லப்பர் பந்து படத்தின் மிகப்பெரிய வெற்றியைத் தொடர்ந்து பிரின்ஸ் பிக்சர்ஸ் S. லஷ்மன் குமார் தயாரிப்பில் மற்றும் A. வெங்கடேஷ் இணை தயாரிப்பில் மிகப் பிரமாண்டமாக உருவாகி இருக்கும் படம் ‘மிஸ்டர் எக்ஸ் (Mr X). வெற்றிப் படமான எப்ஐஆர் படத்தை இயக்கிய மனு ஆனந்த் இந்தப்படத்தை இயக்கியுள்ளார். ஆர்யா கதாநாயகனாக நடிக்க, கவுதம் கார்த்திக், சரத்குமார், மஞ்சு வாரியார், அனகா, அதுல்யா ரவி, ரைஸா வில்சன், காளி வெங்கட் மற்றும் பலர் நடித்துள்ளனர். படத்திற்கு திபு நிணன் இசையமைத்துள்ளார். அருள் வின்சென்ட் ஒளிப்பதிவு செய்ய, படத்தொகுப்பை பிரசன்னா கவனித்துள்ளார். இந்தப்படத்தின் டீசர் மற்றும் ஃபர்ஸ்ட் சிங்கிள் வெளியீட்டு நிகழ்வு சென்னை நெக்சஸ் விஜயா மாலில் நடைபெற்றது. *இந்த நிகழ்வில் நடிகர் ஆர்யா பேசும்போது,* “இந்த படத்துக்கு எனக்கு சிபாரிசு செய்ததே தயாரிப்பாளர் S. லஷ்மன் குமார்…
Read MoreCategory: சினி-நிகழ்வுகள்
வேல்ஸ் ஃபிலிம் இன்டர்நேஷனல் சார்பில் டாக்டர் ஐசரி கே கணேஷ் மற்றும் வேம் இந்தியா சார்பில் அனீஷ் அர்ஜுன் தேவ் இணைந்து தயாரித்து, ஜீவா, அர்ஜுன், ராஷி கண்ணா நடிப்பில் பா. விஜய் இயக்கத்தில் உருவாகி, வரும் 28ம் தேதி வெளியாகும் ‘அகத்தியா’ படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு சென்னையில் நடைபெற்றது.
பாடலாசிரியர் – நடிகர் – இயக்குநர் பா. விஜய் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘அகத்தியா’ திரைப்படத்தில் ஜீவா, அர்ஜுன், ராஷி கண்ணா, ராதாரவி, யோகி பாபு, ரெடின் கிங்ஸ்லி, எட்வர்ட், மெடில்டா உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். தீபக் குமார் பதி ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்திருக்கிறார். படத்தொகுப்பு பணிகளை ஷான் லோகேஷ் கவனிக்க, கலை இயக்கத்தை சண்முகம் மேற்கொண்டிருக்கிறார். ஃபேண்டஸி ஹாரர் திரில்லர் ஜானரில் கமர்ஷியல் என்டர்டெய்னராக தயாராகி இருக்கும் ‘அகத்தியா’ திரைப்படம் பிப்ரவரி 28ம் தேதி முதல் தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய இந்திய மொழிகளில் 800க்கும் மேற்பட்ட திரையரங்குகளில் வெளியாகிறது. சென்னையில் நடைபெற்ற பத்திரிகையாளர் சந்திப்பில் தயாரிப்பாளர் ஐசரி கே கணேஷ், இயக்குநர் பா.விஜய், நடிகர் ஜீவா, நடிகை ராஷி கண்ணா, ஒளிப்பதிவாளர் தீபக் குமார் பதி ஆகியோர் கலந்து…
Read More‘நிறம் மாறும் உலகில்’ எனும் திரைப்படத்தின் இசை மற்றும் முன்னோட்ட வெளியீட்டு விழா!!
