பேஷன் ஸ்டுடியோஸ் மற்றும் சிவகார்த்திகேயன் புரொடக்ஷன்ஸ் இணைந்து தயாரித்திருக்க, அறிமுக இயக்குநர் சிவகுமார் முருகேசன் இயக்கத்தில் நடிகை ராதிகா நடிப்பில் வெளியான ‘தாய் கிழவி’ திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது. படத்தின் வெற்றி விழா நிகழ்வு இன்று நடைபெற்றது. நிகழ்வில் கலந்து கொண்ட சிவகார்த்திகேயன் புரொடக்ஷன்ஸ் கலையரசு பேசியதாவது, “படத்தின் ரஷ்ஷஸ் பார்த்தபோதே வெற்றி விழா கொண்டாட்டத்தை எங்கு நடத்த வேண்டும் என்று யோசித்தேன். படத்தில் அர்ப்பணிப்புடன் பணிபுரிந்த அனைத்து நடிகர்கள், தொழில்நுட்ப கலைஞர்களுக்கும் நன்றி. குறிப்பாக படத்தை தயாரித்த சிவாவுக்கும் படத்தில் முதன்மை கதாபாத்திரம் ஏற்ற ராதிகா மேமுக்கும் நன்றி! படத்தின் ரிலீஸ்க்கு முன்பு 250 தியேட்டர்களில் வெளியிட திட்டமிட்டோம். ஆனால் படத்திற்கு வந்த வரவேற்பை அடுத்து கிடைத்தட்ட 340 திரையரங்குகளில் ரிலீஸ் ஆனது. பின்பு, ரிலீஸ் ஆனதும் முதல் நாள்…
Read MoreCategory: சினி-நிகழ்வுகள்
‘இறுதிப்பக்கம்’ இயக்குநரின் அடுத்த அதிரடி: புதிய இன்வெஸ்டிகேஷன் திரில்லர், பூஜையுடன் துவங்கியது!
‘இறுதிப்பக்கம்’ மற்றும் ‘டியர் ரதி’ ஆகிய கவனிக்கத்தக்கத் திரைப்படங்களைத் தொடர்ந்து, Insomniac’s Dream Creations நிறுவனம் தனது மூன்றாவது தயாரிப்பை (Production No. 3) பிரம்மாண்டமான பூஜையுடன் தொடங்கியுள்ளது. முந்தைய படமான ‘இறுதிப்பக்கம்’ மூலம் ஒரு நேர்த்தியான மர்டர் மிஸ்டரியைக் கொடுத்த இயக்குநர் மனோ வெ கண்ணதாசன், இப்படத்தின் மூலம் மீண்டும் திரில்லர் பாணிக்கே திரும்பியுள்ளார். ஆனால், இது வழக்கமான பாணியில் அமையாமல், தமிழ் சினிமாவில் இதுவரை சொல்லப்படாத ஒரு புதிய தளத்தில், ரசிகர்களுக்கு முற்றிலும் புதுவிதமான அனுபவத்தைத் தரும் இன்வெஸ்டிகேஷன் திரில்லராக உருவாகவுள்ளது. இப்படத்தில்’பாண்டியன் ஸ்டோர்ஸ்’ மற்றும் குமார சம்பவம் புகழ் குமரன் தங்கராஜன், ஸ்மேகா நடிக்க, ராஜேஷ் பாலசந்திரன் முதன்மைப் பாத்திரங்களில் நடிக்கின்றனர். மேலும், அபிஷேக் ஜோசப் சத்யா உள்ளிட்ட பல முன்னணி நட்சத்திரங்கள் இப்படத்தில் முக்கிய கதாபாத்திரங்களில் இணைந்து நடிக்கின்றனர். திருச்சி மற்றும்…
Read Moreகண்ணன் ரவி குழுமம் தயாரிப்பில் ‘டெக்ஸ்லா’ படத்தின் தொடக்க விழா
கண்ணன் ரவி குழுமம் சார்பில் தயாரிப்பாளர் கண்ணன் ரவி தயாரிப்பில் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் ஜெய் – சுராஜ் வெஞ்சரமூடு நடிப்பில் ‘டெக்ஸ்லா’ திரைப்படத்தின் தொடக்க விழா சென்னையின் சிறப்பாக நடைபெற்றது. இயக்குநர் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் உருவாகும் ‘டெக்ஸ்லா’ திரைப்படத்தில் ஜெய், சுராஜ் வெஞ்சானமூடு, ஆனந்தராஜ், ஜி.எம். சுந்தர், ஜார்ஜ் மரியன் உள்ளிட்ட பலர் நடிக்கிறார்கள். யுவன் சங்கர் ராஜா இசையில் தயாராகும் இந்த திரைப்படத்தை கண்ணன் ரவி குழுமம் சார்பில் தயாரிப்பாளர் கண்ணன் ரவி தயாரிக்கிறார். தீபக் ரவி இணை தயாரிப்பாளராக பொறுப்பேற்றிருக்கிறார். இப்படத்தின் அறிமுக வீடியோ காணொளி வெளியாகி பெரும் வரவேற்பை பெற்ற நிலையில் இதன் அதிகாரப்பூர்வமான தொடக்க விழா சென்னையில் உள்ள நட்சத்திர ஹோட்டலில் நடைபெற்றது. இந்நிகழ்வில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளரான திரு.சீமான், திருமதி லதா ரஜினிகாந்த், தயாரிப்பாளர்…
Read MoreZEE5 இன் “தடயம்” சீரிஸ் நன்றி அறிவிப்பு விழா !!
