”தமிழ் படங்கள் கதாநாயகிகளுக்கு வலிமையான கதாபாத்திரம் கொடுக்கின்றன” – மேகா ஷெட்டி

தனது நேர்த்தியான வசீகரத்தாலும் பன்முகத் திறனாலும் பார்வையாளர்களைக் கவரும் திறன் கொண்ட நடிகைகள் மிகக் குறைவு. அப்படியான நடிகைகள் திரையில் பார்வையாளர்கள் எளிதில் தங்களுடன் தொடர்புப்படுத்திக் கொள்ளும்படியான பக்கத்து வீட்டுப் பெண் கதாபாத்திரங்களை சிரமமின்றி நடிப்பார்கள். தமிழ் மொழியின் மீதான அவர்களின் தேர்ச்சி ரசிகர்களுக்குப் பிடித்திருப்பது மட்டுமல்லாமல், அவர்களது தொடர் முயற்சிகளும் ரசிகர்கள் மத்தியில் பாராட்டுகளையும் அங்கீகாரத்தையும் பெற்றுத் தந்தது. தமிழ் அல்லாது வேறு மொழிகளில் இருந்து தமிழ் சினிமாவுக்கு வந்த ஜோதிகா, நஸ்ரியா மற்றும் பலர் தங்கள் திறமையை வெளிப்படுத்தி வெற்றியை ருசித்திருக்கிறார்கள். இந்த வரிசையில் தமிழ் சினிமாவுக்கான புதுவரவாக நடிகை மேகா ஷெட்டி இணைந்துள்ளார். கன்னட சினிமாவில் இருந்து வந்த மேகா ஷெட்டி, சினிமா கலையின் மீதான தனது அசைக்க முடியாத ஆர்வத்தை பல்வேறு தருணங்களில் வெளிப்படுத்தியுள்ளார். அவர் தொலைக்காட்சி சீரியல் மூலம் தனது…

Read More

கோலாகலமாக துவங்கிய ஏ ஆர் முருகதாஸ், சிவகார்த்திகேயன் இணையும் புதிய படம்.

தமிழ் திரையுலகின் அடுத்த பிரம்மாண்டம், யில் உருவாகும் புதிய திரைப்படம்,  ஶ்ரீ லக்‌ஷ்மி மூவிஸ் நிறுவனத்தின் தயாரிப்பில், தமிழ்த் திரையுலகின் ப்ளாக்பஸ்டர் இயக்குநர் ஏ ஆர் முருகதாஸ் இயக்கத்தில், நட்சத்திர நடிகர் சிவகார்த்திகேயன் நடிக்கும் திரைப்படம் கோலாகலமாகத் துவங்கியுள்ளது. படக்குழுவினர் மற்றும் திரையுலக விருந்தினர்கள் கலந்து கொள்ள நேற்று பூஜை  நடந்த நிலையில், இன்று படப்பிடிப்பு கோலாகலமாகத் துவங்கியுள்ளது. தமிழ் திரையுலகில், பல ப்ளாக்பஸ்டர் படங்களைத் தந்து,  பிரம்மாண்ட கமர்ஷியல் படங்களுக்கு புதிய இலக்கணம் தந்த இயக்குநர் ஏ ஆர் முருகதாஸ் இயக்கத்தில் முன்னணி நட்சத்திர நடிகர் சிவகார்த்திகேயன் நடிக்கும், இந்த ஆக்சன் படத்தின் அறிவிப்பே, ரசிகர்களுக்கு உற்சாகம் தந்தது. இந்நிலையில் தற்போது படப்பிடிப்பு பணிகள் துவக்கப்பட்ட அதிகாரப்பூர்வ செய்தி, ரசிகர்களுக்குப் பெரிய விருந்தாக அமைந்துள்ளது. இயக்குநர் ஏ ஆர் முருகதாஸ் வித்தியாசமான களத்தில், தனது முத்திரையுடன்…

