நடிகர் அருண் விஜய்யின் “ரெட்ட தல” திரைப்பட முன் வெளியீட்டு நிகழ்வு !!

BTG Universal நிறுவனத்தின் மூன்றாவது படைப்பாக, முன்னணி நட்சத்திர நடிகர் அருண் விஜய் நடிப்பில், மான் கராத்தே இயக்குநர் கிரிஷ் திருக்குமரன் இயக்கத்தில், ஸ்டைலீஷ் ஆக்சன் படமாக உருவாகியுள்ள திரைப்படம் “ரெட்ட தல”. வரும் 2025 டிசம்பர் 25 ஆம் தேதி, உலகமெங்கும் திரையரங்குகளில் வெளியாகவுள்ள நிலையில், இப்படத்தின் முன் வெளியீட்டு நிகழ்வு, படக்குழுவினருடன் திரைபிரபலங்கள் கலந்துகொள்ள, பத்திரிக்கை ஊடக நண்பர்கள் முன்னிலையில் கோலாகலமாக நடைபெற்றது. இந்நிகழ்வினில்.., இயக்குநர் ஏ ஆர் முருகதாஸ் பேசியதாவது , திருக்குமரன் என்னுடைய உதவி இயக்குனர். கஜினி, துப்பாக்கி படத்தில் பணி புரிந்தார் எனக்கு மிகவும் பிடித்தமானவர். மிகவும் திறமைசாலி, இந்தப் படத்தின் தலைப்பு என்னுடையது தான். அதைக் கேட்டதும் கண்டிப்பாக கொடுப்பேன் என்று அவருக்கு தெரியும். இந்தப் படத்திற்கு அது சரியாக பொருந்தியுள்ளது. கூடிய விரைவில் என்னுடைய தயாரிப்பிலும் ஒரு…

Read More

‘மார்க்’ திரைப்படத்தின் பத்திரிக்கையாளர்கள் சந்திப்பு!

சத்ய ஜோதி ஃபிலிம்ஸ் மற்றும் கிச்சா கிரியேஷன் தயாரிப்பில், விஜய் கார்த்திகேயன் இயக்கத்தில் நடிகர்கள் கிச்சா சுதீப், நவீன் சந்திரா, விக்ராந்த், யோகி பாபு, தீப்ஷிகா மற்றும் பலர் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘மார்க்’. இந்த மாதம் கிறிஸ்துமஸ் வெளியீடாக வரவிருக்கும் இந்தத் திரைப்படத்தின் பத்திரிக்கையாளர்கள் சந்திப்பு நடைபெற்றது. தயாரிப்பாளர் தனஞ்செயன், “எப்போதும் இயக்குநர்களுக்கு பிடித்த நடிகர் கிச்சா. இந்தப் படத்திற்கு அவர் கொடுத்துள்ள உழைப்பு அசுரத்தனமானது. இந்த கிறிஸ்துமஸ் விடுமுறைக்கு ரசிகர்களுக்குப் பிடித்த ஆக்‌ஷன் படமாக ’மார்க்’ இருக்கும். மற்ற நடிகர்களும் அற்புதமாக நடித்துள்ளார்கள். அஜனீஷூடைய இசை படத்திற்கு பெரும் பலம். அணியினருக்கு வாழ்த்துக்கள்!” தயாரிப்பாளர், இயக்குநர் சுரேஷ் காமாட்சி, “தலைமுறை தலைமுறையாக சத்ய ஜோதி ஃபிலிம்ஸ் நல்ல படங்களைக் கொடுத்து வருகிறது. இந்த வரிசையில் நிச்சயம் ‘மார்க்’ படமும் இணையும். கிச்சா சுதீப்பும் மற்ற…

Read More

சரத்குமார் – சண்முக பாண்டியன் விஜயகாந்த் இணைந்து நடிக்கும் ‘கொம்பு சீவி’ படத்தின் இசை வெளியீட்டு விழா

