‘நாக்குக்கு நரம்பில்லை . எதை வேண்டுமானாலும் பேசும்’ என்பார்கள். அதுபோலவே கட்டுக்கதைகளுக்கும் அளவில்லை.ஒரு சம்பவத்தைப் பற்றி மக்கள் பேசும்போது ஆளாளுக்குத் திரித்து விதவிதமாகக் கதை கதையாகச் சொல்வார்கள். அப்படி அவர்களால் கட்டப்படும் கட்டுக்கதைகள் சிலவேளை ஆச்சரியமூட்டும்; சில அதிர்ச்சியாகவும் இருக்கும். அப்படிச் சில ஆண்டுகளுக்கு முன்பு காரைக்காலில் நடந்த ஓர் உண்மைச் சம்பவம் மர்மமாகவே இருந்தது. ஆனால் அது பற்றிய கதைகள் விவரங்கள் பல விதங்களில் பரவியிருந்தன. அப்படி ஒரு சம்பவத்தை எடுத்துக் கொண்டு சஸ்பென்ஸ் திரில்லர் படமாக உருவாகி இருப்பது தான் ‘லாரா ‘. இப்படத்தை அறிமுக இயக்குநர் மணி மூர்த்தி இயக்கி உள்ளார்.எம் கே அசோசியேட்ஸ் என்ற பெயரில் கோவையில் கட்டுமானத் துறையில் முத்திரை பதித்த தொழிலதிபர் M.கார்த்திகேசன் தனது எம். கே ஃபிலிம் மீடியா ஒர்க்ஸ் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தின் சார்பில் தயாரித்துள்ளார்.…
Read MoreCategory: சினி-நிகழ்வுகள்
”தொப்பை வைத்துவிட்டால் அப்பா கதாபாத்திரத்திற்கு மட்டும் தான் அழைப்பார்கள்” – நடிகர் குரு சோமசுந்தரம்
69 எம்எம் ஃபிலிம் நிறுவனத்தின் தயாரிப்பில், இயக்குநர் ராகுல் கபாலியின் இயக்கத்தில், அறிமுக நாயகன் ஜேடி, குரு சோமசுந்தரம், ஜான் விஜய், ஹரிஷ் உத்தமன், வினோத் சாகர், ஜாக் ராபின்சன், விஸ்வாந்த், சாய் பிரியங்கா ரூத், திவ்யா கணேஷ், ஹரிஷ் உள்ளிட்ட பலர் நடிப்பில் தயாராகி இருக்கும் ‘பயமறியா பிரம்மை’ எனும் திரைப்படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு சென்னையில் நடைபெற்றது. இந்த சந்திப்பில் பாடலாசிரியர் வெரோனிகா, ஒளிப்பதிவாளர்கள் நந்தா & பிரவீன், இசையமைப்பாளர் கே, நடிகர்கள் ஜாக் ராபின்சன், வினோத் சாகர், ஜேடி , குரு சோமசுந்தரம், நடிகை சாய் பிரியங்கா ரூத் ஆகியோர் கலந்து கொண்டனர். பாடலாசிரியர் வெரோனிகா பேசுகையில், ” இந்த திரைப்படத்தில் தான் முதன்முதலாக திரைப்பட பாடலாசிரியராக அறிமுகமாகிறேன். கவிதாயினியாக கவிதைகளை எழுதி இருக்கிறேன். அதிலும் குறிப்பாக சர்ரியலிசம் மற்றும் இருள் முகத்தைப் பற்றிய…
Read More”எதார்த்த படங்கள் இன்றைய காலகட்டத்தில் மக்களால் மிகவும் பாராட்டப்படுகிறது.”பித்தலை மாத்தி விழாவில் ஆர்.வி.உதயகுமார்
காதல் சுகுமார் பேசும்போது, தயாரிப்பாளர் கேட்டதுபோலதான். நிறைய பேரை கூப்பிட்டோம் ஆனால் திருமணம் காரணமாக வரவில்லை. உமாபதி மற்றும் ஐஸ்வர்யா இருவருக்கும் வாழ்த்துகள். திருமண வரவேற்பு அன்றே அவரது படம் வெளியாவது மிகப் பெரிய ஆசிர்வாதம் என்று சொல்லலாம். இயக்குனர் ஆர்வி உதயகுமார் பேசியதாவது, நிகழ்ச்சிக்கு வந்தால் எதோ ஒரு விஷயம் அழகாக இருக்க வேண்டும். இங்கு ஊடக நண்பர்கள் தான் அழகாக தெரிகின்றனர். தமிழ் தலைப்பாக இருக்கிறது. தமிழில் தலைப்பு