தனித்துவமான படைப்புகள் தந்த முன்னணி தயாரிப்பு நிறுவனமான ஸ்ரீ தேனாண்டாள் பிலிம்ஸ் தயாரிப்பில், இயக்குநர் அருண் ரவிச்சந்திரன் இயக்கத்தில், முன்னணி யூடியூப் படைப்பாளியான ஹரி பாஸ்கர், பிக்பாஸ் புகழ் ரயான் மற்றும் லாஸ்லியா நடிப்பில், ஜனரஞ்சகமாக உருவாகியுள்ள திரைப்படம் ‘மிஸ்டர். ஹவுஸ்கீப்பிங்’ வரும் ஜனவரி 24 ஆம் தேதி, இப்படம் உலகமெங்கும் வெளியாகிறது. இந்நிலையில் படத்தின் வெளியீட்டை ஒட்டி, படக்குழுவினர் பத்திரிக்கை ஊடக நண்பர்களைச் சந்தித்து, படம் குறித்த தகவல்களைப் பகிர்ந்து கொண்டனர். ஸ்ரீ தேனாண்டாள் பிலிம்ஸ் உரிமையாளர் என். இராமசாமி என்கிற தேனாண்டாள் முரளி பேசியதாவது…, இயக்குநர் அருண் இந்தக்கதையைப் பலமுறை எங்களிடம் சொல்லி, இறுதியாக முடிவு செய்து தயாரித்துள்ளோம். இப்படத்தை உருவாக்கும்போதே இந்தக்கால டிரெண்ட்டுக்கு ஏற்றவாறு இருப்பதுடன், குடும்பங்கள் ரசிக்கும் படமாக இருக்க வேண்டும் என முடிவு செய்தோம். ஹரி பாஸ்கர், லாஸ்லியா, ரயான்…
Read MoreCategory: சினி-நிகழ்வுகள்
“2K லவ்ஸ்டோரி” டிரெய்லர் வெளியீட்டு விழா !!
City light pictures தயாரிப்பில், தமிழ் திரையுலகின் பெருமை மிகு படைப்பாளியான இயக்குநர் சுசீந்திரன் இயக்கத்தில், இன்றைய நவ நாகரீக இளைஞர்களின் வாழ்வைச் சொல்லும் படைப்பாக, ரொமான்ஸ் ஜானரில் உருவாகியுள்ள திரைப்படம் “2K லவ்ஸ்டோரி”. Creative Entertainers சார்பில் தனஞ்செயன் இப்படத்தை வெளியிடுகிறார். வரும் பிப்ரவரி 14 ஆம் தேதி உலகமெங்கும் திரையரங்குகளில் வெளியாகவுள்ள நிலையில், இப்படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழா, படக்குழுவினர் கலந்துகொள்ள பத்திரிக்கை, ஊடக நண்பர்கள் முன்னிலையில் நடைபெற்றது. இந்நிகழ்வினில்… தயாரிப்பாளர் விக்னேஷ் சுப்ரமணியன் பேசியதாவது… இது எங்கள் முதல் படம். தனஞ்செயன் சார் எங்கள் படத்தைப் பார்த்து விட்டு, நானே ரிலீஸ் செய்கிறேன் என எடுத்துக்கொண்டார். மகிழ்ச்சி. சுசி சார் அவரில்லாமல் இந்தப்படம் இல்லை, மிக அட்டகாசமாகப் படத்தை எடுத்துள்ளார். இமான் சார் படத்தை முழுதாக தாங்கியிருக்கிறார். நண்பன் ஜெகவீர்…
Read Moreயாத்திசை’ இயக்குநர் தரணி ராசேந்திரனின் அடுத்த படம் குறித்தான அறிவிப்பு!
