ஹாட் ஸ்பாட் 2 மச் – விமர்சனம்

கதை…

ஆந்தாலஜி பாணியில் கதைகள்..

முதல் கதை.. தாதா ராசா ரசிகர்கள் அடித்துக் கொள்கிறார்கள்.. அந்த ரசிகர்களின் தலைவர் குடும்பத்திலிருந்து இருவரை கடத்தி வைத்துக் கொள்கிறார் எம் எஸ் பாஸ்கர்.. அவர் வைக்கும் நிபந்தனைகளை தாதா மற்றும் ராசா ஆகியோர் நிறைவேற்ற வேண்டும் என்கிறார்.. நிறைவேறியதா.?

இரண்டாவது கதையில்… தன் மகளை கட்டுக்கோப்பாக வளர்க்க வேண்டும் என நினைக்கிறார் தம்பி ராமையா.. ஆனால் அவளோ நாகரிக மோகத்தில் ஆடைகளை குறைத்து சுதந்திரமாக செயல்படுவேன் என்கிறார்.. தந்தைக்கு மகளுக்குமான போட்டி தான் இந்த படத்தின் மையக்கரு.

மூன்றாவது கதையில் 2025-ல் இருக்கும் நாயகன் அஸ்வின் 2050 ஆம் ஆண்டில் இருக்கும் நாயகி பவானியுடன் காதல் கொள்கிறார்.. இருவருக்குமான காதல் நிறைவேறியதா.? என்பதுதான் கதை..

நடிகர்கள் (Cast):

* பிரியா பவானி சங்கர் – ஷில்பா
* பிரிகிடா சாகா – மதுமிதா
* அஷ்வின் குமார் – யுகன்
* ரக்ஷன் – ஜேம்ஸ்
* ஆதித்யா பாஸ்கர் – சத்யா
* விக்னேஷ் கார்த்திக் – முகமது ஷெரிப்
* கே.ஜே. பாலமணிமார்பன் – கே.ஜே. பாலமணிமார்பன்
* பவானி ஸ்ரீ – நித்யா
* சஞ்சனா திவாரி – ஷர்னிதா
* தம்பி ராமையா – பாஸ்கர்

 

அனைத்து நடிகர்களும் அந்த கதாபாத்திரமாகவே மாறி இருப்பது படத்திற்கு மிகப்பெரிய பலம்.. முக்கியமாக தம்பி ராமையா மற்றும் அவரது மகள் சஞ்சனா தீவாரியின் கதை அருமை.. இவர்களின் கேரக்டர் மற்றும் தந்தை மகளுக்கான பாச போராட்டத்தை நாகரிக போராட்டத்தை காட்டும் காட்சியில் ரசிக்க வைக்கிறார்..

அஸ்வின் மற்றும் பவானியில் காதல் வித்தியாசமான டைம் டிராவல் லவ் ஸ்டோரி.

தாதா ரசிகர் ரக்சன் ராசா ரசிகர் ஆதித்யா பாஸ்கர்.. இது நடிகர்கள் விஜய் அஜித் ஆகியோரின் போட்டியில் அந்த ரசிகர்களின் மனப்பான்மையும் காண்பிக்கப்படுகிறது.. இதில் எம் எஸ் பாஸ்கர் பேசும் வசனங்கள் ரசிகர்களுக்கு நெத்தியடி..


தொழில்நுட்பக் கலைஞர்கள் (Crew Details)

* தயாரிப்பு நிறுவனம்: கே.ஜே.பி டாக்கீஸ் (KJB TALKIES) | ஆன்ட்ஸ் டு எலிஃபென்ட்ஸ் சினிமாஸ் அண்ட் கோ (ANTS TO ELEPHANTS CINEMAS AND CO)
* தயாரிப்பாளர்: கே.ஜே. பாலமணிமார்பன் | அனில் கே ரெட்டி
* இயக்குநர்: விக்னேஷ் கார்த்திக்
* ஒளிப்பதிவு (DOP): ஜெகதீஷ் ரவி | ஜோசப் பால்
* இசை & பின்னணி இசை: சதிஷ் ரகுநாதன்
* படத்தொகுப்பு (Editor): யு. முத்தையன்
* கலை இயக்குநர்: சி. சண்முகம்
* இணைத் தயாரிப்பாளர்: சி. சுரேஷ் குமார் | இந்துகுமார் எம்
*நிர்வாகத் தயாரிப்பாளர் : பிரியன்
கிரியேட்டிவ் புரொடியூசர் : துரை kv

ஹாட் ஸ்பாட் முதல் பாகத்தில் ஆந்தாலஜி பாணியில் நான்கு கதைகளை சொல்லியிருந்தார் இயக்குனர் விக்னேஷ் கார்த்திக்.. இதில் மூன்று கதைகளை சொல்லி இருக்கிறார்..

இதிலும் ஒரு தயாரிப்பாளரிடம் இயக்குனர் கதை சொல்லிக் கொண்டிருக்கிறார். கதை சொல்பவர் பிரியா பவானி சங்கர்..

இசை & ஒளிப்பதிவு சிறப்பு.. கூடுதல் பலம்.. மிகவும் நேர்த்தியாக கையாளப்பட்டுள்ளது..

விக்னேஷ் கார்த்திக்.. அவரும் சின்ன கேரக்டரில் நடித்திருக்கிறார்.. அவருக்கு ஜோடியாக பிரிகிடா.. முதல் பாகத்தில் இருந்த சுவாரசியம் இதில் கொஞ்சம் குறைவு.. ஆனாலும் ரசிகர்களை திருப்திபடுத்தும் Hot Spot 2 much..

Related posts

Leave a Comment