விஜய் சேதுபதி அவர்களின் மகன் சூர்யா விஜய் சேதுபதி கதாநாயகனாக நடிக்கும் பீனிக்ஸ் படத்தை இயக்குனர் அனல் அரசு இயக்கியுள்ளார். வரும் ஜூலை நான்காம் தேதி படம் திரைக்கு வரும் நிலையில், பீனிக்ஸ் படத்தின் டிரைலர் வெளியீட்டு விழா சென்னையில் பிரமாண்டமாக நடைபெற்றது. இந்த விழாவில் பல திரை பிரபலங்களும், படத்தில் நடித்த நடிகர் நடிகைகளும் கலந்து கொண்டு பேசினர். நடிகர் முத்துக்குமார் முத்துக்குமார் அவர்கள் பேசும்போது, “பத்திரிக்கை மற்றும் ஊடக நண்பர்கள் அனைவருக்கும் வணக்கம். என்னுடைய நண்பனின் மகன் சூர்யா நடிக்கும் முதல் படம். இந்த படத்தில் நானும் நடித்திருப்பது மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது. படத்தில் நடித்திருக்கும் அனைவருக்கும் என்னுடைய நெஞ்சார்ந்த வாழ்த்துக்கள். யார் என்ன சொன்னாலும் நேரடியாக சென்று கொண்டே இருங்கள் சூர்யா. நீங்கள் மிகப்பெரிய ஆளாக வருவீர்கள்! வாழ்த்துக்கள். ஒரு மாமனாக வாழ்த்துகிறேன்”.…
Read MoreCategory: சினி-நிகழ்வுகள்
இது நல்ல படம்; விமர்சகர்கள் பாதம் தொட்டுக் கேட்டுக் கொள்கிறேன்..!” – இயக்குநர் பாலா
ஜியோ ஹாட்ஸ்டார் – ஜிகேஎஸ் புரொடக்ஷன் – செவன் சீஸ் & செவன் ஹில்ஸ் புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில் ராம் இயக்கத்தில் ஃபீல் குட் படமான ‘பறந்து போ’ ஜூலை 4 அன்று வெளியாகிறது. சிவா, கிரேஸ் ஆண்டனி, மாஸ்டர் மிதுன் ரியான், அஞ்சலி, அஜு வர்கீஸ், விஜய் யேசுதாஸ் மற்றும் பலர் இதில் நடித்துள்ளனர். இதன் இசை வெளியீட்டு விழா நடைபெற்றது. நடிகர், இயக்குநர் கஸ்தூரிராஜா, “இப்படி ஒரு வித்தியாசமான ஆடியோ லான்ச் பார்த்ததில்லை! எனக்கு தெரிந்தது இயக்குநர் ராம் மட்டுமே. பாலாவுடன் அவரைப் பார்த்து இருக்கிறேன். எனக்கு இரண்டு மகன்கள். ஒருவர் பெரிய இயக்குநர், ஒருவர் பெரிய நடிகர். என்னதான் அவர்களுக்கு பணம், புகழ் இருந்தாலும் அவர்கள் தங்கள் குழந்தைகளுடன் தகப்பன் என்று நேரம் செலவிடுவதை பார்க்கும் போது தான் நான் இதை மிஸ் செய்து…
Read More‘3 பிஎச்கே’ படத்தின் டிரெய்லர் வெளியீடு!!
நடிகர் சித்தார்த்தின் ‘3 BHK’ படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழா! சாந்தி டாக்கீஸ், தயாரிப்பாளர் அருண் விஸ்வா தயாரிப்பில் நடிகர் சித்தார்த் நடிப்பில் உருவாகியுள்ள ‘3 BHK’ திரைப்படம் ஜூலை 4 அன்று உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகிறது. ‘8 தோட்டாக்கள்’ புகழ் ஸ்ரீ கணேஷ் இந்தப் படத்தை இயக்கியுள்ளார். அழகான உணர்வுகளுடன் அன்றாடம் நம் வாழ்வில் நடக்கும் சம்பவங்களைக் கொண்டு இதயத்தைத் தொடும் கதையாக இந்தப் படம் உருவாகியுள்ளது. சித்தார்த், சரத்குமார், தேவயாணி, யோகிபாபு, மீதா ரகுநாத், சைத்ரா உள்ளிட்டப் பலர் இதில் நடித்துள்ளனர். இந்தப் படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழா நடைபெற்றது. இயக்குநர் ராம், “ஜூலை 4 எனக்கும், சித்தார்த், அருண் மூவருக்கும் முக்கியமான நாள். இந்தப் படத்தின் தயாரிப்பாளர் அருண் விஸ்வா எனது அசிஸ்டெண்ட்டாக இருந்தார். ‘தங்க மீன்கள்’ படம் நான் எடுத்த…
Read Moreஹாலிவுட்டில் அறிமுகமாகும் நடிகை வரலட்சுமி!
