ஜேம்ஸ் கார்த்திக், இனியா, சோனியா அகர்வால் நடிக்கும் சமூகத்தின் ஏற்றத்தாழ்வை உரக்கப்பேசும் சீரன் திரைப்படம் விரைவில் வெளியாகிறது !! ஜேம்ஸ் கார்த்திக், M.நியாஸ் தயாரிப்பில், அறிமுக இயக்குநர் துரை K முருகன் இயக்கத்தில், ஜேம்ஸ் கார்த்திக் நாயகனாக அறிமுகமாகும் திரைப்படம் “சீரன்”. சமூகத்தின் ஏற்றத்தாழ்வுகளையும், மனிதனுக்கான சம உரிமைகளை உரக்கப்பேசும் ஒரு அழகான கமர்ஷியல் திரைப்படமாக உருவாகியுள்ள இப்படத்தின் அனைத்து பணிகளும் முடிந்த நிலையில் விரைவில் திரைக்கு வரவுள்ளது. தன் வாழ்வில் சந்தித்த உண்மைச் சம்பவத்தின் அடிப்படையில், இப்படத்தின் கதை, திரைக்கதை, வசனத்தை எழுதியுள்ளார் ஜேம்ஸ் கார்த்திக். மேலும் இப்படத்தை தயாரித்து, நாயகனாக நடித்துள்ளார். அறிமுக இயக்குநர் துரை K முருகன் இப்படத்தை இயக்கியுள்ளார். நம் சமூகத்தில் நிலவும் ஏற்றத்தாழ்வுகளின் மையம் தான் கதை. ஜாதி மாறி திருமணம் செய்து கொண்ட தம்பதியின் மகன் மறுக்கப்பட்ட தன்…
Read MoreMonth: July 2024
’சிங்காநல்லூர் சிக்னல்’ மூலம் 23 ஆண்டுகளுக்குப் பின்னர் இணையும் பிரபுதேவா – யுவன் கூட்டணி
முத்தமிழ் படைப்பகம் சார்பில் தயாரிப்பாளர் AJ பிரபாகரன் தயாரிப்பில், இயக்குநர் JM ராஜா இயக்கத்தில், பிரபுதேவா நடிப்பில், இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா இசையில், கலக்கலான காமெடி என்டர்டெயினராக உருவாகும் “சிங்காநல்லூர் சிக்னல்” படத்தின் பூஜை, படக்குழுவினர் கலந்துகொள்ள, இன்று கோலாகலமாகத் துவங்கியது. ஒரு டிராபிக் கான்ஸ்டபிள் வாழ்க்கையில் நடக்கும் சம்பவங்களை, கலக்கலான காமெடி கலந்து, அனைவரும் ரசிக்கும்படியான ஃபேமிலி என்டர்டெயினராக இப்படத்தை உருவாக்கவுள்ளார் இயக்குநர் JM ராஜா. நீண்ட இடைவேளைக்குப் பிறகு, இளமைத் துள்ளலுடன் சேட்டைகள் செய்யும், துறுதுறு பிரபுதேவா மாஸ்டரை இப்படத்தில் காணலாம். இப்படத்திற்கு இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார். பிரபுதேவா நடிப்பில் வெளியான “மனதை திருடிவிட்டாய்” படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்து இருந்தார். தற்போது 23 வருடங்களுக்குப் பிறகு பிரபுதேவா – யுவன் சங்கர் ராஜா கூட்டணி இப்படத்தின் மூலம்…
Read Moreநாயகனாக பிக்பாஸ் ராஜு அறிமுகமாகும் Gen Z தலைமுறை படம் ‘பன் பட்டர் ஜாம்’
இப்படத்தை Rain Of Arrows Entertainment சார்பில் சுரேஷ் சுப்ரமணியன் தயாரிக்கிறார். ‘எண்ணித்துணிக’ படத்தை அடுத்து இரண்டாவது படமாக இப்படத்தை தயாரிக்கிறார். ராஜூ நாயகனாக அறிமுகமாகும் இப்படத்தை ராகவ் மிர்தாத் இயக்குகிறார். இவர் ஏற்கனவே ‘சைஸ் ஜீரோ’ படத்திற்கு வசனமும், தேசியவிருது வென்ற ‘பாரம்’ படத்தில் திரைக்கதை மற்றும் வசனமும் எழுதி இருக்கிறார். ‘காலங்களில் அவள் வசந்தம்’ படம் மூலம் இயக்குநராக அறிமுகமான இவர் இயக்கும் இரண்டாவது படம் இது. பிக்பாஸ் புகழ் ராஜூ, ஆதியா பிரசாத் மற்றும் பவ்யா திரிகா நடிப்பில் இன்றைய Gen Z தலைமுறை ரிலேஷன்ஷிப்பை நகைச்சுவை ததும்பச் சொல்லும், அழகான டிராமாவாக உருவாகி வரும் திரைப்படம் ”பன் பட்டர் ஜாம்”. இப்படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு பணிகள் சென்னையில் தற்போது தீவிரமாக நடைபெற்று வருகிறது. இறந்தகால வலிகளின் சுமைகளுக்கும், எதிர்காலத்தைப் பற்றிய பயங்களுக்கும்…