இயக்குநர் தரணி ராசேந்திரன் தனது ‘யாத்திசை’ படம் மூலம் தமிழ் சினிமாவில் புது வெளிச்சத்தை பாய்ச்சியவர். அவர் படத்தை கையாளும் திறன், கதை சொல்லல் இதெல்லாம் பார்வையாளர்களையும் சினிமாவில் வர்த்தக வட்டாரத்தினரையும் கவர்ந்துள்ளது. ’யாத்திசை’ படத்தை அடுத்து அவர் புதிய படத்தை இயக்க இருக்கிறார். இன்னும் பெயரிடப்படாத இந்தப் படத்தை ஜேகே ஃபிலிம் இன்டர்நேஷனல் சார்பில் ஜே கமலக்கண்ணன் தயாரிக்கிறார். இந்தப் படத்திற்கான பூஜை எளிமையான முறையில் நடைபெற்றது. பூஜையில் சக்தி ஃபிலிம் பேக்டரியின் விநியோகஸ்தர் பி.சக்திவேலன், ஜி.தனஞ்செயன், சித்ரா லட்சுமணன், இயக்குநர் மணித்திர பி மூர்த்தி, ’அயலி’ வெப் சீரிஸ் புகழ் இயக்குநர் முத்து, தயாரிப்பாளர் கணேஷ் காமன் மேன், யூடியூபர்ஸ் மதன் கௌரி, மிஸ்டர் ஜி.கே. மற்றும் செர்ரி உள்ளிட்ட திரையுலகப் பிரபலங்கள் கலந்துகொண்டு வாழ்த்தினர். ’யாத்திசை’ படத்தில் நம்பிக்கையூட்டும் நடிப்பை வெளிப்படுத்திய நடிகர்…
Read Moreஇயக்குநர் பாலா செதுக்கிய நடிகர் மை. பா. நாராயணன்!
தூணிலும் இருப்பார் துரும்பிலும் இருப்பார் என்று இறைவனைச் சொல்வார்கள்.அப்படி எல்லா இடத்திலும் இருப்பவராக மை.பா. நாராயணனைச் சொல்லலாம். அரசியல் மேடைகளில், ஆன்மீக உரைகளில், பட்டிமன்றங்களில், தொலைக்காட்சி விவாதங்களில், இலக்கிய, உரைகளில் என்று எல்லாவற்றிலும் முகம் காட்டுபவர். கூடுதலாக அண்மைக்காலமாக திரையுலகிலும் முகம் காட்டி வருகிறார்.அண்மையில் வெளிவந்த ‘வணங்கான்’ படத்தில் நீதிபதியாக வரும் மிஷ்கினிடம் ஒரு போக்ஸோ வழக்கு வரும். அதைத் தொடுத்து மிஷ்கினிடம் மூக்குடை படும் வழக்கறிஞராக கவனிக்கத்தக்க வகையில் ஒரு பாத்திரத்தில் நடித்திருக்கும் முகத்தைப் படம் பார்த்த அனைவராலும் மறக்க முடியாது. அவர்தான் மை.பா.நாராயணன். இதற்கு முன்பு பாலாவின் , ‘நாச்சியார்’, ‘இறுகப்பற்று’ உள்ளிட்ட 13 படங்களில் நடித்துள்ளார். மை.பா. நாராயணன் ஆனந்த விகடனில் பத்திரிகையாளராகப் பணியாற்றியவர் .இந்தத் துறையில் அவருக்கு 30 ஆண்டு கால அனுபவம் உண்டு. ஊடக விளம்பரத் துறையிலும் ஈடுபட்டவர், ஒரு…
Read Moreஇடபத் தளியிலார் – புதிய மார்க்கம் அரங்கபிரவேசமாக…
இந்திய கலை மற்றும் கலாச்சாரம் பற்றிய ஆராய்ச்சி மற்றும் பயிற்சி மையம் வழங்கும் ‘இடபத் தளியிலார் ‘ எனும் புதிய மார்க்கம் அரங்கேற்ற நிகழ்வு சென்னையில் நடைபெறுகிறது. எதிர்வரும் ஜனவரி 22ஆம் தேதி மாலை 5 மணி அளவில் சென்னையில் உள்ள மயிலாப்பூர் ஃபைன் ஆர்ட்ஸ் கலையரங்கில் நடைபெறுகிறது. இந்த நிகழ்ச்சி- தேவரடியார் மரபின் கடைசி வாரிசாக இருக்கும் பத்ம ஸ்ரீ இரா. முத்து கண்ணம்மாள் அவர்களின் முன்னிலையில் நடைபெறுகிறது. மேலும் இந்த கலாச்சார நிகழ்விற்கு தமிழ்நாடு மாநில மகளிர் ஆணைய தலைவர் திருமதி ஏ. எஸ். குமரி விஜயகுமார் அவர்களும், ‘சொல்லின் செல்வர்’ முனைவர் ஐ. எஸ். பர்வீன் சுல்தானா அவர்களும் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொள்கிறார்கள். இடபத் தளியிலார் எனும் புதிய மார்க்கத்தை… தேவரடியார்களின் இறை தொண்டு குறித்து ஆய்வு செய்து வடிவமைத்த ஆசான்.…