புகழ்பெற்ற பிரிட்டிஷ் நடிகர் ஜெர்மி ஐயன்ஸுடன் இணைந்து நடிப்பதன் மூலம் நடிகை வரலட்சுமி சரத்குமார் ஹாலிவுட்டில் அறிமுகமாகிறார். இயக்குநர் சந்திரன் ருட்னம் இயக்கியுள்ள இந்தப் படத்தின் படப்பிடிப்பு இலங்கையில் நடைபெற்றது. ’RIZANA-A Caged Bird’ திரைப்படம் உண்மைக் கதையை அடிப்படையாகக் கொண்டது. இந்தப் படம் பற்றி வரலட்சுமி மகிழ்ச்சியுடன் பகிர்ந்து கொண்டதாவது, “அகாடமி விருது வென்ற ஜெர்மி ஐயன்ஸுடன் இணைந்து பணியாற்றுவது மகிழ்ச்சி. எனக்கு மிகவும் பிடித்த படம் ‘ஸ்கார் ஃப்ரம் தி லயன் கிங்’. எந்தளவுக்கு பிடிக்கும் என்றால், அந்தப் படத்தின் வசனங்கள் அனைத்தும் எனக்கு மனப்பாடமாகத் தெரியும். அந்த கிங்கிற்கு ஜெர்மி ஐயன்ஸ்தான் குரல் கொடுத்திருப்பார்! இதை விட வேறு என்ன எனக்கு வேண்டும்? அவருடன் ஹாலிவுட்டில் அறிமுகமாவது எனது கனவு நனவான தருணம். ஹாலிவுட்டில் மட்டுமல்ல, உலக சினிமா ரசிகர்களாலும் அவர் மிகவும்…
Read More-டிஎன்ஏ படத்தின் வெற்றிக்கான நன்றி அறிவிப்பு நிகழ்வில் டைரக்டர் நெல்சன் வெங்கடேசன் தகவல்
ஒலிம்பியா மூவிஸ் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் ஜெயந்தி அம்பேத்குமார் தயாரிப்பில், தயாரிப்பாளர் S.அம்பேத்குமார் வழங்க, இயக்குநர் நெல்சன் வெங்கடேசன் இயக்கத்தில், அதர்வா – நிமிஷா சஜயன் முன்னணி வேடத்தில் நடித்து, ரெட் ஜெயன்ட் மூவிஸ் நிறுவனம் மூலம் கடந்த இருபதாம் தேதியன்று வெளியான ‘DNA’ திரைப்படம் – விமர்சகர்கள் மற்றும் ரசிகர்களின் ஏகோபித்த ஆதரவுடன் பிரம்மாண்ட வெற்றியை நோக்கி பயணிக்கிறது. இதை தொடர்ந்து படத்தை வெற்றி பெறச் செய்த ஊடகத்தினருக்கும், ரசிகர்களுக்கும் நன்றி தெரிவிக்கும் வகையில் படக்குழுவினர் நன்றி அறிவிப்பு விழா ஒன்றினை சென்னையில் ஒருங்கிணைத்திருந்தனர். இந்த நிகழ்வில் படக்குழுவினர் கலந்து கொண்டனர். இந்த விழாவில் பட தொகுப்பாளர் சாபு ஜோசப் பேசுகையில், ” இந்த ஒரு தருணத்திற்காக நாங்கள் கடந்த ஒன்றரை ஆண்டுகளாக கஷ்டப்பட்டு உழைத்தோம். இயக்குநர் நெல்சன் வெங்கடேசன் இயக்கத்தில் வெளியான நான்கு படங்களுக்கும்…
Read Moreகண்ணப்பா படம் எனக்குக் கிடைத்த நல்ல வாய்ப்பு- சக்திவேலன்
