ஆந்திரா :ஜெகன்மோகன் அமைச்சரவையில் 5 துணை முதல்வர்கள் உள்பட 25 அமைச்சர்கள் பதவியேற்பு

ஆந்திராவில் முதல்வர் ஜெகன்மோகன் அமைச்சரவையில் இன்று 5 துணை முதல்வர்கள் உள்பட 25 அமைச்சர்கள் பதவியேற்றுக்கொண்டனர். ஆந்திராவில் நடந்துமுடிந்த தேர்தலில் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சி 151 சட்டப்பேரவை தொகுதிகளில் வெற்றிபெற்றது. இதில் ஆந்திர முதல்வராக கடந்த 30ம் தேதி ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சித்தலைவர் ஜெகன்மோகன் பதவியேற்றார். இதனை தொடர்ந்து அவரது அமைச்சரவையில் பங்கேற்கும் 25 அமைச்சர்களின் பெயர் பட்டியல் நேற்று வெளியிடப்பட்டது. இதில், தர்மன்ன கிருஷ்ணதாஸ் (நரசன்னபேட்டா தொகுதி), மேக்கப்பாட்டி கவுதம் ரெட்டி (ஆத்மக்கூறு) நெல்லூர், அனில் குமார் யாதவ் (நெல்லூர்), பெத்திரெட்டி ராமச்சந்திர ரெட்டி (புங்கனூர்-சித்தூர் மாவட்டம்), நாராயணசாமி (கங்காதர நெல்லூர்-சித்தூர் மாவட்டம்), அஞ்சாது பாஷா கடப்பா, சங்கரநாராயண (பெனுகொண்டா) அனந்தபுரம், புக்கண்ண ராஜேந்திரநாத் (டோன்) கர்னூல், கும்மனூரு ஜெயராம் (ஆளூர்) என மொத்தம் 25 பேர் இடம்பெற்றுள்ளனர். இந்நிலையில், அமைச்சராக அறிவிக்கப்பட்டவர்கள் இன்று காலை…

Read More

ஜூன்-25 முதல் மலேசியாவில் சிம்புவின் ‘மாநாடு’ படப்பிடிப்பு ஆரம்பம்!

அமைதிப்படை-2, கங்காரு ஆகிய படங்களை தயாரித்த தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சியின் வி ஹவுஸ் புரொடக்சன்ஸ், தற்போது மிக மிக அவசரம் என்கிற படத்தை தயாரித்துள்ளது. விரைவில் இந்தப்படம் வெளியாகவுள்ள நிலையில், இதையடுத்து வெங்கட் பிரபு டைரக்சனில் சிம்பு நடிக்க, ‘மாநாடு’ என்கிற படத்தை மிக பிரம்மாண்டமான பொருட்செலவில் இந்த நிறுவனம் தயாரிக்கிறது. கதாநாயகியாக பிரபல இயக்குனர் பிரியதர்ஷன் மகள் கல்யாணி பிரியதர்ஷன் நடிக்க இருக்கிறார்.. இவர்கள் தவிர இன்னும் சில முன்னணி நட்சத்திரங்கள் இந்தப்படத்தில் இடம்பெறுகின்றனர்.. யுவன் சங்கர் ராஜா இந்தப்படத்திற்கு இசையமைக்கிறார். முழுக்க முழுக்க அரசியல் கதைக்களத்தில் அதிரடி அரசியல் படமாக இந்தப்படம் உருவாகிறது. சிம்பு இதுவரை நடித்த படங்களிலேயே படங்களிலேயே அதிக பட்ஜெட்டில் உருவாக இருக்கும் படம் இது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த படம் அறிவிக்கப்பட்டு பல நாட்கள் ஆனதால் படம் அவ்வளவுதான் டைட்டில்…

Read More

சர்வதேச விண்வெளி ஆய்வு மையத்திற்கும் டூர் போக தயாரா?

