நடிகரும் தயாரிப்பாளருமான யாஷ், தயாரிப்பாளர் வெங்கட் கே. நாராயணா மற்றும் அவர்களது குடும்பத்தினருடன் கர்நாடகாவில் உள்ள பல கோயில்களுக்குச் சென்றதைக் காண முடிந்தது. நாள் முழுவதும், அவர்கள் ஸ்ரீ சதாசிவ ருத்ர சூர்யா கோயில், தர்மஸ்தலாவில் உள்ள ஸ்ரீ மஞ்சுநாதேஸ்வரர் கோயில் மற்றும் கர்நாடகாவில் உள்ள சுப்ரமண்யாவில் உள்ள குக்கே சுப்ரமண்யா கோயில் என பல கோயில்களில் வழிபாடு செய்தனர். இந்த எதிர்பாராத நிகழ்வு ரசிகர்களை உற்சாகப்படுத்தியுள்ளது. எந்தவொரு புதிய திரைப்படத்தையும் தொடங்குவதற்கு முன்பாக, கோயில்களுக்குச் செல்லும் யாஷின் சடங்குடன் இது ஒத்துப்போகிறது என்று குறிப்பிட்டு, ரசிகர்கள் தங்கள் மகிழ்ச்சியை பகிர்ந்து வருகின்றனர். படக்குழு உறுதிப்படுத்திய தகவலின் படி, கீது மோகன்தாஸ் இயக்கும் இப்படம் ஆகஸ்ட் 8, 2024 அன்று (8-8-8) பெங்களூரில் துவங்கவுள்ளது. இத்திரைப்படம் துவங்கும் தேதியின் கூட்டுத்தொகை 8-8-8 ஆகும். ராக்கிங் ஸ்டார் யாஷுக்கு…
Read MoreMonth: August 2024
தமிழ் மற்றும் தெலுங்கில் உருவாகும் ” Sweety Naughty ” படத்தின் படப்பிடிப்பு துவங்கியது!
Arun Visualz என்ற புதிய பட நிறுவனம் சார்பில் V. M.R.ரமேஷ், R. அருண் இருவரும் இணைந்து தமிழ் மற்றும் தெலுங்கு இரு மொழிகளில் பிரமாண்டாமாக தயாரிக்கும் படத்திற்கு ” Sweety Naughty ” என்று கலகலப்பான பெயரை வைத்துள்ளனர். சூப்பர் ஹிட் படமான உளவுத்துறை படத்தின் இயக்குனர் ரமேஷ் செல்வன் மற்றும் பல படங்களில் இணை இயக்குனராக பணியாற்றிய G. ராஜசேகர் இந்த படத்தை இயக்குகிறார். தமிழ் தெலுங்கு, ஹிந்தி உட்பட பல மொழி படங்களுக்கு ஒளிப்பதிவு செய்த பிரபல பான் இந்திய பெண் ஒளிப்பதிவாளர் C. விஜய ஸ்ரீ M. A. D. F. Tech இந்த படத்திற்கு ஒளிப்பதிவு செய்கிறார். ஜெயகுமார் கலை இயக்குனராக பணிபுரிகிறார். தெலுங்கில் 10 க்கும் மேற்பட்ட படங்களில் நாயகனாக நடித்ததோடு தமிழில் தங்கமகன், டெவில், கடாவர் போன்ற…
Read Moreதீரன் நடிக்கும் ‘சாலா’ டிரைலரை அல்லு அர்ஜுன் வெளியிட்டார்; டிரைலருக்கு ரசிகர்கள் வரவேற்பு
பீப்பிள் மீடியா ஃபேக்டரி T.G. விஷ்வபிரசாத் தயாரிப்பில் விவேக் குச்சிபொட்லா இணை தயாரிப்பில் ‘சாலா’; S.D. மணிபால் இயக்கத்தில் வட சென்னையில் உள்ள பிரபல மதுபானக் கூடத்திற்காக இரண்டு துருவங்கள் மோதிக் கொள்ளும் விறுவிறுப்பான திரைப்படம் உலகெங்கும் உள்ள திரையரங்குகளில் ஆகஸ்ட் 23 சாலா வெளியாகிறது Trailer Link: https://www.youtube.com/watch?v=cg41HyGEMuU&t=62s&pp=ygUNc2FhbGEgdHJhaWxlcg%3D%3D தெலுங்கு திரையுலகில் முன்னணி தயாரிப்பு நிறுவனமான பீப்பிள் மீடியா ஃபேக்டரி, ‘சாலா’ எனும் நேரடி தமிழ் படத்தை பிரம்மாண்டமாக தயாரித்துள்ளது. T.G. விஷ்வபிரசாத் தயாரிப்பில், விவேக் குச்சிபொட்லா இணை தயாரிப்பில் அறிமுக இயக்குநர் எஸ்.