‘விடுதலை’ பிறகு, ’ஜமா’ படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்ததில் மகிழ்ச்சி – நடிகர் சேத்தன்

நடிகர் சேத்தன் பல்வேறு வகையான கதாபாத்திரங்களில் தனது நடிப்புத் திறமையை வெளிப்படுத்தி வருபவர். சின்னத்திரையில் மக்கள் மனங்களைக் கவர்ந்தவர், ‘விடுதலை பார்ட் 1’ உள்ளிட்ட திரைப்படங்களில் தனது அட்டகாசமான நடிப்பால் பாராட்டுகளைப் பெற்றார். இதனை அடுத்து இவர் நடித்திருக்கும் திரைப்படம் ‘ஜமா’. வரும் ஆகஸ்ட் 2, 2024 அன்று வெளியாக இருக்கும் இந்தப் படம் குறித்து அவர் பல்வேறு விஷயங்களை பகிர்ந்து கொண்டார். நடிகர் சேத்தன் கூறும்போது, ”இதுபோன்ற அற்புதமான திரைப்படத்தை உருவாக்கிய பாரி இளவழகன் மற்றும் எஸ்எஸ்பிவி லேர்ன் அண்ட் டீச் புரொடக்‌ஷன் பிரைவேட் லிமிடெட் தயாரிப்பாளர்கள் இருவரையும் முதலில் பாராட்டுகிறேன். கோல்ட்- ப்ளெட்டட் க்ரைம்-த்ரில்லர் அல்லது மேற்கத்திய கருப்பொருளை கதைக்களமாகத் தேர்ந்தெடுப்பது பல புது இயக்குநர்களின் பொதுவான நடைமுறையாகிவிட்ட நிலையில், நமது கலாச்சாரத்தின் நெறிமுறை அழகியலை கதையாக்கிய பாரியின் துணிச்சலான முடிவு தனித்துவமானது. ஒரு…

Read More

ஜோ படத்தின் வெற்றிக்குப் பிறகு ரியோ- மாளவிகா மனோஜ் ஜோடி நடிக்கும் ரொமான்ஸ் திரைப்படத்தின் படப்பிடிப்பு இனிதே நிறைவு!!

ட்ரம்ஸ்டிக்ஸ் புரொடக்ஸன்ஸ் தயாரிப்பில், ஜோ படத்தின் வெற்றிக்குப் பிறகு ரியோ- மாளவிகா மனோஜ் ஜோடி மீண்டும் இணைந்து நடிக்க, புதுமுக இயக்குனர் “பிளாக்‌ஷிப்” கலையரசன் தங்கவேல் இயக்கத்தில் உருவாகும் ரொமான்ஸ் திரைப்படத்தின் படப்பிடிப்பு இனிதே நிறைவடைந்துள்ளது. திருமணமான ஆண்களின் பிரச்சினைகளை பெண்களும் ஏற்றுக்கொள்ளும்படியாக சொல்லும், ரொமான்ஸ் காமெடி ஜானரில், அனைத்து தரப்பினரும் ரசிக்கும் படியான கமர்ஷியல் படமாக இப்படம் உருவாகிறது. ரியோ- மாளவிகா மனோஜ் முதன்மைக் கதாபாத்திரங்களில் நடிக்க பிளாக்‌ஷிப் ஆர்.ஜே.விக்னேஷ் , ஷீலா ராஜ்குமார், டைரக்டர் ஏ.வெங்கடேஷ், Stills பாண்டியன், ஜென்சன் திவாகர் , ஆகியோர் முக்கிய கதாப்பாத்திரங்களில் இணைந்து நடித்துள்ளனர். மாதேஷ் மாணிக்கத்தின் ஒளிப்பதிவு , சித்துகுமார் இசை, வருண் கே.ஜி.யின் எடிட்டிங், வினோத் ராஜ்குமாரின் கலையமைப்பு , சந்துருவின் டிசைன், மீனாட்சியின் ஆடை வடிவமைப்பு , என ஒரு மெகா இளைஞர்கள் கூட்டணி…

Read More

மிகப்பெரிய பான் இந்திய சூப்பர் ஸ்டாராக ஜொலிக்கும் பெல் ஸ்டார் பிரபாஸ் – பாகுபலி முதல் கல்கி வரை !!