சர்வதேச விண்வெளி ஆய்வு மையத்திற்கு தனிநபர்களையும் சுற்றுலா அழைத்து செல்லும் வர்த்தகத்தை துவக்க உள்ளதாக நாசா அறிவித்துள்ளது. இதுவரை விண்வெளி ஆராய்ச்சியாளர்களை மட்டும் சர்வதேச விண்வெளி ஆய்வு மையத்திற்கு அழைத்து சென்ற நாசா, இனி தனிநபர்களையும் சுற்றுலா அழைத்து செல்ல திட்டமிட்டுள்ளது. முதல் சுற்றுலா பயணத்தை அடுத்த ஆண்டு துவக்கத்தில் ஆரம்பிக்கவும் நாசா திட்டமிட்டுள்ளது. இதற்கான அறிவிப்பை நாசா நேற்று (ஜூன் 07) அன்று வெளியிட்டது.சர்வதேச விண்வெளி ஆய்வு மையத்திற்கு சுற்றுலா சென்று, திரும்புவதற்கான கட்டணம் 58 மில்லியன் அமெரிக்க டாலர் ( இந்திய மதிப்பில் சுமார் ரூ.6 கோடி). சர்வதேச விண்வெளி ஆய்வு மையத்தில் ஒரு இரவு தங்குவதற்கு 35,000 டாலர்கள் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. 30 நாட்கள் கொண்ட இந்த பயணத்தில் அமெரிக்கர்கள் மட்டுமின்றி மற்ற நாட்டினரும் அனுமதிக்கப்பட உள்ளனர். விண்வெளி ஆய்வு மையத்திற்கு விஞ்ஞானிகள்…

Read More

ரெஜினா கசான்றா நடிப்பில் வெளியாகவுள்ள தெலுங்கு த்ரில்லர் “ எவரு “ !

பிவிபி சினிமா நிறுவனம் தயாரிப்பில் பேர்ல் வி பொட்லூரி , பரம் வி பொட்லூரி , கவின்அன்னே தயாரிக்கும் திரைப்படம் “ எவரு “. சீட் எட்ஜ் த்ரில்லராக உருவாகியுள்ள இப்படத்தில்  நடிகை ரெஜினா கசான்ரா , “ சனம் “ புகழ் ஆத்வி ஷேஷ் ஆகியோர் முன்னணி கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இவர்களோடு பல தமிழ் மற்றும் தெலுங்கு படங்களில் நடித்த புகழ் பெற்ற நடிகரான முரளி சர்மா நடித்துள்ளார். அறிமுக இயக்குனரான வெங்கட் ராம்ஜி இப்படத்தை இயக்கியுள்ளார். கொடைக்கானல் , ஹைதரபாத்  உள்ளிட்ட பல இடங்களில் இப்படத்தின் படப்பிடிப்பு நடைபெற்றுள்ளது. இப்படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு நிறைவடைந்து படத்தின் கேரக்டர் போஸ்டர்கள் மற்றும் ட்ரைலர் விரைவில் வெளியாகவுள்ளது. எவரு வருகிற ஆகஸ்ட் 23ஆம் தேதி உலகமுழுவதும் பிரமாண்டமாக  வெளியாகியுள்ளது.

Read More

அதிமுகவில் காலியாக உள்ள 3 மாநிலங்களவை எம்பி பதவிக்கு கடும் போட்டி !

அதிமுகவில் காலியாக உள்ள 3 மாநிலங்களவை எம்பி பதவிக்கு கடும் போட்டி ஏற்பட்டுள்ளது. எடப்பாடி, ஓபிஎஸ் அணிகள் வரிந்துகட்டிக் கொண்டு போட்டியில் குதித்துள்ளனர். இந்த நிலையில் பாஜ, பாமக கட்சிகளும் தங்களுக்கு தலா ஒரு மாநிலங்களவை எம்பி பதவி கேட்பதாலும், ஜாதிக்கு ஒரு சீட் வேண்டும் என்று முன்னோடிகள் கேட்பதாலும், அதிமுக தலைமைக்கு கடும் நெருக்கடி ஏற்பட்டுள்ளது. தமிழகத்தில் நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் 38 இடங்களில் போட்டியிட்ட அதிமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் படுதோல்வி அடைந்தது. ஒரே ஒரு இடத்தில் மட்டும் வெற்றி பெற்றது. மற்ற 37 இடங்களில் திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சி வேட்பாளர்கள் அபார வெற்றி பெற்றனர். இதனால், அதிமுக கட்சியில் எடப்பாடி – ஓபிஎஸ் இடையே கடுமையான கோஷ்டி பூசல் ஏற்பட்டுள்ளது. இந்த பரபரப்பான சூழ்நிலையில், தமிழகத்திற்கான 6…

Read More

சர்ச்சையைக் கிளப்பிய ட்விட்-டை நீக்கிய முதல்வர் எடப்பாடியார்!