டி. மணிபால் இயக்கத்தில் உருவாகியுள்ள இத்திரைப்படம் வட சென்னையில் உள்ள பிரபல மதுபானக் கூடத்திற்காக இரண்டு துருவங்கள் மோதிக் கொள்ளும் போராட்டத்தை விறுவிறுப்பு குறையாமல் விவரிக்க உள்ளது. சமீபத்தில் வெளியாக இப்படத்தின் முதல் பார்வை பெரும் வரவேற்பை பெற்றதையடுத்து ‘சாலா’ டிரைலரை…
Read Moreகதை…. பிரவீன் கிஷோர் மற்றும் கௌரவ் காளை ஆகிய இருவரும் ஒரே பள்ளியில் ஒரே வகுப்பில் படிக்கும் மாணவர்கள்.. பிரவினை எப்போது கிண்டல் செய்யும் கௌரவ் பள்ளியில் திறமையான மாணவன். ஒருநாள் மாணவர்கள் அனைவரும் சுற்றுலா சென்று கொண்டிருக்கும்போது திடீரென விபத்து நடக்கிறது.. அப்போது சபரியை தன் உயிரைக் கொடுத்து காப்பாற்றுகிறார் கவுரவ்.. அப்போது நன்றி கூட சொல்ல முடியாமல் தவிக்கிறார் சபரி. இதனை எடுத்து தனது உயிரைக் காப்பாற்றிய நண்பனின் ஆசையை நிறைவேற்றம் வேண்டும் என முடிவெடுக்கிறார். பெரியவன் ஆன பிறகு இமயமலைக்கில் பைக்கில் பயணம் சென்று சிகரத்தை தொட நினைக்கிறார்.. இது ஒரு புறம் இருக்க மூளை சாவு அடைந்த கௌரவின் இதயத்தை நாயகி எஸ்தருக்கு பொருத்துகின்றனர்.. (பாரிமுகிலன்) கௌரவ் பள்ளியிலே தானும் படிக்க விரும்பி அங்கு சேர்கிறார் அப்போது சபரியின் நடவடிக்கைகளை பின்…
Read Moreபார்க் திரை விமர்சனம்.. பயமுறுத்தும் பார்க்
திருவண்ணாமலையில் ஒரு பூங்காவில் நடைபெறும் கதையாக இது உருவாக்கப்பட்டுள்ளது. கதை… திருவண்ணாமலையில் நாயகன் தமன் நாயகி ஸ்வேதா இருவரும் வசிக்கின்றனர்.. ஒரே ஊரில் வசிக்கும் போது அடிக்கடி சந்தித்துக் கொள்ளும் சூழ்நிலை ஏற்படுகிறது.. இதனை எடுத்து இருவருக்கும் காதல் பற்றிக் கொள்கிறது. பெற்றோர் சம்மதத்துடன் திருமண நிச்சயதார்த்தமும் நடக்கிறது.. திருமணத்திற்கு முன்பே இருவரும் ஒன்றாக ஊர் சுற்றிக் கொண்டிருக்கும்போது ஒரு நாள் இரவில் வில்லனால் இவர்களுக்கு பிரச்சினை ஏற்படுகிறது. நாயகி மீது ஆசைப்படும் வில்லன் அவளை அடைய நினைக்கிறான். இவர்களை துரத்தும் போது இவர்கள் ஜாலி பார்க் என்ற இடத்தில் தஞ்சம் அடைகின்றனர். அப்போது அங்கே இருக்கும் ஒரு காதல் ஜோடி பேய் இவர்கள் உடலில் புகுந்து விடுகிறது. அதன் பிறகு என்ன நடந்தது என்பது தான் மீதிக்கதை. நடிகர்கள்… ‘ஒரு நொடி’ பட நாயகன் தமன்…
Read Moreநீதி மன்றத்தில் வழக்கு நிலுவையில் இருக்கும் நிலையில் குத்தகை ஏலத்துக்கு வரும் பல கோடி மதிப்பு நிலம்!