சிக்னேச்சர் புரொடக்ஷன்ஸ் மற்றும் ஜி எஸ் சினிமா இன்டர்நேஷனல் நிறுவனம் சார்பில் தயாராகி எதிர்வரும் மார்ச் மாதம் ஏழாம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகும் ‘நிறம் மாறும் உலகில்’ எனும் திரைப்படத்தின் இசை மற்றும் முன்னோட்ட வெளியீட்டு விழா சென்னையில் சிறப்பாக நடைபெற்றது. அறிமுக இயக்குநர் பிரிட்டோ J B இயக்கத்தில் உருவாகியுள்ள ‘நிறம் மாறும் உலகில்’ எனும் திரைப்படத்தில் ‘இயக்குநர் இமயம்’ பாரதிராஜா, நட்டி நட்ராஜ், ரியோ ராஜ், சாண்டி மாஸ்டர், விஜி சந்திரசேகர், லவ்லின் சந்திரசேகர், நிவாஸ் ஆதித்தன், சல்மா, சுரேஷ் மேனன், ‘ஆடுகளம்’ நரேன், மைம் கோபி, வடிவுக்கரசி, விக்னேஷ் காந்த், ரிஷி காந்த், கனிகா, ஆதிரா , காவ்யா அறிவுமணி, துளசி, ஐரா கிருஷ்ணன், லிசி ஆண்டனி, நமோ நாராயணன், சுரேஷ் சக்கரவர்த்தி, ஏகன், விஜித், ஜீவா சுப்ரமணியம், திண்டுக்கல்…
Read More“ஜென்டில்வுமன் ” திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா !!
Komala Hari Pictures & One Drop Ocean Pictures தயாரிப்பில், இயக்குநர் ஜோஷ்வா சேதுராமன் இயக்கத்தில், லிஜோமோல் ஜோஷ், லாஸ்லியா, ஹரி கிருஷ்ணன் முதன்மைப் பாத்திரங்களில் நடிக்க, சமூகத்தில் குடும்ப அமைப்பை பெண்களின் பங்களிப்பை கேள்வி கேட்கும், சமூக அக்கறை மிக்க படைப்பாக உருவாகியுள்ள திரைப்படம் “ஜென்டில்வுமன் ”. விரைவில் திரைக்கு வரவுள்ள இப்படத்தின் இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா, படக்குழுவினருடன் திரைப்பிரபலங்கள் கலந்துகொள்ள, பத்திரிக்கை, ஊடக நண்பர்கள் முன்னிலையில் நடைபெற்றது. இந்நிகழ்வினில் தயாரிப்பாளர் ஹரி பாஸ்கர் பேசியதாவது… ஸ்கூலில் பேசக் கூப்பிட்டாலே ஓடிப்போயிடுவோம் இந்த மேடை பதட்டமாக இருக்கிறது. இந்தப்படத்தின் கதை கேட்டவுடனே படு இண்ட்ரஸ்டிங்காக இருந்தது. இயக்குநர் சொன்ன மாதிரியே படத்தை எடுத்தார். எந்த செலவும் இழுத்து விடவில்லை, மிக அழகாக படத்தை எடுத்துள்ளார். எல்லோரும் நன்றாக நடித்துள்ளனர். படம் மிக…
Read More“கழிப்பறை” திரைப்பட இசை வெளியீட்டு விழா
Vanshika Makkar Films சார்பில் ப்ரீத்தி அமித் குமார் தயாரிப்பில், இயக்குநர் கிஜு இயக்கத்தில், புதுமுகங்கள் நடிப்பில், சமூக அக்கறை மிக்க படைப்பாக உருவாகியுள்ள திரைப்படம் “கழிப்பறை”. விரைவில் திரைக்கு வரவுள்ள இப்படத்தின் இசை வெளியீட்டு விழா, பத்திரிக்கை ஊடக நண்பர்கள் முன்னிலையில், படக்குழுவினருடன், முன்னணி திரை பிரபலங்கள் கலந்துகொள்ள, கோலாகலமாக நடைபெற்றது. இவ்விழாவினில் தயாரிப்பாளர் ப்ரீத்தி அமித் குமார் பேசியதாவது… எங்கள் திரைப்படத்திற்கு வருகை தந்து வாழ்த்தும் அனைத்து உள்ளங்களுக்கும் நன்றி. ஒரு நல்ல திரைப்படத்தை உருவாக்கியுள்ளோம், அனைவரும் இப்படத்திற்கு உங்கள் ஆதரவைத் தர வேண்டுகிறேன் நன்றி. இசையமைப்பாளர் தீனா பேசியதாவது… தமிழ் சினிமாவில் ஒரு சிறப்பான படத்தை தர முன்வந்திருக்கும், அமித்குமார், ப்ரீத்தி தம்பதிகளுக்கு நன்றி. அவர்களது பெண் பிள்ளையை இந்த படத்தில் அருமையாகப் பாட வைத்துள்ளார்கள். நான்கு பாடல்களும் மிக அருமையாக உள்ளது.…
Read Moreகதாநாயகர்கள் எல்லாம் வில்லனாகி வருகிறார்கள்: இயக்குநர் எஸ். ஏ. சந்திரசேகர் பேச்சு!
