் முன்னோட்ட வெளியீட்டு விழா சென்னையில்…
Read MoreCategory: சினி-நிகழ்வுகள்
வாய்ப்பு கொடுக்காதவர்களுக்கு நன்றி: ‘லவ் 3. ஓ’ (Love 3. O ) புதுமுக இயக்குநர் ஆர்னிகா கண்ணீருடன் உருக்கம்!
மூன்று தலைமுறையிலும் அந்தந்தத் தலைமுறையினர் காதலை எப்படி அணுகுகிறார்கள் என்பதைக் கூறுகிற இப்படம், காலமாற்றத்தில் வெளிப்படும் காதலின் மாறுபட்ட பரிமாணத்தைச் சித்தரிக்கும் வகையில் உருவாகியுள்ளது. இந்தப் படத்தில் இன்ஸ்டாகிராமில் ‘ரீல்ஸ் அக்கா’ என்று பிரபலமான ஆர்னிகா கதை ,திரைக்கதை, வசனம், பாடல்கள், கலை இயக்கம், உடை அலங்காரம், இணைத் தயாரிப்பு என்று பல்வேறு பொறுப்புகளை ஏற்றதுடன் கதாநாயகியாகவும் நடித்து இயக்கியிருக்கிறார். இந்தப் படத்தில் தயாரிப்பாளர் சிவகுமார் முக்கியமான வேடம் ஏற்று நடித்துள்ளார். நாயகி ஆர்னிகாவுடன் இன்ஸ்டாகிராம் பிரபலங்கள் கோயம்புத்தூர் மாப்ள, கே என் ஸ்மைலி எனப்படும் கார்த்திகேயன் என இருவரும் பிரதான வேடங்களில் நடித்துள்ளனர். இப்படத்திற்கு வேதை பா. மகேஷ் ஒளிப்பதிவு செய்துள்ளார். வைகுந்த் ஸ்ரீனிவாசன் இசையமைத்துள்ளார். அரவிந்த் படத்தொகுப்பு செய்துள்ளார். நிர்வாகத் தயாரிப்பாளராக பிரசன்ன குமார் பங்கேற்றுள்ளார் . மங்கி மைண்ட்ஸ் என்டர்டெய்ன்மென்ட் சார்பில் சிவகுமார்…
Read More‘பனி விழும் இரவு’ பட பத்திரிக்கையாளர் சந்திப்பு !!
பவி கிரியேஷன்ஸ் சார்பில் தயாராகியுள்ள திரைப்படம் ‘பனிவிழும் இரவு’. அருண் கார்த்தி கதாநாயகனாகவும், எனாக்ஷி கங்குலி கதாநாயகியாகவும் நடித்துள்ள இப்படத்தை இயக்குநர் செ.ரா. ராஜேஷ் இயக்கியுள்ளார். திரில்லர் கதைக்களத்தில் உருவாகியுள்ள இப்படம் வரும் அக்டோபர் 30 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு இன்று நடைபெற்றது. இதில் படத்தின் இயக்குநர் மற்றும் படக்குழுவினர் கலந்துகொண்டு, படத்தின் உருவாக்கம், கதைக்களம் மற்றும் படப்பிடிப்பின்போது ஏற்பட்ட அனுபவங்கள் குறித்துப் பகிர்ந்துகொண்டனர். இந்நிகழ்வினில்…, ‘தயாரிப்பாளர் சதா முருகன் பேசியதாவது.., “பனிவிழும் இரவு என்பது மாறுபட்ட, கவித்துவமான தலைப்பு. நான் ஒரு பாடலாசிரியரும் கூட. சமீபகாலமாக வெளியாகும் பல தமிழ்ப் படங்களுக்குத் தமிழின் அழகையும் பெருமையையும் தாங்கும் தலைப்புகள் அமைவதில்லை என்பது வருத்தமளிக்கிறது. அதனால், அனைவருக்கும் எளிதில் புரியக்கூடிய வகையில் இந்தத் தலைப்பைத் தேர்ந்தெடுத்தோம். ஆண்டுதோறும் முன்னூறுக்கும் மேற்பட்ட படங்கள்…