ஏறக்குறைய 80 ஆண்டுகளாக தலைமுறை தலைமுறையாக குடியிருந்து வரும் மக்களின் உரிமை மற்றும் வாழ்வாதாரம் சம்பந்தமாக நீதி மன்றத்தில் வழக்கு நிலுவையில் இருக்கும் நிலையில் குத்தகை ஏலத்துக்கு வரும் பல கோடி மதிப்பு நிலம்! நீதி மன்றத்தில் வழக்கு நிலுவையில் இருக்கும் போது இது எப்படி சாத்தியம் என யோசிக்கிறீர்களா? உண்மை தான்… இப்படி ஒரு விவகாரம் திருவள்ளூர் மாவட்டம் பூந்தமல்லி வட்டம் அயனம்பாக்கம் கிராமத்தில் நாளை நடக்க இருக்கிறது அதுவும் மாவட்ட நடுவர் நீதி மன்ற நீதிபதி அந்தஸ்தில் உள்ளவர் இந்த குத்தகை ஏலத்தை நடத்தும் அதிகாரியாக இருக்கிறார் என்பது தான் இதில் அதிர்ச்சி. காரணம் சட்ட விதிகள் அனைத்தும் அறிந்தவர்கள் இப்படி செயல்பாட்டால் சாமானியனின் குரல் எங்கே எடுபடும். சரி விஷயத்துக்கு வருவோம்… திருவள்ளூர் மாவட்டம் பூந்தமல்லி வட்டம் அயனம்பாக்கம் கிராமத்தில் சுமார் 52…
Read Moreரியோ ராஜ் நடிக்கும் ‘ஸ்வீட் ஹார்ட்’ பட அப்டேட்
நடிகர் ரியோ ராஜ் கதையின் நாயகனாக முதன்மையான கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் ‘ஸ்வீட் ஹார்ட்’ எனும் திரைப்படத்தின் டப்பிங் பணிகள் தொடங்கி இருப்பதாக படக் குழுவினர் பிரத்யேக புகைப்படத்தை வெளியிட்டு உற்சாகத்துடன் அறிவித்துள்ளனர். அறிமுக இயக்குநர் ஸ்வினீத் எஸ். சுகுமார் இயக்கத்தில் உருவாகி இருக்கும் ‘ஸ்வீட் ஹார்ட்’ எனும் திரைப்படத்தில் ரியோ ராஜ், கோபிகா ரமேஷ், ரஞ்சி பணிக்கர், ரெடின் கிங்ஸ்லி, அருணாச்சலம், பௌசி, சுரேஷ் சக்கரவர்த்தி, துளசி உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். பாலாஜி சுப்பிரமணியம் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்திருக்கிறார். சிவசங்கர் கலை இயக்கத்தை மேற்கொள்ள, பட தொகுப்பு பணிகளை தமிழரசன் கவனிக்கிறார். காதலை கொண்டாடும் படைப்பாக தயாராகி இருக்கும் இந்தத் திரைப்படத்தை ஒய் எஸ் ஆர் ஃபிலிம்ஸ் நிறுவனம் சார்பில் இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா தயாரித்திருக்கிறார். இப்படத்தின் தலைப்பினை…
Read Moreஏஜிஎஸ் எண்டர்டெயின்மென்ட் பிரம்மாண்ட தயாரிப்பில் வெங்கட் பிரபு இயக்கத்தில் தளபதி விஜய் ‘கோட்’ இறுதி கட்ட பணிகள் மும்முரம்
தென்னிந்திய சினிமாவின் முன்னணி நிறுவனமான ஏஜிஎஸ் எண்டர்டெயின்மென்ட்டின் கல்பாத்தி எஸ். அகோரம், கல்பாத்தி எஸ். கணேஷ் மற்றும் கல்பாத்தி எஸ். சுரேஷ் ஆகியோரின் தயாரிப்பில் 25-வது திரைப்படமும் தளபதி விஜய்யின் 68-வது படமுமான ‘கோட்’ (‘தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம்’) படப்பிடிப்பு மற்றும் டப்பிங் நிறைவடைந்து இறுதி கட்டப் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. ரசிகர்களின் பெரும் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் வகையில் உலகெங்கும் உள்ள திரையரங்குகளில் செப்டம்பர் 5 அன்று வெளியாகிறது ‘கோட்’. இப்படத்திற்காக ஏஜிஎஸ் எண்டர்டெயின்மென்ட் நிறுவனத்துடன் இரண்டாவது முறையாகவும், இயக்குநர் வெங்கட் பிரபு உடன் முதல் முறையாகவும் இசை அமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜா உடன் இரண்டாவது முறையாகவும் தளபதி விஜய் இணைந்துள்ளது குறிப்பிடத்தக்கது. ரஷ்யா, தாய்லாந்து, இலங்கை, துனிசியா, தில்லி, ஹைதராபாத், புதுச்சேரி, கேரளா உள்ளிட்ட இடங்களில் நடைபெற்ற படப்பிடிப்பில்…
Read Moreமாஸ் நாயகன் என்டிஆர் ன் ’தேவாரா’ படத்தில் இருந்து இரண்டாவது சிங்கிள் ‘பத்தவைக்கும் பார்வைக்காரா!!
