ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் தயாரிப்பில் ‘டாணாக்காரன்’ இயக்குநர் தமிழ் இயக்கத்தில், கார்த்தி நடிக்கும் அடுத்த பிரம்மாண்ட திரைப்படம் #Karthi29 அதிரடி ஆரம்பம் தென்னிந்திய திரைத்துறையில், மாறுபட்ட களத்தில், தீரன் அதிகாரம் ஒன்று, அருவி, கைதி, ஒக்கே ஒக்க ஜீவிதம், ஃபர்ஹானா போன்ற அழுத்தமான படைப்புகளை, பெரிய திரையில் எந்த சமரசமும் இல்லாமல் தயாரித்து வெளியிட்ட, சிறப்பு மிகு தயாரிப்பு நிறுவனம் ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ். தற்போது இந்நிறுவனம், படத்திற்குப் படம் வித்தியாசமான காதாப்பாத்திரங்களில், முற்றிலும் வேறுபட்ட களங்களில், வெற்றிப்படங்களைத் தந்து வரும், தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான கார்த்தியுடன் மீண்டும் கைகோர்க்கிறது. முன்னதாக கார்த்தி மற்றும் ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் இணைந்து, தீரன் அதிகாரம் ஒன்று, கைதி, சுல்தான் போன்ற கிளாசிக் பிளாக்பஸ்டர் படங்களையும், காஷ்மோரா மற்றும் ஜப்பான் போன்ற மாறுபட்ட சோதனை முயற்சிகளையும் வழங்கியுள்ளனர். தற்போது,…
Read MoreCategory: சினி-நிகழ்வுகள்
சண்டைக்காட்சிகளே இல்லாத ஆனால் கமர்ஷியல் படம் தான் மெய்யழகன்’” ; உத்தரவாதம் தருகிறார் கார்த்தி
2டி என்டர்டெயின்மென்ட் சார்பில் சூர்யா-ஜோதிகா தயாரிப்பில் உருவாகியுள்ள படம் ‘மெய்யழகன்’. கார்த்தி, அர்விந்த் சாமி நடித்துள்ள இப்படத்தை 96 புகழ் பிரேம்குமார் இயக்கியுள்ளார், ராஜ்கிரண்,ஸ்ரீ திவ்யா, நடிக்க, தேவதர்ஷினி, ஜே.பி, ……….. ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். 96 படத்தில் இசையால் வசியம் செய்த கோவிந்த் வசந்தா இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார். மகேந்திரன் ஜெயராஜ் ஒளிப்பதிவு செய்துள்ளார். ‘மெய்யழகன்’ படம் வரும் செப்-27 (புரட்டாசி 11) ஆம் தேதி வெளியாக இருக்கிறது. சமீபத்தில் இந்த படத்தின் கிளர்வோட்டம் ( Traser ) வெளியாகி வரவேற்பை பெற்ற நிலையில் நேற்று மாலை சென்னை எக்ஸ்பிரஸ் அவென்யூ மாலில் ரசிகர்கள் முன்னிலையில் இப்படத்தின் புரோமோஷன் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் கார்த்தி, அர்விந்த் சாமி உள்ளிட்ட படக்குழுவினர் கலந்து கொண்டனர். நடிகை தேவதர்ஷினி பேசும்போது, “96 படத்தின் இயக்கனருடன் அடுத்த படம்…
Read Moreவெளியானது தளபதி 69 அதிகாரப்பூர்வ அறிவிப்பு!