Read More*யோகி பாபு நடிக்கும் ‘சிங்காரம்’ திரைப்டம் அக்டோபர் 30-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியிடு*
ராக் புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில், யோகி பாபு கதாநாயகனாக நடித்துள்ள ‘சிங்காரம்’ திரைப்படத்தை இயக்குநர் கே.வி. கதிர்வேலு இயக்கியுள்ளார். ஏ.எஸ். ரமண பாலாஜி மற்றும் பத்மாவதி காந்தி தயாரித்துள்ள இப்படத்திற்கு சாம் சி.எஸ். இசையமைத்துள்ளார். ஏற்கெனவே இப்படத்தின் டீசர் வெளியாகி கவனம் பெற்ற நிலையில், தற்போது இசை வெளியீட்டு விழாவை முன்னிட்டு டிரெய்லரும் வெளியிடப்பட்டுள்ளது. வரும் அக்டோபர் 30-ஆம் தேதி இப்படம் உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. நரிக்குறவர் சமூகத்தின் வாழ்வியல், வரலாற்றுப் பின்னணி, சமூகத்தில் அவர்கள் எதிர்கொள்ளும் புறக்கணிப்புகள் மற்றும் உரிமைக்கான குரல் ஆகியவற்றை மையமாகக் கொண்டு ‘சிங்காரம்’ உருவாகியுள்ளது. நரிக்குறவர் சமூகத்தைச் சேர்ந்த ஒருவர் அரசியலில் ஈடுபட்டு சட்டமன்ற உறுப்பினராக உயர்வதை மையமாகக் கொண்டுள்ள இப்படம், சமூக விழிப்புணர்வுடன் நகைச்சுவை மற்றும் குடும்ப உணர்வுகளையும் இணைத்துப் பேசுகிறது. இப்படத்தின் இசை வெளியீட்டு விழாவில் சிறப்பு விருந்தினராக…
Read Moreஜே.கே. தமிழ் மீடியா புரொடக்ஷன்ஸ் நிறுவனத்தின் சார்பில் ஜே. ஜே எனும் ஜெயச்சந்திரன் இந்த வெப் தொடரை பிரமாண்டமாக தயாரிக்கிறார்.
பிரஜ்ஜன் நடிப்பில் விரைவில் வெளியாக உள்ள ” இறப்பின் ரகசியம் ” படத்தை இயக்கிய இமானுவேல் இந்த வெப் தொடரை கதை, திரைக்கதை, எழுதி இயக்குகிறார். இந்த வெப் தொடரில் மாறன், சென்ராயன், ஜெயச்சந்திரன், ப்ரணா, RJ புவனேஸ்வரி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கிறார்கள். மற்றும் நித்யா Queen, ரோஹிந்த், தீபா ஆகியோர் நடிக்கின்றனர். அதுமட்டுமின்றி, நடிகர்களை சாராத ஒரு முக்கிய கதாபாத்திரம் இந்த வெப் தொடரில் இடம்பெறும். அது தமிழ் ரசிகர்களுக்கு எதிர்பாராத புதிய அனுபவமாக இருக்கும். அஷ்வின் நோயல் ஒளிப்பதிவு செய்கிறார். கலை இயக்கப் பணிகளை ஸ்ரீமன் மேற்கொள்கிறார். படத்தொகுப்புப் பணிகளை நந்தா மேற்கொள்கிறார். மக்கள் தொடர்பு – புவன் செல்வராஜ். வெப் தொடர் பற்றி இயக்குனர் இமானுவேல் பேசியதாவது…. கலைஞர்கள் அழிந்தாலும் கலைகள் அழிவதில்லை. ஆனால், இன்றைய தொழில்நுட்ப வளர்ச்சியால் ஓவிய கலைகளும்,…
Read More‘எல்லம்மா’ திரைப்படம் உலகம் முழுவதும் மார்ச் 5, 2027 அன்று வெளியாகிறது!
