‘விருபாக்ஷா’ மற்றும் ‘ப்ரோ’ ஆகிய படங்களின் பிளாக்பஸ்டர் வசூல் வேட்டைகளைத் தொடர்ந்து, மெகா சுப்ரீம் ஹீரோ சாய் துர்கா தேஜ் தனது அடுத்த படத்தை துவங்கியுள்ளார். அறிமுக இயக்குநர் ரோஹித் KP இப்படத்தை இயக்குகிறார். பிரைம்ஷோ என்டர்டெயின்மென்ட் சார்பில் தயாரிப்பாளர்கள், K.நிரஞ்சன் ரெட்டி மற்றும் சைதன்யா ரெட்டி ஆகியோர் இப்படத்தை பெரும் பொருட்செலவில் தயாரிக்கின்றனர். படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பை, அட்டகாசமான போஸ்டர் மூலம் படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர். கண்ணிவெடிகளால் சூழப்பட்ட ஒரு பாலைவனத்தின் மத்தியில் தனித்த பச்சை மரத்தைக் கொண்டுள்ள போஸ்டர், ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்று வருகிறது. இந்தப் படம் மிகப்பெரிய பட்ஜெட்டில் பிரம்மாண்டமாக உருவாகவுள்ளது. இந்த அதிரடி- பீரியட் – ஆக்சன் திரைப்படத்தில் சாய் துர்கா தேஜ் ஒரு சக்திவாய்ந்த பாத்திரத்தை ஏற்று நடிக்கவுள்ளார். முதல் ஷெட்யூலுக்காக பிரத்யேகமாக அமைக்கப்பட்ட பிரமாண்ட செட்டில், தற்போது…
Read MoreMonth: June 2024
பிரபுதேவாவின் பேட்ட ராப் பட டீஸரை வெளியிட்டார் விஜய் சேதுபதி
நடன இயக்குநரும், முன்னணி நட்சத்திர நடிகருமான பிரபுதேவா கதையின் நாயகனாக முதன்மையான கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் ‘பேட்ட ராப்’ எனும் திரைப்படத்தின் டீசர் வெளியிடப்பட்டிருக்கிறது. இதனை ‘மக்கள் செல்வன்’ விஜய் சேதுபதி சமூக வலைதள பக்கத்தில் வெளியிட்டு, படக் குழுவினருக்கு வாழ்த்து தெரிவித்திருக்கிறார். இயக்குநர் எஸ் ஜே சினு இயக்கத்தில் உருவாகி இருக்கும் ‘பேட்ட ராப்’ எனும் திரைப்படத்தில் பிரபுதேவா, வேதிகா, சன்னி லியோன், ரியாஸ் கான், மைம் கோபி, ரமேஷ் திலக், பகவதி பெருமாள், விவேக் பிரசன்னா உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். பி கே தினில் கதை எழுதி இருக்கும் இந்த திரைப்படத்திற்கு ஜித்து தாமோதர் ஒளிப்பதிவு செய்ய, டி. இமான் இசையமைத்திருக்கிறார். A.R மோகன் கலை இயக்கத்தை கவனிக்க பட தொகுப்பு பணிகளை நிஷாத் யூசுப் மேற்கொண்டிருக்கிறார். இன்னிசையுடன் கூடிய ஆக்சன் என்டர்டெய்னராக தயாராகி…
Read Moreடிஸ்னி ஹாட் ஸ்டாரில் குடும்பங்களின் அமோக வரவேற்பில் “அரண்மனை 4”
இந்தியாவின் முன்னணி ஸ்ட்ரீமிங் தளமான டிஸ்னி+ ஹாட்ஸ்டார், இந்த ஆண்டின் மிகப்பெரிய தமிழ் பிளாக்பஸ்டரான இயக்குநர் சுந்தர் சியின் “அரண்மனை 4” திரைப்படத்தை தற்போது ஸ்ட்ரீமிங் செய்து வருகிறது. திரையரங்குகளில் தவறவிட்டவர்கள் தற்போது குடும்பத்தோடு வீட்டில் அமர்ந்தபடியே டிஸ்னி+ ஹாட்ஸ்டாரில் “அரண்மனை 4” திரைப்படத்தை கண்டுகளிக்கலாம். சூப்பர்ஹிட் ஹாரர் காமெடி ஜானரில் அரண்மனை படத்தொடரின் தொடர்ச்சியாக வெளியான இந்தப் படத்தில், சுந்தர் சி உடன் நடிகைகள் தமன்னா, ராஷி கண்ணா மற்றும் நடிகர் யோகி பாபு ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். கமர்ஷியல் எண்டர்டெய்னர்களை ரசிகர்கள் கொண்டாடும் வகையில் உருவாக்குவதில் மாஸ்டர் என்று அறியப்பட்ட சுந்தர் சி மீண்டும் ஹாரர் காமெடியில் ஒரு அழுத்தமான கதையுடன் இப்படத்தைத் தந்துள்ளார். அரண்மனை 4 முந்தைய படங்களின் கதைக்களத்திலிருந்து மாறுபட்டு, ஒரு புத்துணர்ச்சியூட்டும் புதிய கதைக்களத்தில், ரசிகர்களை ஒரு…
Read Moreமிகப் பிரம்மாண்டமான ஆக்ஷன் அவதாரத்தில் சன்னி தியோல் நடிக்கும் SDGM படம் ஜூன் 22 முதல் துவங்குகிறது !!
