தில் ராஜா பத்திரிக்கையாளர் சந்திப்பு !

GOLDEN EAGLE STUDIOS சார்பில், கோவை பாலாசுப்பிரமணியம் தயாரிப்பில், இயக்குநர் ஏ வெங்கடேஷ் இயக்கத்தில், விஜய் சத்யா, ஷெரீன் நடிப்பில், அசத்தலான கமர்ஷியல் கலாட்டாவாக உருவாகியுள்ள திரைப்படம், “தில் ராஜா”. வருகிற 27 ம் தேதி திரைக்கு வரவுள்ள இப்படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு, படக்குழுவினர் கலந்துகொள்ளப் பத்திரிக்கை ஊடக நண்பர்கள் முன்னிலையில் நடைபெற்றது. இந்நிகழ்வினில்.. இசையமைப்பாளர் அம்ரீஷ் பேசியதாவது… அனைவரையும் இங்கு ஒன்றாகப் பார்ப்பது மிகப்பெரிய சந்தோசம் தருகிறது. தில் ராஜா படத்தில் நான் நடித்த பாடல் நன்றாக இருப்பதாகச் சொன்னார்கள், ஆனால் இனி நடிப்பேனா எனத் தெரியவில்லை. படம் முடித்த பின்னர் புரமோசனுக்கு மாஸாகா பாடல் கேட்டார்கள். ஹுயூமரா காமெடியாக இருக்க ஆள் வேண்டும் என்று சொன்னார்கள், ஆள் தேடித் தேடி கடைசியில் என்னையே நடிக்க வைத்து விட்டார்கள். ஏ வெங்கடேஷ் சார் படத்தில் இசையமைக்க…

Read More

இசையமைப்பாளர் அருண் ராஜ் மற்றும் ‘பிக்பாஸ்’ புகழ் அர்ச்சனா ரவிச்சந்திரன் இணைந்து வெளியிட்டுள்ள ‘டாக்ஸிக் காதல்’. பாடல்

இசையமைப்பாளர் அருண் ராஜ் மற்றும் ‘பிக்பாஸ்’ புகழ் அர்ச்சனா ரவிச்சந்திரன் இணைந்து வெளியிட்டுள்ள உற்சாகமூட்டக்கூடிய புதிய சுயாதீன பாடல் ‘டாக்ஸிக் காதல்’. ஆத்மாவை வருடும் உணர்ச்சிகரமான இசை படைப்புகளால் பரவலாக அறியப்படும் தமிழ்நாட்டின் பிரபல இசையமைப்பாளர் அருண்ராஜ், ‘பிக்பாஸ்’ புகழ் அர்ச்சனா ரவிச்சந்திரனுடன் இணைந்து, சமீபத்தில் அவர்களின் புதிய பாடலான ‘டாக்ஸிக் காதல்’-ஐ வெளியிட்டுள்ளனர். அதீத எதிர்பார்ப்புகள் நிறைந்த இந்த பாடல், நவீன காதல் உறவுகளின் சிக்கல்களை உணர்ச்சிகரமான மெலோடிகள் மற்றும் தைரியமான பாடல்வரிகளின் கலவையால் விவரிக்கிறது. ‘டாக்ஸிக் காதல்’ என்ற இந்த பாடல், காதல் சில நேரங்களில் ஏற்படுத்தக்கூடிய இருண்ட, தீவிரமான மற்றும் மாறும் உணர்வுகளை ஆழமாக வெளிப்படுத்துகிறது. தடம், எறும்பு, பிஸ்ஸா-3, பைரி போன்ற வெற்றி பெற்ற திரைப்படங்களுக்கு இசையமைத்து ரசிகர்களின் இதயங்களை வென்ற அருண் ராஜ், இந்த பாடலுக்கு புதிதாகவும் இதற்கு முன்…

Read More

 ஏ ஆர் ஆர் (ARR) ஃப்லிம் சிட்டியில் யூஸ்ட்ரீம் (uStream) என்ற பெயரில் அதிநவீன வசதிகளை கொண்ட மெய்நிகர் தயாரிப்புக் கூடம் !!

