நாடெங்கும் தண்ணீர் தட்டுப்பாடு விஸ்வரூபம் எடுத்து வருவதாலும், காய்கறிகளின் விலை யேற்றத்தாலும், ஓட்டல் உரிமையாளர்கள், உணவு பண்டங்களின் விலையை உயர்த்த முடிவு செய்துள்ளனர். தமிழகத்தில், பல மாவட்டங்களில், தண்ணீர் தட்டுப்பாடு நிலவுகிறது. இதனால், மக்கள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர். ஓட்டல்களில் உணவு சமைக்கவும், குடிநீர் வழங்கவும், பாத்திரங்களை கழுவவும், அதிக தண்ணீர் பயன்படுத்தப்படுகிறது. தண்ணீர் தட்டுப்பாட்டால் ஓட்டல்களும் பாதிக்கப்பட்டுள்ளன.தண்ணீருக்கான செலவு வழக்கத்தை விட 30 சதவீதம் மேல் அதிகரித்துள்ளது. அதனால், பல ஓட்டல்களில் தண்ணீர் அதிகம் தேவைப்படக்கூடிய சாப்பாடு வகைகள் நிறுத்தப்பட்டன. மேலும், ‘கேன் வாட்டர்’ விலையும், காய்கறிகளின் விலையும், பலமடங்கு உயர்ந்து விட்டன. இதனால், கூடுதல் செலவை சமாளிக்க முடியாததால், பல ஓட்டல்கள் மூடப்பட்டுள்ளன. இருப்பினும், வியாபார போட்டியால் வாடிக்கையாளர்களை இழக்க விரும்பாத, பல ஓட்டல் உரிமையாளர்கள், தண்ணீரால் ஏற்படும் கூடுதல் செலவை சமாளிக்க…
Read MoreDay: June 19, 2019
மோசடி – டிரைலர்!
கூர்கா படம் ரிலீஸுக்கு முன்பே லாபகரமான படமாக அமைந்து விட்டது!
4 மங்கீஸ் ஸ்டுடியோ தயாரிப்பில் சாம் ஆண்டன் இயக்கத்தில் யோகிபாபு, கனடா மாடல் எலிஸா நடித்திருக்கும் நகைச்சுவை திரைப்படம் கூர்கா. ராஜ் ஆர்யன் இசையமைத்திருக்கும் இந்த படம் வரும் ஜூன் 28ஆம் தேதி வெளியாகிறது. இந்த படத்தை லிப்ரா ப்ரொடக்ஷன்ஸ் வெளியிடுகிறது. இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னை சத்யம் திரையரங்கில் நடைபெற்றது. பின்னணி பாடகர் எஸ்பி பாலசுப்ரமணியம் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு படத்தின் இசையை வெளியிட்டு, வாழ்த்தி பேசினார். கூர்கா இதுவரை பார்த்த வழக்கமான நகைச்சுவை படங்கள் போல இருக்காது. வித்தியாசமான படமாக இருக்கும். யோகிபாபு மிகச்சிறந்த நகைச்சுவையை கொடுக்கும் ஆற்றலை உடைய ஒரு நடிகர், சாம் ஆண்டன் நகைச்சுவைக்கென ஒரு தனி மீட்டர் வைத்திருக்கிறார் என்றார் நடிகர் சார்லி. காமெடியை எப்படி கொடுப்பது என்பதை மிகவும் அறிந்த ஒரு இயக்குனர் சாம்…
Read Moreமக்களைவையை தமிழ் மொழியால தெறிக்க விட்ட புது எம்பி-க்கள்!
மக்களவையில் இரண்டாவது நாளாக செவ்வாய்க்கிழமை நடைபெற்ற பதவியேற்பு நிகழ்வின் போது தமிழகத்தைச் சேர்ந்த திமுக, காங்கிரஸ், அதிமுக உள்ளிட்ட 38 உறுப்பினர்களும் தாய்மொழியான தமிழிலேயே பதவிப் பிரமாணம் ஏற்றுக் கொண்டதால் மக்களவையில் பெரும் சலசலப்பு ஏற்பட்டது.. 17-ஆவது மக்களவையின் புதிய உறுப்பினர்கள் பங்கேற்ற முதல் கூட்டத் தொடர் திங்கள்கிழமை தொடங்கியது. இதில், பிரதமர் நரேந்திர மோடி, காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, மத்திய அமைச்சர்கள், பல்வேறு மாநிலங்களின் எம்பிக்கள் உள்ளிட்டோர் ஹிந்தி, ஆங்கிலம், தெலுங்கு உள்பட பல்வேறு மொழிகளில் பதவியேற்றுக் கொண்டனர். இதைத் தொடர்ந்து, இரண்டாவது நாளாக செவ்வாய்க்கிழமையும் பதவியேற்பு நிகழ்ச்சி நடைபெற்றது. ஆங்கில எழுத்துகள் வரிசைப்படி மாநிலம் வாரியாக உறுப்பினர்கள் பதவியேற்றதால், செவ்வாய்க்கிழமை புதுச்சேரி, தமிழகத்தைச் சேர்ந்த உறுப்பினர்கள் பதவியேற்றனர். அதன்படி, தமிழகத்தைச் சேர்ந்த திமுக மற்றும் அதன் கூட்டணியைச் சேர்ந்த காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகளின் உறுப்பினர்கள்…
Read Moreஒரு தூய்மையான பொழுதுபோக்கு படம் – தும்பா!
ரீகல் ரீல்ஸ் (OPC) பிரைவேட் லிமிடெட் சுரேகா நியாபதி, ரோல் டைம் ஸ்டுடியோஸ் LLP உடன் இணைந்து தயாரித்திருக்கும் திரைப்படம் ‘தும்பா’. தர்ஷன், கீர்த்தி பாண்டியன் முன்னணி கதாபாத்திரங்களில் நடிக்க, தும்பா என்ற பெண் புலி முக்கிய கதாப் பாத்திரத்தில் நடித்திருக்கும் இந்த படத்தை ஹரீஷ் ராம் LH இயக்கியிருக்கிறார். அனிருத், விவேக்-மெர்வின், சந்தோஷ் தயாநிதி இசையமைத்திருக்கும் இந்த படம் வரும் ஜூன் 21ஆம் தேதி உலகமெங்கும் வெளியாகிறது. KJR ஸ்டுடியோஸ் சார்பில் கோட்டபாடி ஜே ராஜேஷ் மிக பிரமாண்டமாக வெளியிடும், இந்த படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு சென்னையில் நடைபெற்றது. படக்குழுவினர் கலந்து கொண்டு படத்தை பற்றிய சுவாரஸ்யமான தகவல்களை பகிர்ந்து கொண்டனர். நாங்கள் வசனம் எழுதும்போது, எந்த கதாபாத்திரத்தில் யாரெல்லாம் நடிக்கப் போகிறார்கள் என்பதெல்லாம் எங்களுக்கு தெரியாது. நான் எழுதிய வசனங்களை தர்ஷன், கீர்த்தி, தீனா…
Read More