இயக்குநர் அமீர் அறிக்கை. தமிழகத்தில் நடைபெறப் போகும் சட்டமன்றத் தேர்தலை அடிப்படையாக வைத்து மதக்கலவரத்தை தூண்டி அதன் மூலம் ஓட்டுக்கள் பெறும் நோக்கத்தோடு, உலகெங்கும் வாழும் பல நூறு கோடி இஸ்லாமிய மக்கள் தங்கள் உயிருக்கும் மேலாக மதிக்கும் இறுதித் தூதர் முகம்மது நபி அவர்களை சொல்லத்தகாத வார்த்தைகளால் பொது வெளியில் கொச்சைப்படுத்திய கல்யாணராமன் என்னும் அயோக்கியனை கைது செய்த தமிழக அரசிற்கு என்னுடைய பாராட்டுக்கள். சமூக நல்லிணக்கத்திற்கு எதிரான நச்சுக் கருத்துக்களை பொது வெளியில் உலவ விட்டு அதன் மூலம் ஏற்படும் கலவரத்தின் மூலம் தமிழகத்தில் ஓட்டு வேட்டை நடத்தலாம் என்கிற தீய எண்ணத்தோடு கல்யாணராமனையும் வேலூர் இப்ராஹிமையும் அழைத்துக்கொண்டு தமிழகத்தின் பல ஊர்களுக்கு பயணிக்கும் பாஜக கட்சியினரையும், தங்கள் கண் முன்னே தொடர்ந்து நடைபெறும் அநீதிகளை கண்டும் காணாதது போல் அமைதி காக்கின்ற…
Read MoreMonth: February 2021
*“முறையான அனுமதி பெறாமல் என் கதையை வெப்சீரிஸாக இயக்கிவிட்டார் வெங்கட்பிரபு” ;
*“முறையான அனுமதி பெறாமல் என் கதையை வெப்சீரிஸாக இயக்கிவிட்டார் வெங்கட்பிரபு” *“வெங்கட்பிரபு இயக்கியுள்ள வெப்சீரிஸ் கதை நான் உருவாக்கி எழுத்தாளர் சங்கத்தில் பதிவு செய்யப்பட்ட கதை ; இயக்குனர் சசிதரன் பரபரப்பு குற்றச்சாட்டு* *“முறையான அனுமதி பெறாமல் என் கதையை வெப்சீரிஸாக இயக்கிவிட்டார் வெங்கட்பிரபு” ; இயக்குனர் சசிதரன் பரபரப்பு குற்றச்சாட்டு* இயக்குநர் வெங்கட்பிரபு இயக்கத்தில் காஜல் அகர்வால் நடிப்பில் உருவாகியுள்ள ஹாரர் வெப் சீரிஸ் தான் ‘லைவ் டெலிகாஸ்ட்’. விரைவில் ஹாட்ஸ்டார் ஓடிடி தளத்தில் வெளியாக இருக்கும் இந்த வெப் சீரிஸின் டீசர் சமீபத்தில் வெளியானது. இதையடுத்து இந்த வெப் சீரிஸின் கதை தன்னுடையது என்றும் தனக்கு தெரியாமலேயே, தன்னுடைய அனுமதி இல்லாமலேயே இதனை வெங்கட்பிரபு வெப் சீரிஸாக இயக்கியுள்ளார் என்றும் பரபரப்பான குற்றச்சாட்டை எழுப்பியுள்ளார் இயக்குனர் சசிதரன். இவர் அட்டகத்தி தினேஷ் நடித்து…
Read Moreலாக்கப் மரணஅரசியலை பேசும் ராஜலிங்கா
#லாக்கப் மரணஅரசியலை பேசும் ராஜலிங்கா அறிமுக இயக்குநர் ஷிவபாரதி எழுதி இயக்கியிருக்கும் படம் ராஜலிங்கா. இயக்கியதோடு முக்கிய கதாபாத்திரமொன்றில் நடித்துமிருக்கிறார். இவரோடு டி.குமரேசன், மாறன் பாண்டியன் ஆகியோரும், நாயகியாக ஜாய் ப்ரியா என்பவரும் நடித்திருக்கிறார்கள். இப்படத்தை இயக்கியிருக்கும் ஷிவபாரதிதஞ்சாவூர்மாவட்டம் திருவையாறைச் சேர்ந்தவர். இயக்குநர் ராதாபாரதி உள்ளிட்ட பலரிடம் பணியாற்றிய அனுபவங்களைக் கொண்டவர். இவர் எழுதிய திரைக்கதையும் அதையொட்டி இவர் செய்திருந்த வடிவமைப்பையும் பார்த்த திருச்சி விநியோகஸ்தர் மாரிமுத்து படத்தை இயக்கும் வாய்ப்பைக் கொடுத்திருக்கிறார். இப்படம்குறித்துஇயக்குநர்ஷிவபாரதி கூறியதாவது…. இப்படம் தற்காலத்தில் அதிகம் பேசப்படும் ஒரு சிக்கலை மையமாகக் கொண்டு எடுத்திருக்கிறேன்.