இந்தியாவின் முன்னணி ஓடிடி தளமான ZEE5 இல் கடந்த பிப்ரவரி 27 அன்று வெளியான தமிழ் ஒரிஜினல் சீரிஸ் “தடயம்”, வெளியான சில நாட்களிலேயே ரசிகர்களின் பெரும் வரவேற்பில் 100 மில்லியன் பார்வை நிமிடங்களை கடந்து சாதனை படைத்துள்ளது. தமிழில் உருவாகும் க்ரைம் த்ரில்லர் கதைகளிலிருந்து மாறுபட்டு, உண்மை சம்பவங்களின் பின்னணியுடன் பரபரப்பும் மர்மமும் நிறைந்த அனுபவத்தை வழங்கும் இந்த சீரிஸ், ரசிகர்களிடமும் விமர்சகர்களிடமும் நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது. வெளியான சில நாட்களுக்குள்ளாகவே 100 மில்லியன் பார்வை நிமிடங்களை கடந்துள்ளதும் அதன் வெற்றியை நிரூபிக்கிறது. இதனைக் கொண்டாடும் வகையில், படக்குழு பத்திரிக்கை ஊடக நண்பர்களை சந்தித்து, விமர்சனங்களுக்கும் பாராட்டுகளுக்கும் நன்றி தெரிவித்தனர். இந்நிகழ்வினில்.., ZEE5 சார்பில் கௌஷிக் நரசிம்மன் பேசியதாவது…, பொதுவாக ஒரு சீரிஸ் வெளியான பிறகு, அதன் முழு வரவேற்பையும் பல வாரங்கள் கடந்த…
Read Moreஜேப்பியார் பல்கலைக்கழகம் நடத்தும் மானுட சாதனைகளின் உச்சம்: 9-வது பதிப்பு ‘ஜேப்பியார் ஐகான் விருதுகள் 2026’ கொண்டாட்டம்
மரபு, அறிவுத்திறன் மற்றும் நவீன காலத்தின் சிறப்புகளை எல்லாம் ஒன்றிணைக்கும் ஒரு மாபெரும் நிகழ்வாக, ஜேப்பியார் பல்கலைக்கழகத்தின் மிக முக்கிய விழாவான 9-வது பதிப்பு ‘ஜேப்பியார் ஐகான் விருதுகள்’ இன்று அதன் பிரம்மாண்டமான அரங்கில் நடைபெற்றது. தேசிய கலாச்சார வரைபடத்தில் ஒரு மைல்கல்லாக மாறியுள்ள இந்த விழா, புதுமை, தன்னலமற்ற தியாகம் மற்றும் தொழில்முனைவோர் மன உறுதி ஆகியவற்றின் மூலம் சமூக மாற்றத்தை ஏற்படுத்திய “சான்றோர்களையும்” “சாதனையாளர்களையும்” கௌரவிக்கிறது. பல்கலைக்கழகத்தின் அசுர வளர்ச்சிக்குக் காரணமான தொலைநோக்கு பார்வையாளர்களான ஜேப்பியார் பல்கலைக்கழக நிறுவனர் மற்றும் வேந்தர் முனைவர் ரெஜினா ஜே முரளி மற்றும் ஜேப்பியார் பல்கலைக்கழகத் தலைவர் திரு. முரளி சுப்பிரமணியன் ஆகியோர் இந்த விழாவிற்குத் தலைமை தாங்கினர். தத்தமது துறைகளில் புதிய எல்லைகளை வகுத்த தலைச்சிறந்த ஆளுமைகளுக்கு அவர்கள் உயரிய விருதுகளை வழங்கி சிறப்பித்தனர். 2026-ஆம் ஆண்டிற்கான…
Read Moreசந்தானம் நடிக்கும் ” SANTA 20” படத்தின் படப்பிடிப்பு முழு வீச்சில் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.