தமிழை மற்ற மாநிலங்களின் 3வது மொழியாக்க வேண்டும் என கூறி பிரதமர் மோடிக்கு போட்ட டிவிட்டை முதல்வர் நீக்கியுள்ளார். தமிழகத்தில் தமிழ், ஆங்கிலம் என இரு மொழி கொள்ளை நடைமுறையில் உள்ளது. சமீபத்தில் மத்திய அரசு அறிவித்த கல்வி கொள்கையில் ஹிந்தியை அனைத்து மாநில மாணவர்களும் கட்டாயம் படிக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டது. இதற்கு கடும் எதிர்ப்புகள் வந்த நிலையில் ஹிந்தியை கட்டாயமாக பயிற்றுவிக்க வேண்டிய அவசியம் இல்லை. விருப்பத்தின் அடிப்படையில் 3 வது மொழியை மாணவர்களே தேர்வு செய்து கொள்ளலாம் என கூறப்பட்டது. இந்நிலையில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, இன்று காலை பிரமர் மோடிக்கு டிவிட்டர் மூலம் ஒரு கோரிக்கையை முன்வைத்தார். அதில், பிற மாநிலங்களில் தமிழை 3 வது மொழியாக பயிற்றுவிக்க வேண்டும். பிற மாநிலங்களில் விருப்ப மொழியாக தமிழை அறிவித்தால் தொன்மையான…

Read More

உலக சுற்றுச்சூழல் தினம்!

உலகமெங்கும் வருடா வருடம் ஜூன் 5ம் தேதி உலக சுற்றுச்சூழல் தினம் கடைபிடிக்கப்படுகிறது. அதாவது நாம் வசிக்கும் பூமியின் தேவையை, பாதுகாப்பை உணர்த்தும் விதத்தில் ஒரு குறிப்பிட்ட வாசகத்துடன் ஒவ்வொரு வருடமும் சுற்றுச்சூழல் தினம் கடைபிடிக்கப்படுகிறது. அதன்படி இந்த வருடத்துக்கான சுற்றுச்சூழல் தின வாசகம் ”காற்று மாசுக்கு எதிராக கைகோர்க்க வேண்டும்” என்பதே. உணவில்லாமல், நீர் இல்லாமல் கூட சில நாட்களுக்கு உயிர் வாழ்ந்துவிட முடியும் .ஆனால் மூச்சு இல்லாமல் உயிர் வாழ முடியுமா? காற்று என்பது தான் அனைத்து உயிரினங்களின் அடிப்படை. உயிரினங்களையும் இந்த உலகத்தையும் இயக்கும் காற்று, நாளுக்கு நாள் மாசடைந்து வருவது வருத்தத்துக்கு உரியது. காற்று மாசு என்பது உயிரினங்கள் மீதான மிகப்பெரிய தாக்குதல். அந்த தாக்குதலுக்கு காரணமும் நாம் தான் என்பது மறுப்பதற்கில்லை. காற்று மாசு சத்தமில்லாமல் ஒவ்வொரு வருடமும் 7…

Read More

புதுமுகங்கள் நடிக்கும் “காதலும் மோதலும் ” !

புதுமுகங்கள் நடிக்கும் இப்படத்தினை அறிமுக இயக்குனர் சதீஷ் இயக்குகிறார்.அறிமுக கதாநாயக னாக அமுதன் , சுமாபூஜாரி ,அங்கணா,தீர்தா கதாநாயகிகளாக நடிக்கின்றனர்.  இப்படத்தினை யூனிக் சினி கிரேஷன் சார்பில்  ரவ்னக் தயாரிக்கிறார். இப்படத்திற்கு மோகன்குமார் ஒளிப்பதிவு செய்ய ஜஸ்டின் பிரொன்டோஸ் படத்தொகுப்பு மேற்கொள்ள கிறிஸ்டி இசையமக்கிறார். இப்படத்திற்கு சண்டை பயற்சியாளராக டேன்ஜர் மணி மற்றும் நடன இயக்குனராக ரமேஷ் பணியாற்றுகிறார். அண்மையில் பூஜையுடன் படப்பிடிப்பு துவங்கியது. இவ்விழாவில் சிறப்பு விருந்தினர்களாக இயக்குனர் பேரரசு மற்றும் தென்னிந்திய திரைப்பட மக்கள் தொடர்பாளர் சங்கத்தின் தலைவர் திரு.விஜயமுரளி ஆகியோர் கலந்துகொண்டு படகுழுவினரை வாழ்த்தினர்.