Read More“எங்களை விட படத்தின் ஹீரோ மணிகண்டன் இந்த கதையை அதிகம் நம்பினார்”
சினிமாக்காரன் பட நிறுவனம் சார்பில் எஸ். வினோத்குமார் தயாரிப்பில் இயக்குநர் ராஜேஷ்வர் காளிசாமி இயக்கி இருக்கும் படம் குடும்பஸ்தன். மணிகண்டன், ஷான்வி நாயகன் நாயகியாக நடித்திருக்கும் இந்த படம் வரும் 24ஆம் தேதி திரையரங்கில் வெளியாகிறது. இதன் ட்ரெய்லர் வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. இந்த நிகழ்வில்ஆடை வடிவமைப்பாளர் மீரா பேசியதாவது. “எனக்கு இவ்வளவு பெரிய வாய்ப்புக் கொடுத்த தயாரிப்பாளர் வினோத், இயக்குநர் ராஜேஷூக்கு நன்றி. என்னுடைய முதல் படமே குடும்பப் படமாக அமைந்துள்ளது. ஆதரவு கொடுத்த ஒட்டுமொத்த குழுவுக்கும் நன்றி”. கலை இயக்குநர் சுரேஷ் பாலாஜி பேசுகையில், “எனக்கு வாய்ப்புக் கொடுத்த படக்குழுவினருக்கு நன்றி. படத்தில் ஜாலியாக வேலை செய்தோம். உங்களுடைய ஆதரவு தேவை” என்று சிம்பிளாக முடித்துக் கொண்டார். எடிட்டர் கண்ணன் பாலு: “’குடும்பஸ்தன்’ எனக்கு ஸ்பெஷல் படம். நன்றாக வந்திருக்கிறது. தியேட்டரில் பாருங்கள்”.…
Read More‘பாட்டல் ராதா போன்ற படங்கள் இன்று அவசியம்’ – வெற்றிமாறன்
இயக்குனர் பா.இரஞ்சித்தின் நீலம் புரொடக்சன்ஸ் மற்றும் பலூன் பிக்சர்ஸ் அருண்பாலாஜி தயாரிப்பில் அறிமுக இயக்குனர் தினகரன் சிவலிங்கம் இயக்கியிருக்கும் படம் பாட்டல் ராதா.. ஷான் ரோல்டன் இசையமைத்திருக்கிறார். குருசோமசுந்தரம், சஞ்சனா, ஜான்விஜய், மாறன், மற்றும் பலர் நடித்திருக்கும் படத்தின் டிரெய்லர் வெளியீட்டுவிழா சென்னையில் நடைபெற்றது விழாவில் படக்குழுவினரோடு சிறப்பு விருந்தினர்களாக இயக்குனர் வெற்றிமாறன், லிங்குசாமி, அமீர், மிஸ்கின் கலந்துக் கொண்டனர். விழாவில் பேசிய லிங்குசாமி இந்த படம் தமிழில் மிகச்சிறந்தபடமாக இந்த காலகட்டத்திற்கு தேவையான ஒருபடமாக வந்திருக்கிறது. ஜனரஞ்சகமாக அதேசமயம் கருத்துள்ள படமாக இருக்கிறது. இந்தப்படம் அரசாங்கத்திற்கு போடும் மனு போல . அவசியமானதொரு படம். இந்தப்படம் பெரும்வெற்றியடையும் என்றார். விழாவில் பேசிய அமீர் இந்த கதையைப்போல குடி நோயால் பாதிக்கப்பட்ட மனிதர்களைப்பற்றி நான் ஒரு படம் இயக்குவதாக இருந்தேன் அதற்காக கள ஆய்வுகள் செய்தும் வைத்திருந்தேன்.…
Read Moreதெலுங்கு ஹீரோ விஷ்ணு மன்ச்சு நடித்துள்ள பான் இந்தியா படம், ‘கண்ணப்பா’.