வைத்ததற்கு வாழ்த்துகள். உமாபதி, ஐஸ்வர்யா தம்பதிக்கு திருமண வாழ்த்துக்கள். திருமணத்திற்கு பிறகு பெரிய மாற்றம் வரும் என நினைக்கிறேன். எனக்கும் திருமணத்திற்கு பிறகு தான் முதல் படம் வெளியானது. கருடன் படத்தில் எனது நடிப்பை பாராட்டினீர்கள். பித்தல மாத்தி படத்தின் ட்ரெய்லர் பாடல்கள் பார்த்தோம். இயக்குனர் மாணிக்க வித்யா ரொம்ப பிரமாதமாக செய்துள்ளார். படத்தின்…
Read More”முதல்பட இயக்குநருக்கு விதார்த் கிடைத்துவிட்டால் 50 % வேலை முடிந்துவிடும்” – இயக்குநர் ஷாஜி சலீம்
‘யதார்த்த நாயகன்’ விதார்த் கதையின் நாயகனாக நடித்திருக்கும் ‘லாந்தர்’ திரைப்படத்தின் இசை மற்றும் முன்னோட்ட வெளியீடு சென்னையில் சிறப்பாக நடைபெற்றது. கமலா திரையரங்கில் நடைபெற்ற விழாவில் படக்குழுவினருடன் இயக்குநர்கள் ரவிக்குமார், ஏ ஆர் கே சரவணன், கார்த்திகேயன், கனல் கண்ணன், தயாரிப்பாளர் – நடிகர் பி.எல். தேனப்பன் உள்ளிட்ட பலர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர். படத்தின் இசையை தென்னிந்திய நடிகர் சங்கத்தின் துணைத் தலைவரான பூச்சி முருகன் வெளியிட, சிறப்பு விருந்தினர்களும், படக் குழுவினரும் இணைந்து பெற்றுக் கொண்டனர். ஷாஜி சலீம் இயக்கத்தில் உருவாகி இருக்கும் ‘லாந்தர்’ திரைப்படத்தில் விதார்த், ஸ்வேதா டோரத்தி, விபின், சஹானா, பசுபதி ராஜ், கஜராஜ் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். ஞான சௌந்தர் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு எம். எஸ். பிரவீன் இசையமைத்திருக்கிறார். படத்தொகுப்பு பணிகளை பரத் விக்ரமன் மேற்கொள்ள,…
Read Moreரசிகர்களை பிரமிக்க வைக்கும் கல்கி 2898 AD முன்னோட்டம்
இந்தியாவின் முன்னணி பட தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்றான வைஜெயந்தி மூவிஸ் நிறுவனத்தின் பொன்விழா ஆண்டை கொண்டாடிடும் வகையில், இந்திய திரையுலகின் முன்னணி நட்சத்திர நடிகர்களான பிரபாஸ்- அமிதாப் பச்சன்- கமல்ஹாசன்- தீபிகா படுகோன் ஒன்றிணைந்து நடித்திருக்கும் ‘கல்கி 2898 ஏ டி’ படத்தின் முன்னோட்டம் வெளியிடப்பட்டிருக்கிறது. இந்த முன்னோட்டம் தமிழில் மட்டும் அல்லாமல் தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி ஆகிய மொழிகளிலும் வெளியிடப்பட்டிருக்கிறது. இயக்குநர் நாக் அஸ்வின் இயக்கத்தில் உருவாகி இருக்கும் ‘கல்கி 2898 ஏ டி’ எனும் திரைப்படத்தில் பிரபாஸ், அமிதாபச்சன், கமல்ஹாசன், தீபிகா படுகோன், திஷா படானி உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். டிஜோர்ட்ஜே ஸ்டோஜில்கோவிச் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்திருக்கிறார். கோத்தகிரி வெங்கடேஸ்வர ராவ் படத்தொகுப்பு பணிகளை மேற்கொண்டிருக்கிறார். ஃபேண்டஸி சயின்ஸ் ஃபிக்சன் ஜானரிலான இந்தத் திரைப்படத்தை வைஜெயந்தி மூவிஸ்…
