நடிகை தமன்னா, ஜான் ஆப்ரகாம் நடிப்பில் மும்மொழிகளில் ‘வேதா’ பாடல்!!

    ஷர்வாரி, ஜான் ஆபிரஹாம் மற்றும் அபிஷேக் பானர்ஜி நடிப்பில், ஜீ ஸ்டுடியோஸ், எம்மே எண்டர்டெயின்மெண்ட் மற்றும் ஜேஏ எண்டர்டெயின்மெண்ட் ஆகியவை வழங்கும் ‘வேதா’ படத்தில் இருந்து, மிகவும் எதிர்பார்க்கப்பட்ட காதல் பாடலான, ‘நீதானே நீதானே’ வெளியாகியுள்ளது. ‘ஹோலியான்’ மற்றும் ‘மம்மி ஜி’ ஆகிய இரண்டு எனர்ஜிட்டிக் பாடல்களுக்குப் பிறகு, இந்த அழகான பாடலில் ஜான் ஆபிரகாம் மற்றும் தமன்னா பாட்டியா இருவரும் இணைந்து நடனமாடியுள்ளனர். இந்தப் பாடலில் ஜான் ஆபிரகாம் மற்றும் தமன்னா பாட்டியா இடையேயான கெமிஸ்ட்ரி நிச்சயம் பார்வையாளர்களை மயக்கும். அதேசமயம், பாடலின் முடிவில் ஒரு அதிர்ச்சி தரும் ட்விஸ்ட்டும் உள்ளது. பாடலை வெளியிட்ட ஜான் ஆபிரகாம், “‘நீதானே நீதானே…’ பாடல் ‘வேதா’ படத்தின் ஆன்மா. என் கதாபாத்திரத்தின் எமோஷனல் மற்றும் ரொமாண்டிக் பக்கத்தை இது காட்டும். இந்தப் படத்தில் வெறும் ஆக்‌ஷன்…

Read More

தமிழ்நாடு திரைப்பட விழா (TNFF)-வின் 2வது பதிப்பு தொடங்கியது!

தமிழ்நாடு திரைப்பட விழா (Tamil Nadu Film Festival – TNFF) என்ற பெயரில் சென்னையில் நடத்தப்படும் சர்வதேச திரைப்பட விழா கடந்த 2020 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. கொரோனா பரவல் காரணமாக இத்திரைப்பட விழாவின் முதல் பதிப்பு ஆன்லைன் மூலமாக நடத்தப்பட்டது. இந்த நிலையில், தமிழ்நாடு திரைப்பட விழா (TNFF)-வின் 2வது பதிப்பை நேரடியாக நடத்த திட்டமிட்ட விழாக்குழுவினர், 2024 ஆம் ஆண்டு, ஆகஸ்ட் 10 ஆம் தேதி முதல் 19 ஆம் தேதி வரை சென்னையில் நடத்த முடிவு செய்தனர். அதன்படி, தமிழ்நாடு திரைப்பட விழா (TNFF) இரண்டாவது பதிப்பு ஆகஸ்ட் 10 ஆம் தேதி சென்னை கே.கே.நகரில் உள்ள டிஸ்கவரி புக் செண்டரில் தொடங்கியது. ஆகஸ்ட் 10 ஆம் தேதி முதல் 19 ஆம் தேதி வரை நடைபெறும் இந்த திரைப்பட விழாவில்…

Read More

நடிகர் விஜய் சேதுபதி வெளியிட்ட ‘லாரா’ டைட்டில் ஃபர்ஸ்ட் லுக்!

  ‘ சில ஆண்டுகளுக்கு முன்பு காரைக்காலில் நடந்த ஓர் உண்மைச் சம்பவம் சம்பவத்தை எடுத்துக் கொண்டு சஸ்பென்ஸ் திரில்லர் படமாக உருவாகி இருப்பது தான் ‘லாரா ‘. இப்படத்தை அறிமுக இயக்குநர் மணி மூர்த்தி இயக்கி உள்ளார்.எம் கே அசோசியேட்ஸ் என்ற பெயரில் கோவையில் கட்டுமானத் துறையில் முத்திரை பதித்த தொழிலதிபர் M.கார்த்திகேசன் தனது எம். கே ஃபிலிம் மீடியா ஒர்க்ஸ் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தின் சார்பில் தயாரித்துள்ளார். ஆர்.ஜெ.ரவின் ஔிப்பதிவு செய்துள்ளார். ரகு சரவண் குமார் இசையமைத்துள்ளார். வளர்பாண்டி படத்தொகுப்பு செய்துள்ளார்.பாடல் வரிகள் – M.கார்த்திகேசன், முத்தமிழ் செய்துள்ளார்கள். ‘லாரா ‘ படத்தில் பிடிச்சிருக்கு, முருகா புகழ் அசோக்குமார் கதாநாயகனாக நடித்துள்ளார்.அனுஸ்ரீ, வெண்மதி, வர்ஷினி என மூன்று கதாநாயகிகள் நடித்துள்ளனர். முக்கிய கதாபாத்திரங்களில் மேத்யூ வர்கீஸ் , கார்த்திகேசன், எஸ்.கே. பாபு ஆகியோர் நடித்திருக்கின்றனர்.…

