அம்பிகாவின் வாழ்க்கை வரலாறு ஒரு நெகிழ்ச்சியான மற்றும் அதிகாரமளிக்கும் ஒரு அசாதாரணமான கதை. சிங்கப்பூர் சமூக அறிவியல் பல்கலைக்கழகத்தில் (SUSS) ஆலோசனைக்கான பிரிவில்(Counselling) பட்டம் பெற்ற அவர், சிங்கப்பூர் போதைப்பொருள் எதிர்ப்பு சங்கத்தில் (SANA) தனது வாழ்க்கைப் பயணத்தை தொடங்கினார், அங்கு போதைப்பொருள் குற்றவாளிகளுக்கு ஆலோசனை வழங்குவதிலும் சமூகத்தில் அவர்கள் மீண்டும் ஒன்றிணைவதற்கு உதவுவதிலும் அவரது ஆர்வம் இருந்தது. இந்த முயற்சிக்கான அவருடைய அர்ப்பணிப்பு அசைக்க முடியாதது. அம்பிகை ஒரு சிறந்த பரத நாட்டியக் கலைஞரும் கூட. இருப்பினும், அவரது வாழ்க்கையில் எதிர்பாராத திருப்பமாக மல்டிபிள் ஸ்களீரோசிஸ்(multiple sclerosis) எனும் நோய் தாக்கி அம்பிகாவை சக்கர நாற்காலியில் அமர வைத்தது. ஆயினும்கூட, துன்பங்களிடம் சரணடைவதற்குப் பதிலாக, அவர் தன் உறுதியைப் பயன்படுத்தியதோடு மட்டுமல்லாமல் அவருடைய தனிப்பட்ட சவால்களை மற்றவர்களுக்கு உத்வேகம் அளிக்கும் ஆதாரமாகவும் மாற்றினார். அவரது…
Read MoreMonth: December 2023
”இசையமைப்பாளர் சாம்.சி.எஸ்-க்குள் ஒரு இயக்குநர் இருக்கிறார்” – டிமாண்டி காலனி 2 டிரைலர் வெளியீட்டில் அஜய்ஞானமுத்து பேச்சு
பிடிஜி யுனிவர்சல் நிறுவனம் சார்பில் பாபி பாலசந்திரன் வழங்க ஞானமுத்து பட்டறை மற்றும் ஒயிட் நைட்ஸ் என்டர்டெய்ன்மென்ட் தயாரிப்பில் இயக்குநர் அஜய் ஞானமுத்து இயக்கத்தில், அருள்நிதி, பிரியா பவானி சங்கர் நடிப்பில், மிரட்டலான ஹாரர் படமாக, மெகா ப்ளாக்பஸ்டர் டிமாண்டி காலனி படத்தின் இரண்டாம் பாகமாக உருவாகியுள்ள திரைப்படம் ‘டிமான்டி காலனி 2’ . விரைவில் திரைக்கு வரவுள்ள இப்படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழா படக்குழுவினர் கலந்துகொள்ளப் பத்திரிக்கை ஊடக பண்பலை நண்பர்கள் முன்னிலையில் நடைபெற்றது. இவ்விழாவினில்.. தயாரிப்பாளர் பாபி பாலசந்திரன் பேசியதாவது… பிடிஜி யுனிவர்சல் நிறுவனம் முதல் முறையாகத் தயாரிப்பில் களமிறங்கியுள்ளோம். நாங்கள் பிஸினஸ் க்ளோபல் சாஃப்ட் வேர் கம்பனி ஏன் படத்தயாரிப்பு என்ற கேள்வி இருந்தது. மக்களிடம் சென்று சேர வேண்டும் ஹாலிவுட்டில் இருப்பது போல் மிகப்பெரிய ஸ்டூடியோவாக இருக்க வேண்டும் என்ற…
Read More“மதிமாறன்” திரைப்பட இசை மற்றும் ட்ரைலர் வெளியீட்டு விழா
ஜி.எஸ் சினிமா இன்டர்நேஷனல் சார்பில் லெனின் பாபு தயாரிப்பில் அறிமுக இயக்குநர் மந்திர வீரபாண்டியன் இயக்கத்தில், இவானா, வெங்கட் செங்குட்டுவன் முதன்மைப் பாத்திரத்தில் நடிக்க , மாறுபட்ட திரில்லர் டிராமாவாக உருவாகியுள்ள திரைப்படம் “மதிமாறன்”. இம்மாதம் திரைக்கு வரவுள்ள நிலையில் இப்படத்தின் இசை மற்றும் ட்ரைலர் வெளியீட்டு விழா படக்குழுவினர் கலந்துகொள்ள, பத்திரிக்கை ஊடக, பண்பலை நண்பர்கள் முன்னிலையில் இனிதே நடைபெற்றது. இவ்விழாவினில்… தயாரிப்பாளர் நவீன் சீதாராமன் பேசியதாவது… இது