இந்தியாவையே தன் கதர் 2 படம் மூலம் திரும்பிப் பார்க்க வைத்த பாலிவுட் நட்சத்திர நடிகர் சன்னி தியோல், தன் அடுத்த படத்தைத் துவக்கியுள்ளார். 40 வருடங்களைக் கடந்து, 100 படங்களை நோக்கி முன்னெறி வரும் சன்னி தியோல் ஆக்சன் அதிரடி படங்கள் மூலம் பெரும் ரசிகர் பட்டாளத்தைச் சேர்த்து வைத்துள்ளார். இவரது அடுத்த படம், மிகப்பெரும் பிரமாண்ட படைப்பாக உருவாகிறது. நவீன் யெர்னேனி, மைத்ரி மூவி மேக்கர்ஸ் Y ரவிசங்கர் மற்றும் பீப்பிள் மீடியா ஃபேக்டரியின் TG விஸ்வ பிரசாத் ஆகியோர் இணைந்து பிரமாண்டமாகத் தயாரிக்க, பிளாக்பஸ்டர் இயக்குநர் கோபிசந்த் மலினேனி இப்படத்தை இயக்குகிறார். கிராக் மற்றும் வீர சிம்ஹா ரெட்டி ஆகிய இரண்டு தொடர்ச்சியான பிளாக்பஸ்டர்களை வழங்கிய இயக்குநர் கோபிசந்த் மலினேனி, #SDGM திரைப்படத்தை, முழுமையான கமர்ஷியல் அம்சங்களுடன் அதிரடி ஆக்ஷன் என்டர்டெய்னராக…
Read Moreஇசையமைப்பாளர் சதீஷ்நாதன் இசையில் வெளியாகவிருக்கும் ”வா தளபதி” பாடல்
தளபதி விஜய் அவர்களின் கோடான கோடி ரசிகர்கள் ஒருவரான, வளரும் இசையமைப்பாளர் சதீஷ் நாதனின் இசையில் தளபதியின் பிறந்தநாளை முன்னிட்டு வரும் 21.6.2024 அன்று மாலை 6 மணி அளவில் ஒரு ரசிகனின் கனவாக #வாதளபதிவா என்ற தலைப்பில் பாடல் வெளியாகிறது. தளபதியின் கடின உழைப்புக்கும், அவரின் வெற்றிக்கும், என்னையும் சேர்த்து கோடான கோடி ரசிகர்களின் அரவணைப்புக்கும் இந்த பாடலை அர்ப்பணிக்கிறேன். இப்பாடலை திரைப்பட பாடலாசிரியர் கருணாகரன் எழுதியிருக்கிறார், மற்றும் திரைப்பட பாடகர், வேலு மற்றும் தீத்யா , பவன் குழுவினர்கள் இப்பாடலை பாடி இருக்கிறார்கள். வரும் 21ஆம் தேதி அன்று திரை பிரபலங்கள் இப்பாடலை தங்களது சமூக வலைதளத்தில் பகிரவும் இருக்கிறார்கள்.
