நம் மூதாதையரின் கடின உழைப்பால் நமக்கு கிடைத்த பொக்கிஷம். நம் இந்திய நாடு, விவசாயப்பொருளாதாரத்தை அடிப்படையாகக்கொண்டது… சுதந்திரத்துக்குப்பின், நம்மை ஆட்சி செய்த அரசியல்வாதிகளின் தவறான கொள்கை முடிவுகளால், மீண்டும், அந்நிய கார்ப்பரேட்டுகள், பசுமைப்புரட்சி, வெண்மைப்புரட்சி என்ற பெயர்களால், மிகவும் தந்திரத்துடன், உரம், பூச்சிக்கொல்லி, வீரிய கலப்பினம் என்ற பெயர்களில் விஷத்தை நம் கைகளாலேயே போட வைத்து, நம் செல்வங்களை கொள்ளையடித்ததோடு, நம் மண்ணையும் மலடாக்கி விட்டார்கள்.. அதன் காரணமாக, இன்று நம் விவசாயப்பெருமக்கள், வாழ வழி தெரியாமல் தவிப்பதோடு, தற்கொலையும் பண்ணிக்கொள்கிறார்கள்… விவசாயத்தொழிலை ஆதாரமாக வைத்து இயங்கிய சிறு, குறு வணிகப்பெருமக்களும் வழி தெரியாமல் தவித்து நிற்கின்றனர். இது போக, விவசாயம் பொய்த்துப்போனால், விவசாயிகளின் நிலத்தை அடிமாட்டு விலைக்கு வாங்கி, நம் மண்ணுக்குள் புதைந்து கிடக்கும், கனிம வளங்களை, அரசியல்வாதிகளின் துணையோடு கொள்ளையடிக்க, கார்ப்பரேட்டுகள் முயன்று கொண்டிருக்கின்றனர்……
Read MoreCategory: நடிகர்கள்
மன்சூர் அலிகானின் ‘Tip Top Tamila’ யூ டியூப் சேனலில் இன்று (9.1.2021) மாலை 5 மணிக்கு வெளியிடப்படுகிறது.
மன்சூர் அலிகானின் ‘Tip Top Tamila’ யூ டியூப் சேனலில் இன்று (9.1.2021) மாலை 5 மணிக்கு வெளியிடப்படுகிறது. *மன்சூர் அலிகானின் Tip Top Tamila சமூக அவலத்தை தோலுரிக்கும் பாடல்! இன்று மாலை வெளியீடு!* அரசாங்கத்தின் மக்கள் விரோதப் போக்கை நக்கலும் நையாண்டியுமாக விமர்சித்து தெறிக்க விடுபவர் மன்சூர் அலிகான். படு துணிச்சலாக அவர் முன் வைக்கும் விமர்சனங்கள் யூ டியூபில் வீடியோவாக வெளிவந்து சமூகவலைதளங்களில் பரபரப்பைக் கிளப்புவது வழக்கம். அந்த வகையில் மன்சூர் அலிகானின் அடுத்த அதிரடி ‘டிப் டாப் தமிழா’ என்ற பாடல் வீடியோ. ‘ஆன்லைன்லயே கிளாஸ் எடுக்குறாங்க ஆன்லைன்லேயே நாட்டை ஆளுறாங்க ஆன்லைன்லேயே சாப்பாடு ஆர்டர் பண்றாங்க ஆன்லைன்ல ஏர் புடிச்சு மாடுகட்டி விவசாயம் பண்ண முடியாது’ என்று சமூக அவலத்தை போட்டுத் தாக்கும் வரிகளில் அமைந்த அந்த பாடலை…
Read Moreகடந்த 20 வருடமாக உயிருக்குப் போராடி வரும் நடிகர் பாபு-
20 வருடமாக உயிருக்குப் போராடி வரும் நடிகர் பாபு. இயக்குநர் பாரதிராஜாவின் “என் உயிர்த் தோழன்” படத்தில் ஹீரோவாக அறிமுகமாகி, கடந்த 20 வருடமாக உயிருக்குப் போராடி வரும் நடிகர் பாபு-வின் நிலைமையை பாருங்க.. கூடவே உதவுங்க ப்ளீஸ் 😢 இந்த பாபு தான் கமிட் ஆன முதல் படத்திலேயே முத்திரை பதித்த பாபு, அடிமட்ட அரசியல் தொண்டனாக வந்து அனைவரையும் தனது நடிப்பால் கவர்ந்தார். அந்த நடிப்பால் அவருக்குப் பட வாய்ப்புகள் குவிந்தன. கிட்டத்தட்ட 14 படங்களில் நடிப்பதற்கு ஒப்பந்தம் செய்து கொண்டார் பாபு. ஆனால் நான்கைந்து படங்களில் மட்டுமே நடித்த பாபுவுக்கு “மனசார வாழ்த்துங்களேன்” படத்தில்நடித்தபோதுதான் சோதனை ஏற்பட்டது. ஒரு சண்டைக் காட்சிக்காக மாடியிலிருந்து குதித்தபோது அவருக்குமுதுகில் அடிபட்டது. தீவிர சிகிச்சைக்குப் பின் உயிர் பிழைத்த போதிலும், பாபுவால் அதன் பிறகு எழுந்து…