பார்த்தவுடன் காதல் பழகியவுடன் அத்துமீறல் என்று போகும் ஜோடிகளுக்கு இப்படம் ஒரு பாடமாக இருக்கும். அன்றாடம் தவிர்க்க முடியாத அத்தியாவசியமாகிவிட்ட வாட்சப்பை நாம் மிக அலட்சியமாகக் கையாள்கிறோம். இப்படம் பார்த்துவிட்டு போனை எடுத்து வாட்சப்பை திறந்தால் ஒரு…
Read Moreஎச் ஜே சினி மேக்கப் ஹேர் அண்ட் பியூட்டி அகடமி தமிழக செய்தி துறை அமைச்சர் கடம்பூர் ராஜூ கலந்து கொண்டு திறந்து வைத்தார்
எச் ஜே சினி மேக்கப் ஹேர் அண்ட் பியூட்டி அகடமி தமிழக செய்தி துறை அமைச்சர் கடம்பூர் ராஜூ கலந்து கொண்டு திறந்து வைத்தார் . சவுத் இந்தியன் சினி அண்ட் டிவி மேக்கப் ஆர்டிஸ்ட் அண்ட் ஹேர் ஸ்டைலிஸ்ட் யூனியன் சார்பில் நேற்று ( பிப்ரவரி 1ம்தேதி) சென்னை விருகம்பாக்கம் காமராஜர் சாலை, ஏவிஎம் காலனியில் எச் ஜே சினி மேக்கப் ஹேர் அண்ட் பியூட்டி அகடமி திறப்பு விழா நடந்தது. பெப்சி தலைவர் ஆர்.கே.செல்வமணி தலைமை தாங்கினார். பொதுச் செயலாளர் அங்கமுத்து சண்முகம், பொருளாளர் பி.என்.சுவாமிநாதன் முன்னி லை வகித்தனர். தமிழக செய்தி துறை அமைச்சர் கடம்பூர் ராஜூ கலந்து கொண்டு திறந்து வைத்தார். நடிகையும், ஆந்திரா எம் எல் ஏவுமான நடிகை ரோஜா குத்துவிளக்கு ஏற்றினார். நிகழ்ச்சியில் அமைச்சர்…
Read Moreசட்டப்பேரவையில் விஜயதாரணியைக் கண்டு மிரண்ட ஆளுநர், எடப்பாடி, ஸ்டாலின்!
சட்டப்பேரவையில் விஜயதாரணியைக் கண்டு மிரண்ட ஆளுநர், எடப்பாடி, ஸ்டாலின். சட்டப்பேரவையில் விஜயதாரணியைக் கண்டு மிரண்ட ஆளுநர், எடப்பாடி, ஸ்டாலின்! இந்த ஆண்டுக்கான சட்டப்பேரவைக் கூட்டத்திற்காக கலைவாணர் அரங்கம் உச்சகட்ட பாதுகாப்பு வளையத்திற்குள் இருந்தது. காலை 9 மணிக்கு காரில் வந்து இறங்கினார் ஒரு பெண்மணி. சுற்றிலும் நூற்றுக்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு ஏற்பாடுகள் கெடுபிடியாக இருந்தது. காரிலிருந்து இறங்கிய போது, தலையில் பச்சை கலரில் தலைப்பாகை கட்டி கம்பீரமாக வெளியே வந்தார் காங்கிரஸ் விளவங்கோடு தொகுதி சட்டமன்ற உறுப்பினர் விஜயதாரணி. பார்த்தவர்கள் அனைவரும் குழப்பத்தில் ஆழ்ந்தார்கள். வந்தவர் நேரடியாக சட்டமன்றத்திற்குள் சென்றார். உள்ளே நுழைந்ததும் அனைத்துக் கட்சி உறுப்பினர்களும் ஆச்சரியமாக பார்த்தனர். கவர்னர், முதல்வர், எதிர்க்கட்சித் தலைவர் உள்ளிட்ட அனைவரது பார்வையும் ஒரே நேரத்தில் விஜயதாரணி பக்கம் கவனம் பெறும் வகையில் இருந்தது.அவர் ஏன் தலைப்பாகையோடு…
Read More