வீனஸ் இன்ஃபோடெய்ன்மென்ட்- K 7 ஸ்டுடியோஸ் தயாரிப்பில் சந்தானம் நடிப்பில் உருவாகும் ‘ SANTA 20 ‘ காலத்தை மாற்றி அமைத்து துப்பு துலக்கும் திரில்லர் திரைப்படத்தின் படப்பிடிப்பு தொடங்கி முழு வீச்சில் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. மிகவும் எதிர்பார்க்கப்பட்ட சந்தானத்தின் ‘SANTA 20’ படத்தின் படப்பிடிப்பு சென்னையின் முக்கியமான பகுதிகளில் நடைபெற்று கொண்டிருக்கிறது. இயக்குநர் சுதாமன் கிருஷ்ணா இயக்கத்தில் உருவாகும் இந்த திரைப்படத்தை வீனஸ் இன்ஃபோடெய்ன்மென்ட் (கே. ஜே. கணேஷ்) மற்றும் K 7 ஸ்டுடியோஸ் (விஜய் கே செல்லையா) ஆகியோர் இணைந்து தயாரிக்கின்றனர். இந்த படம் மர்மம் -சஸ்பென்ஸ் மற்றும் நகைச்சுவை ஆகியவற்றின் அற்புதமான கலவையைக் கொண்ட புதிய கால பயணத்தை அடிப்படையிலான துப்பறியும் கதையாகும். ‘SANTA 20 ‘திரைப்படம் ஒரு துப்பு துலக்கும் நிபுணரை மையப்படுத்தி தயாராகிறது. அவர் ஒரு குற்றத்தை கண்டறிய தொடங்குகிறார்.…
Read Moreஇயக்குநராக தன் புதிய பயணத்தை தொடங்கும் ரவி மோகன் ; நகைச்சுவை நாயகனாக யோகி பாபு!
Ravi Mohan Studios தயாரிப்பில் உருவாகும் புதிய திரைப்படமான “An Ordinary Man”, நேற்று சிறப்பு பூஜையுடன் அதிகாரப்பூர்வமாக தொடங்கியது. இந்தத் திரைப்படத்தை கெனீஷா தயாரிக்கும் இந்தத் திரைப்படம் ஒரு முக்கியமான மைல்கல்லாகும். ஏனெனில் நடிகர் ரவி மோகன் தனது திரைப்படப் பயணத்தில் முதன்முறையாக இயக்குநராக அறிமுகமாகிறார். சினிமாவுக்கான அவரது ஆர்வமும் தனித்துவமான படைப்புத் திறனும் இந்தப் புதிய முயற்சியில் பிரதிபலிக்க உள்ளது. நகைச்சுவை மற்றும் சமூகக் கருத்துக்களை இணைக்கும் நையாண்டித்தனம் கொண்ட காமெடி-டிராமாவாக இந்தப் படம் உருவாகிறது. இதில் பிரபல நடிகர் யோகி பாபு கதையின் நாயகனாக நடிக்கிறார். அவரது தனித்துவமான நகைச்சுவை பாணி மற்றும் திரைமொழி இந்தப் படத்திற்கு மேலும் சிறப்பைக் கூட்டுமென எதிர்பார்க்கப்படுகிறது. படத்தின் பூஜை நிகழ்ச்சியில் நடிகர்கள் மற்றும் தொழில்நுட்பக் குழுவினர் கலந்து கொண்டு, படப்பிடிப்பு வெற்றிகரமாக நடைபெற வாழ்த்துகளை பெற்றனர்.…
Read Moreலீடர்’ படத்தின் டீசர் வெளியீட்டு கொண்டாட்டம்: லெஜெண்ட் சரவணனின் அதிரடி நடிப்புக்கு ஆரவார வரவேற்பு !!