கே. வி. என் புரொடக்ஷன்ஸ் தமது பெருமைமிகு அடுத்த படைப்பான ‘தளபதி’விஜய் அவர்களுடன் இணையும் தளபதி- 69 தமிழில் தங்களது முதலாவது தயாரிப்பாக அமைவதை அதிகாரப்பூர்வமாக அறிவிப்பதில் பெருமகிழ்ச்சி அடைகிறது. இந்த படம் உச்ச நட்சத்திரங்களில் ஒருவரான புகழ்பெற்ற ‘தளபதி’விஜய்-க்கும்,புகழ்பெற்ற தயாரிப்பு நிறுவனம், புகழ்பெற்ற இயக்குனர் எச். வினோத் மற்றும் தரவரிசையில் இடம் பிடிக்கும் பாடல்களைத் தந்த ‘அனிருத் ரவிச்சந்தர்’ ஆகியோர் இடையிலான குறிப்பிடத்தக்க புதுமையான கூட்டணியாக அமைகிறது. தனது அற்புதமான நடிப்புக்கும், பெரும் ரசிகர் பட்டாளத்துக்கும் பெயர் பெற்ற ‘தளபதி’விஜய், ‘தளபதி-69’-இல் இதற்கு முன்பு பார்த்திராத தோற்றத்தில் தோன்ற உள்ளார். தரமான திரைப்படங்களைத் தயாரிப்பதோடு மட்டுமல்லாமல் நல்ல கதையம்சம் கொண்ட திரைப்படங்களை விநியோகப்பதற்கும் பெயர் பெற்ற வெங்கட் கே நாராயணா அவர்கள் தனது சொந்த தயாரிப்பு நிறுவனமான கே வி என் புரொடக்ஷன்ஸ் சார்பில், ‘தளபதி-69’-ஐ…
Read Moreகிராமத்து கதைக்களத்தில் நகைச்சுவை கலந்த குடும்பச் சித்திரமாக உருவாகிறது ராஜபுத்திரன்!!
கிரசன்ட் சினி கிரியேஷன்ஸ் சார்பில் பெரும் பொருட்செலவில் இளம் தயாரிப்பாளர் KM சபி தயாரிக்கிறார், இணை தயாரிப்பு பாரூக் பிக்சர்ஸ், கிராமத்து கதைக்களத்தில் நகைச்சுவை கலந்த குடும்பச் சித்திரமாக உருவாகிறது ராஜபுத்திரன் முதன்மை கதாபாத்திரத்தில் துள்ளல் கலந்த அப்பாவாக இளைய திலகம் பிரபு மற்றும் 8 தோட்டாக்கள் வெற்றி இருவரும் முதல்முறையாக இணைந்து இருக்கின்றனர் இவர்களோடு எங்களது பெருமைக்குரிய அறிமுகமாய் கன்னடத்து பிரபலம் கோமல் குமார் கதாநாயகியாக கிருஷ்ண பிரியா மற்றும் இவர்களுடன் மன்சூர் அலிகான், ஆர் வி உதயகுமார், இமான் அண்ணாச்சி, லிவிங்ஸ்டன், தங்கதுரை, மற்றும் பலரும் நடிக்க. எங்கள் படத்திற்கு மேலும் பெருமை சேர்க்கும் விதமாக கவிப்பேரரசு வைரமுத்து அனைத்து பாடல்களையும் எழுத.. அனைவரையும் ஆட்டம் போட வைக்கும் விதமாக டிஆரின் வெண்கல குரலில் ஒரு பாடல் பதிவு செய்யப்பட்டுள்ளது அறிமுக இசை அமைப்பாளர்…
Read Moreஇயக்குநர் சங்கத்திற்கு ஐஸ்வர்யா ரஜினிகாந்த் வருடம்10லட்சம் நிதி உதவி
இயக்குநர்கள் ,உதவி இயக்குநர்களின் வாரிசுகளுக்கு இயக்குநர் திருமதி.ஐஸ்வர்யா ரஜினிகாந்த் அவர்கள் வருடாவருடம் ரூ.10 லட்சம் கல்வி உதவி வழங்குவதாக உறுதி அளித்து முதற்கட்டமாக 2024 ஆம் ஆண்டிற்கு இன்று 13.09.2024 ரூ.5 லட்சம் சங்கத் தலைவர் ஆர். வி. உதயகுமாரிடம் வழங்க செயலாளர் பேரரசு , பொருளாளர் சரண் , பெப்ஸி தலைவர் ஆர்.கே. செல்வமணி ஆகியோர் இணைந்து பெற்றுக்கொண்டனர்.நிர்வாகிகள் இயக்குனர்கள் எழில், சி. ரங்கநாதன், மித்ரன் ஜவகர், எஸ்.ஆர்.பிரபாகரன் மற்றும் செயற்குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டு ஐஸ்வர்யாவிற்கு நன்றி தெரிவித்தனர்.
Read Moreநடிகை சாந்தி பாலச்சந்திரன் திரைக்கதை எழுதுவதிலும் தடம் பதிக்கிறார்!