‘சுப்ரீம் ஸ்டார்’ சரத்குமார், ‘இளைய கேப்டன்’ சண்முக பாண்டியன் விஜயகாந்த் இணைந்து நடிக்கும் ‘கொம்பு சீவி’ திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் சிறப்பாக நடைபெற்றது. இயக்குநர் பொன் ராம் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘கொம்பு சீவி’ திரைப்படத்தில் சரத்குமார், சண்முக பாண்டியன் விஜயகாந்த், தார்னிகா, காளி வெங்கட் ,முனீஸ்காந்த், ஜார்ஜ் மரியான், சுஜித் சங்கர், கல்கி ராஜா உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். கிராமிய பின்னணியிலான ஆக்ஷன் வித் காமெடி எண்டர்டெயினராக தயாராகி இருக்கும் இப்படத்தை ஸ்டார் சினிமாஸ் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் முகேஷ்.T.செல்லையா தயாரித்திருக்கிறார். பாலசுப்பிரமணியம் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்திருக்கிறார். வரும் 19ம் தேதியன்று உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகும் இந்த திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் பிரம்மாண்டமாக நடைபெற்றது. இதில் தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் பொதுச்…

Read More

திரைக்குரல் First frame- 2025 குறும்பட போட்டியின் விருது வழங்கும் விழா பிரசாத் Lab அரங்கத்தில் சிறப்பாக நடைபெற்றது.

தயாரிப்பாளர் கலைப்புலி S தாணு, இயக்குநர் K பாக்யராஜ், ஓவியர் டிராட்ஸ்கி மருது, இயக்குநர் அரவிந்த்ராஜ், இயக்குநர் பாண்டிராஜ், நடிகர் மணிகண்டன், நடிகர் பகவதி பெருமாள், இயக்குநர் குட்டி ரேவதி, Gembrio pictures MD சுகுமார் பாலகிருஷ்ணன், விகடன் K ராஜசேகரன், இயக்குநர் ராகவ் மிர்தாத், இயக்குநர் சுகுமார் அழகர்சாமி, இயக்குநர் பாலமுருகன், ஊடகவியலாளர் உமாபதி கிருஷ்ணன் ஆகியோர் விருது விழாவில் கலந்துக்கொண்டு சிறப்பித்தனர் நிகழ்வின் துவக்கத்தில் ” தமிழ் பிலிம் பேக்டரி ” திரைப்பட தயாரிப்பு & மேலாண்மை நிறுவனம் அறிமுகப்படுத்தப்பட்டது. Tamil film factory Logoவை திரு. கலைப்புலி S தாணு அவர்கள், இயக்குநர் k பாக்யராஜ் அவர்கள் வெளியிட இயக்குநர் பாண்டிராஜ், நடிகர் மணிகண்டன் ஆகியோர் பெற்றுகொண்டனர். நிறுவனத்தின் இயக்குநர்கள் திருமதி கருணா விலாசினி, திருமதி சுதா ஆகியோர் முன்னிலை வகித்தனர். பதிவு…

Read More

ஸ்டோன் பெஞ்ச் பிலிம்ஸ் & ஜீ ஸ்குவாட் இணைந்து தயாரிக்கும்’ 29 ‘படத்தின் டைட்டில் லுக் வெளியீட்டு விழா

நடிகர் விது கதையின் நாயகனாக நடித்திருக்கும் புதிய திரைப்படத்திற்கு, ’29’ என பெயரிடப்பட்டு, அதற்கான டைட்டில் லுக் மற்றும் ப்ரோமோ வீடியோ வெளியீட்டு விழா சென்னையில் சிறப்பாக நடைபெற்றது. இயக்குநர் ரத்ன குமார் இயக்கத்தில் உருவாகி வரும் ’29’ எனும் திரைப்படத்தில் விது, ப்ரீத்தி அஸ்ராணி, அனு ஸ்ரீ வேகன், ஸ்ரேயாஸ் பாத்திமா உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். மாதேஷ் மாணிக்கம் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு ஷான் ரோல்டன் இசையமைத்திருக்கிறார். படத்தொகுப்பு பணிகளை சதீஷ்குமார் கவனிக்க பிரவீன் ராஜா ஆடை வடிவமைப்பு பணிகளை மேற்கொண்டிருக்கிறார். ரொமாண்டிக் ஜானரிலான இந்த திரைப்படத்தை ஸ்டோன் பெஞ்ச் பிலிம்ஸ் மற்றும் ஜீ ஸ்குவாட் ஆகிய நிறுவனங்கள் சார்பில் தயாரிப்பாளர்கள் கார்த்திகேயன் எஸ் மற்றும் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் ஆகியோர் இணைந்து தயாரித்திருக்கிறார்கள். இப்படத்தின் படப்பிடிப்பு பணிகள் இறுதி கட்டத்தை எட்டி இருக்கும்…

Read More

தமிழக அரசு மற்றும் NFDC ஆதரவுடன் இந்தோ சினி அப்ரிசியேஷன் பவுண்டேஷன் (ICAF) நடத்தும் 23-வது சென்னை சர்வதேச திரைப்பட விழா இன்று தொடங்கியது.