Read Moreமுதன்மை கதாபாத்திரத்தில் நடிப்பதற்கு, புகழ்பெற்ற நகைச்சுவை நடிகர் “செந்தில்” அவர்கள் ஒப்பந்தம்
முதன்மை கதாபாத்திரத்தில் நடிப்பதற்கு, புகழ்பெற்ற நகைச்சுவை நடிகர் “செந்தில்” அவர்கள் ஒப்பந்தம். உரியடி மற்றும் விரைவில் வெளியாக இருக்கும் பன்னிக்குட்டி, கடைசி விவசாயி, சத்திய சோதனை, தர்புகா சிவா இயக்கும் முதல் நீ முடிவும் நீ போன்ற படங்களின் தயாரிப்பாளர் சூப்பர் டாக்கீஸ் சமீர் பரத்ராம் அடுத்ததாக சுரேஷ் சங்கையா இயக்கும் அவரது மூன்றாவது படத்தை தயாரிக்கிறார். சுரேஷ் சங்கையா “ஒரு கிடாயின் கருணை மனு” மற்றும் ப்ரேம் ஜி அமரன் நடிப்பில் வெளியாக இருக்கும் “சத்திய சோதனை” படத்தின் இயக்குனர். தற்போது அவர் இயக்கும் இந்த புதிய படம், ஒரு சமூக பிரச்சினை பற்றி பேச கூடிய படம். தூத்துக்குடி அருகில் இருக்கும் ஒரு கிராமத்தில் பிப்ரவரி மாதத்தில் தொடங்குகிறது. இந்த படத்தின் முதன்மை கதாபாத்திரத்தில் நடிப்பதற்கு, புகழ்பெற்ற நகைச்சுவை நடிகர் “செந்தில்” அவர்கள் ஒப்பந்தம்…
Read Moreவெள்ளித்திரைக்கு செல்லும் நடிகர் சித்தார்த் குமரன் !
வெள்ளித்திரைக்கு செல்லும் நடிகர் சித்தார்த் குமரன் . தற்போதைய காலகட்டத்தில் சின்னத்திரையில் புகழ் பெறும் நடிகர்களும் வெள்ளித்திரையிலும் கொடி நாட்டி வருகிறார்கள். மக்களும் தங்கள் சொந்தங்களை போல் அவர்களை கொண்டாடுகிறார்கள். சிவகார்த்திகேயன், ப்ரியா பவானி சங்கர் சமீப காலத்தில் அதற்கு பல உதாரணங்கள் உண்டு. அந்த வகையில் தற்போது சின்னத்திரையில் கோலோச்சும் நடிகர் சித்தார்த் குமரன் கூடிய விரைவில் வெள்ளித்திரைக்கு பயணமாகிறார். சின்னத்திரை மூலம் தமிழக மக்கள் மனங்களில் இடம்பிடித்திருக்கும் பிரபல நடிகர் தான் சித்தார்த் குமரன். முதலில் சின்னத்திரையில் ஜோடி நம்பர் 1, டான்ஸ் ஜோடி டான்ஸ் என்று பல நடன நிகழ்ச்சிகளில் பங்கேற்று ரசிகர்களை மகிழவைத்தவர். பிறகு என் பெயர் மீனாட்சி, ஆபீஸ், சரவணன் மீனாட்சி என்று தொடர்ந்து பல மெகா சீரியல்களில் முக்கிய கதாப்பாத்திரங்களில் நடித்து புகழ் பெற்றார். பின் “ரெக்க…
Read Moreபடப்பிடிப்பில் ஆர்யாவுக்கு விழுந்த பலத்த அடி
படப்பிடிப்பில் ஆர்யாவுக்கு விழுந்த பலத்த அடி. எனிமி படப்பிடிப்பின் சண்டைக்காட்சியில் ஆர்யாவிற்கு ஏற்பட்ட காயம் ! விஷால் மற்றும் ஆர்யா நடிப்பில் உருவாகும் எனிமி படத்தின் .படப்பிடிப்பு தற்போது EVP பிலிம் சிட்டியில் பிரமாண்ட செட் அமைப்புகளுடன் நடைபெற்றுவருகிறது . விஷாலுக்கும் ஆர்யாவுக்கும் இடையே நடக்கும் சண்டைக்காட்சிகள் டூப் இல்லாமலால் எடுக்கப்பட்டு வந்த நிலையில் படப்பிடிப்பின்போது ஆர்யாவிற்கு கையில் பலத்த அடிபட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். சிகிச்சைக்கு பெற்று மீண்டும் இன்று படப்பிடிப்பில் ஆர்யா கலந்துகொண்டார் . அரிமா நம்பி’, இருமுகன்’, நோட்டா உள்ளிட்ட படங்களை இயக்கிய ஆனந்த் சங்கர் இப்படத்தை இயக்குகிறார் .மினி ஸ்டுடியோஸ் தயாரிப்பு நிறுவனம் சார்பில் S வினோத்குமார் தயாரிக்கிறார் . கதாநாயகியாக மிர்னாலினி ரவி நடிக்கிறார் .தமன் இசையமைக்க RD ராஜசேகர் ஒளிப்பதிவு செய்கிறார் .சண்டைக்காட்சிகள் – ரவிவர்மா .