நடிகர் துல்கர் சல்மானின் தயாரிப்பு நிறுவனமான வேஃபேரர் பிலிம்ஸின் அடுத்த படத்திற்கான கூடுதல் திரைக்கதையை நடிகை சாந்தி எழுதியுள்ளார். எழுத்தாளரும் இயக்குநருமான டொமினிக் அருண் இயக்கத்தில் கல்யாணி பிரியதர்ஷன் மற்றும் நஸ்லென் நடிக்கும் இப்படத்தின் பூஜை சமீபத்தில் நடைபெற்றது. சாந்தி நடிப்பில் வெளியான சமீபத்திய படங்கள் பல விருதுகளை வென்றுள்ளன. ‘சூரரைப் போற்று’ படத்தின் சிறந்த திரைக்கதைக்கான தேசிய விருதை வென்ற ஷாலினி உஷாதேவி இயக்கிய மலையாளத் திரைப்படம் ‘என்னென்னும்’-ல் சாந்தி நடித்திருந்தார். இந்தப் படம் கேரள மாநில விருதுகள் 2024 இல் சிறப்பு நடுவர் விருதை வென்றது. சுவிட்சர்லாந்தில் நடைபெற்ற நியூசெட்டல் இன்டர்நேஷனல் ஃபென்டாஸ்டிக் ஃபிலிம் பெஸ்டிவலில் இத்திரைப்படம் சர்வதேச விமர்சகர் விருதையும் வென்றது. சமீபத்தில் அறிவிக்கப்பட்ட தேசிய விருதுகளில் சாந்தியின் முதல் இந்தி படமான ‘குல்மோஹர்’ சிறந்த இந்தி படத்திற்கான விருது வென்றது. அமேசான்…
Read Moreஒன்ட்ராகா என்டர்டெயின்மென்ட்டின் அடுத்த ஒரிஜினல் படைப்பு ‘கடலோர கவிதை’ வெளியாகிறது!
ஒரு ஊரிலேயொரு ஃபிலிம் ஹவுஸுடன் இணைந்து ஒன்ட்ராகா என்டர்டெயின்மென்ட் தங்களின் அடுத்த தயாரிப்பை அறிவிப்பதில் பெருமிதம் கொள்கிறது. தமிழில் ‘கடலோரக் கவிதை’ மற்றும் மலையாளத்தில் ‘ஈ தீரம்’ எனப் பெயரிடப்பட்டுள்ள இந்தப் படைப்பை ப்ரீத்தி ஸ்ரீவிஜயன் தயாரித்துள்ளார். ஸ்வாதினி இயக்கத்தில், தர்ஷன் மற்றும் நிஹாரிகா ஆகியோர் முதன்மை கதாபாத்திரங்களில் நடித்திருக்கும் இந்த மியூசிக்கல் டிராமா நிச்சயம் பார்வையாளர்களைக் கவரும். இதற்கு விஷால் சுரேஷ் இசையமைத்துள்ளார். கான்செப்ட் மற்றும் ஒளிப்பதிவை இலை கையாண்டுள்ளார். படத்தொகுப்பை ரிச்சர்ட் கெவின் கவனித்துள்ளார். அருண் பிரபா எழுதியிருக்கும் இந்தப் பாடலுக்கு தமிழில் அபிஜித் ஞரோலி மற்றும் ஸ்வேதா சுகதனும் மலையாளப் பதிப்பிற்கு அபிஜித் ஞரோலியும் குரல் கொடுத்துள்ளனர். ‘கடலோரக் கவிதை’யின் முதல் பார்வை போஸ்டர் இன்று வெளியாகி எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கிறது. இதுபோன்ற அடுத்தடுத்த உற்சாக அறிவிப்புகளைத் தெரிந்து கொள்ள ஒன்ட்ராகா என்டர்டெயின்மென்ட்டை…
Read Moreநந்தன் இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா
Era Entertainment தயாரிப்பில், Trident Arts ரவீந்திரன் வெளியிடும், இயக்குநர் இரா சரவணன் இயக்கத்தில், சசிகுமார் நடிப்பில் மாறுபட்ட களத்தில், மக்களின் அடிப்படை அரசியலை பேசும் சமூக அக்கறை மிக்க படைப்பாக உருவாகியுள்ள திரைப்படம் நந்தன். எதிர்வரும் இருபதாம் தேதியன்று உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகும் இப்படத்தின் டிரெய்லர் மற்றும் இசை வெளியீட்டு விழா இன்று படக்குழுவினர் கலந்துகொள்ள பத்திரிக்கை- ஊடக -பண்பலை- நண்பர்கள் முன்னிலையில் கோலாகலமாக நடைபெற்றது. இந்நிகழ்வினில் … ஒளிப்பதிவாளர் சரண் பேசியதாவது… முதலில் இந்த திரைப்படத்தில் பணிபுரிய அழைத்த, நண்பர், இயக்குநர் சரவணன் அவர்களுக்கு, நன்றி. இதற்கு முன் ‘கிடாயின் கருணை மனு’, ‘விழித்திரு’ திரைப்படங்களில் மட்டுமே பணியாற்றி இருந்தேன். அதைப் பார்த்துவிட்டு, என்னை அழைத்து இந்தப் படத்தில் பணியாற்றும் வாய்ப்பபை அளித்தார். அவருக்கு என் நன்றிகள். நடிகர் சசிகுமார் எனக்கு மிகவும்…
Read Moreசிபி சக்ரவர்த்தி – ஸ்ரீ வர்ஷினி சிபி திருமணத்திற்கு பின் பத்திரிக்கையாளர்களை சந்தித்தனர்!