தசரா பண்டிகையை முன்னிட்டு ‘எல்லம்மா’ திரைப்படத்தின் உலகளாவிய திரையரங்கு வெளியீட்டுத் தேதியைப் படக்குழுவினர் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர். இப்படம் மார்ச் 5, 2027 அன்று உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. ராக்ஸ்டார் தேவி ஸ்ரீ பிரசாத் கதாநாயகனாக நடிக்கும் இப்படத்தை, ‘பலேகம்’ புகழ் வேணு யெல்தண்டி இயக்குகிறார். தற்போது இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. தில்ராஜு வழங்க, சிரிஷ் தயாரிப்பில், ஸ்ரீ வெங்கடேஸ்வரா கிரியேஷன்ஸ் தயாரிப்பு நிறுவனத்தின் சார்பில் இப்படம் உருவாகி வருகிறது. ராக்ஸ்டார் தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைக்கும் ‘எல்லம்மா’ திரைப்படம் பிரம்மாண்டமான பான் இந்திய வெளியீடாக தெலுங்கு, தமிழ், இந்தி, மலையாளம் மற்றும் கன்னடம் என மொத்தம் ஐந்து மொழிகளில் உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. ‘எல்லம்மா’ திரைப்படம் மார்ச் 5, 2027 அன்று உலகம் முழுவதும் வெளியாகிறது.
Read Moreஇசைஞானி இளையராஜா இசையமைப்பில் பாலா இயக்கத்தில் சூர்யா, லைலா நடித்த ‘நந்தா’, அமீர் இயக்கத்தில் சூர்யா, திரிஷா நடித்த ‘மௌனம் பேசியதே’ வெற்றிப் படங்களைத் தயாரித்த, அபராஜீத் பிலிம்ஸ் கணேஷ் ரகு தயாரிப்பில், அமீரின் உதவி இயக்குநர் இராம்.நா இயக்கும் புதிய படம்
அமெரிக்காவில் வசிக்கும் கணேஷ் ரகு, தனது அபராஜீத் பிலிம்ஸ் சார்பாக மிகுந்த பொருட்செலவில் பாலா இயக்கத்தில் சூர்யா, லைலா நடித்த ‘நந்தா’ படத்தை தயாரித்து மிக பிரம்மாண்டமான வெற்றியின் மூலம் தமிழ் திரையுலகில் தடம் பதித்தார். தொடர்ந்து, பாலாவின் உதவி இயக்குநர் அமீரை சூர்யா, திரிஷா நடித்த ‘மௌனம் பேசியதே’ படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகம் செய்து, அப்படம் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது. இதைத் தொடர்ந்து, அமீரின் உதவி இயக்குநர் இராம்.நா இயக்கத்தில், புதிய படம் ஒன்றை மிகப் பிரம்மாண்டமான பொருட்செலவில் அபராஜீத் பிலிம்ஸ் பேனரில் கணேஷ் ரகு தற்போது தயாரிக்க உள்ளார். இப்படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் சென்னையில் தொடங்கிய நிலையில், தொடர்ந்து நவம்பர் மாதம் முதல் கோவையில் படப்பிடிப்பு நடைபெற உள்ளது. *இப்படத்தின் தொடக்க விழா நிகழ்வில், சேரன் clap – in சொல்ல, சசிக்குமார்…
Read Moreநடிகர்களே… ‘லோன் வாங்கி, கார் வாங்காதீங்க’! —நடிகர் அப்புக்குட்டி
“பண்டமாற்று” குறும்பட விழாவில் பேசிய அப்புக்குட்டி, இந்த படத்தின் கதை வட்டிக்கு பணம் வாங்குவது, கார் அடமானம் வைப்பது. அதனால் வரும் பிரச்சினைகளை சொல்கிறது. நானும் எனது காரை அடமானம் வைத்து, அவதிப்பட்டு உள்ளேன். எல்லா நடிகர்களும் வசதியானவர்கள் இல்லை. 10 சதவீதம் நடிகர்கள் தான் வசதியாக இருக்கிறார்கள். அதனால் நடிகர்களே, லோன் வாங்கி கார் வாங்காதீங்க! ஒரு மாதம் வருமானம் வரும். பல மாதங்கள் வருமானம் வராது. மாட்டிக்கிவீங்க. எனது அனுபவத்தில் சொல்கிறேன் என்று பேசினார் அப்புக்குட்டி. விழாவில் சிறப்பு விருந்தினர்களாக இயக்குநர் ராசி அழகப்பன், நடிகர் அப்புக்குட்டி, நடிகர் காதல் சுகுமார், இயக்குநர் இஸ்மாயில் ஆகியோர் கலந்துக் கொண்டனர். புஷ்வானம் டாக்கீஸ் சார்பில், கண்ணன் சாவித்திரி கதை எழுதி, தயாரித்து, இயக்கியுள்ள படம் “பண்டமாற்று”. ஒளிப்பதிவு மற்றும் எடிட்டிங் பாண்டி அருணாசலம், இசை அர்ஜுன்…
Read Moreமைத்ரி மூவி மேக்கர்ஸ் நவீன் யெர்னேனி மற்றும் ஒய். ரவி சங்கர் வழங்கும் ‘இன்று நேற்று நாளை’, ‘அயலான்’ படங்களின் இயக்குநர் ரவிக்குமார் இயக்கத்தில், பிளாக்பஸ்டர் நாயகன் சூரி நடிக்கும் புதிய திரைப்படம் பிரம்மாண்ட பூஜையுடன் தொடங்கியது!