Read Moreபுரட்சியும் காதலும் கலந்த ‘தி இந்தியா ஹவுஸ்’ படப்பிடிப்பு ஹம்பியில் துவங்கியது
‘குளோபல் ஸ்டார்’ ராம்சரண் & விக்ரம் ரெட்டியின் வி மெகா பிக்சர்ஸ் நிறுவனம் மற்றும் அபிஷேக் அகர்வால் ஆர்ட்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில், நிகில் சித்தார்த்தா நடிப்பில், ராம் வம்சி கிருஷ்ணா இயக்கத்தில் உருவாகும் பான் இந்திய திரைப்படமான ‘தி இந்தியா ஹவுஸ்’ படத்தின் தொடக்க விழா ஹம்பியில் பூஜையுடன் தொடங்கியது. இப்படத்தின் படப்பிடிப்பு இன்று முதல் தொடங்குகிறது. உலகளாவிய நட்சத்திர நடிகரான ராம் சரண் திரையரங்குகளுக்கு வருகை தரும் ரசிகர்களுக்கு வித்தியாசமான அனுபவத்தை வழங்கும் வகையில் திரைப்படங்களை தயாரிக்க திட்டமிட்டு, திரைப்பட தயாரிப்பில் களமிறங்கி இருக்கிறார். வி மெகா பிச்சர்ஸ் நிறுவனத்தின் சார்பில் தயாராகும் இந்த திரைப்படத்தை, யு வி கிரியேஷன்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பு பங்குதாரரான விக்ரம் ரெட்டி – ‘தி காஷ்மீர் ஃபைல்ஸ்’ , ‘கார்த்திகேயா 2’ ஆகிய வெற்றி பெற்ற திரைப்படங்களை தயாரித்த தயாரிப்பு…
Read Moreவசூலில் தொடர் சாதனை படைத்து வரும் பிரபாஸ்
பான் இந்திய நட்சத்திர நடிகரான பிரபாஸ், ‘பாகுபலி’ படத்தின் வெற்றிக்குப் பிறகு ரசிகர்களை திரையரங்கத்திற்கு கவர்ந்திழுத்து வசூலில் தொடர்ந்து சாதனை படைக்கும் நாயகனாக சரித்திரம் படைத்திருக்கிறார். அவர் நடிப்பில் வெளியான ‘கல்கி 2898 கிபி’ திரைப்படம் – வெளியான நான்கு நாட்களில் 555 கோடி ரூபாயை வசூலித்து புதிய சாதனையை படைத்திருக்கிறது. பிரபாஸ் நடிப்பில் வெளியாகும் திரைப்படங்களுக்கு ரசிகர்களிடையே பெரும் வரவேற்பு இருக்கிறது. ‘பாகுபலி’ படத்தில் பிரம்மாண்டமான வசூல் வெற்றிக்கு பிறகு பிரபாஸ் நடிப்பில் வெளியான ‘ சாஹோ’, :ராதே ஷ்யாம்’, ‘ஆதி புருஷ்’, ‘சலார் -பார்ட் 1’ என அனைத்து படங்களும் இருநூறு கோடி ரூபாய்க்கு மேல் வசூலித்தது. இதனால் இந்திய திரையுலகின் முன்னணி வசூல் நாயகன் என்ற பட்டத்தையும் அவர் வென்றிருக்கிறார். பிரபாஸ் நடிக்க ஒப்புக் கொள்ளும் கதாபாத்திரங்களுக்காக தன்னை அர்ப்பணித்துக் கொள்வதுடன், தயாரிப்பாளர்களின்…
Read Moreசென்னைஸ் அமிர்தா குழுமத்தின் புதிய ப்ராண்ட் அம்பாசிடர் நடிகை ஸ்ரீலீலா
