வெங்காயம்’, ‘பயாஸ்கோப்’ ஆகிய படங்களை இயக்கி, தயாரித்து, நடித்து, பிரபலமான பன்முகத் திறன் கொண்ட படைப்பாளியாகத் திகழும் சங்ககிரி ராஜ்குமார், கதையின் நாயகனாகவும் பல்வேறு கதாபாத்திரங்களிலும் நடித்திருக்கும் ‘ONE MAN’ திரைப்படத்தை விளம்பரப்படுத்தும் வகையிலான பத்திரிகையாளர் சந்திப்பு சென்னையில் நடைபெற்றது.

இயக்குநர் சங்ககிரி ராஜ்குமார் கதையின் நாயகனாக மட்டுமல்லாமல், ஒரு திரைப்படத்தின் உருவாக்கத்திற்குத் தேவையான பல்வேறு பணிகளைத் தனி ஒருவராக மேற்கொண்டு, உலக சினிமாவில் இதுவரை யாரும் மேற்கொள்ளாத வகையிலான ஒரு முயற்சியாக இப்படத்தை உருவாக்கியுள்ளார். இதன் மூலம் தனித்துவமான சாதனையை நிகழ்த்திய தமிழர் என்ற அடையாளத்தையும் அவர் பெற்றுள்ளார். எதிர்வரும் 21-ஆம் தேதி முதல் உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகவுள்ள ‘ONE MAN’ திரைப்படத்தை விளம்பரப்படுத்தும் நிகழ்வு சென்னையில் நடைபெற்றது. இதில் நடிகர் சத்யராஜ் மற்றும் இயக்குநர்கள் சேரன், லெனின் பாரதி, ஏ.ஆர்.கே. ராஜராஜா ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாகக் கலந்து கொண்டனர். இந்நிகழ்வில் இயக்குநர் சங்ககிரி ராஜ்குமார் பேசுகையில்: “இந்தப் படத்தின் அனைத்து பணிகளையும் நிறைவு செய்த பிறகு, திரையரங்குகளில் படத்தை வெளியிட வேண்டும் என்பதற்காக தயாரிப்பாளர் கலைப்புலி எஸ். தாணுவைச் சந்தித்தேன். இதுபோன்ற உலக சாதனை…

Read More

குரு சோமசுந்தரம் – அனுமோல் நடிக்கும் ‘பாரிஸ் கஃபே’ இசை வெளியீட்டு விழா

தண்டர் மீடியா கண்மணி ரங்கநாதன் மற்றும் LV என்டர்டேன்மெனட் வெங்கல் எம். லிங்கேஸ்வரன் இணைந்து தயாரிக்கும் பாரிஸ் கஃபே (Paris cafe) படம் விரைவில் திரைக்கு வர உள்ளது. இதன் இசை வெளியீட்டு விழா சென்னையில் சிறப்பாக நடைபெற்றது. இதில் முதன்மை கதாபாத்திரத்தில் குரு சோமசுந்தரம் மற்றும் அனுமோல் நடித்துள்ளனர். மேலும் அர்ச்சனா குமார், விஜய் விஸ்வா, சாய் விக்கி, நயனா, பிபின் மற்றும் பலர் நடித்துள்ளனர். சராஜ் சீலன் இந்தப் படத்தை எழுதி இயக்கி உள்ளார். இசையமைப்பாளர் கே அவர்கள் இசையமைத்துள்ள இந்த படத்திற்கு சதீஷ் ஜி அவர்கள் ஒளிப்பதிவு செய்துள்ளார். தேசிய விருதை வென்ற விஜே சாபு ஜோசப் படத்தொகுப்பு செய்துள்ளார். படத்தின் தயாரிப்பாளர் கண்மணி ரங்கநாதன் அவர்கள் பேசும் போது, பாரிஸ் கஃபே ஒரு ஸ்மால் பட்ஜெட் படம் ஆனா ஒரு ஸ்ட்ராங்…

Read More

’மொத ராத்திரி’ திரைப்படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழா!

