“ரசிகர்களுக்கு நல்ல படைப்புகள் தர வேண்டும் என்பதில் வெகு கவனமாக இருக்கிறோம்” – BTG Universal பாபி பாலசந்திரன்

BTG Universal நிறுவனத்தின் மூன்றாவது படைப்பாக, முன்னணி நட்சத்திர நடிகர் அருண் விஜய் நடிப்பில், மான் கராத்தே இயக்குநர் கிரிஷ் திருக்குமரன் இயக்கத்தில் உருவாகும் அதிரடி ஆக்சன் திரைப்படத்திற்கு , “ரெட்ட தல” எனப் பெயரிடப்பட்டுள்ளது. இப்படத்தின் தலைப்புடன் கூடிய அசத்தலான ஃபர் ஸ்ட் லுக் வெளியீட்டு விழா, படக்குழுவினருடன் திரைப்பிரபலங்கள் கலந்துகொள்ள பத்திரிக்கை ஊடக நண்பர்கள் முன்னிலையில் நடைபெற்றது. இவ்விழாவினில் தயாரிப்பாளர் பாபி பாலசந்திரன் பேசியதாவது.. இந்த நாளுக்காக நிறைய உழைத்திருக்கிறோம். எங்களுடன் ஒத்துழைத்த அனைவருக்கும் நன்றி. இந்தப்படத்திற்குப் பர்ஃபெக்டான ஹீரோ அருண் விஜய் தான். தான்யா ரவிச்சந்திரன் மிக அழகான படங்கள் செய்துள்ளார். சித்தி இத்னானி பல அற்புதமான படங்கள் செய்துள்ளார். இவர்கள் மூவரையும் இணைத்து அற்புதமான கதைச் செய்துள்ளார் திருக்குமரன். அவர்ச் சொன்ன கதை எனக்கு மிகவும் பிடித்திருந்தது. கதைகள் தேர்ந்தெடுப்பதில், தயாரித்து…

Read More

உழைப்பாளர்களின் வாழ்வியலைப் பேசும் “உழைப்பாளர் தினம்”

சந்தோஷ் நம்பீராஜன் தயாரித்து இயக்கியிருக்கும் ‘உழைப்பாளர்கள் தினம்’ படத்தின் இசை வெளியீட்டு விழா ஏப்ரல் 22 ஆம் தேதி சென்னை பிரசாத் லேபில் நடைபெற்றது. இதில், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன், இயக்குநரும் நடிகருமான ராஜ்கபூர், தயாரிப்பாளர் நந்தகுமார் உள்ளிட்ட பலர் சிறப்பு விருந்தினர்களாக கலந்துக்கொண்டார்கள். நிகழ்ச்சியில் ஜி.ராமகிருஷ்ணன் பேசுகையில், “56 லட்சம் மக்கள் தொகை கொண்ட ஒரு நகரமாக இருக்க கூடிய சிங்கப்பூர் தேசத்தில் வேலை செய்யும் தொழிலாளர்கள் தொடர்பான படம் என்று சொன்னார்கள். குறிப்பாக உழைப்பாளர்கள் தினம், உழைப்பாளர்கள் பற்றி, உழைக்கும் மக்கள் பற்றி ஏராளமான படங்கள் வந்திருக்கிறது என்றாலும், 1886 ஆம் ஆண்டு அமெரிக்காவில் சிக்காகோ நகரத்தில், மிகப்பெரிய அளவிலான எழுச்சியை தொடர்ந்து மே மாதம் 1 ஆம் உலக பாட்டாளி வர்க்கத்தினர் அனைவரும் உழைப்பாளர்கள் தினமாக கொண்டாட வேண்டும் என்று…

Read More

ரசிகர் மரணம் ; வீட்டிற்கு சென்று ஆறுதல் கூறிய ஜெயம் ரவி

  சென்னை எம் ஜி ஆர் நகர் ஜெயம் ரவி ரசிகர் மன்றத்தில் தலைவராக இருந்த, சென்னை கே கே நகர் பகுதியைச் சேர்ந்த இளைஞர் ராஜா (வயது 33) அவர்கள் சமீபத்தில் உடல் நலக்குறைவால் காலமானார். ஜெயம் ரவி மீது மிகுந்த அன்பு கொண்டிருந்தவரான ராஜா, ஜெயம் ரவி ரசிகர் மன்றம் சார்பில் பல நற்பணிகள் செய்து வந்தார். தனது ரசிகனின் திடீர் மரணத்தை அறிந்த ஜெயம் ரவி, ராஜாவின் வீட்டுக்குச் சென்று, அவரது குடும்பத்தினரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார். மேலும் குடும்பத்திற்கு எந்த உதவியானாலும் தான் செய்து தருவதாக உறுதியளித்தார்.