கதாநாயகர்கள் எல்லாம் வில்லனாகி வருகிறார்கள் என்று கூரன் பட விழாவில் இயக்குநர் எஸ். ஏ. சந்திரசேகர் பேசினார்.அது பற்றிய விவரம் வருமாறு: ஒரு நாய்க்கான சட்ட உரிமைப் போராட்டத்தைக் கதையாக வைத்து உருவாகி இருக்கும் திரைப்படம் ‘கூரன்’. இத் திரைப்படத்தில் எஸ்.ஏ. சந்திரசேகர், ஒய். ஜி. மகேந்திரன்,சத்யன் ,பாலாஜி சக்திவேல், ஜார்ஜ் மரியான், இந்திரஜா ரோபோ சங்கர் மற்றும் பலர் நடித்திருக்கிறார்கள். இப்படத்தை அறிமுக இயக்குநர் நிதின் வேமுபதி இயக்கியுள்ளார். மார்டின் தன்ராஜ் ஒளிப்பதிவு செய்துள்ளார். சித்தார்த் விபின் இசை அமைத்துள்ளார். பீ. லெனின் மேற்பார்வையில் மாருதி எடிட்டிங் செய்துள்ளார். கனா புரொடக்சன்ஸ் சார்பில் விபி கம்பைன்ஸ் உடன் இணைந்து இயக்குநர் விக்கி தயாரித்துள்ளார். ‘கூரன்’ திரைப்படத்தின் ட்ரெய்லர் வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. விழாவில் இயக்குநர் எஸ். . சந்திரசேகரன் பேசும்போது, பொதுவாகவே ஒவ்வொரு திரைப்பட…
Read Moreபிரபல நடன இயக்குநர் கலைமாமணி ஸ்ரீதர் மாஸ்டரின் ஏ ஆர் எஸ் டான்ஸ் ஸ்கூல் நான்காவது கிளை சென்னை பெரம்பூர் ஓட்டேரியில் தொடக்கம்!
சென்னை மாநகரில் நந்தனம், அசோக் நகர் மற்றும் மயிலாப்பூர் ஆகிய இடங்களில் ஏ ஆர் எஸ் டான்ஸ் ஸ்கூல் எனும் நடனப் பள்ளியை மிகவும் சிறப்பாக நடத்தி வரும் பிரபல திரைப்பட நடன இயக்குநர் கலைமாமணி ஸ்ரீதர் மாஸ்டர், நான்காவது கிளையை பெரம்பூர் ஓட்டேரியில் திங்கட்கிழமை (பிப்ரவரி 17) தொடங்கினார். இயக்குநர் வெற்றிமாறன் ஏ ஆர் எஸ் டான்ஸ் ஸ்கூலை திறந்து வைக்க அமரன் புகழ் இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமி வாழ்த்துரை வழங்கினார். சென்னை மேயர் பிரியா ராஜன், சென் ஹாஸ்பிடல் தலைவர் டாக்டர் எம் வெங்கடேஷ், ஐபிஎஸ் அதிகாரி ராஜேஸ்வரி, நடிகர்கள் ஜீவா, ஷாம், நகுல், இசையமைப்பாளர் அமரேஷ் கணேஷ், நடன இயக்குநர் அசோக், சுஜா, சிவா, தொலைக்காட்சி பிரபலங்கள் தங்கதுரை மற்றும் ‘பிக் பாஸ்’ வெற்றியாளர் முத்துக்குமரன் உள்ளிட்ட பல்துறை முக்கிய பிரமுகர்கள் ஏ…
Read Moreஇயக்குநர் சுசீந்திரனின் “2K லவ்ஸ்டோரி” திரைப்பட வெற்றிக் கொண்டாட்டம் !!
City light pictures தயாரிப்பில், தமிழ் திரையுலகின் பெருமை மிகு படைப்பாளியான இயக்குநர் சுசீந்திரன் இயக்கத்தில், இன்றைய நவ நாகரீக இளைஞர்களின் வாழ்வைச் சொல்லும் படைப்பாக, ரொமான்ஸ் ஜானரில் உருவான திரைப்படம் “2K லவ்ஸ்டோரி”. கடந்த பிப்ரவரி 14 ஆம் தேதி உலகமெங்கும் திரையரங்குகளில் வெளியான இப்படம், ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. மேலும் விமர்சகர்கள் மத்தியிலும் பாராட்டுக்களைக் குவித்து வருகிறது. இந்நிலையில் படக்குழுவினர் பத்திரிக்கை, ஊடக நண்பர்களுடன் இணைந்து படத்தின் வெற்றியைக் கொண்டாடினர். இந்நிகழ்வினில்… தயாரிப்பாளர் விக்னேஷ் சுப்ரமணியன் பேசியதாவது… City light pictures தயாரிப்பில், இது எங்கள் முதல்ப்படம். இந்தப்படத்தின் வெற்றிக்கு உங்கள் அனைவருக்கும் நன்றி. இப்படம் உருவாக முக்கிய காரணமாக இருந்த சுசீந்திரன் சாருக்கு நன்றி. இப்படத்திற்கு எங்களுடன் உறுதுணையாக நின்ற தயாரிப்பாளர் தனஞ்செயன் சாருக்கு நன்றி. இப்படத்திற்காக உழைத்த ஒளிப்பதிவாளர்,…
Read Moreஇயக்குநர் மோகன் ஜி, ரவிமரியா, , பிக் பாஸ் ராணவ் , சனம் ஷெட்டி ஆகியோர் துவக்கி வைத்த கூல் சுரேஷ், மற்றும் செந்தில் நடிக்கும் புதிய படம் !!