சென்னை சத்யம் தியேட்டர் வளாகத்தில் நடந்த இந்த விழாவுக்கு அமைப்பின் தலைவர் சிவன் கண்ணன் தலைமை தாங்கினார். துணைத்தலைவர் ஆனந்த் ரங்கசாமி, பொதுச்செயலாளர் தங்கராஜ் முன்னிலை வகித்தனர். தமிழக அரசின் செய்தி துறை மற்றும் தமிழ் வளர்ச்சி துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். நடிகை சிம்ரன், இயக்குனர் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் உள்ளிட்டோரும் பங்கேற்றனர். விழாவில் சினிமாவில் 50 ஆண்டுகளைக் கடந்த ரஜினிகாந்துக்கு சிறப்பு விருது அறிவிக்கப்பட்டது. இந்த விருதை அமைச்சர் மு.பெ. சாமிநாதனிடம் இருந்து ரஜினிகாந்த் மகள் ஐஸ்வர்யா பெற்றுக்கொண்டார். விழாவில் அமைச்சர் மு.பெ.சாமிநாதன் பேசியதாவது:- சென்னையில் நடைபெறும் 23-வது சர்வதேச திரைப்பட விழா சிறப்பான ஒன்று. நாளை (12.12.2025) ரஜினிகாந்தின் பிறந்தநாளையொட்டி அவருக்கு என் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன். பல்லாண்டு காலம் வாழ்ந்து அவர் திரையுலகை வழி நடத்த வேண்டும். உலக…

Read More

சென்னையை சேர்ந்த சர்வதேச கேரம் சாம்பியன் பயோபிக் ’தி கேரம் குயின்’ பட தொடக்கவிழா

அமெரிக்காவில் உள்ள கலிபோர்னியா மாகானத்தில் நடைபெற்ற 6வது சர்வதேச கேரம் விளையாட்டு போட்டியில் வெற்றி பெற்று இந்தியாவின் பெயரை உலக அளவில் உயர்த்தி பிடித்த வடசென்னை விளையாட்டு மங்கை காஜிமாவின் வாழ்க்கை சரிதம் என்பது மிகுந்த வலி மிகுந்தது. மிகச் சாதாரணமான குடும்பத்தில் பிறந்து ஆட்டோ ஓட்டுநரின் மகளாக வளர்ந்து அப்பாவின் ஆசையான கேரம் விளையாட்டை சகோதரர் துணையுடன் கற்றுக் கொண்டு சர்வதேச விளையாட்டு போட்டியில் வென்று தன் ஏழ்மை நிலையை வென்றவர் காஜிமா. இவரது வலிமிகுந்த வெற்றி வாழ்க்கையை உலகம் முழுவதும் கொண்டு செல்ல கர்னாடகத்தை சேர்ந்த ஒரு தயாரிப்பு நிறுவனம் திரைப்படமாக தயாரிக்க முன்வந்தது. காஜிமாவின் வாழ்க்கை வரலாற்று பயோபிக் ஆக உருவாகும் இந்த படத்துக்கு ‘தி கேரம் குயின்’ என பெயரிட்டு இன்று பிரமாண்டமாக பூஜையுடன் பட தொடக்க விழா நடை பெற்றது.…

Read More

அர்ஜுன் தாஸ் , நடிகை அன்னா பென் & யோகிபாபு நடிப்பில், ஹரிஷ் துரைராஜ் இயக்கும் புதிய படம், பூஜையுடன் இனிதே துவங்கியது!!

முன்னணி இளம் நட்சத்திர நடிகர் அர்ஜுன் தாஸ், மலையாள முன்னணி நடிகை அன்னா பென் ,நகைச்சுவை நடிகர் யோகிபாபு, ஆகியோர் நடிப்பில், பவர் ஹவுஸ் பிக்சர்ஸ் நிறுவனம் ( Power House Pictures) சார்பில் அறிமுக இயக்குநர் ஹரிஷ் துரைராஜ் எழுதி, இயக்க, புதுமையான களத்தில் உருவாகும் ஃபேமிலி எண்டர்டெயினர் படத்தின் பூஜை, படக்குழுவினர் கலந்துகொள்ள இன்று இனிதே நடைபெற்றது. அனைத்து ரசிகர்களும் ரசிக்கும் வகையிலான கமர்ஷியல் அம்சங்களுடன், புதுமையான களத்தில், ஒரு முழுமையான ஃபேமிலி எண்டர்டெயினர் திரைப்படமாக, இப்படத்தை இயக்குகிறார் அறிமுக இயக்குநர் ஹரிஷ் துரைராஜ். தமிழ் சினிமாவில் தொடர்ந்து மாறுபட்ட கதாப்பாத்திரங்களில் நடித்து ரசிகர்களை ஈர்த்து வரும் இளம் நட்சத்திர நடிகர் அர்ஜூன் தாஸ் மற்றும் மலையாள முன்னணி நடிகை அன்னா பென் ,நகைச்சுவையில் கலக்கி வரும் யோகிபாபு உடன், மற்றும் வடிவுக்கரசி என…