Read More

பிரசாந்த் நீல் இயக்கத்தில் ஜுனியர் என்டிஆர் நடிக்கும் புதிய படத்தின் படப்பணிகள் தொடக்கம்

மைத்ரி மூவி மேக்கர்ஸ் மற்றும் என்டிஆர் ஆர்ட்ஸ் தயாரிப்பில், மாஸ் நடிகர் என்டிஆர், பிளாக்பஸ்டர் இயக்குநர் பிரஷாந்த் நீலுடன் அடுத்து இணையும் ஆக்‌ஷன் திரைப்படம் ‘என்டிஆர் நீல்’ பிரம்மாண்ட பூஜையுடன் தொடங்கப்பட்டது! ‘கே.ஜி.எஃப்’, ‘சலார்’ போன்ற வெற்றிப் படங்களைக் கொடுத்த பிளாக்பஸ்டர் இயக்குநர் பிரஷாந்த் நீலுடன் மாஸ் நடிகர் என்டிஆர் கைக்கோக்கிறார். ரசிகர்களால் மிகவும் எதிர்பார்க்கப்படும் இந்தத் திரைப்படம், தற்காலிகமாக ‘என்டிஆர்நீல்’ என்று பெயரிடப்பட்டுள்ளது. ஆகஸ்ட் 2024 தொடங்கி இருப்பதால், என்டிஆர் மற்றும் பிரஷாந்த் நீல் படம் பற்றி தெரிந்து கொள்ள ரசிகர்கள் ஆர்வத்துடன் எதிர்பார்த்திருந்தனர். இப்படத்தின் பூஜை ஹைதராபாத்தில் இன்று நடைபெற்றது. என்டிஆர் மற்றும் இயக்குநர் நீல் தங்களது குடும்பத்தினருடன் இந்த பிரம்மாண்ட விழாவில் கலந்து கொண்டனர். ரசிகர்களை குஷிப்படுதுத்தும் வகையில், இந்தப் படம் ஜனவரி 9, 2026 அன்று வெளியாகும் என வெளியீட்டுத் தேதியையும்…

Read More

இயக்குநர் விக்னேஷ் கார்த்திக் இயக்கத்தில், ஹாட்ஸ்பாட் படத்தின் இரண்டாம் பாகத்தின்  அறிவிப்பு விழா !!

மக்களிடம் பெரும் வரவேற்பைப் பெற்ற “ஹாட் ஸ்பாட்” படத்தின் வெற்றியைத் தொடர்ந்து, விஷ்ணு  விஷால்  ஸ்டூடியோஸ் சார்பில் நடிகர் விஷ்ணு விஷால் வழங்க, Kjb Talkies & Seven Warriors  நிறுவனங்கள் தயாரிப்பில், K V துரை Creative Production மேற்பார்வையில் இயக்குநர் விக்னேஷ் கார்த்திக் இயக்கத்தில், ஹாட்ஸ்பாட் படத்தின் இரண்டாம் பாகம் உருவாகவுள்ளது. இப்படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பை முன்னணி நட்சத்திர நடிகர் விஷ்ணு விஷால், இயக்குநர் விக்னேஷ் கார்த்திக், , KJB  Talkies சார்பில் பாலமணிமார்பன், Seven Warriors சுரேஷ் குமார் ஆகியோர் இணைந்து வெளியிட்டனர். பத்திரிக்கை ஊடக நண்பர்கள் கலந்துகொண்ட  இவ்விழாவினில் “ஹாட் ஸ்பாட் 2 ” படத்தின் பிரத்தியேக புரோமோ திரையிடப்பட்டது. இந்நிகழ்வினில் Seven Warriors சார்பில் சுரேஷ் குமார்   பேசியதாவது… மீடியா நண்பர்கள் தந்த ஆதரவு தான் இந்த இரண்டாம் பாகம்…