மைத்ரி மூவி மேக்கர்ஸ் நவீன் யெர்னேனி மற்றும் ஒய். ரவி சங்கர் வழங்கும் ‘இன்று நேற்று நாளை’, ‘அயலான்’ படங்களின் இயக்குநர் ரவிக்குமார் இயக்கத்தில், பிளாக்பஸ்டர் நாயகன் சூரி நடிக்கும் புதிய திரைப்படம் பிரம்மாண்ட பூஜையுடன் தொடங்கியது! நடிகர் சிவகார்த்திகேயன் கிளாப் அடிக்க, ‘மண்டாடி’ படத்தின் தயாரிப்பாளர் ஆர்.எஸ். இன்ஃபோடெயின்மென்ட் எல்ரெட் குமார் கேமராவை இயக்கி படப்பிடிப்பைத் தொடங்கி வைத்தார். வித்தியாசமான கதையம்சம் கொண்ட படங்களைத் தேர்ந்தெடுத்து, விமர்சன ரீதியாகவும் வணிக ரீதியாகவும் வெற்றி பெற்றுவரும் நடிகர் சூரி, பிளாக்பஸ்டர் பொழுதுபோக்குத் திரைப்படங்களைத் தயாரிப்பதில் பெயர் பெற்ற தயாரிப்பு நிறுவனமான மைத்ரி மூவிக்கர்ஸ் தயாரிப்பில் நடிக்கும் புதிய படம் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. நடிகர் சூரி கதாநாயகனாக நடிக்கும் ஏழாவது திரைப்படம் இது. நவீன் யெர்னேனி மற்றும் ஒய். ரவி சங்கர் தலைமையிலான மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிக்கும்…
Read Moreதுபாயில் வெளியிடப்பட்ட ‘தி ரீல் ஃபைல்ஸ்’ சீசன் 4-ன் அதிகாரப்பூர்வ டிரெய்லர் மற்றும் இயக்குநர் ஜெனோபர் பாத்திமாவை பாராட்டிய சோஹைல் கான்!
ஜெனோபர் பாத்திமா இயக்கத்தில் துபாயை மையமாகக் கொண்டு உருவாகியிருக்கும் ஆந்தாலஜி தொடரான ‘தி ரீல் ஃபைல்ஸ்’ சீசன் 4-ன் அதிகாரப்பூர்வ டிரெய்லர் வெளியிடப்பட்டுள்ளது. இந்தத் தொடர், தொடக்கத்தில் குறும்படமாக திகில் கதைகளுடன் வெளியானது. தற்போது பலதரப்பட்ட பார்வையாளர்களைச் சென்றடையும் சினிமா ஆந்தாலஜி தொடராக வெளியாகிறது. மூன்றாவது சீசனில் பாலிவுட் நடிகர் ராகுல் தேவ் இணைந்ததுடன், உளவியல் ஜானரில் கதைக்களமும் இருந்தது. இதன் தொடர்ச்சியாக வெளியாகவுள்ள நான்காவது சீசனில் அப்துல் ரொசக், இப்ராஹிம் அல் சமாதி, ஜெனோபர் பாத்திமா மற்றும் ‘சாய் வித் அகமது’ நிகழ்ச்சியின் மூலம் பிரபலமான அகமது அல் மர்சூகி ஆகியோர் நடித்துள்ளனர். இந்தத் தொடரை அப்ரா பர்ஹானா மற்றும் ஜெனோபர் பாத்திமா ஆகியோர் இணைந்து இயக்கியுள்ளனர். ஊடகத்துறையினர் மற்றும் சமூக வலைதளப் பிரபலங்கள் கலந்துகொண்ட டிரெய்லர் வெளியீட்டு நிகழ்வில், பாலிவுட் நடிகர் சோஹைல்…
Read More