எச் ஜே சினி மேக்கப் ஹேர் அண்ட் பியூட்டி அகடமி தமிழக  செய்தி துறை அமைச்சர் கடம்பூர் ராஜூ கலந்து கொண்டு திறந்து வைத்தார்

எச் ஜே சினி மேக்கப் ஹேர் அண்ட் பியூட்டி அகடமி தமிழக  செய்தி துறை அமைச்சர் கடம்பூர் ராஜூ கலந்து கொண்டு திறந்து வைத்தார்

 

 

.

 

சவுத் இந்தியன் சினி அண்ட் டிவி மேக்கப் ஆர்டிஸ்ட் அண்ட் ஹேர் ஸ்டைலிஸ்ட் யூனியன் சார்பில் நேற்று ( பிப்ரவரி 1ம்தேதி) சென்னை விருகம்பாக்கம் காமராஜர் சாலை, ஏவிஎம் காலனியில் எச் ஜே சினி மேக்கப் ஹேர் அண்ட் பியூட்டி அகடமி திறப்பு விழா நடந்தது. பெப்சி தலைவர் ஆர்.கே.செல்வமணி தலைமை தாங்கினார். பொதுச் செயலாளர் அங்கமுத்து சண்முகம், பொருளாளர் பி.என்.சுவாமிநாதன் முன்னி லை வகித்தனர்.
தமிழக  செய்தி துறை அமைச்சர் கடம்பூர் ராஜூ கலந்து கொண்டு திறந்து வைத்தார். நடிகையும், ஆந்திரா எம் எல் ஏவுமான நடிகை ரோஜா குத்துவிளக்கு ஏற்றினார்.

நிகழ்ச்சியில் அமைச்சர் கடம்பூர் ராஜூ பேசியதாவது:
எச் ஜே சினி மேக்கப் ஹேர் அண்ட் பியூட்டி அகடமி திறந்து வைப்பதில் மகிழ்ச்சி. புரட்சி தலைவர் எம்ஜிஆர், புரட்சி தலைவி அம்மா சினிமாவிலிருந்து வந்தவர் கள். அவர்களை சினிமாவில் பார்த்து ரசித்து அவர்கள் சொன்ன நல்ல கருத்துக்களை கேட்டுதான் நாங்கள் அரசிய லுக்கு வந்தோம். எனக்கு செய்தி துறை அமைச்சர் பதவியை அம்மா அளித்த போது அதில் என்னவெல் லாம் பிற துறைகள் இடம் பெறும் என்பதை சொல்லி சினிமா துறையும் அதில் இருக்கும் அதை ஜாக்கிரதை யாக கையாள வேண்டும். சினிமா துறை மின்சாரம் போன்றது நன்கு ஒளி தரும் தவறுதலாக கைவைத்தால் ஷாக் அடித்துவிடும் என்று அறிவுரை வழங்கினார்.

சினிமா துறைக்காக திரைப்பட ஸ்டுடியோ அமைக்க வேண்டும் பெப்ஸி ஆர்.கே. செல்வமணி கோரிக்கை வைத்தபோது அதனை அம்மா விடம் சொன்னேன். அவர்கள் உடனடியாக பையனூரில் 5 கோடி செலவில் சினிமா ஸ்டுடியோ அமைத்து தருவ தாக அறிவித்ததுடன் நிதியும் அளித்தார். அம்மாவின் வழியில் இன்றைக்கு ஆட்சி நடத்தி வரும் தமிழக முதல் வரும் ஸ்டியோவுக்கான தவணை தொகை அளித்தார். மற்றொரு தவணையும் விரைவில் அளிப்பார்.
திரைப்பட துறைக்கு விருது வழங்குவதுபற்றியும் நம் முதல்வரிடம் கோரிக்கை வைத்தபோது 150 படங் களுக்கு தலா ரூ 7 லட்சம் அளித்தார். அதேபோல் கொரோனா காலகட்டத்தில் சினிமா துறை பாதிக்கப்பட்டி ருந்தபோது நிறைய உதவிகளை அரசு அளித்தது. மீண்டும் தொழில் தொடங் கவும் உடனுக்குடன் அனுமதி அளிக்கப்பட்டது, தியேட் டர்களில் முதலில் 100 சதவீத டிக்கெட் அனுமதி அளித்தது தமிழக அரசுதான். ஆனால் அன்றைக்கு 50 சதவீத டிக்கெட் தான் அனுமதிக்க வேண்டும் என்று மத்திய அரசு கடிதம் அனுப்பியது. 15 நாட்கள் கழித்து இன்று மத்திய அரசே 100 சதவீத டிக்கெட் அனுமதி அளித்திருக்கிறது. இந்தியாவுக் கே வழிகாட்டியாக தமிழக அரசுதான் செயல்பட்டது என்பதை குறிப்பிடுகிறேன்.

இங்கு கலந்துகொண்டு பேசிய ரோஜா எம் எல் ஏ ஆந்திரா வில் முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டிக்கு பக்க பலமாக இருந்துசெயல்படுகிறார். தனக்கு அரசியல் வழிகாட்டி யாக அம்மாதான் இருந்ததாக கூறினார். பெப்ஸி தலைவராக ஆர்.கே.செல்வமணி சிறப்பாக செயல்படுகிறார். பெப்ஸியில் அங்கம் வகிக்கும் தொழிலா ளர்கள் மற்றும் டெக்னீஷியன் களுக்கு என்ன தேவையென் றாலும் அரசிடம் கோரிக்கை வைத்து பெற்று தருகிறார். இன்றைக்கு தொடங்கப்பட்டி ருக்கும் இந்த மேக்கப் அகாடமி சிறப்பாக செயல் பட்டு தமிழகம் முழுவதும் கிளைகள் அமைத்து செயல் பட வேண்டும் என்று எனது வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.
இவ்வாறு அமைச்சர் கடம்பூர் ராஜூ பேசினார்…………………………………………
நடிகை ரோஜா எம் எல் ஏ பேசும்போது,’நான் சினிமா துறைக்கு வந்தபோது என்னை பலர் கிண்டல் செய்தனர். நான் கொஞ்சம் கலர் கம்மி அதனால் வெற்றி பெற மாட் டேன் என்றனர். ஆனால் என்னை சினிமாவில் அழகாக காட்டி, கலரும் கூட்டி காட்டி ரசிகர்கள் மனதில் பதிய வைத்தவர்கள் மேக் அப் மேன்கள்தான். இந்த விழா வுக்கு என்னை அழைத்தது மகிழ்ச்சி. வீட்டில் விசேஷம் நடந்தால் மகளைதான் விளக்கு ஏற்ற வைப்பார்கள் அதபோல் இந்த விழாவில் என்னை விளக்கு ஏற்ற வைத்தி ருக்கிறார்கள். அரசியலில் நான் இன்றைக்கு பல போராட்டங் களை சந்தித்து வெற்றி பெற்ற தற்கு எனக்கு முன்னுதாரண மாக இருந்தவர் புரட்சி தலைவி ஜெயலலிதா அம்மா தான்’ என்றார்.

நிகழ்ச்சியில் விருகை வி.என்.ரவி எம் எல் ஏ,  எஸ். சண்முக சுந்தரம் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர். பெப்ஸி நிர்வாகிகள் மற்ற சங்கங்களின் நிர்வாகிகள் விழாவில் கலந்து கொண்டனர். ஏ.சபரிகிரிசன் நன்றி உரையாற்றினார்.

Related posts

Leave a Comment