Read More”யாரிந்த லட்சுமி என்ற கேள்விக்கு எனக்கும் பதில் தெரியாது” – நடிகை அபிராமி
’தி ரூட்’ நிறுவனத்துடன் பேஷன் ஸ்டுடியோஸ் கைக்கோத்து தயாரித்திருக்கும் திரைப்படம் ‘மகாராஜா’. நடிகர் விஜய்சேதுபதியின் ஐம்பதாவது படமாக உருவாகியுள்ள இந்தப் படத்தை ‘குரங்கு பொம்மை’ புகழ் நித்திலன் சாமிநாதன் எழுதி இயக்கியுள்ளார். இப்படம் ஜூன் 14, 2024 அன்று உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியிட தயாராக உள்ளது. இதன் பத்திரிக்கையாளர்கள் சந்திப்பு இன்று நடைபெற்றது. நடிகர் வினோத், “‘ராட்சசன்’ பட டீச்சரில் இருந்து ரிட்டையர்ட் ஆக வேண்டும் என நானும் நீண்ட நாட்களாக பார்த்துக் கொண்டிருக்கிறேன். அதற்கான கதையாக ‘மகாராஜா’ அமைந்துள்ளது. சேது அண்ணாவுடன் எனக்கு மூன்றாவது படம் இது. அவரின் வளர்ச்சி கடின உழைப்பால் படிப்படியாக வந்தது. அவருடைய சுறுசுறுப்பு நம் சோம்பேறித்தனத்தை தூர விரட்டி விடும். அனுராக் கஷ்யப் சாரிடம் நிறையக் கற்றுக் கொண்டேன். அபிராமி, மம்தா மோகன்தாஸ் இருவர் கூடவும் வேலை பார்த்தது…
Read More“பிதா படம் எடுக்கும்போதே படத்தின் தரம் தெரிந்தது.” – நடிகை வனிதா விஜயகுமார்
SRINIK PRODUCTION சார்பில் தயாரிப்பாளர்கள் D பால சுப்பிரமணி & C சதீஷ் குமார் தயாரிப்பில், இயக்குநர் கார்த்திக் குமார் இயக்கத்தில், V மதி நடிகராக அறிமுகமாகும் திரைப்படம் பிதா. மாறுபட்ட களத்தில் திரில்லர் திரைப்படமாக உருவாகும் இப்படத்தின் அறிவிப்பு நிகழ்ச்சி, படக்குழுவினருடன் திரைப் பிரபலங்கள் கலந்துகொள்ள, பத்திரிக்கை ஊடக நண்பர்கள் முன்னிலையில் கோலாகலமாக நடைபெற்றது. இந்நிகழ்வினில்… நடிகை லக்ஷ்மி ராமகிருஷ்ணன் பேசியதாவது… மொத்தக்குழுவிற்கும் என் வாழ்த்துக்கள். சினிமா ஒரு பவர் புல் மீடியா. ஒவ்வொரு வாய்ப்பும் மிக முக்கியமானது. அது முடிந்த பிறகு தான் இன்னும் நன்றாகச் செய்திருக்கலாம் எனத் தோன்றும். எனவே கிடைக்கும் வாய்ப்பை சரியாகப் பயன்படுத்திக்கொள்ள வேண்டும். இந்தக்குழுவிடம் நிறைய உழைப்பு தெரிகிறது. மதி நடிகராக அறிமுகமாகும் படம். டிரெய்லர் நன்றாக உள்ளது, கார்த்திக் குமாருக்கு என் வாழ்த்துக்கள். படம் வெற்றி பெற…
Read More”தனக்கு வியாபாரம் இருக்கும் சூழலில் பி.டி சார் கதையை தேர்ந்தெடுத்த ஆதிக்கு நன்றி.” – நடிகர் இளவரசு
வேல்ஸ் ஃபிலிம் இன்டர்நேஷனல் டாக்டர் ஐசரி K கணேஷ் தயாரிப்பில், ஹிப் ஹாப் தமிழா ஆதி கதையின் நாயகனாக நடிக்க, இயக்குநர் கார்த்திக் வேணுகோபாலன் இயக்கத்தில், கடந்த மே 24ஆம் தேதி, கலக்கலான கமர்ஷியல் ஃபேமிலி எண்டர்டெயினராக வெளியான திரைப்படம் ‘P T சார்’. ரசிகர்கள் மற்றும் விமர்சகர்கள் பாராட்டினில் பெரும் வரவேற்பைக் குவித்த இப்படம், திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. இப்படத்தின் வெற்றியை கொண்டாடும் வகையில், படக்குழுவினர் பத்திரிக்கை, ஊடக, பண்பலை நண்பர்களைச் சந்தித்தனர். இந்நிகழ்வினில்… ஆர்ட் டைரக்டர் அமரன் பேசியதாவது… இயக்குநர் கார்த்திக் அவர்களுக்கு என் முதல் நன்றி. அவர் சொன்ன கதை எனக்கு ரொம்பப் பிடித்திருந்தது. நாம் தினமும் கடந்து போகும் நிகழ்வை, நாம் தவறவிடுவதை, நம் மனதைத் தாக்கும் நிகழ்வை மையமாக வைத்து, அழகான திரைக்கதை அமைத்திருந்தார். இந்த படத்தை தயாரித்த…