லெஜெண்ட் சரவணன் முதன்மை வேடத்தில் நடிக்கும் ‘லீடர்’ படத்தின் டீசர் வெளியீட்டு கொண்டாட்டம் சென்னை கமலா திரையங்கில் வியாழக்கிழமை படக்குழுவினர் மற்றும் ரசிகர்கள் பங்கேற்க விமரிசையாக நடைபெற்றது. சமூக ஊடக தளங்களில் டீசர் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. பிரபல இயக்குநர் ஆர்.எஸ். துரை செந்தில்குமார் எழுதி இயக்கியுள்ள இந்தப் படத்தை லெஜெண்ட் சரவணா ஸ்டோர்ஸ் புரொடக்ஷன்ஸ் பிரமாண்டமாக தயாரித்துள்ளது. தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் இந்தி ஆகிய மொழிகளில் வரும் ஏப்ரல் மாதம் உலகெங்கும் உள்ள திரையரங்குகளில் ‘லீடர்’ வெளியாகிறது. ஒரு நிமிடம் 21 நொடிகள் ஓடும் டீசரில் இடம் பெற்றுள்ள லெஜெண்ட் சரவணனின் அதிரடி சண்டைக்காட்சிகள் ரசிகர்களை உற்சாகப்படுத்தியுள்ளதோடு, சமூக ஊடக தளங்களில் பலத்த பாராட்டுகளை குவித்துள்ளன. படத்தின் மீதான எதிர்பார்ப்பை டீசர் பெரிய அளவில் அதிகரித்துள்ளது. படத்தைப் பற்றிப் பேசிய இயக்குநர் ஆர்.எஸ்.…
Read Moreதொடர்ச்சியாக அன்பு, ஊக்கத்தை பொழிந்து வரும் ரசிகர்களுக்கு நன்றி – சாய் அபயங்கர்
திங்க் மியூசிக் தயாரிப்பில், இளம் இசையமைப்பாளர் சாய் அபயங்கர் இசையமைத்து, அதிகம் எதிர்பார்க்கப்பட்ட இண்டீ பாடல் ‘பவழ மல்லி’ சென்னையில் நடைபெற்ற சிறப்பு நிகழ்ச்சியில் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டது. சாய் அப்யங்கர் மற்றும் ஸ்ருதி ஹாசன் இணைந்து பாடிய இந்தப் பாடல், வளர்ந்து வரும் இன்டிபென்டென்ட் இசை உலகத்திற்கு மற்றொரு உயிரோட்டமான சேர்க்கையாக அமைந்துள்ளது. அதன் தனித்துவமான இசை ரசனை மற்றும் காட்சி அமைப்புகளால் ஏற்கனவே கவனத்தை ஈர்த்து வருகிறது. வெளியீட்டு நிகழ்ச்சியில் பேசிய சாய் அபயங்கர், “எனக்கு இந்த தளத்தை வழங்கிய சந்தோஷ் அண்ணா மற்றும் மகேஷ் அண்ணாவுக்கு நன்றி கூற விரும்புகிறேன். அவர்கள் எனது தொழில் வாழ்க்கையை வடிவமைப்பதில் வலுவான தூண்களாக இருந்துள்ளனர். அவர்களின் ஆதரவு எனக்கு மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்தது. எல்லாவற்றுக்கும் மேலாக, என்மீது தொடர்ச்சியாக அன்பு மற்றும் ஊக்கத்தை பொழிந்து வரும் ரசிகர்களுக்கு…
Read More”முழுமையான பொழுதுபோக்கு அம்சங்களுடன் இளைஞர்களை கவரும் திரைப்படமாக ‘முஸ்தபா முஸ்தபா’ உருவாகியுள்ளது”- சக்தி பிலிம் பேக்டரி சக்திவேலன் பி!
‘முஸ்தபா முஸ்தபா’ திரைப்படம் இன்று தமிழ்நாடு முழுவதும் உள்ள திரையரங்குகளில் வெளியாகிறது. பத்திரிகையாளர்களுக்கான திரையிடல் மற்றும் சிறப்பு திரையிடலில் படத்திற்கு கிடைத்துள்ள வரவேற்பு குறித்து இப்படத்தின் தயாரிப்பாளர் பிரதீப் மகாதேவன் மற்றும் இப்படத்தை தமிழ்நாடு முழுவதும் வெளியிடும் சக்தி பிலிம் பேக்டரி சக்திவேலன் பி ஆகியோர் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர். இந்த சிறப்பான வரவேற்பு காரணமாக, பார்வையாளர்கள் மத்தியிலும் படம் மீதான எதிர்பார்ப்பு மேலும் அதிகரித்துள்ளது. தமிழ்நாடு முழுவதும் கிட்டத்தட்ட 150-க்கும் அதிகமான திரைகளில் படம் வெளியாகிறது. தயாரிப்பாளர் பிரதீப் மகாதேவன் பகிர்ந்து கொண்டதாவது, “ஆர்வத்துடனும் அர்ப்பணிப்புடனும் உருவாகியுள்ள ‘முஸ்தபா முஸ்தபா’ திரைப்படம் அதிகளவில் பார்வையாளர்களை சென்றடைவது மிகவும் முக்கியம். அதற்கு அனுபவம்மிக்க விநியோகஸ்தர்களின் ஆதரவு அவசியம். சக்திவேலன் சார் போன்ற முன்னணி விநியோகஸ்தர்களின் ஆதரவு கிடைப்பது எந்த திரைப்பட இயக்குநரும் விரும்பும் விஷயம். சக்தி பிலிம் பேக்டரி…
Read More