‘கண்ணப்பா’ படத்தை நியூசிலாந்தில் படமாக்கியது ஏன்? – நடிகர் விஷ்ணு மஞ்சு விளக்கம் ஏ.வி.ஏ. எண்டர்டெயின்மெண்ட் மற்றும் 24 ஃபிரேம் பேக்டரி நிறுவனங்கள் சார்பில் பிரபல நடிகர் மோகன் பாபு தயாரித்திருக்கும் பிரமாண்ட சரித்திர காவியம் ‘கண்ணப்பா’. இதில், பிரபல நடிகரும், தயாரிப்பாளருமான விஷ்ணு மஞ்சு கண்ணப்பா கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். நாயகியாக ப்ரீத்தி முகுந்தன் நடிக்க, இவர்களுடன் மோகன் பாபு, சரத்குமார், மோகன்லால், அக்ஷய் குமார், பிரபாஸ், காஜல் அகர்வால், மதுபாலா உள்ளிட்ட இந்திய திரையுலகின் முன்னணி நட்சத்திரங்கள் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கிறார்கள். பரச்சூரி கோபால கிருஷ்ணா, ஈஸ்வர் ரெட்டி, ஜி.நாகேஸ்வர ரெட்டி, தோட்டா பிரசாத் ஆகியோர் கதை எழுத, விஷ்ணு மஞ்சு திரைக்கதை எழுதியிருக்கிறார். முகேஷ் குமார் சிங் இயக்கியிருக்கிறார். அமெரிக்காவைச் சேர்ந்த ஷெல்டன் சாவ் ஒளிப்பதிவு செய்திருக்கும் இப்படத்திற்கு சித்தார்த் இரண்டாவது யூனிட் ஒளிப்பதிவாளராக…
Read More“என் திரையுலக பயணத்தில் ‘வணங்கான்’ ஒரு மைல் கல்” ; – நடிகர் அருண்விஜய் நெகிழ்ச்சி
இந்த பொங்கல் பண்டிகையில் பல படங்கள் வெளியானாலும் 12 வருடங்கள் கழித்து வெளியான மதகஜராஜா படத்தின் வெற்றியும், ஏழு வருடங்கள் கழித்து பாலா இயக்கத்தில் உருவாகியுள்ள ‘வணங்கான்’ படத்தின் வெற்றியும் மிகவும் கவனிக்கத்தக்கதாக மாறி இருக்கிறது. குறிப்பாக இன்றைய காலகட்டத்தில் பெண்கள் அதிகம் எதிர்கொளும் பாலியல் வன்முறைகளுக்கு கடுமையான தீர்வு காணப்பட வேண்டும் என ‘வணங்கான்’ படம் மூலம் இயக்குநர் பாலா அழுத்தமாக வலியுறுத்தியுள்ளது ரசிகர்களிடம், குறிப்பாக பெண்களிடம் மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளது. படத்தின் வெற்றிக்கும் அதுவே மிகப்பெரிய காரணமாக அமைந்து விட்டது. அருண்விஜய்யின் மாறுபட்ட கதாபாத்திரமும், உணர்வுப்பூர்வமான நடிப்பும், அதற்கு அவர் கொடுத்திருக்கும் கடின உழைப்பும், கதாநாயகி ரோஷிணி, தங்கை ரிதா உள்ளிட்ட படத்தில் இடம்பெற்ற அனைத்து நடிகர்களின் இயல்பான பங்களிப்பும் என எல்லாம சேர்ந்து வணங்கான் படத்தின் வெற்றிக்கு உறுதுணையாக அமைந்துள்ளன.. நல்ல படங்களை…
Read More‘வணங்கான்’ ஒரு மைல் கல் – நடிகர் அருண்விஜய் நெகிழ்ச்சி
இந்த பொங்கல் பண்டிகையில் பல படங்கள் வெளியானாலும் 12 வருடங்கள் கழித்து வெளியான மதகஜராஜா படத்தின் வெற்றியும், ஏழு வருடங்கள் கழித்து பாலா இயக்கத்தில் உருவாகியுள்ள ‘வணங்கான்’ படத்தின் வெற்றியும் மிகவும் கவனிக்கத்தக்கதாக மாறி இருக்கிறது. குறிப்பாக இன்றைய காலகட்டத்தில் பெண்கள் அதிகம் எதிர்கொளும் பாலியல் வன்முறைகளுக்கு கடுமையான தீர்வு காணப்பட வேண்டும் என ‘வணங்கான்’ படம் மூலம் இயக்குநர் பாலா அழுத்தமாக வலியுறுத்தியுள்ளது ரசிகர்களிடம், குறிப்பாக பெண்களிடம் மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளது. படத்தின் வெற்றிக்கும் அதுவே மிகப்பெரிய காரணமாக அமைந்து விட்டது. அருண்விஜய்யின் மாறுபட்ட கதாபாத்திரமும், உணர்வுப்பூர்வமான நடிப்பும், அதற்கு அவர் கொடுத்திருக்கும் கடின உழைப்பும், கதாநாயகி ரோஷிணி, தங்கை ரிதா உள்ளிட்ட படத்தில் இடம்பெற்ற அனைத்து நடிகர்களின் இயல்பான பங்களிப்பும் என எல்லாம சேர்ந்து வணங்கான் படத்தின் வெற்றிக்கு உறுதுணையாக அமைந்துள்ளன.. நல்ல படங்களை…
Read More