Read MoreLetter from Director Perrasu to Super Star Rajinikanth.
Letter from Director Perrasu ” Mim Minni Poochighal ” to Super Star Rajinikanth. சூப்பர் ஸ்டாருக்கு மின்மினிப் பூச்சியின் கடிதம்! நீங்கள் அரசியலுக்கு வரவேண்டும் என்று ஆசைப்பட்டோம்! இன்று அந்த ஆசையை ஆலோசிக்கிறோம்! நீங்கள் ஆன்மீக அரசியல் என்கிறீர்கள்! தமிழ்நாட்டில் அரசியல் அஸ்திவாரமே இறை இழிவுதான்! எளிமையான நேர்மையான அரசியல் காமராஜரோடு சமாதியாகிவிட்டது! நீங்கள் தமிழக விசுவாசத்தில் சேவை செய்ய ஆசைப்படுகிறீர்கள் இங்கு தமிழ்மொழி வேஷந்தான் போற்றப்படுகிறது! நீங்கள் யார்மனதும் புண்படாமல் பேசுபவர்! ஆனால் இங்கே விமர்சனம் என்ற பெயரில் உங்கள் மனசு குத்திக் கிழிக்கிப்படுகிறது! நல்லவர்கள் அரசியலுக்கு வரவேண்டும் என்று நினைத்தோம்! அரசியலுக்கு வந்து நல்லவர் அசிங்கப்படக்கூடாது என்று இன்று நினைக்கிறோம்! ஒருசில கட்சிக்கு சில கட்சிகளே எதிர்ப்பாய் இருக்கும், இங்கு உங்களுக்கு ஒட்டுமொத்த கட்சிகளும் எதிரியாக கிளம்பிவிட்டது!…
Read Moreதுல்கருக்கு கோடியக்கரை படக்குழு வைத்த செக்
தமிழ்த்திரையுலகில் தனக்கென ஒரு இடத்தைப் பிடிக்கப் போராடி வருகிறார் நடிகர் துல்கர் சல்மான். அவர் சமீபத்தில் நடித்த கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் படம் சக்கைப்போடு போட்டது. அதனால் தமிழில் தனக்கென ஒரு இடம் இருக்கும் என சந்தோசப்பட்டார். ஆனால் அவரே அதை க் கெடுத்துக்கொண்டார். மலையாளத்தில் வரனே அவஷ்யமுண்டு என்ற படத்தில் அவர் கதாநாயகனாக நடித்திருந்தார். அந்தப்படத்தில் ஒரு நாய்க்குப் பிரபாகரன் எனப்பெயர் வைத்திருந்தனர். இதனால் தமிழர்கள் கொந்தளித்தனர். அந்தப்படம் மீது வைக்கப்பட்ட விமர்சனத்தில் துல்கரும் சிக்கினார். நிச்சயமாக துல்கர் நினைத்திருந்தால் அப்படியொரு பெயரை நாய்க்கு வைக்க வேண்டாம் எனத்தடுத்திருக்கலாம். ஏனோ அவர் செய்யவில்லை. அந்தக் காரணமா என்னவென்று தெரியவில்லை. இப்போது கோடியக்கரை என்ற பெயரில் தயாராகியுள்ள படத்தில் ஒரு நாய்க்குப் பெயர் துல்கர் என வைத்துள்ளனர். இந்தக் கோடியக்கரைப் படத்தை பாயின்ட் காலிமர் பிலிம்ஸின் ருத்ரம்…
Read More