Read More

மம்முட்டி நடிக்கும் நைட் ஷிப்ட் ஸ்டுடியோஸின் அடுத்த ஹாரர் த்ரில்லர் பிரமயுகம்

  கடந்த ஐந்து தசாப்தங்களாக சினிமாவில் தனக்கான இடத்தை அழுத்தமாக பதிய வைத்து ஈடு இணையற்ற நடிகராக வலம் வருகிறார் நடிகர் மம்முட்டி. அவரது வரவிருக்கும் ‘பிரமயுகம்’ திரைப்படத்தில் இதுவரை இல்லாத அளவில் மிரட்டலான அவதாரத்தில் பார்வையாளர்களைக் கவர உள்ளார். நைட் ஷிப்ட் ஸ்டுடியோஸ் மற்றும் ஒய் நாட் ஸ்டுடியோஸ் இணைந்து தயாரித்த இந்த ‘பிரமயுகம்’ படத்தை, ‘பூதகாலம்’ புகழ் ராகுல் சதாசிவன் எழுதி இயக்கியுள்ளார். இப்படம் பிப்ரவரி 15ஆம் தேதி மலையாளத்தில் உலகளவில் திரைக்கு வருகிறது. தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடம் ஆகிய மொழிகளில் ஒரே நேரத்தில் முன்பு இந்தப் படம் வெளியாகத் திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால், இதன் ஒரிஜினல் வெர்ஷனை முதலில் பார்வையாளர்கள் அனுபவிக்க வேண்டும் என்ற கோரிக்கையின் காரணமாக முதலில் மலையாளத்தில் மட்டுமே வெளியாகிறது. படக்குழுவினரும் இதன் அசல் பதிப்பு ரசிகர்களிடம் வரவேற்பு பெறும்…

Read More

உருகி உருகி காதலித்தவர் சொல்ற மெசெஜ்-ஆ இது…!!!???

விஜய் ஸ்ரீ ஜி இயக்கத்தில் அதிரடி ஆக்ஷன் வேடத்தில் நடிகர் மோகன் ரீ-என்ட்ரி கொடுக்கும் ‘ஹரா’ படம் ஏப்ரல் மாதம் வெளியாகிறது இந்த நிலையில் தன் அடுத்த படத்தின் தலைப்பு “காதலிச்சா கல்யாணம் பண்ணக்கூடாது” என்று காதலர் தினத்தை முன்னிட்டு இன்று வெளியிட்டார். ஏப்ரல் மாதம் பூஜையுடன் படப்பிடிப்பு தொடங்குகிறது. சென்னை, கோவை, கோவா, மலேசியா போன்ற இடங்களில் படப்பிடிப்பு நடத்த திட்டமிட்டு, தீபாவளி வெளியீட்டுக்கு தயாராகிறது.

Read More

லவ் டுடே புகழ் “மாமா குட்டி”-யிலிருந்து வந்த “மாமா குட்டிமா” பாடல் புரோமோ வெளியானது

‘தேனிசைத் தென்றல்’ தேவா குரலில் ஸ்ரீகாந்த் தேவா இசையில் கவிஞர் பொத்துவில் அஸ்மின் வரிகளில் “மாமாகுட்டிமா” பாடல் புரோமோ வெளியானது. தனியிசை பாடல்கள் மூலமாகவும் தமிழ் திரைப்பட பாடல்கள் வாயிலாகவும் உலகெங்கும் உள்ள தமிழர்கள் மனங்களில் இடம் பிடித்துள்ள இலங்கை கவிஞர் பொத்துவில் அஸ்மின் எழுதிய புதிய ஆல்பம் பாடல் “மாமாகுட்டிமா” புரோமோ வெளியாகியுள்ளது. லண்டனைச் சேர்ந்த தொழிலதிபரும் சமூக சேவகருமான DR. மாலாகுமார் தனது மாலாகுமார் படைப்பகத்தின் சார்பில் தயாரித்துள்ள இந்த பாடலினை சமீபத்தில் தேசிய விருது பெற்ற இசையமைப்பாளர் ஶ்ரீகாந்த் தேவா இசையமைத்துள்ளார். இந்த உற்சாகமிக்க பாடலை அவரது தந்தையும் பிரபல இசையமைப்பாளருமான தேவா தனது காந்த குரலில், பிரத்யேக ஸ்டைலில் பாடியுள்ளார். விஜய் ஆண்டனி நடித்த’ நான்’ திரைப்படத்தில் இடம்பெற்ற ‘தப்பெல்லாம் தப்பே இல்லை’ பாடலின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான கவிஞர்…

