பார்க் திரை விமர்சனம்.. பயமுறுத்தும் பார்க்


திருவண்ணாமலையில் ஒரு பூங்காவில் நடைபெறும் கதையாக இது உருவாக்கப்பட்டுள்ளது.

கதை…

திருவண்ணாமலையில் நாயகன் தமன் நாயகி ஸ்வேதா இருவரும் வசிக்கின்றனர்.. ஒரே ஊரில் வசிக்கும் போது அடிக்கடி சந்தித்துக் கொள்ளும் சூழ்நிலை ஏற்படுகிறது.. இதனை எடுத்து இருவருக்கும் காதல் பற்றிக் கொள்கிறது.

பெற்றோர் சம்மதத்துடன் திருமண நிச்சயதார்த்தமும் நடக்கிறது.. திருமணத்திற்கு முன்பே இருவரும் ஒன்றாக ஊர் சுற்றிக் கொண்டிருக்கும்போது ஒரு நாள் இரவில் வில்லனால் இவர்களுக்கு பிரச்சினை ஏற்படுகிறது. நாயகி மீது ஆசைப்படும் வில்லன் அவளை அடைய நினைக்கிறான்.

இவர்களை துரத்தும் போது இவர்கள் ஜாலி பார்க் என்ற இடத்தில் தஞ்சம் அடைகின்றனர். அப்போது அங்கே இருக்கும் ஒரு காதல் ஜோடி பேய் இவர்கள் உடலில் புகுந்து விடுகிறது. அதன் பிறகு என்ன நடந்தது என்பது தான் மீதிக்கதை.

நடிகர்கள்…

‘ஒரு நொடி’ பட நாயகன் தமன் குமார் நடித்துள்ளார். நாயகியாக ஸ்வேதா டோரதி நடிக்க வில்லனாக யோகிராம் நடித்துள்ளார். பிளாக் பாண்டி, ரஞ்சனா நாச்சியார், கராத்தே ராஜா மற்றும் பலர் நடித்துள்ளனர்.

ஒரு நொடி படத்தில் கம்பீரக் காவலராக அசத்திய தமன்குமார் இதில் ஜாலியான சுறுசுறுப்பான இளைஞனாக கவர்கிறார்.. இடைவேளைக்கு முன்பு வரை ஆட்டம் பாட்டம் காதல் ரொமான்ஸ் என சுற்றித்திரிந்த இவர் இரண்டாம் பாதியில் பேயாக மிரட்டி இருக்கிறார்.

அழகான நாயகியாக ஸ்வேதா.. இவரது கண்களும் உதடுகளும் நம்மைப் பார்த்துக் கொண்டே இருக்கச் செய்கிறது.. இவரும் பேய்யான பிறகு முகத்தில் கரி பூசி விட்டார்கள்.. அதனால் அழகை ரசிக்க முடியவில்லை..

கொஞ்சம் காமெடி செய்து சிரிக்க வைக்க முயல்கிறார் நடிகர் பிளாக் பாண்டி.. இவர்களுடன் அழகான காவல் அதிகாரியாக ரஞ்சனா நாச்சியார் மிரட்டி இருக்கிறார்..

தொழில்நுட்ப கலைஞர்கள்…

பாண்டியன் குப்பன் ஒளிப்பதிவு செய்ய ஹமரா சி.வி. என்பவர் இசையமைத்திருக்கிறார்.

திருவண்ணாமலையின் அழகை அழகாகவே கொண்டு வந்திருக்கிற ஒளிப்பதிவாளர்.. கதையுடன் பயணிக்கும் இசையை கொடுத்திருக்கிறார் இசையமைப்பாளர்..

எடிட்டிங் குரு சூர்யா.. கலை இயக்கம் ஆர் வெங்கடேஷ்.. சுசித்ரா குரலில் ராபர்ட் மாஸ்டர் நடனமைத்த குத்தாட்ட பாடல் ரசிக்க வைக்கிறது.

ஈ.கே.முருகன் இயக்கியுள்ளார் . இவர் இயக்குநர் ஏ. வெங்கடேஷிடம் உதவி இயக்குநராக இருந்து சினிமா கற்றவர். அக்சயா மூவி மேக்கர்ஸ் சார்பாக லயன் நடராஜ் ‘பார்க்’ படத்தைத் தயாரித்துள்ளார்.

கதாநாயகியின் தந்தையாக நடித்துள்ளவர் தான் தயாரிப்பாளர் லயன் ஈ.நடராஜ்.

முதல் பாதியில் காதல் இரண்டாம் பாதியில் பேய் மிரட்டல் என வழக்கமான டெம்ப்ளேட் கதையை கொடுத்து இருக்கிறார் இயக்குனர்.. கதை போகும் போக்கை யூகிக்க முடிவதால் பெரிதான சுவாரஸ்யம் இல்லை. ஃப்ளாஷ் பேக்கில் வரும் காதலர்களுக்கு கூடுதல் காட்சிகள் கொடுத்து கதையில் திருப்புமுனை ஏற்படுத்திருக்கலாம்..

Related posts

Leave a Comment