நிஜமா கனவா என அறியமுடியவில்லை. நான் மிகவும் எமோஷனாலாக இருக்கிறேன். நான் ஹாலிவுட்டில் வேலை செய்திருந்தாலும் இங்குத் தமிழ் சினிமாவில் இவ்வளவு பெரிய ஜாம்பவான்கள் இருக்கும் மேடையில் இருப்பது பெருமையாக இருக்கிறது. அண்ணன்கள் தான் தம்பிகளைக் கஷ்டப்பட்டு பெயர் வாங்க வைப்பார்கள். என் அண்ணன் பாலா சீதாராமன், லெனின் இருவருக்கும் நன்றி. இசையமைப்பாளர் கார்த்திக்…
Read More”சலார் மிகவும் உணர்வுப்பூர்வமான திரைப்படமாக இருக்கும்” – பிரபாஸ்
ஹொம்பாலே பிலிம்ஸ், சந்தேகத்திற்கு இடமின்றி இந்திய திரைப்படத் துறையில் மிகவும் மதிப்புமிக்க திரைப்படங்களை உருவாக்கும் முக்கியமான தயாரிப்பு நிறுவனமாக வளர்ந்துள்ளது. இந்நிறுவனத்தின் தயாரிப்பில், பாகுபலி நட்சத்திரம் பிரபாஸ் நடிப்பில் மற்றும் கேஜிஎஃப் இயக்குநர் பிரசாந்த் நீல் இயக்கத்தில் இந்தியாவே எதிர்பார்க்கும் படமாக சலார்: பார்ட் 1: சீஸ்ஃபயர் பிரமாண்ட வெளியீட்டிற்கு தயாராகி வருகிறது. சமீபத்திய நேர்காணலில், பான் இந்தியன் ஸ்டார் பிரபாஸ் படம் குறித்துக் கூறுகையில் கதபாத்திரங்களுக்கிடையான உணர்வுப்பூர்வமான போராட்டத்தைச் சொல்லும் உணர்ச்சிகரமான படைப்பாக இப்படம் இருக்கும் மேலும் முதல்முறையாக ரசிகர்கள் படத்தில் ஒரு கதாப்பாத்திரமாக என்னைப் பார்ப்பார்கள் என்றார்.” டிசம்பர் 22, 2023 அன்று படம் பிரமாண்டமாக வெளிவரவுள்ளது. இன்னும் ஒரு வாரமே உள்ளதால், முன்னணி நடிகர் பிரபாஸிடம் சமீபத்திய நேர்காணலில் சலார்: பார்ட் 1: சீஸ்ஃபயர் படத்தின் கதாபாத்திரத்திர மாற்றத்திற்காக அவரது உழைப்பு…
Read Moreஆத்மீகா பட விமர்சனம்
ஷிவானி ஸ்டுடியோஸ் தயாரிப்பில் தாமோதரன் செல்வகுமார் இயக்கத்தில் ஆனந்த் நாக் நாயகனாக நடித்திருக்கும் திரைப்படம் “ஆத்மிகா”. மெடிக்கல் மாபியாவின் பின்னணியில் விஞ்ஞான மருத்துவம் எப்படியெல்லாம் தவறான முறையில் கையாளப்படுகிறது. இதனால் பொதுமக்கள் எதிர்காலத்தில் என்ன மாதிரியான பிரச்சனைகளை சந்திக்க இருக்கிறார்ர்கள் என்கின்ற எச்சரிக்கை மணியை ஒலிக்கவிடுகிறது “ஆத்மிகா”. தமிழ் சினிமா உலகில் வளர்ந்து வரும் நாயகனான ஆனந்த் நாக் இப்படத்தில் நாயகனாக நடித்திருக்கிறார். ஐஸ்வர்யா நாயகியாக நடிக்க, இவர்களுடன் ஜீவா ரவி, பிர்லா போஸ், வினிதா, பேபி அக்ஷயா மற்றும் பல முக்கிய பிரபலங்கள் இப்படத்தில் நடித்திருக்கிறார்கள். வெறும் துணைக் கதாபாத்திரமாக மட்டுமில்லாமல், சில சவாலான கதாபாத்திரங்களை ஏற்று துணிச்சலாகவும் நடித்திருக்கிறார்கள். இப்படத்தை சஸ்பென்ஸ் த்ரில்லர் படமாக இயக்கியிருக்கிறார் தாமோதரன் செல்வகுமார். சஸ்பென்ஸ் த்ரில்லராக இருந்தாலும் படத்தில் ஆக்ஷன் காட்சிகளுக்கும் குறையில்லை. விஞ்ஞான மருத்துவம் தவறானவர்களின் கைகளில்…
Read More”LIC தலைப்பு என்னுடையது விக்னேஷ் சிவன் மீது வழக்கு தொடுப்பேன் ”.- இயக்குனர் SS குமரன்.
