ஸ்டுடியோ கிரீன் பிலிம்ஸ் தயாரிப்பாளர் கே. ஈ. ஞான வேல் ராஜா தயாரிப்பில், பா. ரஞ்சித் இயக்கத்தில் ‘சீயான்’ விக்ரம் நடிப்பில் வெளியான ‘தங்கலான்’ திரைப்படம் உலகளவில் நூறு கோடி ரூபாய் வசூலைக் கடந்து புதிய சாதனையை படைத்து வருகிறது. இயக்குநர் பா. ரஞ்சித் இயக்கத்தில் உருவான ‘தங்கலான்’ திரைப்படத்தில் சீயான் விக்ரம், பார்வதி, மாளவிகா மோகனன், பசுபதி, டேனியல் கால்டாகிரோன் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். கோலார் தங்க வயல் பின்னணியில் உருவான இந்த திரைப்படம் கடந்த நூற்றாண்டுகளில் வாழ்ந்த ஒடுக்கப்பட்ட மக்களின் யதார்த்த வாழ்வியலையும், ஆதிக்கத்திற்கு கட்டுப்பட்டு உரிமைகளுக்காக போராடிய அவர்களின் போராட்ட வாழ்வியலை மாய யதார்த்தம் மற்றும் புதுமையான திரை மொழியால் உருவாக்கப்பட்டிருந்தது. இதில் சீயான் விக்ரமின் அர்ப்பணிப்புடன் கூடிய கடின உழைப்பை கண்களை இமைக்க மறந்து, அகல விரித்து.. கண்டு ரசித்து, வியந்து…
Read MoreMonth: August 2024
சென்னையில் துவங்கும் கார்னர் சீட்ஸ் சர்வதேச திரைப்பட விழா 2024 . சினிமாவும் கற்றலும் சங்கமிக்கும் பெருவிழா!!
வீ எண்டர்டெயின்மென்ட்ஸ், பாரத் பல்கலைக்கழகத்தின் விசுவல் கம்யூனிகேஷன் துறை, மற்றும் ShortFlix OTT ஆகியவற்றின் ஒத்துழைப்புடன், கார்னர் சீட்ஸ் சர்வதேச திரைப்பட விழா 2024 ஐ பெருமையுடன் வழங்குகிறது. இந்த ஆண்டு விழா, ஆகஸ்ட் 30 மற்றும் 31, 2024 ஆகிய இரு நாட்களிலும், காலை 10:00 மணி முதல் மாலை 6:00 மணி வரை, பாரத் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் நடைபெறவுள்ளது. 242 நாடுகளிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட திரைப்படங்களின் இத்தொகுப்பில், மாணவர்களுக்கு உலக சினிமா குறித்த பரந்த பார்வையை உருவாக்கும் வாய்ப்பு வழங்கப்படுகிறது. ShortFlix OTT உடன் இணைந்து செயல்படுவதன் மூலம், இந்த விழாவின் முக்கியமான அங்கமாக இத்திரைப்படங்கள் மாணவர்களுக்கு திரையிடப்படவிருக்கின்றன. மேலும், இந்த நிகழ்வில் பல திரைப்படத் துறையின் பிரபலங்கள் பங்கேற்கிறார்கள், மாணவர்கள் சர்வதேச சினிமாக்களை பார்ப்பது மற்றும் விவாதிப்பது மூலம் அவர்களின் கற்றல்…
Read More