திரைப்படங்கள் மூலம் மக்களிடம் பக்தியை வளர்க்க வேண்டும் – ‘கண்ணப்பா’ பட நிகழ்வில் சரத்குமார் பேச்சு இத்தனை வருடங்களில் எனக்கென்று தனியாக போஸ்டர் வெளியிட்டு புதிய நம்பிக்கை அளித்தது ‘கண்ணப்பா’ படம் தான் – நடிகர் சம்பத் ராம் நெகிழ்ச்சி கிறிஸ்தவனான நானே சொல்கிறேன் ‘கண்ணப்பா’ நிச்சயம் உங்களை கண்கலங்க வைக்கும் – படத்தொகுப்பாளர் ஆண்டனி சிவபக்தி, கடவுள் பக்தி உடையவர்கள் ‘கண்ணப்பா’ படத்தை தங்கள் வாழ்க்கையுடன் தொடர்புபடுத்திக் கொள்வார்கள் – விநியோகஸ்தர் சக்திவேலன் சென்னையில் நடைபெற்ற ‘கண்ணப்பா’ திரைப்படத்தின் வெளியீட்டுக்கு முந்தைய நிகழ்வு! முகேஷ் குமார் சிங் இயக்கத்தில், விஷ்ணு மஞ்சு நடிப்பில் பிரமாண்டமான பான் இந்தியா திரைப்படமாக உருவாகியுள்ள ‘கண்ணப்பா’-வில் பிரபாஸ், மோகன்லால், சரத்குமார், டாக்டர்.மோகன் பாபு, அக்ஷய் குமார், காஜல் அகர்வால், ப்ரீத்தி முகுந்தன் உள்ளிட்ட பல முன்னணி நட்சத்திரங்கள் நடித்திருக்கிறார்கள். மிகப்பெரிய…
Read Moreவிக்ரம் பிரபு நடிக்கும் ‘லவ் மேரேஜ்’ படத்தின் முன்னோட்ட வெளியீட்டு விழா!!
அஸ்யூர் பிலிம்ஸ் மற்றும் ரைஸ் ஈஸ்ட் என்டர்டெய்ன்மென்ட் நிறுவனத்தின் தயாரிப்பில், இயக்குநர் சண்முக பிரியன் இயக்கத்தில், விக்ரம் பிரபு – சுஷ்மிதா பட் முதன்மையான வேடங்களில் நடித்திருக்கும் ‘லவ் மேரேஜ்’ எனும் திரைப்படத்தின் முன்னோட்ட வெளியிட்டு விழா சென்னையில் சிறப்பாக நடைபெற்றது. இவ்விழாவில் படக்குழுவினருடன் இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். இந்த விழாவில் நடிகர் – இயக்குநர் முருகானந்தம் பேசுகையில், ” இந்தப் படத்தின் படப்பிடிப்பு தளத்தில் ஜூனியர்கள் சீனியர்களை இயக்குவது போல் இருந்தது. ஆனால் படப்பிடிப்பு தளத்தில் கலைஞர்களை அவர்கள் கையாண்ட விதம் நன்றாக இருந்தது. ஒரு குடும்பம் போல் படப்பிடிப்பு தளம் கலகலப்பாக இருந்தது. ஒவ்வொரு படத்தில் நடிக்கும் போதும் ஒவ்வொரு விதமான அனுபவம் கிடைக்கும். இந்தப் படத்தில் நடிக்க தொடங்கி நிறைவை எட்டிய போது, ஆஹா! படத்தின் படப்பிடிப்பு…
Read Moreசாருகேசி படம் நம்மை அடுத்தக் கட்டத்திற்கு கொண்டு செல்லும்!