சென்னையில் உள்ள ஏ ஆர் ஆர் (ARR) ஃப்லிம் சிட்டியில் யூஸ்ட்ரீம் (uStream) என்ற பெயரில் அதிநவீன வசதிகளை கொண்ட மெய்நிகர் தயாரிப்புக் கூடம் (Virtual Production Studio) இந்தியா மற்றும் உலகெங்கும் இருந்து வந்திருந்த 500க்கும் மேற்பட்ட திரையுலகப் பிரமுகர்கள் முன்னிலையில் செப்டம்பர் 22 அன்று தொடங்கப்பட்டது. முழுமையான தொழில்நுட்பப் பணிகளை வழங்கும் uStream, ஆஸ்கர் விருது வென்ற இசையமைப்பாளர் A.R. ரஹ்மான் மற்றும் தொழில்துறை முன்னோடி ஸ்ரீதர் சந்தானம் கூட்டணியில் உருவாகியுள்ளது. இந்திய சினிமாவின் புதிய யுகத்தை வரவேற்க வழிவகுப்பதாய் இது வடிவம் எடுத்திருக்கிறது. தொடக்க விழாவில் தொழில்துறை தலைவர்களின் கருத்தாழம் மிக்க உரைகள் இடம்பெற்றன. சிஜி ப்ரோவைச் சேர்ந்த எட்வர்ட் டாசன் டெய்லர், மெய்நிகர் தயாரிப்பில் தனது நிபுணத்துவத்தையும், எதிர்காலத் திரைப்படத் தயாரிப்பை மாற்றி அமைக்கும் தொழில்நுட்ப திறனையும் பகிர்ந்து கொண்டார். Dimension5…

Read More

டிஜிட்டலில் வெளியாகி வசூலை அள்ளும் விஜயகாந்த் நடித்த மாநகர காவல் .!  

விஜயகாந்த் உதவி கமிஷனராக நடித்த ” மாநகர காவல் ” திரைப்படத்தை ஏவிஎம் நிறுவனம் தயாரித்து 1991 ஆம் ஆண்டு ஜுன் மாதம் ரிலீஸ் செய்தது. இதில் நம்பியார், சுமா ரங்கநாத், நாசர் , லட்சுமி, ஆனந்தராஜ் , ஆகியோர் நடித்திருந்தனர். சந்திரபோஸ் இசையமைத்திருந்தார். எம். தியாகராஜன் டைரக்ட் செய்திருந்தார். மாநகர காவல் திரைப்படம் அன்று 25 வாரங்கள் திரையரங்குகளில் ஓடி வசூலில் சாதனை படைத்தது. 32 வருடங்கள் கடந்த பின் குரு ராஜா இண்டர்நேஷனல் நிறுவனம் சார்பில் தமிழகம் முழுவதும் திரையரங்குகளில் திரையிட ஏவிஎம் நிறுவனத்திடமிருந்து உரிமை பெற்று கடந்த வாரம் ரிலீஸ் செய்தது. சென்னை முதல் கன்னியாகுமரி வரை உள்ள குறிப்பிட்ட திரையரங்குகளில் டிக்கட் கட்டணத்தை குறைத்து திரையிட்டனர். டிக்கட் கட்டணம் குறைந்து இருந்ததால் மக்களிடம் படம் பார்க்கும் ஆர்வம் அதிகரித்து திரையிட்ட தியேட்டர்களில்…