Read Moreநடிகர் விஷால் தமிழக அரசுக்கு கோரிக்கை
கள்ளக்குறிச்சி மாவட்டம் கருணாபுரம் பகுதியில் விஷச் சாராயம் குடித்து உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை உயர்ந்துகொண்டே போவது பேரதிர்சியை ஏற்படுத்தியுள்ளது. தமிழ்நாட்டில் விஷச் சாராயத்திற்கு பலி ஆகும் நிகழ்வும் போதை பொருட்கள் அதிகரித்து வருவதும் தொடர் கதையாகவே உள்ளது. சம்பந்தப்பட்ட சில அதிகாரிகளை இடம் மாற்றம் செய்து தமிழக அரசு முதற்கட்ட நடவடிக்கை எடுத்து இருந்தாலும் இந்த துயரமான நிகழ்விற்கு காரணமான ஒருவர் கூட விடுபடாத அளவிற்கு நீதியின் முன் நிறுத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும். “கையறி யாமை உடைத்தே பொருள்கொடுத்து மெய்யறி யாமை கொளல்.” என்ற வள்ளுவனின் வாக்குக்கு இணங்க தமிழ்நாடு அரசு விஷச் சாரயத்தை ஒழிக்கவும், சமீப நாட்களாக தமிழகத்தில் புழங்கும் போதை பொருட்களை முற்றிலும் ஒழிப்பதிலும், மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. மு.க.ஸ்டாலின் அவர்கள் கடந்த சட்டமன்ற தேர்தலில் வாக்குறுதி அளித்த மதுபான கடைகளை…
Read Moreடிஸ்னி + ஹாட் ஸ்டாரில் யோகிபாபு – வாணி போஜன் நடிப்பில் ”சட்னி – சாம்பார்” வெஃப் சீரிஸ்
டிஸ்னி+ ஹாட்ஸ்டார், ஹாட்ஸ்டார் ஸ்பெஷல்ஸ் ‘சட்னி – சாம்பார்’ சீரிஸின் ஃபர்ஸ்ட் லுக்கை வெளியிட்டது !! இந்தியாவின் முன்னணி ஸ்ட்ரீமிங் தளமான டிஸ்னி+ ஹாட்ஸ்டார், நடிகர் யோகி பாபுவின் நடிப்பில், அதன் அடுத்த ஹாட்ஸ்டார் ஸ்பெஷல்ஸ் சீரிஸான ‘சட்னி – சாம்பார்’ சீரிஸின் ஃபர்ஸ்ட் லுக்கை வெளியிட்டுள்ளது. தமிழ் திரையுலகில் ‘மொழி’ திரைப்படம் முதலாக, அழுத்தமான அதே நேரம் நகைச்சுவை மற்றும் பொழுதுபோக்கு அம்சங்களுடன் கூடிய தரமான படைப்புகளைத் தந்த இயக்குநர் ராதா மோகன் இயக்கத்தில் ‘சட்னி-சாம்பார்’ சீரிஸ் உருவாகியிருப்பதால், ரசிகர்கள் மத்தியில் இந்த சீரிஸ் பெரும் எதிர்பார்ப்பை தூண்டியுள்ளது. நடிகர் யோகி பாபு முதன்மைப் பாத்திரத்தில் நடிக்க, அவருடன் நடிகை வாணி போஜன் இணைந்து நடித்துள்ளார். ஒரு ஒரிஜினல் வெப் சீரிஸில் யோகி பாபு நாயகனாக நடிப்பது இதுவே முதல் முறையாகும். தற்போது வெளியிடப்பட்டுள்ள ஃபர்ஸ்ட்…
Read Moreகெளதம் மேனனின் இன்ஸ்டா ரீலுக்கு என்ன அர்த்தம்