மதிப்பிற்குறிய பத்திரிக்கை மற்றும் ஊடக நண்பர்களுக்கு வணக்கம். திரு விக்னேஷ் சிவன் இயக்கும் புதிய படத்திற்கு L I C என்று பெயரிட்டு இருப்பதைக்கண்டு அதிர்ச்சியும் மன உளைச்சலும் அடைந்தேன். காரணம் LIC என்கிற பெயரை 2015 ம் ஆண்டே என் தயாரிப்பு நிறுவனமான suma pictures இன் வாயிலாக பதிவு செய்து வைத்திருக்கிறேன். இதை அறிந்த திரு விக்னேஷ் சிவன் தன்னுடைய புதிய படத்திற்கு அந்தபெயரை தரக்கோரி தனது மேலாளர் திரு மயில்வாகனன் மூலம் என்னை அணுகினார். ஆனால் LIC என்கிற தலைப்பு நான் இயக்கும் படத்திற்கு மிகச்சரியாக பொருந்துவதாலும், கதையின் பலமே அந்த தலைப்பை ஒட்டி அமைந்திருப்பதாலும் நான் மறுத்துவிட்டேன். ஆக இந்த தலைப்பை நான் முறைப்படி பதிவு செய்து வைத்திருக்கிறேன் என்பதை திரு விக்னேஷ் சிவன் நன்றாக அறிவார். அப்படி இருந்தும் இந்த…
Read Moreமீண்டும் இணைந்த ‘ஈரம்’ கூட்டணி
7ஜி ஃபிலிம்ஸ் சிவா தயாரிக்க, இயக்குனர் அறிவழகனின் ‘ஆல்பா ஃப்ரேம்ஸ்’ சார்பில் இணைந்து தயாரிக்கும் ஹாரர், திரில்லர் படம் ‘சப்தம்.’ தனது மேக்கிங் மற்றும் கதை சொல்லலில் அனைவரையும் ஈர்த்த, வெற்றிப்பட இயக்குனர் அறிவழகன் ஈரம் படத்திற்கு அடுத்து இயக்கி இருக்கும் ஹாரர் திரில்லர் படம் இது. இதில் இயக்குனர் அறிவழகன்,நடிகர் ஆதி, இசையமைப்பாளர் தமன் ஆகியோர் மீண்டும் இணைந்து இருக்கிறார்கள். ஈரம் திரைப்படம் முழுவதும் மழை மற்றும் மழை சார்ந்த காட்சிகளை மையப்படுத்தி உருவானது. இதில் சிறப்பு பேய் தண்ணீரின் வழி வரும். அதுபோல், சப்தம் திரைப்படம் மலை மற்றும் குளிர் பிரதேசம் சார்ந்த பகுதிகளை மையப்படுத்தி காட்சியமைக்கப்பட்டுள்ளது. மேலும், சப்தத்தை மையப்படுத்தியும் காட்சிகளை உருவாக்கியுள்ளனர். மும்பை, மூணாறு, சென்னை உள்ளிட்ட இடங்களில் இதன் படப்பிடிப்பு நடைபெற்றுள்ளது. படத்தின் இடைவேளை மற்றும் இறுதிக்கட்ட காட்சிக்காக ரூபாய்…
Read Moreலைஃப் இருக்கு டிரக்ஸ் எதற்கு’: போதை மருந்துகள் பயன்பாட்டுக்கு எதிராக ஏஐ அனிமேஷன் மூலம் உருவாகியுள்ள ஒரு புது இசை முயற்சி!
