Fwd: தி பேமிலிமேன் தொடருக்கு எதிராக பாரதிராஜா அறிக்கை

தமிழ் மக்களின் கடும் எதிர்ப்பையும் மீறி திபேமிலிமேன் – 2 இணைய தொடர் ஒளிபரப்பபட்டு வருகிறது இத்தொடரின் மையக்கதையே விடுதலைப்புலிகளையும் அவர்களது விடுதலைப் போராட்டத்தையும் மலினப்படுத்தி அதற்கு தவறான உள்நோக்கம் கற்பிக்கும் விதத்தில் அமைந்துள்ளது இதனால் தமிழ் உணர்வாளர்கள் அத்தொடரை தடைசெய்ய வேண்டுமென தொடர்ந்து தமிழகத்தில் இருந்து எதிர்ப்பு குரல்கள் வலுத்துவருகின்றது தமிழ் சினிமாவின் மூத்த இயக்குநர் பாரதிராஜா அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார் அதில் எங்கள் இனத்திற்கு எதிரான தி பேமிலி மேன் 2 இணையத் தொடரைநிறுத்த தமிழர்களும் தமிழ்நாட்டு அமைச்சர் உள்ளிட்ட அனைவரும் கோரிக்கை வைத்த பிறகும் கூட இந்திய ஒன்றிய அரசுஅத் தொடரை நிறுத்த உத்தரவு பிறப்பிக்காமல் மெளனம் காப்பது எங்களுக்கு மிகுந்த மனவேதனைஅளிக்கிறது. தமிழீழப் போராளிகளின் விடுதலை போராட்டக்களத்தையும்,அவர்களின் வரலாற்றையும் அறியாத ,தகுதியற்ற நபர்களால்,தமிழின விரோதிகளால் இத்தொடர் எடுக்கப்பட்டிருக்கிறது என்பதை தொடரின் காட்சிகள்…

Read More

கொரோனா நிவாரண நிதிதிரட்டும் இசையமைப்பாளர் ஜிப்ரன்

இசையமைப்பாளர் ஜிப்ரான், தமிழ்  சினிமாவில் புதிய அலையை ஏற்படுத்தியிருக்கும் மிக முக்கியமான இசையமைப்பாளர். பல்வேறு புதுவிதமான இசை முயற்சிகளால்,  ரசிகர்களின் ஆதரவு இவருக்கு அதிகரித்து வருகிறது தெலுங்கில் பிரபாஸ் நடித்து வெளியானசாஹோபடத்தின் இசையால் இந்திய அளவில் கவனம் பெற்ற ஜிப்ரன் தற்போது அப்படத்தில் இருந்து வெளிவராத ஒரு பின்னணி இசை தொகுப்பினை, இதுவரையிலும் இல்லாத வகையில் NFT(Non Fungible Token) என்னும் முறையில் ஏலத்தில் வெளியிடவுள்ளார். இம்முறையில் மிக உயரிய விலைக்கு இந்த இசைத் தொகுப்பினை எவர் வேண்டுமானாலும் வாங்க முடியும். அந்த  வகையில் இதன் மூலம் கிடைக்கும் நிதி, நமது தமிழக முதல்வர் நிவாரண நிதி அமைப்பிற்கும்,  இக்காலகட்டத்தில் பணியின்றி தவிக்கும் இசைத் துறை  சார்ந்தோருக்கும் பிரித்து அளிக்கப்படவுள்ளது. இது குறித்து இசையமைப்பாளர் ஜிப்ரான் பேசும்போது, “சாஹோ’ படத்தில் இடம் பெறாத ஹீரோவின் தீம் இசையை,…

Read More