சில திரைப்படங்கள் மட்டுமே அறிவிக்கப்பட்ட தருணத்திலிருந்தே ரசிகர்களிடையே மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தும். அதிலும் பான் இந்திய அளவில் தரமான வெற்றிப்படங்களை தொடர்ந்து தயாரித்து வரும் மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பு நிறுவனத்தின் புதிய பட அறிவிப்பு எனும்போது, அந்த எதிர்பார்ப்பு மேலும் அதிகரித்துள்ளது. இந்நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாகி வரும் ‘மொத ராத்திரி’ திரைப்படத்தின் படப்பிடிப்பு வெற்றிகரமாக நிறைவடைந்துள்ளது. ராஜா கருப்பசாமி இயக்கியுள்ள இப்படத்தில் ரிஷிகாந்த் மற்றும் அனிஷ்மா அனில்குமார் ஆகியோர் முதன்மை கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். ஆகஸ்ட் 21 ஆம் தேதி உலகம் முழுவதும் பிரம்மாண்டமாக வெளியாகிறது. இதன் டிரெய்லர் வெளியீட்டு விழா நடைபெற்றது. தயாரிப்பாளர் ரவி சங்கர், “நிகழ்வுக்கு வந்திருக்கும் அனைத்து இயக்குநர்களுக்கும் நன்றி. ராஜா கதை சொன்னபோதே உடனே எங்களுக்கு பிடித்து விட்டது. ‘டூரிஸ்ட் ஃபேமிலி’ போல சின்ன பட்ஜெட்டில் வந்த நல்ல படங்கள் வெற்றியடைந்துள்ளது.…

Read More

‘பியார் பிரேமா கல்யாணம்’ டிரெய்லர் வெளியீட்டு விழா !

இயக்குநர் இளன் முதன்முறையாக கதாநாயகனாக அறிமுகமாகும் ‘பியார் பிரேமா கல்யாணம்’ திரைப்படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழா இன்று படக்குழுவினர் முன்னிலையில் நடைபெற்றது. ரைஸ் ஈஸ்ட் என்டர்டெயின்மென்ட் தயாரித்துள்ள இப்படத்திற்கு  இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார். இன்று நடைபெற்ற டிரெய்லர் வெளியீட்டு நிகழ்வில் படக்குழுவினருடன், திரைப்பிரபலங்கள் கலந்துகொண்டு படக்குழுவை வாழ்த்தினர். இந்நிகழ்வினில்.., இயக்குநர் வெற்றிமாறன் பேசியதாவது, ஒரு நடிகராக இருந்து இயக்குநராக மாறுவதற்கே நிறைய தைரியம் வேண்டும். அந்தத் தைரியம் இளனிடம் இருக்கிறது. அவருக்கும், அவருடைய ஒட்டுமொத்த படக்குழுவினருக்கும் என்னுடைய மனமார்ந்த வாழ்த்துகள். இப்படம் டிரெய்லர் நன்றாக இருக்கிறது.  இந்தப் படம் நிறைய ஃபன் ஆன விஷயங்களையும், சில நெருக்கமான தனிப்பட்ட விஷயங்களையும் கொண்டிருக்கும் என்று எதிர்பார்க்க வைக்கிறது. இந்தப் படம் அனைவருக்கும் பிடித்து, நல்ல வெற்றியைப் பெற வேண்டும் என்று நம்புகிறேன். மீண்டும் படக்குழுவினருக்கும், Netflix-க்கும்…

Read More

இந்தியாவின் முதல் LED Projection Q-Luxon திரையை விசாகப்பட்டினத்தில் அறிமுகப்படுத்தும் ‘AAA சினிமாஸ்’ பார்வையாளர்களுக்கு பிரீமியம் சினிமா அனுபவத்தை வழங்குகிறது!

‘ஐகான் ஸ்டார்’ அல்லு அர்ஜுன், நடிப்பைத் தாண்டி திரைத்துறையில் தனது ரசிகர்களை மகிழ்விக்க, விசாகப்பட்டினத்தில் ‘AAA சினிமாஸை’ பிரம்மாண்டமாகத் தொடங்கி வைத்துள்ளார். இதன் மூலம் பொழுதுபோக்கு துறையில் தனது இருப்பை மேலும் விரிவுபடுத்தியுள்ளதுடன், நகர மக்களுக்கு பிரீமியம் சினிமா அனுபவத்தையும் வழங்குகிறார். விசாகப்பட்டினத்தில் அமைந்துள்ள ‘AAA சினிமாஸ்’ இந்தியாவின் முதல் LED Projection Q-Luxon ஸ்கிரீனை அறிமுகப்படுத்தியுள்ளது. 70 அடி × 30 அடி அளவிலான இந்தத் திரை, ஆந்திரப் பிரதேசத்தின் மிகப்பெரிய LED சினிமா திரை என்பது குறிப்பிடத்தக்கது. இதன் மூலம் விசாகப்பட்டினத்தில் திரையரங்க அனுபவத்திற்கான புதிய அளவுகோலை ‘AAA சினிமாஸ்’ உருவாக்கியுள்ளது. ‘AAA சினிமாஸ்’ என்பது அல்லு அர்ஜுனின் நட்சத்திர அந்தஸ்தைத் தாண்டிய பயணத்தின் மற்றொரு முக்கிய அடையாளமாகும். திரையுலகின் முன்னணி நட்சத்திரமாக, ரசிகர்களுக்கான சிறந்த சினிமா அனுபவத்தை தரும் முயற்சிதான் இது. அதிநவீன…