Read Moreதனஞ்ஜெயன் திரைக்கதையில் இரட்டை வேடத்தில் ஹன்சிகா நடிக்கும் காந்தாரி
தமிழ் சினிமாவில் மினிமம் கியாரண்டி வெற்றிப்பட இயக்குநர் ஆர்.கண்ணன். மணிரத்னத்திடம் உதவியாளராக பணியாற்றி, ‘ஜெயம்கொண்டான்’ படத்தின் மூலம் வெற்றிகர இயக்குநராக ஆரம்பித்து தயாரிப்பாளராகவும் மாறிய ஆர்.கண்ணன் தற்போது ஹன்சிகா மோத்வானி நாயகியாக நடித்துள்ள ‘காந்தாரி’ படத்தை இயக்கி தனது மசாலா பிக்ஸ் சார்பில் தயாரித்து இருக்கிறார். எமோஷனல் ஹாரர் திரில்லர் ஆக உருவாகியுள்ள இந்தப்படத்திற்கு தொல்காப்பியனின் கதையை எடுத்துக்கொண்டு அதில் பல கமர்ஷியல் அம்சங்களை சேர்த்து திரைக்கதை எழுதியுள்ளார் ஆர்.கண்ணனின் நண்பரும் தயாரிப்பாளருமான தனஞ்செயன். பாலசுப்ரமணியம் ஒளிப்பதிவை மேற்கொள்ள எல்.வி.முத்து கணேஷ் இசை அமைக்கிறார்கள். தற்போது ஹன்சிகாவின் வித்தியாசமான தோற்றத்துடன் இந்தப்படத்தின் பர்ஸ்ட்லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது. இதை தொடர்ந்து காந்தாரி படத்தின் அறிமுக நிகழ்வு நடைபெற்றது. இதில், படத்தின் கதாசிரியரான தயாரிப்பாளர் தனஞ்செயன் பேசும்போது, “கண்டேன் காதலை படத்தில் ஆரம்பித்து கண்டேன் கண்ணனை என அவருடனான நட்பு…
Read More’அஞ்சாமை’ நாம் எதற்கு அஞ்ச கூடாது என்பதை சொல்லும் படம்” – பாடலாசிரியர் கார்த்திக் நேத்தா
பல்வேறு வெற்றி படங்களை தயாரித்த ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் நிறுவனம், முழுமையாக ஒரு படத்தினை வாங்கி வெளியிடும் படம் ‘அஞ்சாமை’. இதனை திருச்சித்ரம் சார்பில் டாக்டர் திருநாவுக்கரசு தயாரித்துள்ளார். மோகன் ராஜா, லிங்குசாமி உள்ளிட்டோரிடம் உதவி இயக்குநராக பணிபுரிந்த எஸ்.பி.சுப்புராமன் இதனை இயக்கியுள்ளார். விதார்த், வாணி போஜன், ரகுமான், கிருத்திக் மோகன், பாலசந்திரன் ஐஏஎஸ் உள்ளிட்ட பலர் நடித்துள்ள இந்தப்படத்திற்கு கார்த்திக் ஒளிப்பதிவு செய்ய, பாடல்களுக்கு ராகவ் பிரசாத் இசையமைக்க, கலா சரண் பின்னணி இசையமைத்துள்ளார். வரும் ஜூன்-7ஆம் தேதி இப்படம் திரையரங்குகளில் வெளியாக இருக்கிறது. இதனை முன்னிட்டு அஞ்சாமை படக்குழுவினர் பத்திரிகையாளர் சந்திப்பு சென்னையில் நடைபெற்றது. இதில் படக்குழுவினர் அனைவரும் கலந்துக் கொண்டனர். இந்த நிகழ்வில் பாடலாசிரியர் கார்த்திக் நேத்தா பேசும்போது, “இந்தப் படத்தில் பேசக்கூடிய விஷயம் இப்போதும் கூட நம் சமூகத்தில் நிகழ்ந்து கொண்டு…
Read More