கல்கி கி.பி 2898 இல் நடித்த இந்தியாவின் சூப்பர்ஸ்டார் அமிதாப் பச்சன், பிரபாஸை ‘கடவுளுக்கு நிகரானவர்’ என்று அழைத்தது, ​​​​ பிரபாஸுக்கு கிடைத்த மிகப்பெரிய பாராட்டாகும். சமீபமாக பிரபாஸின் அபரிமிதமான புகழ் பிராந்திய எல்லைகளைக் கடந்து இந்தியா முழுமைக்குமான ஒரு மறுக்க முடியாத சூப்பர்ஸ்டாராக மாற்றியுள்ளது. படமோ தலைப்போ பிரமாண்டமோ, எதுவும் முக்கியமில்லை, பிரபாஸ் எனும் வெறும் பெயர் மட்டுமே திரையரங்கிற்குக் கூட்டம் கூட்டமாக ரசிகர்களைக் குவிக்கிறது. மிகக்குறைந்த பப்ளிசிட்டியுடன் அதிக கூட்டத்தை வரவழைக்கும் பிரபாஸின் திறமை, அவரது நட்சத்திர பலத்திற்குச் சான்றாகும். சமீபத்தில் அவர் நடித்த “கல்கி” திரைப்படம் இதற்கு ஒரு சிறந்த உதாரணமாகும். ஒரே ஒரு விளம்பர நிகழ்வில் பங்கேற்ற போதிலும், திரைப்படம் மிகப்பெரிய அன்பையும் வரவேற்பையும் பெற்றது, நடிகரின் ஈடு இணையற்ற செல்வாக்கை அடிக்கோடிட்டுக் காட்டுகிறது. இந்த நிகழ்வு இந்தியாவில் மட்டும் அல்ல;…

Read More

ராயன் விமர்சனம் : ரணகளம் செய்யும் தனுஷ்

கதை… தனுஷ் சந்திப் கிஷன் காளிதாஸ் மற்றும் துஷாரா விஜயன் ஆகிய நால்வரும் அண்ணன் தங்கை.. சிறுவயதிலேயே இவர்கள் பெற்றோரை இழந்து விட்டதால் தன் தம்பிகளையும் தங்கையையும் பாதுகாப்பாக பார்த்து வளர்த்து வருகிறார் தனுஷ்.. இவர்களின் நிலை அறிந்த செல்வராகவன் அவர் குடும்பத்திற்கு உதவுகிறார்.. இதனால் செல்வா மீது தனுஷ் மிகப்பெரிய மரியாதை வைத்திருக்கிறார்.. தந்தை ஸ்தானத்திலிருந்து செய்து வருகிறார்.. இவர்கள் இரவு நேர ஃபாஸ்ட் ஃபுட் உணவகம் நடத்தி வாழ்ந்து வருகின்றனர் காளிதாஸ் கல்லூரியில் படிக்கும் மாணவன் ஆனால் சந்திப் தவறான பழக்க வழக்கங்களால் நிறைய பிரச்சனைகளை வீட்டிற்கு கொண்டு வருகிறார்.. இதனால் அடிக்கடி அண்ணன் தனுஷுக்கும் தம்பி சந்திப்புக்கும் மோதல்கள் வெடிக்கிறது. ஒரு கட்டத்தில் குடித்துவிட்டு பாரில் பிரச்சனை செய்யும் போது தவறுதலாக வில்லன் சரவணன் மகனை கொன்று விடுகிறார் சந்தீப். இதனால் சரவணன்…

Read More

யோகி பாபு நடிப்பில், “சட்னி சாம்பார்” டிஸ்னி+ ஹாட்ஸ்டார் சீரீஸ்: தனித்துவமான விளம்பரங்கள் ..!

யோகிபாபு நடிப்பில், “சட்னி சாம்பார்” சீரிஸிற்கான டிஸ்னி+ ஹாட்ஸ்டாரின் தனித்துவமான விளம்பரங்கள் பார்வையாளர்களின் கவனத்தை ஈர்க்கின்றது. இந்தியாவின் முன்னணி ஸ்ட்ரீமிங் தளமான டிஸ்னி+ ஹாட்ஸ்டார், இயக்குநர் ராதாமோகனின் இயக்கத்தில், ரசிகர்களின் எதிர்பார்ப்பைத் தூண்டியிருக்கும் ‘சட்னி – சாம்பார்’ சீரிஸை, ஜூலை 26 முதல் ஸ்ட்ரீமிங் செய்யத் தொடங்கியுள்ளது. இந்நிலையில் தற்போது இந்த சீரிஸின் சாராம்சத்தை படம்பிடித்து காட்டும் வகையில், ஒரு பெப்பி ராப் பாடலை வெளியிட்டுள்ளது. நடிகர் யோகி பாபு முதல் முறையாக ஒரு முழு நீள வெப் தொடரில் கதாநாயகனாக நடிக்கிறார், ஆதலால் இந்த வெப் சீரிஸ் ரசிகர்கள் மற்றும் பார்வையாளர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. வழக்கமான ராதாமோகன் பாணியில் சிரிப்பு சரவெடி நிறைந்த ஒரு அழுத்தமான பொழுதுபோக்கு குடும்ப சித்திரமாக இந்த சீரிஸ் உருவாகியுள்ளது. இதயம் கவரும் இந்த பெப்பி ராப் பாடல்,…

Read More

திரில்லர் டிராமா “மெட்ராஸ்காரன்”  திரைப்பட டீசர் வெளியீட்டு விழா  !!