Read More

‘செய்! செய்யாதே!’ இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா உற்சாகமாக நடைபெற்றது

இளம் தலைமுறையினருக்கு சமூக விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கில் உருவாகியுள்ள ‘செய்! செய்யாதே!’ திரைப்படத்தின் இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா, திரையுலக பிரபலங்கள், மருத்துவத் துறை சார்ந்தவர்கள் மற்றும் சிறப்பு விருந்தினர்கள் முன்னிலையில் சிறப்பாக நடைபெற்றது. விழாவில் வெளியிடப்பட்ட இசை மற்றும் டிரெய்லருக்கு சிறப்பு விருந்தினர்கள் மற்றும் திரையுலகினர் பாராட்டு தெரிவித்தனர். சமூகப் பொறுப்புணர்வை மையமாகக் கொண்டு உருவாகியுள்ள இந்தப் படம் இளம் தலைமுறையினரிடம் நல்ல தாக்கத்தை ஏற்படுத்தும் என்ற நம்பிக்கையையும் அவர்கள் வெளிப்படுத்தினர். இந்நிகழ்வினில் தயாரிப்பாளர் ஃபைவ் ஸ்டார் கதிரேசன் பேசியதாவது: “இந்த நிகழ்வில் கலந்து கொண்டுள்ள தமிழக ஆளுநர், தமிழரசு சுந்தரராஜன் அவர்களுக்கும் ஹெச். ராஜா அவர்களுக்கும் மேடையில் அமர்ந்துள்ள சிறப்பு விருந்தினர்கள், நண்பர்கள், ஊடகத்துறை நண்பர்கள் அனைவருக்கும் எனது இனிய மாலை வணக்கங்கள். தமிழகத்தைப் பொறுத்தவரை சினிமாவையும் அரசியலையும் பிரித்துப் பார்க்க முடியாது.…

Read More

‘செய்! செய்யாதே!’ இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா உற்சாகமாக நடைபெற்றது

இளம் தலைமுறையினருக்கு சமூக விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கில் உருவாகியுள்ள ‘செய்! செய்யாதே!’ திரைப்படத்தின் இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா, திரையுலக பிரபலங்கள், மருத்துவத் துறை சார்ந்தவர்கள் மற்றும் சிறப்பு விருந்தினர்கள் முன்னிலையில் சிறப்பாக நடைபெற்றது. விழாவில் வெளியிடப்பட்ட இசை மற்றும் டிரெய்லருக்கு சிறப்பு விருந்தினர்கள் மற்றும் திரையுலகினர் பாராட்டு தெரிவித்தனர். சமூகப் பொறுப்புணர்வை மையமாகக் கொண்டு உருவாகியுள்ள இந்தப் படம் இளம் தலைமுறையினரிடம் நல்ல தாக்கத்தை ஏற்படுத்தும் என்ற நம்பிக்கையையும் அவர்கள் வெளிப்படுத்தினர்.   இந்நிகழ்வினில் தயாரிப்பாளர் ஃபைவ் ஸ்டார் கதிரேசன் பேசியதாவது: “இந்த நிகழ்வில் கலந்து கொண்டுள்ள தமிழக ஆளுநர், தமிழரசு சுந்தரராஜன் அவர்களுக்கும் ஹெச். ராஜா அவர்களுக்கும் மேடையில் அமர்ந்துள்ள சிறப்பு விருந்தினர்கள், நண்பர்கள், ஊடகத்துறை நண்பர்கள் அனைவருக்கும் எனது இனிய மாலை வணக்கங்கள். தமிழகத்தைப் பொறுத்தவரை சினிமாவையும் அரசியலையும் பிரித்துப் பார்க்க…

Read More

சூர்யாவின் ‘விஸ்வநாத் & சன்ஸ் ‘ படத்தின் இசை வெளியீட்டு விழா!