“வாரணம் ஆயிரம்”, “காக்க காக்க”, “மின்னலே”, “விண்ணைத்தாண்டி வருவாயா”, “வேட்டையாடு விளையாடு” போன்ற காலத்தால் அழியாத கிளாசிக் படைப்புகளைத் தந்த இயக்குநர் கௌதம் வாசுதேவ் மேனன் சமூக வலைத்தளத்தில் ஒரு பதிவை போட்டுள்ளார். பிரபல நகைச்சுவை நடிகர் யோகி பாபுவுடன் இருக்கும் விடியோவை பகிர்ந்து, தனது அடுத்த படைப்பு குறித்து மறைமுகமாக ஒரு குறிப்பை எழுதியுள்ளார். மம்முட்டியுடன் கௌதம் மேனன் இணையும், அவரது முதல் மலையாளத் திரைப்படம் தாமதமாவதாக வந்த தகவல்களைத் தொடர்ந்து, தற்போது இந்த அறிவிப்பு வெளிவந்துள்ளது. இயக்குநர் கௌதம் மேனன் சமீபத்தில் தனது இன்ஸ்டாகிராமில் ஒரு சுவாரஸ்யமான வீடியோவை வெளியிட்டார். அந்த வீடியோவில், கௌதம் மேனன், யோகி பாபு மற்றும் சோஷியல் மீடியா இன்புளுயன்சர் பால் டப்பா ஆகிய மூவரும், ஒரு படப்பிடிப்பு தளத்தில் காரில் அமர்ந்துகொண்டு வைப் செய்கின்றனர். 1986 ஆம் ஆண்டு…
Read Moreஐந்து முருக பக்தர்களின் வாழ்க்கையில் நடைபெற்ற உண்மை சம்பவங்களின் அடிப்படையில் உருவாகும் ஆன்மீகப்படம்
முருகக் கடவுள் எப்போது யாரை ஆட்கொள்வார் என்பது யாருக்கும் தெரியாது. அவ்வாறு ஆட்கொள்ளப்பட்ட ஒருவரை பற்றி தான் நாம் இப்போது பார்க்க போகிறோம். வலதுசாரி அரசியல்வாதியாகவும் திரைப்பட தயாரிப்பாளர், நடிகர் மற்றும் விநியோகஸ்தராகவும் பரபரப்பாக இயங்கி வந்த ஜெ எஸ் கே கோபி என்று அழைக்கப்படும் ஜெயம் எஸ் கே கோபி, இன்று ஒரு முழு நேர முருக பக்தர். தமிழ் கடவுளான ஆறுமுகனின் புகழை தனது இடைவிடாத செயல்பாடுகள் மூலமும் சமூக ஊடகங்கள் வாயிலாகவும் அகிலமெங்கும் பரப்பி வரும் ஜெயம் கோபியின் வாழ்க்கை பயணத்தை மாற்றி அமைத்தது 2023ம் ஆண்டு செப்டம்பரில் நண்பருடன் அவர் மேற்கொண்ட இமயமலை பயணம் தான். இதைத்தொடர்ந்து முருகரின் மகிமைகள் குறித்து தொடர்ந்து பேட்டிகள் அளித்து வந்த ஜெயம் கோபி, திடீரென்று ஒரு நாள் முருகர் உத்தரவிட்டதாக கூறி அரசியலில் இருந்து…
Read Moreவாழ்த்துக்களை பரிமாறிக் கொண்ட ஹரா படத்தின் தயாரிப்பாளர்கள்
விஜய் ஸ்ரீ ஜி இயக்கத்தில் கோயம்புத்தூர் எஸ் பி மோகன் ராஜ் தயாரிப்பில் எல்மா பிக்சர்ஸ் என் எத்தில்ராஜ் வெளியீட்டில் ‘வெள்ளி விழா நாயகன்’ மோகன் நடிப்பில் ஜூன் 7 அன்று உலகெங்கும் வெளியான ‘ஹரா’, திரையரங்குகளில் தொடர்ந்து வசூல் சாதனை படைத்து வருகிறது. திரைக்கு வந்து இரண்டு வாரங்களுக்கு பிறகும் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கும் ‘ஹரா’, அனைத்து தரப்பு ரசிகர்களை குறிப்பாக பெண்கள் மற்றும் இளம் தலைமுறையினரை ஈர்த்து வருகிறது. இதன் மூலம் இன்றும் அவர் ‘வெள்ளி விழா நாயகன்’ தான் என்பதை மோகன் நிரூபித்துள்ளார். தொடக்கத்தில் தமிழகத்தில் 150-க்கும் மேற்பட்ட திரையரங்குகளில் வெளியான ‘ஹரா’, ரசிகர்களின் வரவேற்பை தொடர்ந்து இன்னும் அதிகமான திரைகளில் திரையிடப்பட்டது. இது தவிர மலேசியா, ஐரோப்பா, லண்டன் மற்றும் இலங்கை உள்ளிட்ட பகுதிகளிலும் இத்திரைப்படம் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.…
Read More