நடிகர்கள் ஷேன் நிகம், கலையரசன், நிஹாரிகா நடிப்பில்,  இயக்குநர் வாலி மோகன் தாஸ் இயக்கும் புதுமையான திரில்லர் டிராமா “மெட்ராஸ்காரன்”  திரைப்பட டீசர் வெளியீட்டு விழா  !! SR PRODUCTIONS சார்பில் B.ஜெகதீஸ்  தயாரிப்பில், ரங்கோலி பட இயக்குநர்  வாலி மோகன் தாஸ் இயக்கத்தில், மலையாள நடிகர் ஷேன் நிகம், கலையரசன், நிஹாரிகா நடிப்பில், புதுமையான ஆக்சன் டிராமாவாக உருவாகியுள்ள திரைப்படம் “மெட்ராஸ்காரன்”. விரைவில் திரைக்கு வரவுள்ள இப்படத்தின் டீசர் வெளியீட்டு விழா சென்னையில் படக்குழுவினருடன் திரைப்பிரபலங்கள் கலந்துகொள்ள, பத்திரிக்கை ஊடக நண்பர்கள் முன்னிலையில் நடைபெற்றது. இந்நிகழ்வினில்… தயாரிப்பாளர் B.ஜெகதீஸ்  பேசியதாவது… நம் மெட்ராஸின் அடையாளம் எல்லா ஊர்க்காரரும் இங்கு இருப்போம், எல்லா ஊர்க்காரரும் வேலை பார்ப்போம், அதே போல் இந்த மெட்ராஸ்காரனில் எல்லாமே இருக்கிறது. எந்த ஒரு தயாரிப்பாளரும் முழு கதை கேட்டுத் தான் ஒகே…

Read More

360 டிகிரி வடிவிலான மேடையில் நேரலையாக இசை நிகழ்ச்சி நடத்தும் யுவன் சங்கர் ராஜா !!!

  இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜாவின் பாடல்கள் எவர் கிரீன் ஹிட் என்பதை இசை ரசிகர்கள் நன்கு அறிவர். இரண்டு தலைமுறைகளாக தமிழ் திரையிசையுலகில் முன்னணி இசையமைப்பாளராக வெற்றிகரமாக வலம் வரும் யுவன் சங்கர் ராஜா திரைப்படங்களுக்கு மட்டுமல்லாமல்… அவ்வப்போது ரசிகர்களுக்கு நேரலையாக இசை நிகழ்ச்சியை நடத்தி அற்புதமான இசை அனுபவத்தை வழங்கி வருகிறார். உலகின் பல்வேறு நாடுகளில் இசை நிகழ்ச்சிகளை நடத்திய யுவன் சங்கர் ராஜா தற்போது ‘U1 லாங் டிரைவ் லைவ் இன் கான்செர்ட்’ எனும் பெயரில் சென்னையில் உள்ள நந்தனம் ஒய் எம் சி ஏ மைதானத்தில் நேரலையாக இசை நிகழ்ச்சியை நடத்துகிறார். இந்த இசை நிகழ்ச்சியை இசை துறையில் சிறந்து விளங்கும் பல்வேறு முன்னணி இசையமைப்பாளர்கள் மற்றும் முன்னணி இசைக் கலைஞர்களுடன் இணைந்து இந்தியா மற்றும் சர்வதேச நாடுகளில் இசை நிகழ்ச்சி…

Read More

‘லவ் இன்சூரன்ஸ் கம்பெனி’ (LIK) படத்தின் டைட்டில் மற்றும் ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு!