Read More

பெண்களின் பிரச்சனையைப் பேச வரும் “தீட்டு” ஆல்பம் பாடல்

பெண்களின் முன்னேற்றத்திற்காகவும் விடுதலைக்காகவும் ஏராளம் பேசியவர் பெரியார். மனிதர்களுக்குள் ஜாதி பார்த்து ஒருவரிடம் மற்றவர் பேதம் காட்டி நடத்துவது மட்டுமே தீண்டாமை அல்ல, வீட்டுக்குள்ளேயே பெண்களை அவர்களது உடலியல் காரணங்களுக்காக ஒதுக்கி வைப்பதும் தீண்டாமை என்று கூறியவர் பெரியார். சமுதாயத்தின் சம பங்கு வகிக்கும் பெண்களைத் தங்கள் வீட்டுக்குள்ளேயே மாதவிடாய்க் காலங்களில் ஒதுக்கித் தனிமைப்படுத்துவது அறிவியலுக்கு எதிரானது அல்லவா? இப்படிப் பெரியாரின் கருத்தை ஆமோதித்தும், அறிவியல் உண்மையை உயர்த்திப் பிடித்தும் பெண்களைப் போற்றும் விதத்தில் ‘தீட்டு’ என்கிற பாடல் ஆல்பம் உருவாகியுள்ளது. ‘தீட்டு’ ஆல்பத்தின் பாடலைப் பற்றி இயக்குநர் நவீன் லஷ்மன் கூறியதாவது, “நமது அறிவார்ந்த முன்னோர்கள் இயற்கையான பெண்களின் உடலியல் மாற்றமான மாதவிலக்கு காலங்களில் அவர்களுக்கு ஏற்படும் சோர்வையும் மன அழுத்தத்தையும் போக்கும் விதத்தில் அவர்களது அவஸ்தையைப் புரிந்து கொண்டு பெண்களின் வசதிக்காக ஓய்வு கொடுக்கும்…

Read More

நல்ல கன்டென்ட் உள்ள படத்திற்கு மக்கள் எப்போதும் ஆதரவு தருகிறார்கள். – ஒரு நொடி பட விழாவில் ஆரி அர்ஜுனன்

தயாரிப்பாளரும், திரைப்பட விமர்சகரும், விநியோகஸ்தருமான தனஞ்ஜெயனின் கிரியேட்டிவ் எண்டர்டெய்ன்மென்ட் டிஸ்ட்ரிபியூட்டர்ஸ் உலகம் முழுவதும் ஏப்ரல் 26 ஆம் தேதியன்று திரையரங்குகளில் வெளியிடும் தமன்குமார் கதையின் நாயகனாக முதன்மையான வேடத்தில் நடித்திருக்கும் ‘ஒரு நொடி’ எனும் திரைப்படத்தின் இசை வெளியீடு சென்னையில் சிறப்பாக நடைபெற்றது. இதன் போது நடிகரும், சமூக செயற்பாட்டாளருமான ஆரி அர்ஜுனன் படத்தின் இசையை வெளியிட, தயாரிப்பாளர் சி. வி. குமார், நடிகரும், அரசியல்வாதியும், இலக்கியவாதியுமான பழ. கருப்பையா, எழுத்தாளரும், நடிகருமான வேல. ராமமூர்த்தி உள்ளிட்ட பட குழுவினர் பெற்றுக் கொண்டனர்.‌ இயக்குநர் பி. மணிவர்மன் இயக்கத்தில் உருவாகி இருக்கும் ‘ஒரு நொடி’ எனும் திரைப்படத்தில் தமன்குமார், எம். எஸ். பாஸ்கர், வேல.ராமமூர்த்தி, பழ. கருப்பையா, ஸ்ரீ ரஞ்சனி, கஜராஜ் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். கே. ஜி. ரத்தீஷ் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு சஞ்சய்…

