ஆத்மீகா பட விமர்சனம்

ஷிவானி ஸ்டுடியோஸ் தயாரிப்பில் தாமோதரன் செல்வகுமார் இயக்கத்தில் ஆனந்த் நாக் நாயகனாக நடித்திருக்கும் திரைப்படம் “ஆத்மிகா”.  மெடிக்கல் மாபியாவின் பின்னணியில் விஞ்ஞான மருத்துவம் எப்படியெல்லாம் தவறான முறையில் கையாளப்படுகிறது. இதனால் பொதுமக்கள் எதிர்காலத்தில் என்ன மாதிரியான பிரச்சனைகளை சந்திக்க இருக்கிறார்ர்கள் என்கின்ற எச்சரிக்கை மணியை ஒலிக்கவிடுகிறது “ஆத்மிகா”.

தமிழ் சினிமா உலகில் வளர்ந்து வரும் நாயகனான ஆனந்த் நாக் இப்படத்தில் நாயகனாக நடித்திருக்கிறார். ஐஸ்வர்யா நாயகியாக நடிக்க, இவர்களுடன் ஜீவா ரவி, பிர்லா போஸ், வினிதா, பேபி அக்‌ஷயா மற்றும் பல முக்கிய பிரபலங்கள் இப்படத்தில் நடித்திருக்கிறார்கள். வெறும் துணைக் கதாபாத்திரமாக மட்டுமில்லாமல், சில சவாலான கதாபாத்திரங்களை ஏற்று துணிச்சலாகவும் நடித்திருக்கிறார்கள்.

இப்படத்தை சஸ்பென்ஸ் த்ரில்லர் படமாக இயக்கியிருக்கிறார் தாமோதரன் செல்வகுமார். சஸ்பென்ஸ் த்ரில்லராக இருந்தாலும் படத்தில் ஆக்‌ஷன் காட்சிகளுக்கும் குறையில்லை. விஞ்ஞான மருத்துவம் தவறானவர்களின் கைகளில் சிக்கி, தவறான பாதைகளில் பயணிக்கத் துவங்கினால் அது பொதுமக்களின் வாழ்க்கையில் என்ன மாதிரியான பின் விளைவுகளை ஏற்படுத்தும் என்னும் கருத்தை முன்வைத்து தாமோதரன் செல்வகுமார் இப்படத்தை இயக்கியிருக்கிறார்.  முதல் படத்திலேயே பொதுநல சிந்தனையோடு படம் எடுக்கத் துணிந்திருக்கும் தாமோதரன் செல்வகுமாருக்கு வாழ்த்துக்கள்.

சமீபத்தில் திரையரங்குகளில் வெளியான ஆத்மிகா திரைப்படம் பொதுமக்கள் இடையே நல்ல வரவேற்ப்பை பெற்று வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது. திரையரங்குகளில் படம் பார்த்து வெளிவரும் மக்கள்,  இதெல்லாம் உண்மையாகவே நடந்தால் நாம் என்ன செய்யப் போகிறோம் என்பதான விவாதங்களில் ஈடுபடுவதை நம்மால் கேட்க முடிகிறது. இதுவே இப்படத்தின் வெற்றியை பறைசாற்றுவதாக அமைந்திருக்கிறது.  .

இப்படத்தின் இயக்குனர்  தாமோதரன் செல்வகுமார் ஏற்கெனவே  மூடர் என்ற குறும்படத்தை இயக்கி சிறந்த இயக்குனர்  மற்றும் சிறந்த வசன கர்த்தா என இரண்டு ஆசிய விருதுகள் பெற்றவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

கொரோனா வருவதற்கு முன்பே கொரோனாவை பற்றி குறும்பட மாக எடுத்து மக்களை எச்சரிப்பதைப் போல் அக்குறும்படத்தை வெளியிட்டு இருந்தார்கள்.  தற்போது அந்த எபெக்ட் ஆத்மீகா படத்திலும் தொடர்வதை கண்கூடாகப் பார்க்க முடிகிறது.  ஆத்மீகா படத்தில் உள்ள காட்சிகள் நிஜத்தில்  நடைபெறுமோ என்ற பரபரப்பையும்,  சர்ச்சையையும் கிளப்பி கொண்டு இருக்கிறது என்று சொன்னால் அது மிகையாகாது.

கலைசக்தியின் ஒளிப்பதிவு விஞ்ஞான ரீதியான மெடிக்கல் மாபியா திரைப்படத்திற்கு தேவையான இருண்மையையும் ஒளியையும் ஒருசேர காட்சிகளில் கடத்தியிருக்கிறது.  எடிட்டர் ராஜேஷ். காட்சி களை சஸ்பென்ஸ் உடையாமல்  அழகாக கோர்த்திருக்கிறார். இசையமைப்பாளர் சரண்குமார் தன் பங்கிற்கு காட்சிகளுக்கு த்ரில்லர் எஃபெக்ட் தந்து காட்சிகளை ரசிக்கும்படி மாற்றியிருக்கிறார்.

கண்டிப்பாக இந்த வாரம் வெளியான படங்களில், “ஆத்மிகா” திரைப்படம் மெடிக்கல் மாபியா பின்னணியில் நடக்கும் விபரீதங்களை, மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தும் விதத்தில் பேசிய வகையில் கவனம் ஈர்க்கும் திரைப்படமாக அமைந்திருக்கிறது.

Related posts

Leave a Comment