Read More

ஏபிசி டாக்கீஸ் நிறுவனத்தின் பிராந்திய விளம்பரத் தூதர் சாக்ஷி அகர்வால்

சுயாதீன திரைப்பட இயக்குனர்களுக்கு ஆதரவளிக்கும் வெளிப்படையாக அணுகக் கூடிய ஓடிடி (OTT) திரைப்பட ஸ்ட்ரீமிங் தளமான ஏபிசி டாக்கீஸ், முன்னணி நடிகையும் மாடலுமான சாக்ஷி அகர்வாலை தனது ஆலோசனைக் குழுவில் இணைத்துக் கொண்டதாக மகிழ்ச்சியுடன் அறிவிக்கிறது. இதற்கு மேலாக, சாக்ஷி அகர்வால் பிராந்திய விளம்பரத் தூதராகவும் செயல்படுவார், இளம் திறமைகளை ஆதரிக்க ஏபிசி டாக்கீஸ் மிகுந்த அர்ப்பணிப்புடன் செயல் படுவதை மேலும் வலுப்படுத்துவார். தென்னிந்திய திரைப்படத்துறையில் பிரபலமான நடிகையும் மாடலுமான சாக்ஷி அகர்வால், பல்வேறு திறமைகளைக் கொண்டவர். அவர் ஆலோசனைக் குழுவில் இணைந்தது, சினிமாவில் படைப்பாற்றல் மற்றும் புதுமையை ஊக்குவிக்க ஏபிசி டாக்கீஸ் முன்னணி தொழில்முனைவோர்களுடன் இணைந்து செயல்படும் எண்ணத்தை பிரதிபலிக்கிறது. இரட்டை பதவியில், சாக்ஷி அகர்வால் ஏபிசி டாக்கீஸ் நிறுவனத்திற்குத் தூரநோக்கு வழிகாட்டியாக இருந்து அதன் திட்டங்கள் மற்றும் முயற்சிகளை வடிவமைக்க உதவுவார். கேளிக்கை துறையில்…

Read More

‘கியாரா கியாரா’ தமிழ் மற்றும் தெலுங்கில் செப்டம்பர் 20 முதல் ZEE5 இல் !!!

~ கரண் ஜோஹர் மற்றும் குனீத் மோங்கா தயாரிப்பில் உருவான, “கியாரா கியாரா” சீரிஸில், ராகவ் ஜூயல், கிருத்திகா கம்ரா மற்றும் தைர்யா கர்வா ஆகியோர் நடித்துள்ளனர் ~ ZEE5 தளத்தில் வெளியான கியாரா கியாரா சீரிஸ் பெரும் வெற்றிபெற்றதைத் தொடர்ந்து, செப்டம்பர் 20 முதல் இந்த சீரிஸின் தமிழ் மற்றும் தெலுங்கு மொழிப்பதிப்புகளை வெளியிட்டுள்ளது. கிருத்திகா கம்ரா, ராகவ் ஜூயல் மற்றும் தைரிய கர்வா ஆகியோரின் நடிப்பில், வித்தியாசமான கதைசொல்லல் மற்றும் தனித்துவமான நடிப்பிற்காகக் கொண்டாடப்படும், இந்த அற்புத சீரிஸ், தற்போது அதன் பல மொழி வெளியீட்டின் மூலம், புதிய பார்வையாளர்களை வசீகரிக்கத் தயாராக உள்ளது. குனீத் மோங்கா கபூரின் சிக்யா என்டர்டெயின்மென்ட் மற்றும் கரண் ஜோஹரின் தர்மா என்டர்டெயின்மென்ட் தயாரிப்பில், திறமை மிகு இயக்குநர் உமேஷ் பிஸ்ட்டால் இயக்கத்தில், உருவான ‘கியாரா கியாரா’ ஏற்கனவே…

Read More

சமுத்திரக்கனி நடிக்கும் ‘திரு.மாணிக்கம்’

