குட்டி ரேவதி இயக்கிய ‘சிறகு’ ஆடியோ லாஞ்ச் ஸ்பாட் ரிப்போர்ட்!

பர்ஸ்ட் காபி புரொடக்சன் சார்பாக மாலா மணியன் தயாரிப்பில் கவிஞர் குட்டி ரேவதி எழுதி இயக்கி இருக்கும் படம் சிறகு. ஹரி கிருஷ்ணன் கதையின் நாயகனாகவும், அக்ஷிதா நாயகியாகவும் நடித்துள்ள இப்படத்தின் பாடல்கள் வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. விழாவில் படத்தின் எடிட்டர் அருண்குமார் பேசியதாவது, “இந்த வாய்ப்பைத் தந்த தயாரிப்பாளர் இயக்குநர் அவர்களுக்கு நன்றி. பாட்டு ட்ரைலர் ரொம்ப நல்லா வந்திருக்கு. படமும் நல்லா வந்திருக்கு. எல்லோரும் சப்போர்ட் பண்ணுங்க” என்றார் நடிகர் நிவாஸ் ஆதித்தன் பேசியதாவது “என்னுடைய பிலிம் கரியரில் இது எனக்கு ரொம்ப முக்கியமான படம். இதற்கு மேல் இப்படியொரு படம் அமையுமான்னு தெரியல. இந்தப்படம் வெளிவந்த பின் எனக்கு ஒரு பெரிய வாழ்க்கை காத்திருக்கிறது. வாய்ப்பளித்த தயாரிப்பாளர் மாலா மணியன் அவர்களுக்கும் இயக்குநர் குட்டி ரேவதி அவர்களுக்கும் நன்றி” என்றார். நடிகை…

Read More

ஸ்டால் ஓட்டல்களில் உணவு ஆர்டர் செய்து சாப்பிட்ட பிரதமர் மனைவி குற்றவாளி: இஸ்ரேல் நீதிமன்றம் தீர்ப்பு!

இஸ்ரேல் பிரதமராக பெஞ்சமின் நெதன்யாகு கடந்த 2009 முதல் பதவி  வகித்து வருகிறார். இவர் மீது நிதி மோசடி, ஊழல் உள்ளிட்ட பல்வேறு  குற்றச்சாட்டுகள் உள்ளன. இதனிடையே, பிரதமருக்கான  அதிகாரப்பூர்வ இல்லத்தில் சமையலுக்கு முழு நேர தலைமை சமையல்காரர் நியமிக்கப்பட்டுள்ள போதிலும், மக்கள் வரிப் பணத்தை பயன்படுத்தி, பல்வேறு உணவு வகைகளை பிரபல சொகுசு ஓட்டல்களில் இருந்து ₹70 லட்சத்துக்கு வாங்கி சாப்பிட்டதாக அவரது மனைவி சாரா நெதன்யாகு  மீது வழக்கு தொடரப்பட்டு விசாரணை நடந்தது. இந்த வழக்கில் குற்றத்தை ஒப்புக் கொண்டு குறைந்தப்பட்ச தண்டனை அளிக்கும்படி சாரா  கேட்டுக்  கொண்டார். இதையடுத்து, அவரை நேற்று குற்றவாளியாக அறிவித்த ஜெருசலேம் நீதிமன்ற நீதிபதி, அவருக்கு ₹1.95 லட்சம் அபராதம்  விதித்தார். மேலும், முறைகேடாக செலவு செய்த மக்களின் வரிப் பணமான ₹8.80 லட்சத்தை, 9 தவணைகளாக அரசு…

Read More

உலகக் கோப்பை கிரிக்கெட் : பாகிஸ்தான் அணியை 89 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்தியா வெற்றி!

உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரின் நேற்றைய ஆட்டத்தில் பாகிஸ்தான் அணியை 89 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்தியா வெற்றிபெற்றுள்ளது. இந்தியா – பாகிஸ்தான் போட்டிகள் மீது எப்போதுமே அதிக எதிர்பார்ப்பு இருக்கும். அதுவும் உலகக் கோப்பை போட்டிகளில் இந்திய அணியை பாகிஸ்தான் இதுவரை வென்றதே இல்லை என்பதால் இந்த ஆண்டு உலகக் கோப்பை தொடரிலும் இந்திய அணி மீது அதிக எதிர்பார்ப்பு இருந்தது. லீக் சுற்றின் 22ஆவது ஆட்டத்தில் நேற்று (ஜூன் 16) பாகிஸ்தானை எதிர்த்து இந்தியா விளையாடியது. டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி பந்துவீச்சைத் தேர்வுசெய்தது. ஷிகர் தவனுக்குப் பதிலாகத் தொடக்க வீரராகக் களமிறக்கப்பட்ட லோகேஷ் ராகுல், ரோஹித் ஷர்மாவுக்கு பக்கபலமாக நிதான ஆட்டத்தை வெளிப்படுத்த ரோஹித் ஷர்மா அதிரடியாக விளையாடிக் கொண்டிருந்தார். 34 பந்துகளில் அரைசதம் கடந்த ரோஹித் ஷர்மா ஒருநாள் கிரிக்கெட் வரலாற்றில்…

Read More