Read More

திரைத்துறையின் வரப்பிரசாதம் “ INDIAN FILM MARKET” !!

இந்திய திரைப்படத் துறையின் முழுமையான தேவைகளை ஒரே இடத்தில் பூர்த்தி செய்யும் வகையில் உருவாக்கப்பட்டிருக்கும் புரட்சிகரமான புதிய தளமாக INDIAN FILM MARKET தளம் அதிகாரப்பூர்வமாக அறிமுகமாகியுள்ளது என்பதை மகிழ்ச்சியுடன் அறிவிக்கிறோம். பல தசாப்தங்களாக, படைப்பிலிருந்து திரைக்கு அதைத்தாண்டி திரைப்படத் துறைக்கு ஆதரவாக ஒருங்கிணைந்த ஒரு சூழலை உருவாக்க வேண்டிய அவசியம் இருந்து வந்தது. அந்த வெற்றிடத்தை நிரப்பும் வகையில் தான் INDIAN FILM MARKET தளம் உருவாகியுள்ளது. இந்த முன்னோடியான முயற்சியின் தலைமைச் சிந்தனையாளர் மிஸ்டர் கண்ணன் (Founder, Indian Film Market) தயாரிப்பு, விநியோகம், திரையரங்க மேலாண்மை, மேலும் முன்னணி மீடியா நிறுவனங்களில் 28 ஆண்டுகால தலைமைப் பொறுப்புகளில் அனுபவம் பெற்றவர். இந்திய திரைப்படத் துறையின் சவால்களையும், அதில் உள்ள வாய்ப்புகளையும் ஆழமாகப் புரிந்தவர் என்பதால், “படத்தை முழுமையாக லாபமளிக்கும் ஒரு தொழில்முறை வணிக…

Read More

சிவராஜ்குமார் நடிக்கும் கும்மிடி நரசய்யா… பிரம்மாண்ட பூஜையுடன் ஆரம்பம்

இயக்குனர் பரமேஷ்வர் ஹிவ்ரலே, இல்லந்துவின் சிபிஐ முன்னாள் எம்.எல்.ஏ., ஏழைகளின் வீரராகவும், சட்டமன்றத்திற்கு சைக்கிள் ஓட்டிச் செல்வதில் பிரபலமானவராகவும் அறியப்பட்ட கும்மாடி நரசய்யாவின் வாழ்க்கை வரலாற்றைத் திரைக்குக் கொண்டுவருகிறார். கும்மாடி நர்சய்யா என்று பெயரிடப்பட்டுள்ள இந்தப் படத்தில் கன்னட நட்சத்திரம் சிவ ராஜ்குமார் முக்கிய வேடத்தில் நடிக்கிறார். இந்தப் படத்தை பிரவல்லிகா ஆர்ட்ஸ் கிரியேஷன்ஸ் பேனரின் கீழ் என். சுரேஷ் ரெட்டி தயாரிக்கிறார். இன்று, படத்தின் பிரமாண்டமான தொடக்க விழா பால்வஞ்சாவில் நடைபெற்றது. படத்தின் நடிகர்கள் மற்றும் குழுவினருடன், ஒளிப்பதிவாளர் அமைச்சர் கோமதிரெட்டி வெங்கட் ரெட்டி, கவிதா, மல்லு பட்டி விக்ரமர்காவின் மனைவி நந்தினி மல்லு மற்றும் பல அரசியல் பிரமுகர்கள் நிகழ்வில் கலந்து கொண்டனர். கீதா சிவராஜ்குமார் முதல் கிளாப் போர்டை ஒலிக்க, அமைச்சர் கோமதிரெட்டி வெங்கட் ரெட்டி முஹூர்த்தப் படப்பிடிப்பிற்காக கேமராவை இயக்கினார். மல்லு…

Read More