Read More

இயக்குநர் பா.இரஞ்சித்தின் கிராமங்களை நோக்கிய பயணம்!!

கலைத்துறையில் சமூக மாற்றத்தினை குறிக்கோளாக வைத்து இயங்குபவர்களில் இயக்குநர் பா.இரஞ்சித் மிக முக்கியமானவர். திரைப்படங்களில் அரசியல், மேடைகளில் உரையாடல் என தேங்கிவிடாமல் களத்திற்குச் சென்று ஒடுக்கப்பட்டுக் கொண்டிருக்கும் மக்களுக்கு தோள் கொடுத்து தோழனாக நிற்கிறவராக அவர் இருக்கிறார். அந்த வகையில் ஒடுக்கப்பட்ட மக்களுக்கான அரசியல் விழிப்புணர்வின் அவசியத் தேவையை அடிப்படையாகக் கொண்டு அவருடைய “நீலம் பண்பாட்டு மையம்” இயக்கத்தின் சார்பில் வேலூர் மற்றும் கிருஷ்ணகிரி மாவட்டங்களில் மூன்று நாட்கள் சுற்றுப் பயணம் மேற்கொண்டு சட்ட ஆலோசனை மையம், இரவு பாடசாலை, நூலகம் ஆகியவற்றை திறந்து வைத்துள்ளார் இயக்குநர் பா.இரஞ்சித். வேலூர் மாவட்டத்தில் ஆம்பூர் மற்றும் வாணியம்பாடி பகுதிகளிலும். கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பென்னக்கல், கௌதாமல், மத்திகிரி, பூதக்கோட்டை, மல்லசந்திரம் ஆகிய கிராமங்களில் “டாக்டர் அம்பேத்கர் அரசியல் பள்ளி” என்ற இரவு பாடசாலையினை தொடங்கி வைத்திருக்கிறார். “இந்த இரவு பாட…

Read More

ஜீவனின் அசரீரி!

அறிவியல் புனைவு திரைப்படங்கள் எப்போதுமே அனைத்து தரப்பு ரசிகர்களையும் ஈர்த்து விடும். அதற்கு காரணம் வெறுமனே அதன் தொழில்நுட்ப அம்சங்கள் மட்டுமல்ல, அதில் பிணைந்திருக்கும் உணர்ச்சி கூறுகளும் தான். அறிமுக இயக்குனர் ஜி.கே இயக்க, பிக் பிரிண்ட் பிக்சர்ஸ் ஐபி கார்த்திகேயன் தயாரிக்கும் அசரீரி படத்தில் நடிகர் ஜீவன் முன்னணி கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.    இது குறித்து தயாரிப்பாளர் ஐ.பி. கார்த்திகேயன் கூறும்போது, “டிஜிட்டல் தளங்களின் வளர்ச்சியினால், புராண குறிப்புகளை கூட தொழில்நுட்பம் சார்ந்து வழங்குவதில் தற்போதைய தலைமுறை கவனம் செலுத்துகிறது. தனிப்பட்ட முறையில், அத்தகைய விஷயங்களில் நான் எளிதில் கவனம் செலுத்தி விடுவேன், இயக்குனர் ஜி.கே. ஸ்கிரிப்ட்டை எனக்கு விவரிக்கும்போது எனக்கு மிகவும் ஆர்வம் தொற்றிக் கொண்டது. அறிவியல் புனைவு கதைகளை கேட்கும்போது ஒவ்வொருவர் மனதில எழும் முதல் கேள்வி, இதை எந்த அளவுக்கு இயக்குனர்…

Read More