சாருகேசி படத்தில் ஒய் ஜீ மகேந்திரன் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க சத்யராஜ், சமுத்திரக்கனி, சுஹாசினி மணிரத்னம், தலைவாசல் விஜய், ரம்யா பாண்டியன், ராஜ் ஐயப்பன், மதுவந்தி, லிவிங்ஸ்டன், ஜெயப்பிரகாஷ் மற்றும் பலர் நடித்துள்ளனர். அருண் ஆர் இந்த படத்தை தயாரிக்க, சுரேஷ் கிருஷ்ணா திரைக்கதை எழுதி இயக்கி உள்ளார். பாடல்கள் மற்றும் வசனம் பா. விஜய் எழுத, தேனிசை தென்றல் தேவா இசையமைத்துள்ளார். சென்னையில் பிரமாண்டமாக நடைபெற்ற சாருகேசி படத்தின் ட்ரெய்லர் வெளியீட்டு விழாவில் படத்தில் நடித்த நடிகர் மற்றும் நடிகைகள் அனைவரும் கலந்து கொண்டனர். சாருகேசி படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ள சத்யராஜ் நேரில் வர முடியாத காரணத்தால் வீடியோ பதிவின் மூலம் அனைவரிடமும் பேசியிருந்தார். சத்யராஜ் பேசும்போது,” அனைவருக்கும் வணக்கம். ஒருநாள் இயக்குநர் சுரேஷ் கிருஷ்ணா எனக்கு தொலைபேசி மூலம் அழைத்து சாருகேசி படத்தில்…
Read Moreவிஜய் முதல்வராக வருவார் – கலப்பை மக்கள் இயக்க தலைவர் பி.டி.செல்வகுமார் பேட்டி
கன்னியாகுமரி, ஜூன். 22: 2026 சட்டமன்றத் தேர்தலில் மக்கள் மாற்றத்தை விரும்புவதால் தமிழக வெற்றிக்கழக தலைவர் விஜய் முதல்வராக வருவார் என கலப்பை மக்கள் இயக்க தலைவர் பி.டி.செல்வகுமார் தெரிவித்தார். தமிழக வெற்றிக்கழக தலைவர் விஜய் 51வது பிறந்தநாள் இன்று சிறப்பாக கொண்டாடப்பட்டது. இதையொட்டி விஜய்யின் முன்னாள் மேனேஜரும், கலப்பை மக்கள் இயக்க தலைவருமான பி.டி.செல்வகுமார் குமரி, நெல்லை மாவட்டங்களில் 51 ஊர்களில் 51 பெண்களுக்கு ஆடுகள், 51 பெண்களுக்கு தையல் மெஷின், 51 மாணவிகளுக்கு ஐபேட் உள்ளிட்ட நலத்திட்ட உதவிகளை நேரில் வழங்கினார். இதைத்தொடர்ந்து அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: தற்போது நாட்டை நல்ல பாதையில் கொண்டு செல்லும் தலைவர்கள் இல்லை. அமைதியான, வளர்ச்சியான தமிழகத்தை உருவாக்க விஜய் முதலமைச்சராக வர வேண்டும். அவர் ஆட்சிக்கு வந்தால் நேர்மையான பாதையில் நாட்டை முதன்மை மாநிலமாக மாற்றுவார்.ஜாதி, மதத்தால்,…
Read Moreகுடியை நிறுத்த இதுதான் காரணம்.. இயக்குநர் ராஜூமுருகன் ஓபன் டாக்!
New Monk Pictures சார்பில், தயாரிப்பாளர் பிரித்திவிராஜ் ராமலிங்கம் தயாரித்து, நாயகனாக நடிக்க, அறிமுக இயக்குநர் N அரவிந்தன் இயக்கத்தில், ஓர் இரவில் நடக்கும் காமெடி, கலந்த உணர்வுப்பூர்வமான, சமூக படைப்பாக உருவாகியுள்ள படம் “குட் டே”. ஜூன் 27 ஆம் தேதி உலகமெங்கும் திரையரங்குகளில் இப்படம் வெளியாகிறது. இந்நிலையில் இப்படத்தின் இசை வெளியீட்டு விழா படக்குழுவினருடன் திரை பிரபலங்கள் கலந்துகொள்ள, பத்திரிக்கை ஊடக நண்பர்கள் முன்னிலையில் நடைபெற்றது. இந்நிகழ்வினில்…. நடிகர் கலை இயக்குநர் விஜய் முருகன் பேசியதாவது… இந்தப்படம் மிகச் சுவாரஸ்யமான படம், மிக நல்ல கதை. படம் பார்த்து விட்டேன் பிரித்திவி மிக அழகாகச் செய்துள்ளார். ஒரு இரவில் நடக்கும் கதை.உங்கள் எல்லோருக்கும் பிடிக்கும் அனைவருக்கும் நன்றி. ஜீவா சுப்பிரமணியம் பேசியதாவது… இந்தப்படத்தில் எனக்கு வித்தியாசமான கதாப்பாத்திரம். இதுவரைக்கும் சேலை கட்டிக்கொண்டு நடித்திருக்கிறேன், ஆனால்…
Read More