சிதாரா என்டர்டெயின்மென்ட் (Sithara Entertainments)   – ஃபார்ச்சூன் ஃபோர் (Fortune Four Cinemas)   சினிமாஸ் ஆகிய நிறுவனங்களின் தயாரிப்பில் இயக்குநர் வெங்கி அட்லூரி இயக்கத்தில் நடிகர் சூர்யாவின் நடிப்பில் தயாராகியுள்ள ‘விஸ்வநாத் & சன்ஸ்’ திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா கோவையில் சிறப்பாக நடைபெற்றது. இயக்குநர் வெங்கி அட்லூரி இயக்கத்தில் உருவாகியுள்ள ‘விஸ்வநாத் & சன்ஸ்’ திரைப்படத்தில் சூர்யா, மமீதா பைஜூ, ராதிகா சரத்குமார், ரவீனா தாண்டன், யோகி பாபு, நாசர், காளி வெங்கட், ஜார்ஜ் மரியான், ராஜீவ் மேனன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளார்கள். நிமிஷ் ரவி ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு தேசிய விருதை வென்ற இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் குமார் இசையமைத்திருக்கிறார். ஃபேமிலி என்டர்டெய்னராக தயாராகி இருக்கும் இந்த திரைப்படத்தை சிதாரா என்டர்டெயின்மென்ட் (Sithara Entertainments )  – ஃபார்ச்சூன் ஃபோர் ( Fortune Four…

Read More

பிரைம் வீடியோ வழங்க, சசிகுமார் நடிக்கும் ‘வதந்தி சீசன் 2: தி மிஸ்டரி ஆஃப் மணி’ இணையத் தொடரின் பத்திரிகையாளர் சந்திப்பு.

பிரைம் வீடியோவில் ஆகஸ்ட் ஏழாம் தேதி முதல் வால்வாட்சர் பிலிம்ஸ் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர்கள் புஷ்கர் – காயத்ரி தயாரிப்பில் இயக்குநர் ஆண்ட்ரூ லூயிஸ் இயக்கத்தில் சசிகுமார் முதன்மையான வேடத்தில் நடித்திருக்கும் ‘வதந்தி சீசன் 2: தி மிஸ்டரி ஆஃப் மணி’ எனும் இணைய தொடர் காணக் கிடைக்கும்  விளம்பரப்படுத்தும் வகையில் சென்னையில் பத்திரிக்கையாளர் சந்திப்பு நடைபெற்றது. சென்னையில் உள்ள நட்சத்திர ஹோட்டலில் நடைபெற்ற இந்த சந்திப்பில் சசிகுமாருடன் யஷ்வந்த், அனகா மருதோரா, அபர்ணா தாஸ், விவேக் பிரசன்னா, ரேவதி சர்மா, அர்ஜுன் நந்தகுமார், இயக்குநர் ஆண்ட்ரூ லூயிஸ், தயாரிப்பாளர்கள் புஷ்கர்- காயத்ரி, இசையமைப்பாளர் சிமோன் கே. கிங் மற்றும் பிரைம் வீடியோ உள்ளிட்ட படக்குழுவினர் கலந்து கொண்டனர். தயாரிப்பாளர்கள் புஷ்கர் – காயத்ரி பேசுகையில், ” இந்த இணைய தொடர் மிக சிறப்பாக உருவாகி இருக்கிறது.…

Read More

டி. இமான் இசையில், பலராம் கிருஷ்ணா இயக்கிய ‘நிறம்’ திரைப்படத்தின் டிரெய்லர் வெளியிடப்பட்டது!

K Square Cinemas தயாரிப்பில், இயக்குநர் பலராம் கிருஷ்ணா இயக்கத்தில் உருவாகியுள்ள ‘நிறம்’ திரைப்படத்தின் பிரம்மாண்ட டிரெய்லர் மற்றும் இசை வெளியீட்டு விழா கோலாகலமாக நடைபெற்றது. திரையுலக பிரபலங்கள், படக்குழுவினர் மற்றும் ஊடகத்தினர் முன்னிலையில் வெளியிடப்பட்ட டிரெய்லர், பார்வையாளர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றது. டி. இமான் இசையமைத்துள்ள இந்த திரைப்படம், “Inspired from True Incidents” என்ற அடைமொழியுடன் உண்மைச் சம்பவங்களால் ஈர்க்கப்பட்ட பரபரப்பான கிரைம் திரில்லராக உருவாகியுள்ளது. இந்நிகழ்வினில் பாடகி ஸ்ரீநிஷா பேசியதாவது அனைவருக்கும் வணக்கம். “நிறம்” திரைப்படத்தில் பாட வாய்ப்பு கிடைத்தது எனக்கு மிகவும் மகிழ்ச்சி. இமான் சார் இசையில் ஏற்கனவே பல பாடல்கள் பாடியிருந்தாலும், “நூதனா” பாடல் எனக்கு மிகவும் பிடித்த மெலடி. இந்தப் பாடலை கபிலனுடன் இணைந்து பாடியது ஒரு அருமையான அனுபவம். இமான் சார் மிகவும் வேகமாகவும், பாடகர்களுக்கு எந்த…

Read More