Read More

மேடையில் டி.எஸ்.பியுடன் நடனம் ஆடி அசத்திய விஷால்

‘தாமிரபரணி’ மற்றும் ‘பூஜை’ சூப்பர் ஹிட் படங்களுக்கு பிறகு நடிகர் விஷால் மற்றும் இயக்குநர் ஹரி இணைந்து பணியாற்ற, ஸ்டோன்பெஞ்ச் ஃபிலிம்ஸ் கார்த்திகேயன் சந்தானம் மற்றும் ஜீ ஸ்டுடியோஸ் சவுத் இணைந்து தயாரிக்க, இன்வீனியோ ஆரிஜனின் அலங்கார் பாண்டியன் மற்றும் கல்யான் சுப்பிரமணியம் இணைத் தயாரிப்பாளர்களாக பணியாற்ற, அதிரடி ஆக்ஷ‌ன் படமாக உருவாகியுள்ள ‘ரத்னம்’ ஏப்ரல் 26 அன்று திரைக்கு வரவுள்ள நிலையில் இப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு, படக்குழுவினர் கலந்துகொள்ள வியாழக்கிழமை மாலை சென்னையில் நடைபெற்றது. நிகழ்ச்சியில் விஷாலின் தேவி பவுண்டேஷ‌ன் சார்பில் இரு பெண் குழந்தைகளுக்கு படிப்புக்கு உதவி செய்யப்பட்டது.   தயாரிப்பாளர் கார்த்திகேயன் சந்தானம் பேசுகையில்… “ஹரி சார் இயக்கத்துல விஷால் ஹீரோவா ஒரு படம் தயாரிப்போம்னு நினைக்கவே இல்லை. இது எல்லாம் அமைஞ்சது எனக்கு கிடைத்த வரம் என்று தான் சொல்வேன். சந்தோஷத்தோடு…

Read More

”’அக்கரன்’ திரைப்படத்தின் கதை படுவில்லங்கமாக இருந்தது” – எம்.எஸ்.பாஸ்கர்

அக்கரன் திரைப்பட இசை வெளியீட்டு விழா !! குன்றம் புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில், இயக்குநர் அருண் K பிரசாத் இயக்கத்தில், எம் எஸ் பாஸ்கர் முதன்மைப் பாத்திரத்தில் நடிக்க, மாறுபட்ட களத்தில் வித்தியாசமான திரில்லர் திரைப்படமாக உருவாகியுள்ள திரைப்படம் “அக்கரன்”. விரைவில் திரைக்கு வரவுள்ள இப்படத்தின் இசை வெளியீட்டு விழா, படக்குழுவினர் கலந்துகொள்ள பத்திரிக்கை ஊடக நண்பர்கள் முன்னிலையில் நடைபெற்றது. இந்நிகழ்வினில் நடிகர் எம் எஸ் பாஸ்கர் பேசியதாவது.. இப்படத்தைத் தயாரித்திருக்கும் கார்த்திகேயனுக்கும் மற்றும் படக்குழுவினருக்கும் என் வாழ்த்துக்கள். ஹரி இசையில் பாடல்கள் அட்டகாசமாக இருக்கிறது. சரவெடி சரவணன் மாஸ்டர் ரொம்ப ஈஸியாக சொல்லிக்கொடுத்து ஆக்சன் காட்சிகளை எடுத்து விடுவார் ஆக்சன் காட்சிகள் நன்றாக வந்துள்ளது. இந்தப்படத்திற்கு என் அக்கா மகன் மது வந்து, என் நண்பர் அருண் ஒரு படம் செய்கிறார் நீங்க தான் லீட் கேரக்டர்…

Read More

அட்லி – ரன்வீர் சிங் நடனத்துடன் களைகட்டிய இயக்குநர் ஷங்கர் மகள் திருமண வரவேற்பு

இந்திய திரையுலகின் பிரமாண்ட இயக்குனர் ஷங்கரின் மூத்த மகள் ஐஸ்வர்யா ஷங்கர் – தருண் கார்த்திகேயன் திருமண வரவேற்பு நிகழ்ச்சி வெகு விமர்சையாக நடைபெற்றது. பல முக்கிய பிரபலங்கள்  புடைசூழ நடைபெற்ற இந்த திருமண வரவேற்பு நிகழ்ச்சியில்  தமிழ் சினிமாத் துறை தவிர்த்து, தெலுங்கு, மலையளம், கன்னடம்  மற்றும் ஹிந்தி திரையுலகைச் சேர்ந்த பிரபல நடிகர் நடிகைகள், இயக்குநர்கள், இசையமைப்பாளர்கள், அரசியல் பிரமுகர்கள் மற்றும் பலர் கலந்து கொண்டனர். மிகவும் கோலாகலமாக நடைபெற்ற இந்த நிகழ்வில், பிரபல பாலிவுட் நடிகர் ரன்வீர் சிங் நடனமாடி மணமக்களை உற்சாகப்படுத்தினார். டிரம்ஸ் சிவமணி இசைக்க நடனமாடிய ரன்வீர் சிங்குடன் மணமக்கள் ஐஸ்வர்யா ஷங்கர் – தருண் கார்த்திகேயன், அதிதி ஷங்கர், அர்ஜித் ஷங்கர், இயக்குனர் அட்லி ஆகியோரும் சேர்ந்து சந்தோசமாக  நடனமாடி நிகழ்ச்சியை மேலும் சிறப்பித்தனர். இதனால் உற்சாகம் அடைந்த…