நடிகை ஸ்ரீலீலாவை சென்னைஸ் அமிர்தா குழும தலைவர் பூமிநாதன் பிராண்ட் அம்பாசிடராக அறிவித்தார். சென்னை எம்.ஆர்.சி. நகரில் உள்ள லீலா பேலஸ் நட்சத்திர விடுதியில் நடைபெற்ற பிரமாண்ட நிகழ்ச்சியில் சென்னைஸ் அமிர்தா குழும நிறுவனங்களின் புதிய லோகோவை தலைவர் திரு.பூமிநாதன் மற்றும் நடிகை ஸ்ரீலீலா வெளியிட்டனர். மேலும் சென்னைஸ் அமிர்தா இன்டர்நேஷனல் ஏவியேஷன் கல்லூரிக்கான பிரத்யேக இணைய தளத்தையும் நடிகை ஶ்ரீலீலா தொடங்கி வைத்தார். அத்துடன் ஏவியேஷன் படிப்பில் இணைந்த முதல் 10 மாணவர்களுக்கு அனுமதி சான்றிதழ்களையும் ஶ்ரீலீலா தனது கரங்களால் வழங்கி சிறப்பித்தார். இந்நிகழ்ச்சியில், ஸ்ரீலீலாவின் திரைப்பயணம் மற்றும் அவரது திரையுலக வெற்றி தொடர்பான ஏ.வி. ஒளிபரப்பப்பட்டது. நிகழ்ச்சியில் உரையாற்றிய ஶ்ரீலீலா, மாணவர்களிடையே தலைமைப் பண்புகளை வளர்ப்பதற்கும், மேம்பாடு அடைந்துவரும் கேட்டரிங் துறையில், மாணவர்களின் வெற்றிக்கு தயார்படுத்தும் சென்னையின் அமிர்தாவின் செயல்பாடுகளை பாராட்டினார். சென்னைஸ் அமிர்தாவின்…
Read Moreபுனித் ராஜ்குமாரின் மைத்துனர் விஜயராகவேந்திரா நாயகனாக நடிக்கும் ‘தீராப்பகை”
ரசிகர்களால் பாராட்டப்பட்ட சிலந்தி, ரணதந்த்ரா, அருவா சண்ட மற்றும் இசைஞானி இளையராஜாவின் 1417 வது படமாக சமீபத்தில் வெளிவந்த ” நினைவெல்லாம் நீயடா” ஆகிய படங்களை இயக்கிய ஆதிராஜன், தற்போது தனது கோல்டன் மேஜிக் கிரியேட்டர் பட நிறுவனம் சார்பில் எழுதி இயக்கி தயாரித்திருக்கும் படம் ” தீராப்பகை”. கன்னட திரையுலகின் சூப்பர் ஸ்டாரான புனித் ராஜ்குமாரின் மைத்துனர் விஜயராகவேந்த்ரா இப்படத்தில் கதாநாயகனாக நடித்திருக்கிறார். தேசிய விருது பெற்ற இவர் தமிழில் “கேஸ் நம்பர் 13″, ” ஜோக் 101″ உட்பட 50 படங்களுக்கு மேல் நடித்துள்ளார். தன் நடிப்பாலும் கவர்ச்சியாலும் தென்னிந்திய ரசிகர்களின் உள்ளம் கவர்ந்த ஹரிப்ரியா நாயகியாக நடித்திருக்கிறார். நடிப்பிலும் கவர்ச்சியிலும் மிரட்டியிருக்கிறார் ஹரிப்ரியா. பிரம்மாண்டமான பார் செட்டில் படமாக்கப்பட்டுள்ள சரக்கு பாடலுக்கு பிரபல நடிகை மேக்னா நாயுடு படுகவர்ச்சியாக குத்தாட்டம் போட்டிருக்கிறார். இவர்களுடன்…
Read Moreகல்கி 2898 கிபி திரைப்படத்தை கொண்டாடும் ரசிகர்களால் அமோக வசூல் சாதனை
வைஜெயந்தி மூவிஸ் நிறுவனத்தின் பொன்விழா ஆண்டை முன்னிட்டு பிரம்மாண்டமான பொருட்செலவில் தயாரான திரைப்படம் ‘கல்கி 2898 கிபி’. ரசிகர்களின் பெரும் எதிர்பார்ப்பில் இருந்த இந்த திரைப்படம் ஜூன் 27 ஆம் தேதி அன்று உலகம் முழுவதும் நான்காயிரத்திற்கும் மேற்பட்ட திரையரங்குகளில் வெளியானது. வெளியான முதல் நாள் முதல் காட்சியிலேயே இத்திரைப்படம் ரசிகர்களின் மனதை வெகுவாக கவர்ந்தது. இதனால் இந்திய திரையுலகில் இதுவரை எந்த திரைப்படங்களும் நிகழ்த்தாத வகையில் இப்படம் வெளியான முதல் நாளே 191.5 கோடி ரூபாய் மேல் வசூலித்து புதிய சாதனையை படைத்திருக்கிறது. இரண்டாவது நாள் முடிவில் 298.5 கோடி வசூலித்து தொடர் சாதனையை படைத்துக் கொண்டிருக்கிறது. இயக்குநர் நாக் அஸ்வின் இயக்கத்தில் பிரபாஸ், அமிதாப்பச்சன், கமல்ஹாசன், தீபிகா படுகோன், திஷா படானி ஆகியோர் முதன்மையான வேடத்தில் நடித்திருக்கும் இந்த திரைப்படம்.. வசூல் ரீதியாகவும்,…
Read More