7 ஸ்கிரீன் ஸ்டுடியோ லலித் குமார் – இயக்குநர் விக்னேஷ் சிவன் – பிரதீப் ரங்கநாதன் கூட்டணியில் தயாராகும் புதிய படத்திற்கு “லவ் இன்சூரன்ஸ் கம்பெனி’ (LIK) என பெயரிடப்பட்டு, அதன் டைட்டில் மற்றும் ஃபர்ஸ்ட் லுக் வெளியிடப்பட்டிருக்கிறது. இயக்குநரும், நடிகருமான பிரதீப் ரங்கநாதனின் பிறந்த நாளை முன்னிட்டு அவர் நடிக்கும் புதிய படத்தின் டைட்டில் மற்றும் ஃபர்ஸ்ட் லுக் வெளியிடப்பட்டிருக்கிறது. இயக்குநர் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் உருவாகி வரும் ‘லவ் இன்சூரன்ஸ் கம்பெனி’ (LIK) எனும் திரைப்படத்தில் பிரதீப் ரங்கநாதன், எஸ் ஜே சூர்யா, சீமான், கிரித்தி ஷெட்டி, யோகி பாபு, ஆனந்த் ராஜ், மாளவிகா, சுனில் ரெட்டி உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். சத்யன் சூரியன் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு அனிருத் ரவிச்சந்தர் இசையமைத்திருக்கிறார். படத்தொகுப்பு பணிகளை பிரதீப் ஈ. ராகவ் மேற்கொண்டிருக்கிறார்.‌ இன்றைய…

Read More

ஹலிதா ஷமீமின் “மின்மினி” டிரைலர் மற்றும் இசை வெளியீட்டு விழா!

  ஸ்டேஜ் அன்ரியல், பேபி ஷூ புரொடக்ஷன்ஸ் & ஆங்கர் பே ஸ்டுடியோஸ் வழங்கும் ஹலிதா ஷமீம் இயக்கத்தில், கதிஜா ரஹ்மான் கௌரவ் காளை, எஸ்தர் அனில் மற்றும் பலர் நடித்துள்ள ’மின்மினி’ திரைப்படம் ஆகஸ்ட் மாதம் வெளியாகிறது. படத்தின் டிரெய்லர் மற்றும் ஆடியோ வெளியீட்டு விழா இன்று நடைபெற்றது. இயக்குநர் நித்திலன் சுவாமிநாதன், “‘மின்மினி’ படத்தின் பாடல்கள், டிரெய்லர் எல்லாமே சூப்பராக உள்ளது. பெரிய மெனக்கெடல் இந்தப் படத்திற்கு தேவைப்படுகிறது. ஹலிதா படங்களின் டைட்டிலுக்கு நான் மிகப்பெரிய ரசிகன். சில்லுக்கருப்பட்டி, மின்மினி என டைட்டில் எல்லாமே ஹைக்கூ போல இருக்கும். படத்தில் நடித்திருக்கும் நடிகர்கள், ரஹ்மான் சார் குடும்பத்தின் இசை இளவரசி கதிஜாவுக்கும் வாழ்த்துக்கள்” என்றார். ஒளிப்பதிவாளர், தயாரிப்பாளர் மனோஜ் பரமஹம்சா, “ஆட்டோ சங்கர் எடுத்தபோது என்னைப் பலரும் திட்டினார்கள். ஆனால், அதற்கு பதிலடியாக நிச்சயம்…

Read More

‘அந்தகன் ஆந்தம்’ ப்ரமோ பாடல் வெளியீடு!!!

‘டாப் ஸ்டார்’ பிரசாந்த் கதையின் நாயகனாக முதன்மையான கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் ‘அந்தகன் – தி பியானிஸ்ட்’ திரைப்படத்தினை ரசிகர்களிடத்தில் பிரபலப்படுத்தும் வகையில் இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் இசையில், இசையமைப்பாளரும், பின்னணி பாடகருமான அனிருத் மற்றும் ‘மக்கள் செல்வன்’ விஜய் சேதுபதி ஆகியோர் பின்னணி பாட, ‘அந்தகன் ஆந்தம்’ எனும் ப்ரமோ பாடல் தயாராகி இருக்கிறது. இந்த பாடலின் உள்ளடக்கத்தை உருவாக்கி, காட்சிப்படுத்தியிருக்கிறார் ‘நடன புயல்’ பிரபுதேவா. இந்த பாடலை தளபதி விஜய் வெளியிட்டு, பட குழுவினருக்கு வாழ்த்து தெரிவித்திருக்கிறார். இதைத் தொடர்ந்து இந்தப் பாடலை அறிமுகப்படுத்தும் நிகழ்வு சென்னையில் நடைபெற்றது. இதன்போது இயக்குநர் தியாகராஜன், நடிகர் பிரசாந்த், இயக்குநர் – நடிகர் கே .எஸ். ரவிக்குமார், நடிகை ஊர்வசி, நடிகை பிரியா ஆனந்த், நடிகை வனிதா விஜயகுமார், நடிகர்கள் பூவையார், பெசன்ட் ரவி, ஆதேஷ் பாலா, மோகன்…

Read More