Read More

’ஜெயிலர் 2 வின் கதை என்னவென்று எனக்குத் தெரியாது’ – நடிகர் வசந்த் ரவி

  வித்தியாசமான கதைத்தேர்வு மூலம், தனித்த கதாபாத்திரங்களில் திறமையான நடிப்பை வெளிப்படுத்தி வருபவர் நடிகர் வசந்த்ரவி. ‘தரமணி’, ‘ராக்கி’, ‘அஸ்வின்ஸ்’ என சீரியஸ் கதைக்களங்களில் நடித்தவர் அந்த ஜானரில் இருந்து வெளியே வந்து நடித்துள்ள ஜாலியான படம்தான் ’பொன் ஒன்று கண்டேன்’. ஜியோ சினிமாஸில் இந்தப் படம் வெளியாகியுள்ளது. நாளை மறுநாள் (ஏப்ரல் 18) வசந்த் ரவியின் பிறந்தநாள். இதற்காக பத்திரிக்கையாளர்களை சந்தித்துப் பேசினார் ”என்னுடைய பிறந்தநாள் வருகிற ஏப்ரல் 18ஆம் தேதி வருகிறது. என்னுடைய முதல் படம் ‘தரமணி’யில் இருந்து எனக்கு ஆதரவு கொடுத்து வரும் மீடியா மற்றும் பத்திரிக்கை நண்பர்களுக்கு நன்றி சொல்ல வேண்டும் என்று நினைத்தேன். அழைப்பை ஏற்று வந்தவர்கள் அனைவருக்கும் நன்றி நீங்கள் கொடுத்த நிறை, குறைகள்தான் என்னை இந்த அளவுக்கு வளர்த்து கொண்டு வந்திருக்கிறது. நிறைய பேர் என்னிடம் ‘எப்போது…

Read More

ஏப்ரல் 22-ம் தேதி முதல் சோனி எல்ஐவி மாஸ்டர் செஃப் நிகழ்ச்சி தமிழ் மற்றும் தெலுங்கில்

தமிழ் மற்றும் தெலுங்கு ஆகிய மொழிகளில் ஏப்ரல் 22 முதல் சோனி எல்ஐவி சேனலில் மாஸ்டர் செஃப் பிராந்திய நிகழ்ச்சிகள் ஆரம்பம் உலகளவில் எண்ணற்ற ரசிகர்களை கொண்ட மாஸ்டர் செஃப் நிகழ்ச்சியை தமிழ் மற்றும் தெலுங்கு ஆகிய மொழிகளில் பிராந்திய அளவிலான உணவுகளுக்கான சமையல் உலகை பார்வையாளர்களுக்கு வழங்குவதில் சோனி எல்ஐவி அலைவரிசை பெருமை கொள்கிறது.  மாஸ்டர் செஃப் இந்தியா நிகழ்ச்சியின் வியக்க வைக்கும் மாபெரும் வெற்றியை அடித்தளமாக கொண்டு அவைகளின் பிராந்திய அளவிலான இந்நிகழ்ச்சிகள், இதற்கு முன்பு ஒருபோதும் கண்டிராத சுவையான சமையல் திறன் பயணத்தில் பார்வையாளர்களை அழைத்துச் செல்லும் என்பது நிச்சயம். மாஸ்டர் செஃப் தமிழ் மற்றும் தெலுங்கு ஆகியவை வெறுமனே சமையல் நிகழ்ச்சிகளல்ல. தமிழ் மற்றும் தெலுங்கு பேசும் மக்களது மற்றும் இப்பிராந்தியங்களது உணவு முறைகளின் சிறப்பான மற்றும் பன்முகத்தன்மை கொண்ட சுவைகளையும், உணவு வகைகளையும்…

Read More