Read More

”குழந்தைகளுக்கு நல்ல உணவை அறிமுகம் செய்கிறோமா? என்பது தான் கேள்வி.” – நாயகன் ஆரி

நடிகர் ஆரி தான் நடிக்கும் அடுத்த படத்தின் படப்பிடிப்பு தளத்தில் இயற்கையான உணவுகளை விளம்பரப்படுத்தினார். மெட்ராஸ் டெக் என்டர்டெயின்மென்ட் பிரைவேட் லிமிடெட் வழங்கும் ‘புரொடக்ஷன் நம்பர் ஒன்’ திரைப்படத்தின் படப்பிடிப்பு தளத்தில் நாயகன் ‘ஆரி அர்ஜுனனி’ன் பிறந்தநாள் விழா இயற்கை சிறுதானியங்களால் ஆன கேக் வெட்டி கொண்டாடப்பட்டது. இப்படத்தில் நாயகியாக லஷ்மி மேனன் நடிக்கிறார். முக்கிய கதாபாத்திரத்தில் ‘ப்ளாக்’பாண்டி, ஷெர்லி பபித்ரா,கனிமொழி, ‘மைம்’கோபி ஆகியோர் நடிக்கிறார்கள். இப்படத்தின் கதை, திரைக்கதை,வசனம் எழுதி இயக்குகிறார் ராஜசேகர பாண்டியன், தயாரிப்பு பணிகளை அருணாச்சலம் மேற்கொள்கிறார். மதுரையில் விறுவிறுப்பாக நடைபெற்றுக் கொண்டிருக்கும் இப்படத்தின் படப்பிடிப்பில் நடிகர் ஆரி அர்ஜுனனின் பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது. இயற்கை உணவை எப்போதும் போற்றும் விதமாக ‘ மாறுவோம் மாற்றுவோம் அறக்கட்டளை ‘ சார்பாக தொடர்ச்சியாக உணவு சார்ந்த விழிப்புணர்வை ஏற்படுத்தி வரும் நடிகர் ஆரி அர்ஜுனன்…

Read More

”Valentine’s Day Cheers” – சொன்ன படக்குழு

அப்புக்குட்டி கதையின் நாயகனாக நடிக்கும் “பிறந்தநாள் வாழ்த்துகள்” படக்குழுவினர், காதலர் தினத்தில் தங்கள் படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை மிகவும் வித்தியாசமான முறையில், Valentine’s Day Cheers என வெளியிட்டுள்ளனர்! ராஜு சந்திரா எழுதி இயக்கியிருக்கும் “பிறந்தநாள் வாழ்த்துகள்” படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளது. தேசிய விருது பெற்ற அப்புக்குட்டி இப்படத்தில் கதையின் நாயகனாக நடித்துள்ளார். இப்படத்தை பிளான் த்ரீ ஸ்டுடியோஸ் பிரைவேட் லிமிடெட் சார்பில், ரோஜி மேத்யூ, ராஜு சந்திரா இருவரும் தயாரிக்க, மாதன்ஸ் குழுமம் இணைந்து தயாரித்துள்ளது. மலையாள நடிகை ஐஸ்வர்யா அனில், இப்படத்தின் மூலம் தமிழில் கதையின் நாயகியாக அறிமுகம் ஆகிறார். ஸ்ரீஜா ரவி மற்றும் ரோஜா மேத்யூ முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளனர். மலையாளத்தில் விமர்சன ரீதியாகப் பலரின் பாராட்டுகளை பெற்ற ஜிம்மி இ வீட்டின்ட ஐஸ்வர்யம்’ ‘ஐ ஆம் ஏ பாதர்’ என…

Read More

மீண்டும் பட்டித்தொட்டி எங்கும் ஒலிக்கப் போகும் “பேட்டராப்”

90-களில் இளைஞர்களை ஆடவைத்த “பேட்டராப்” பாடலை நம்மால் மறக்க முடியாது. நடன புயல் “இந்தியன் மைக்கேல் ஜாக்சன்” “பிரபுதேவாவின்” அதிரடி நடனத்தில் இயக்குனர் “SJ Sinu” இயக்கத்தில்‌ “பேட்டராப்” என்ற திரைப்படம் பிரம்மாண்டமாக தயாராகிக் கொண்டிருக்கிறது. இன்று Feb 14 பிரபலங்கள் தங்கள் டிவிட்டர், இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பேட்டராப் திரைப்படத்தின்‌ “FIRST LOOK” போஸ்டர் பகிர்ந்துள்ளார்கள். திரைப்படத்தைக் குறித்து இயக்குனர் SJ Sinu கூறுகையில் பிரபுதேவா உடன் ஜோடி சேர்ந்திருக்கும் வேதிகா, அவருடன் போட்டி போட்டு நடனத்தில் கலக்கியிருக்கிறார் மற்றும் இமான் இசையில் பத்து பாடல்கள் ரசிகர்களை திரையரங்குகளில் ஆடவைக்கும், குடும்பங்கள் கொண்டாடும் இளைஞர்களின் படமாக வந்திருப்பதாக கூறினார். BLUE HILL FILMS BANNER-ல் ஜோபி பி சாம் தயாரிக்க, SJ Sinu இயக்கியிருக்கிறார். கதை திரைக்கதையை எழுதியிருப்பது தினில் பி.கே, ஜித்து தாமோதர் ஒளிப்பதிவு பணிகளை கவனிக்க,…

