கதை…
2005 ஆம் ஆண்டு நடைபெற்ற சம்பவம்..
ஒரு பெண்.. நாலு நண்பர்கள்..
நாலு நண்பர்கள் ஜாலியான பேர்வழிகள்.. இதில் ஒருவர்… எந்த பெண்ணை பார்த்தாலும் அவள் எப்படிப்பட்டவர் அவரது கேரக்டர் எப்படி என்பதை கிட்டத்தட்ட துல்லியமாக கணிப்பவர்.. ஒரு நாள் நாயகன் ஜீவா நாயகி ஜானகியை சந்திக்க பார்த்தவுடன் பிடித்தும் போகிறது..
அது காதலா.? என்று தெரியாமல் குழம்ப.. தன் நண்பர்களிடம் பகிர்கிறார்.. அடுத்த சில தினங்களில் எதிர்பாராத விதமாக நாயகன் நாயகியை சந்திக்கின்றனர்.. அப்போது ஒரு நண்பர்… அவள் உன்னுடன் உடலுறவு கொள்ள ஆசைப்படுகிறாள்… அதற்காக உனக்கு வலை வீசுகிறாள் என்றெல்லாம் சொல்கிறார்..
இதனை நண்பர் ஜீவாவும் நம்புகிறார்.. ஒரு கட்டத்தில் இருவரும் சந்திக்க அவரிடம் தவறாக நடக்க முயற்சி செய்கிறார்.. ஆனால் அவள் உடனே தட்டிவிட்டு சென்று விடுகிறார்…
அதன் பிறகு தான் நாயகி தன் மீது கொண்டது காதல்… காமம் அல்ல என்பதை உணர்கிறார்.. ஆனால் அதன் பிறகு நாயகி ஜானகியை எங்கு தேடினாலும் கிடைக்காத போது… பின்னர் என்ன ஆனது.? என்பதுதான் மீதிக்கதை.
நடிகர்கள் & தொழில் நுட்பகலைஞர்கள்…
Janaki, Aakash, Hari Rudran, Rajesh, Arun Kumar
படத்தின் ஆணிவேர் ஜானகி.. தன் காதல் உணர்வை அழகாக வெளிப்படுத்தி இருக்கிறார்.. தன் தாய் தவறானவள்.. தனக்காவது ஒரு நண்பர் கணவனாக கிடைக்க வேண்டும்.. அதன்படி நாயகனை பார்த்து அவர் காட்டும் ஒவ்வொரு முகபாவனையும் ரசிக்க வைக்கிறது..

ஒரு கட்டத்தில் நாயகன் தன்னிடம் தவறாக நடக்க முயற்சித்தார் என்று நினைக்கையில் அவள் பார்வையை பல அர்த்தங்களை சொல்கிறது..
நாலு நண்பர்கள் ஒவ்வொருவரும் ஒவ்வொரு ரகம்… ஒருவன் பெண் பித்தன்… நாயகன் நல்லவன்.. குடும்ப பாசமாக இருப்பவர்.. ஒருவர் பெண் கிடைக்காமல் அலைபவர்.. மற்றொருவர் சராசரியானவர்…
நாயகனின் குடும்பம் அம்மா அப்பா அண்ணன் அண்ணி குழந்தை என ஒவ்வொருவரும் மிகப்பெரிய பலம்..
நந்தா இசையில் பின்னணி இசையும் பாடலும் அழகு… முக்கியமாக பாடல் வரிகள் ரசிக்க வைக்கிறது.. ஒரு நாள் ஈசல் போல தன் வாழ்க்கை முடிந்து விடுமோ.. என்று வரிகள் ரசிக்க வைக்கிறது.

ஒளிப்பதிவாளர் எட்வின்… கடலூர் சிதம்பரம் ஆகிய பகுதிகளை அழகாக காட்டியிருக்கிறார் முக்கியமாக அந்த சிதம்பரத்தில் குகைகோயில் அழகு…
2005 ஆம் ஆண்டில் நண்பர்களின் மனநிலை.. காதலின் உணர்வு எப்படி இருந்தது.? என்பதை அழகாக சொல்லி இருக்கிறார் இயக்குனர் சுரேந்தர்…
Written, Directed & Produced by K. J. Surendar
ஒரு காதலை ஒரு பெண் எப்படி பார்க்கிறாள்… அதே காதலை ஒரு ஆண் எப்படி பார்க்கிறான் என்பதை இரு வேறு கோணங்களில் அழகாக சொல்லி இருக்கிறார் இயக்குனர் சுரேந்தர்..