கொரட்டாலா சிவா இயக்கத்தில், மாஸ் நாயகன் என்டிஆர் நடிப்பில் உருவாகியுள்ள ’தேவாரா’ திரைப்படம் உலகம் முழுவதும் உள்ள பார்வையாளர்களை பிரம்மிப்பில் ஆழ்த்தும் வகையில் உருவாகி உள்ளது. என்டிஆர் ஆர்ட்ஸ் மற்றும் யுவசுதா ஆர்ட்ஸ் பேனரின் கீழ் தயாரிக்கப்பட்டிருக்கும் இந்தப் படத்தை நந்தமுரி கல்யாண் ராம் வழங்குகிறார். மிக்கிலினேனி சுதாகர் மற்றும் ஹரி கிருஷ்ணா கே ஆகியோர் இந்தப் படத்தின் தயாரிப்பாளர்கள். பாலிவுட் அழகி ஜான்வி கபூர் நாயகியாக நடித்திருக்க, மற்றொரு பாலிவுட் நட்சத்திரமான சைஃப் அலிகான் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் ரசிகர்களை மகிழ்விக்க உள்ளார். சமீபத்தில், இந்தப் படத்தில் இருந்து வெளியான ‘ஃபியர் சாங்’ ரசிகர்களின் வரவேற்பைப் பெற்று அனைத்து தளங்களிலும் டிரெண்டிங்கில் இருந்தது. இந்தப் பாடலில் என்டிஆர் மற்றும் ஜான்வி கபூர் இடையேயான கெமிஸ்ட்ரி ரசிகர்களை உற்சாகப்படுத்தியுள்ளது. இன்று, ’தேவாரா’வின் இரண்டாவது சிங்கிள் ’பத்தவைக்கும்…
Read More‘தங்கலான்’ இசை வெளியீட்டு விழா!!!
சீயான் விக்ரம் கதையின் நாயகனாக நடித்திருக்கும் ‘தங்கலான்’ படத்தின் இசை வெளியீடு சென்னையில் பிரம்மாண்டமாக நடைபெற்றது. இயக்குநர் பா. ரஞ்சித் இயக்கத்தில் உருவாகி இருக்கும் ‘தங்கலான்’ எனும் திரைப்படத்தில் சீயான் விக்ரம், பார்வதி, மாளவிகா மோகனன், பசுபதி, அரிகிருஷ்ணன், ஹாலிவுட் நடிகர் டேனியல் கால்டாகிரோன் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். ஏ. கிஷோர் குமார் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு ஜீ.வி. பிரகாஷ் குமார் இசையமைத்திருக்கிறார். இந்த திரைப்படத்தை ஸ்டுடியோ கிரீன் & நீலம் புரொடக்ஷன்ஸ் ஆகிய நிறுவனங்கள் இணைந்து தயாரித்திருக்கிறது. எதிர்வரும் 15 ஆம் தேதியன்று உலகம் முழுவதும் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி ஆகிய மொழிகளில் திரையரங்குகளில் வெளியாகவிருக்கும் இந்த திரைப்படத்தின் இசை வெளியீடு சென்னையில் உள்ள வர்த்தக மையத்தில் பிரம்மாண்டமாக நடைபெற்றது. இதன் போது படக்குழுவினருடன் நடிகர் சிவக்குமார்…
Read More