போதைப்பொருள் பழக்கத்தினால் விளையும் ஆபத்துகள் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தும் முயற்சியாக, எங்கள் சமீபத்திய திட்டமான ‘லைஃப் இருக்கு டிரக்ஸ் எதற்கு’ என்ற பாடலை வெளியிடுவதில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம். இந்த இசை முயற்சியை வைசாக் எழுதி, பாடியுள்ளார் மற்றும் ஜிப்ரான் இசையமைத்துள்ளார். நேர்மறையான மாற்றத்தை ஊக்குவிக்கும் வகையிலும் போதைப்பொருள் இல்லாத வாழ்க்கை முறையை மேம்படுத்துவதையும் இந்தப் பாடல் நோக்கமாக கொண்டுள்ளது. போதைப் பொருள் மூலம் நடக்கும் குற்றங்களைத் குறைக்கவும் சமூகத்தின் பாதுகாப்பை வளர்ப்பதிலும் தமிழ்நாடு குற்றப் புலனாய்வுத் துறையின் பங்கு (டிஎன் சிஐடி) போற்றுதலுக்கு உரியது. சமூகத்திற்கு அவர்களின் குறிப்பிடத்தக்க பங்களிப்பை அங்கீகரிக்கும் வகையில், இந்த முயற்சியை TN CIDக்கு மிகுந்த மரியாதையுடன் அர்ப்பணிக்கிறோம். ‘லைஃப் இருக்கு டிரக்ஸ் எதற்கு’ என்பது வெறும் பாடல் என்பதையும் தாண்டி, இதனை செயல்படுத்த வேண்டும் என்பதற்கான உணர்ச்சிமிக்க அழைப்பு. அழுத்தமான பாடல்…
Read Moreகிராமத்து மண் வாசனையுடன் மீண்டும் ஒரு காதல் கதையைப் பேசும் “வட்டார வழக்கு”
பொதுவாக பிராந்தியத்தை சார்ந்த படங்களும், வட்டாரத்தை சார்ந்த படங்களும், அதன் வட்டார மொழிகளும் வெகு ஜனங்களை சேரும் அதன் மூலம் பெரும் வெற்றி பெறும் என்பது திரை உலகத்தினுடைய நம்பிக்கை. இதன் சான்றாக பல திரைப்படங்கள் வெளிவந்து மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. மதுரா டாக்கீஸ் மற்றும் ஆஞ்சநேயா புரொடெக்ஷன்ஸ் K.கந்தசாமி மற்றும் K. கணேசன் வழங்கும் இயக்குனர் கண்ணுச்சாமி ராமச்சந்திரன் இயக்கத்தில் (To – Let திரைப்படத்தின் புகழ் சந்தோஷ் நம்பிராஜன் மற்றும் ரவீனா ரவி நடித்து வரும் டிசம்பர் 29 ஆம் தேதி வெளியாக உள்ள ‘வட்டார வழக்கு’ திரைப்படம் இத்தகைய கதையம்சம் மற்றும் கள அம்சம் கொண்ட படம் ஆகும். 1962 லிருந்து இன்னும் வளராம இருக்கும் கிராமமா? “வட்டார வழக்கு என்ற திரைப்படம் வெளிவந்து உங்களை ஆச்சரியத்தில் ஆழ்த்த…
Read More”அயலான்” திரைப்படத்தில் இணைந்த சித்தார்த்
நடிகர் சிவகார்த்திகேயனின் ‘அயலான்’ திரைப்படத்திற்கு ‘சித்தா’ நடிகர் சித்தார்த் குரல் கொடுத்துள்ளது படத்திற்கு கோல்டன் டச் கொடுத்துள்ளது! நடிகர் சிவகார்த்திகேயனின் ஃபேண்டஸி என்டர்டெய்னர் திரைப்படமான ‘அயலான்’ அதன் அறிவிப்பில் இருந்தே ரசிகர்களிடம் பெரும் எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தி இருக்கிறது. இந்தப்படம் 2024 பொங்கல் பண்டிகைக்கு உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியிட தயாராகி வரும் நிலையில், படக்குழு ‘தி வாய்ஸ் ஆஃப் அயலான்’ பற்றிய ஒரு அற்புதமான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இது குறித்தான அறிவிப்பு வெளியானதில் இருந்தே சமூகஊடக தளங்களில் ரசிகர்கள் தொடர்ந்து பல பெயர்களை யூகித்து சொல்லி வந்தனர். அப்படி இருக்கும்போது ‘அயலான்’ கதாபாத்திரத்திற்கு நடிகர் சித்தார்த் குரல் கொடுத்திருக்கிறார் என்ற அறிவிப்பு ரசிகர்களை உற்சாகமடையச் செய்துள்ளது. சித்தார்த்தின் குரலில் அயலானைப் பார்க்க ஆர்வமுடன் இருப்பதாக ரசிகர்கள் தெரிவித்து வருகின்றனர். நடிகர் சிவகார்த்திகேயனின் ஈர்ப்பு, ரகுல் ப்ரீத் சிங்கின்…
Read More