Read More

’பேச்சி’ திரைப்படத்தின் வெற்றி விழா மற்றும் நன்றி தெரிவிக்கும் விழா

வெயிலோன் எண்டர்டெயின்மெண்ட் சார்பில் கோகுல் பினாய் மற்றும் வெரூஸ் புரொடக்‌ஷன்ஸ் (Verus Productions) சார்பில் ஷேக் முஜீப் தயாரிப்பில், அறிமுக இயக்குநர் ராமச்சந்திரன்.பி எழுத்து இயக்கத்தில் கடந்த ஆகஸ்ட் 2 ஆம் தேதி வெளியான இப்படம் விமர்சன ரீதியாக பாராட்டு பெற்று, மக்களிடம் மிகப்பெரிய வரவேற்பை பெற்றது. தற்போது 10 நாட்களை கடந்து வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் இப்படத்தின் வெற்றியை கொண்டாடும் விதமாக படக்குழுவினர் இன்று (ஆக.9) சென்னை பிரசாத் லேபில் பத்திரிகையாளர்களை சந்தித்தனர். நிகழ்ச்சியில் ஒளிப்பதிவாளர் பார்த்திபன் பேசுகையில், “பேச்சி வெற்றி விழா மற்றும் நன்றி தெரிவிக்கும் விழா மூலம் உங்களை மீண்டும் சந்திப்பதில் மகிழ்ச்சி. சினிமா வர்த்தகமே இன்று நிலையற்ற சூழலில் இருக்கும் போது பேச்சி என்ற சிறு படம் 10 வது நாளை தாண்டி வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. முதல் நாளில் எங்களுக்கு 18 காட்சிகள்…

Read More

MAA தலைவர் நடிகர் விஷ்ணு மஞ்சு தனது மகள் அய்ரா வித்யாவின் பிறந்தநாளை முன்னிட்டு ஆதரவற்ற கலைஞர்களின் நலனுக்கு ரூ.10 லட்சம் நன்கொடை!!

தெலுங்கு சினிமாவின் முன்னணி நடிகர் மற்றும் தயாரிப்பாளரான விஷ்ணு மஞ்சு, தெலுங்கு திரையுலக நடிகர்கள் சங்கமான ‘மூவி ஆர்டிஸ்ட் அசோசியேஷன்ஸ்’ (Movie Artists Association – MAA)-ன் தலைவராகவும் செயல்பட்டு வருகிறார். இந்த நிலையில், ஆக்ஸ்ட் 9 ஆம் தேதி விஷ்ணு மஞ்சுவின் மகள் அய்ரா வித்யாவின் பிறந்தநாள் கொண்டாடப்பட்டது. தனது மகளின் பிறந்தநாளை முன்னிட்டு, MAA சங்கத்தில் உள்ள ஆதரவற்ற கலைஞர்களின் நலனுக்காக ரூ.10 லட்சம் நன்கொடையாக வழங்கியுள்ளார். அவருடைய இந்த குறிப்பிடத்தக்க பங்களிப்பு, நிதி நெருக்கடிகளை எதிர்கொள்ளும் கலைஞர்களுக்கு உதவுவதற்கும், அவர்களுக்கு தேவையான ஆதரவையும், கவனிப்பையும் உறுதி செய்துள்ளது. கடந்த மூன்று ஆண்டுகளில், விஷ்ணுவின் தொலைநோக்கு தலைமையின் கீழ் MAA சங்கம் குறிப்பிடத்தக்க வளர்ச்சியை அடைந்துள்ளது. எதிர்காலத்திற்கான அவரது திட்டங்களில் சங்கத்திற்கான பிரத்யேக கட்டிடமும் அடங்கும். அந்த வகையில், விஷ்ணு மஞ்சுவின் இத்தகைய நடவடிக்கைகளும்,…