Read More

நடிகர் விஜய்சேதுபதி வெளியிட்டுள்ள நடிகை கயல் ஆனந்தியின் ‘ஒயிட் ரோஸ்’ படத்தின் முதல் பார்வை!

பூம்பாரை முருகன் புரடக்‌ஷன்ஸ் தயாரிப்பில், அறிமுக இயக்குநர் ராஜசேகர் இயக்கத்தில் கயல் ஆனந்தி கதாநாயகியாக நடித்திருக்கும் திரில்லர் படம் ’ஒயிட் ரோஸ்’. இதில் நடிகர் ஆர் கே சுரேஷ் மாறுபட்ட வில்லனாக நடித்துள்ளார். இவர்களுடன் விஜித், புதுமுகம் ரூசோ ஸ்ரீதரன், சசிலயா, கணேஷ், ராமநாதன் மற்றும் பலர் நடித்துள்ளனர். சமீபத்தில் இதன் படப்பிடிப்பு முடிவடைந்துள்ளது. படத்தின் போஸ்ட் புரொடக்சன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் வேளையில் இதன் முதல் பார்வை போஸ்டரை நடிகர் விஜய்சேதுபதி வெளியிட்டுள்ளார். வித்தியாசமான கதைகளைத் தேர்ந்தெடுத்து நடித்து வரக்கூடிய கயல் ஆனந்தியின் ‘ஒயிட் ரோஸ்’ படத்தின் முதல் பார்வை ரசிகர்கள் மத்தியில் கூடுதல் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. நடிகர் விஜய்சேதுபதி முதல் பார்வையை வெளியிட்டு படக்குழுவினருக்குத் தனது வாழ்த்துகளையும் கூறியுள்ளார். இக்கதையில் காவல் கட்டுபாட்டு மையம் முக்கிய பங்கு வகுக்கிறது. அது தத்ரூபமாக இருக்கவேண்டும்…

Read More

எழுத்தாளனாக விரும்பும் இளைஞனாக வெற்றி நடிக்கும் “ஆலன்”

3S பிக்சர்ஸ் சார்பில் சிவா R தயாரித்து இயக்க, வெற்றி நாயகனாக நடிப்பில் மனதை மயக்கும் ரொமான்ஸ் டிராமாவாக உருவாகிவரும் திரைப்படம் ஆலன். தமிழகம் மட்டுமல்லாது இந்தியாவின் பல பகுதிகளில் படமாக்கப்பட்ட இப்படத்தின் படப்பிடிப்பு முழுமையாக நிறைவுற்றதாக படக்குழு அறிவித்துள்ளது. ஒரு முழுமையான ரொமான்ஸ் படமாக மட்டுமல்லாமல் வாழ்வின் அழகை சொல்லும் ஒரு அழகான டிராமாவாக இப்படம் உருவாகியுள்ளது. ஆலன் என்பதன் பொருள் படைbபாளி. சிறுவயதில் இருந்தே எழுத்து மீது ஆர்வம் கொண்டு எழுத்தாளனாகும் கனவில் வாழும் ஒருவன், அவனின் பதினைந்தாம் வயதில் நடக்கும் ஒர் எதிர்பாராதா நிகழ்வு. அவனின் காதல் 40 வரையிலான அவனது வாழ்வின் பயணம் தான் இப்படம். வாழ்வின் எதிர்பார நிகழ்வுகள், ஒரு நதியாக அது அடித்துச் செல்லும் பயணம், காதல் ஆன்மீகம் எழுத்து என ஒரு ஆத்மார்த்தமான படைப்பாக இப்படத்தை எழுதி…

Read More