PMS CINE ENTERTAINMENT சார்பில் முரளி பிரபாகரன் தயாரிப்பில், சாய் பிரபா மீனா இயக்கத்தில், கூல் சுரேஷ், செந்தில் மற்றும் எம் எஸ் ஆரோன் நடிப்பில் மிரட்டலான கேங்ஸ்டர் படமாக உருவாகவுள்ள புதிய படத்தின் பூஜை படக்குழுவினருடன் திரை பிரபலங்கள் கலந்துகொள்ள இன்று இனிதே நடைபெற்றது. திரைத்துறையிலிருந்து இயக்குநர் மோகன் ஜி, ரவிமரியா, பிக் பாஸ் ராணவ், ஷனம் ஷெட்டி ஆகியோர் இந்நிகழ்வில் கலந்துகொண்டு, படக்குழுவினரை வாழ்த்தினர். ஒரு நாற்காலி அதில் அமரப்போகும் தலைவன் யார் எனும் போட்டி, நான்கு கேங்ஸ்டர் குழுக்களுக்கிடையே நடக்கிறது. அதில் வெல்லப்போவது யார் என்பது தான் இப்படத்தின் மையம். திரை வாழ்க்கையில் மக்களை வயிறு வலிக்க சிரிக்க வைத்த நடிகர் செந்தில் முற்றிலும் மாறுபட்ட கேங்ஸ்டராக இப்படத்தில் கலக்கவுள்ளார். இவருடன் கூல் சுரேஷ் கேங்கஸ்டராக நடிக்க, எம் எஸ் ஆரோன் மிக…
Read More”ஹாலிவுட் படம் போல் எடுக்காதீர்கள், நம் கலாச்சாரம், வாழ்க்கையை பிரதிபலிக்கும் படங்களை எடுங்கள்” – பெப்ஸி தலைவர் ஆர்.கே.செல்வமணி வலியுறுத்தல்
பிரண்ட்ஸ் பிக்சர்ஸ் மற்றும் ஸ்ரீ ஐயப்பா மூவிஸ் நிறுவனங்கள் சார்பில் பொள்ளாச்சி எஸ்.மகாலிங்கம், டி.கண்ணன் மற்றும் ஆயிஷா அக்மல் இணைந்து தயாரிக்கும் படம் ‘மிக்ஸிங் காதல்’. இயக்குநர் என்.பி.இஸ்மாயில் இயக்கியிருக்கும் இப்படத்தில் அறிமுக நடிகர் ஷிண்டே நாயகனாக நடித்திருக்கிறார். சம்யுக்தா வின்யா நாயகியாக நடித்திருக்கிறார். இவர்களுடன் ஸ்ரேயா பாவ்னா, பிரியங்கா, திவ்யா, அம்பானி சங்கர் உள்ளிட்ட பலர் முக்கிய வேடங்களில் நடித்திருக்கிறார்கள். சாதிக் கபீர் ஒளிப்பதிவு செய்திருக்கும் இப்படத்திற்கு ராஜேஷ் மோகன் மற்றும் கோனேஸ்வரன் இசையமைத்துள்ளனர். கவித படத்தொகுப்பு செய்ய, கலை இயக்குநராக ஏ.கார்த்திக் பணியாற்றியிருக்கிறார். இஸ்மாயில் மற்றும் கோனேஸ் பாடல்கள் எழுதியுள்ளனர். மக்கள் தொடர்பாளராக கார்த்திக் பணியாற்றியிருக்கிறார். விரைவில் திரையரங்குகளில் வெளியாக இருக்கும் ‘மிக்ஸிங் காதல்’ படத்தின் இசை மற்றும் டிரைலர் வெளியீட்டு விழா, காதலர் தினத்தை முன்னிட்டு பிப்ரவரி 14 ஆம் தேதி சென்னை,…
Read More