எஸ்.கே. புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில் வெளிவந்த ‘டான்’ படம் மூலம் இயக்குநராக அறிமுகமான சிபி சக்ரவர்த்திக்கும் இன்ஃபோசிஸ் நிறுவனத்தில் சாஃப்ட்வேர் இன்ஜினியராக பணிபுரியும் ஸ்ரீ வர்ஷினிக்கும் இந்த மாதம் ஐந்தாம் தேதி ஈரோட்டில் திருமணம் இனிதே நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் திரையுலக பிரபலங்கள் பலர் கலந்து கொண்டு புதுமணத் தம்பதிகளுக்கு மனமார்ந்த வாழ்த்துகளை தெரிவித்தனர். திருமணத்திற்குப் பின் சிபி சக்கரவர்த்தியும் அவரது மனைவி ஸ்ரீ வர்ஷினி சிபியும் இன்று மதியம் பத்திரிக்கையாளர்களை சந்தித்தனர். ‘டான்’ படத்திற்கு பத்திரிக்கையாளர்கள் கொடுத்த ஆதரவிற்கு நன்றி தெரிவித்த சிபி, அடுத்த படத்திற்கும் பத்திரிக்கையாளர்கள் மற்றும் ரசிகர்கள் ஆதரவு தேவை என்றார். வெளியூரில் திருமணம் நடந்ததால் யாரையும் அழைக்க முடியவில்லை என்பதற்காகவே இந்த சந்திப்பு என்றார்.
Read Moreநடிகர் ஏகன் மற்றும் யோகிபாபு நடிக்கும் ‘கோழிப்பண்ணை செல்லத்துரை’ இசை வெளியீட்டு விழா
விஷன் சினிமா ஹவுஸ் பட நிறுவனம் சார்பில் டாக்டர் பி அருளானந்து மற்றும் மேத்யூ அருளானந்து தயாரிப்பில் தேசிய விருது பெற்ற படைப்பாளி சீனு ராமசாமி இயக்கத்தில் அறிமுக நாயகன் ஏகன் நடித்திருக்கும் ‘கோழிப்பண்ணை செல்லத்துரை’ திரைப்படத்தின் இசை வெளியீடு சென்னையில் சிறப்பாக நடைபெற்றது. சீனு ராமசாமி இயக்கத்தில் உருவாகி, இருபதாம் தேதியன்று உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகும் ‘கோழிப்பண்ணை செல்லத்துரை’ படத்தில் ஏகன், யோகி பாபு, பிரிகிடா, சத்ய தேவி, பவா செல்லத்துரை, லியோ சிவகுமார், ‘குட்டி புலி’ தினேஷ் , மானஸ்வி கொட்டாச்சி, ரியாஸ் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். அசோக் ராஜ் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு என். ஆர். ரகுநந்தன் இசையமைத்திருக்கிறார். தமிழகம் முழுவதும் சக்தி பிலிம் ஃபேக்டரி சார்பில் பிரபல விநியோகஸ்தர் சக்திவேலன் வெளியிடும் இத்திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில்…
Read More