Read More

  திரைப்பட இயக்குநரும், நடிகரும், எழுத்தாளருமான சீனு. ராமசாமி எழுதிய ‘நினைவில் ஒளிரும் ஜிமிக்கி கம்மல்’ எனும் கவிதை நூலினை ‘மக்கள் செல்வன்’ விஜய் சேதுபதி வெளியிட்டார். தேசிய விருதினை பெற்ற திரைப்பட படைப்புகளை உருவாக்கிய இயக்குநர் சீனு. ராமசாமி இலக்கிய உலகிலும் தன்னுடைய தடத்தினை பதித்திருக்கிறார். இவர் ‘நினைவில் ஒளிரும் ஜிமிக்கி கம்மல்’ எனும் கவிதை நூலை எழுதியிருக்கிறார். இந்த நூல் வெளியீட்டு விழா சென்னையில் உள்ள அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் சிறப்பாக நடைபெற்றது. இந்த நூல் வெளியீட்டு விழாவிற்கு எழுத்தாளர் எஸ். ராமகிருஷ்ணன் தலைமை தாங்கினார். வரவேற்புரையை பாரதி புத்தகாலயம் பதிப்பக உரிமையாளர் க. நாகராஜன் நிகழ்த்தினார். கவிஞர் நந்தலாலா இந்த நூலுக்கான ஆய்வுரை அளிக்க..’ மக்கள் செல்வன்’ விஜய் சேதுபதி வாழ்த்துரை வழங்கினார். இறுதியாக எழுத்தாளரும், இயக்குநருமான சீனு. ராமசாமி நன்றி உரையாற்றினார்.…

Read More

‘விடாமுயற்சி’ டெரிஃபிக் வில்லன் ஆரவ்… அறிமுகப்படுத்திய இயக்குநர் மகிழ் திருமேனி

 நடிகர் அஜித் குமாரின் ‘விடாமுயற்சி’ படத்தில் இருந்து இன்று (ஆகஸ்ட் 9) நடிகர் ஆரவ்வின் கேரக்டர் லுக்கை படக்குழு வெளியிட்டுள்ளது. அவரது ஸ்டைலான தோற்றம் ரசிகர்கள் மத்தியில் அவரது பாத்திரம் எப்படியானதாக இருக்கும் என்ற ஆர்வத்தினை உருவாக்கியுள்ளது. நடிகர் அஜித் குமாரின் திரைப்படங்களில் பொதுவாக அனைத்து நடிகர்களுக்கும் குறிப்பாக வில்லன்களுக்கு வலுவான கதாபாத்திரம் இருக்கும். மகிழ் திருமேனி இயக்கத்தில், லைகா புரொடக்‌ஷன்ஸ் சுபாஸ்கரன் தயாரித்திருக்கும் இந்தப் படத்தில் அஜித் குமார் கதாநாயகனாக நடித்திருக்க, படக்குழுவினர் மற்ற நடிகர்களின் கதாபாத்திரங்களையும் அறிமுகப்படுத்தி வருகின்றனர். இந்த படத்தில் ஆரவ் கதாபாத்திரம் நல்லவரா கெட்டவரா என்பது பற்றி இயக்குநர் மகிழ் திருமேனி கூறியிருப்பதாவது, “பல கதைகளுடனும் திருப்பங்களுடனும் வரும் வில்லன் மைக்கேல் நிச்சயம் உங்கள் கவனத்தைக் கவர்வான். ‘மைக்கேல்’ கதாபாத்திரத்தை நான் உருவாக்கி முடித்ததும், இந்தியத் துறையில் பல பெரிய நடிகர்களின்…

Read More

அந்தகன் விமர்சனம் 4.5/5… ராயல்-கன்

 கதை… பிரசாந்த் ஒரு பியானோ கலைஞர்.. இவர் கண் பார்வையற்றவராக நடித்து அதன் மூலம் மக்களிடையே அனுதாபம் பெற்று பணம் சம்பாதித்து லண்டன் சென்று மிகப்பெரிய இசை கலைஞராக வேண்டும் என நினைக்கிறார். இவர் நிஜமாலுமே கண் தெரியாதவர் தானா என்ற சந்தேகம் பிரசாந்த் வீட்டில் அருகே வசிக்கும் பூவையார் & பிரசாந்த் காதலிக்கும் பிரியா ஆனந்த் ஆகியோருக்கு இந்த சந்தேகம் அதிகமாகவே இருக்கிறது. இந்த நிலையில் இந்த திறமையான கலைஞர் நிஜமாகவே கண் பார்வையற்றவர் என நினைத்து நவரச நாயகன் நடிகர் கார்த்திக் (கௌரவ தோற்றத்தில் நடித்திருக்கிறார்.) நாளை எனது திருமண நாள்.. எனது மனைவிக்கு ஒரு சர்ப்ரைஸ் ஆக நீங்கள் வந்து எனது ஹிட்டான பாடல்களை பியானோ மூலம் வாசித்து காட்ட வேண்டும் என அட்வான்ஸ் தொகையும் கொடுக்கிறார். அதன்படி அடுத்த நாள் மதியம்…

Read More