சமீபகாலமாக தமிழ் சினிமா சந்தித்திருக்கும் மாபெரும் ஒரு சவால்தான் OTT மற்றும் SATELLITE வியாபாரம். கடந்த வருடங்கள் போல் இல்லாமல் மிகக் கடினமான சூழ்நிலையில் தமிழ்த் திரைப்படங்கள் இந்த வியாபாரத்தில் போராடிக் கொண்டிருக்கிறது. ஒரு திரைப்படம் தியேட்டரில் வெளியாகி வெற்றிகரமாக ஓடிய பிறகே OTT மற்றும் SATELLITE ஒப்பந்தம் முடிவாகும் என்ற சூழல் இப்போது உருவாகியுள்ளது. இந்த காலக் கட்டத்தில் திரைக்கு வரும் முன்னரே திரு.மாணிக்கம் திரைப்படத்தை பார்த்து இதயம் கரைந்து இந்தப் படம் எல்லா தரப்பினருக்கும் ஏற்ற படமாகவும் மனதை நெகிழவைக்கும் படமாகவும் இருக்கும் என்பதை உணர்ந்து ஜீ தமிழ் திரு.மாணிக்கம் திரைப்படத்தின் OTT மற்றும் SATELLITE உரிமையை வாங்கி உலகமெங்கும் வெளியிடவிருக்கிறார்கள்… மிக விரைவில் வெள்ளித் திரைக்கு வரவிருக்கிற திரு.மாணிக்கம் படத்தில் சமுத்திரக்கனி, பாரதிராஜா, அனன்யா, நாசர், தம்பி ராமையா, இளவரசு, ஸ்ரீமன், வடிவுக்கரசி,…

Read More

அமரர் தயாரிப்பாளர் தில்லி பாபு அவர்களின் நினைவேந்தல் கூட்டம்!

தமிழில் முன்னணி தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்று ஆக்ஸஸ் ஃபிலிம் ஃபேக்டரி. ’உறுமீன்’, ‘மரகதநாணயம்’, ‘ராட்சசன்’, ‘பேச்சிலர்’ உள்ளிட்ட பல வெற்றிப் படங்களைத் தயாரித்துள்ளது. இதன் நிறுவனர் ஜி. தில்லி பாபு கடந்த செப்டம்பர் 9 அன்று காலமானார். இவரது மறைவு திரையுலகில் சோகத்தை ஏற்படுத்தியது. இன்று காலை சென்னையில் மறைந்த தில்லி பாபு அவர்களின் குடும்பம், நண்பர்கள் மற்றும் திரையுலகினர் கலந்து கொள்ளும் நினைவஞ்சலி கூட்டம் நடைபெற்றது. நிகழ்வை தயாரிப்பாளர் தனஞ்செயன் தொகுத்து வழங்கினார். நிகழ்வில் கலந்து கொண்ட இயக்குநர் ஆர்கே செல்வமணி, “தில்லி பாபுவை எனக்கு கடந்த ஏழு எட்டு வருடங்களாக தெரியும். என் வீட்டில் தான் அவரது அலுவலகம் உள்ளது. என் வாழ்க்கையில் நான் சந்தித்த மிகச்சிறந்த மனிதர்களில் அவரும் ஒருவர். எப்போதும் சிரித்த முகத்தோடும் குழந்தைத் தனமாகவும் இருப்பார். என்னுடைய வீட்டில் ஏழெட்டு…

Read More

“ஹிட்லர்” திரைப்பட முன் வெளியீட்டு விழா!!

Chendur film international தயாரிப்பில், இயக்குநர் தனா இயக்கத்தில், நடிகர் விஜய் ஆண்டனி நடிப்பில் உருவாகியுள்ள திரில்லர் திரைப்படமான “ஹிட்லர்” திரைப்படம் வரும் செப்டம்பர் 27 ஆம் தேதி உலகமெங்கும் திரையரங்குகளில் வெளியாகிறது. இதனையொட்டி. படத்தினை விளம்பரப்படுத்தும் வகையில். படக்குழுவினர் பல விளம்பர நிகழ்வுகளை நடத்தி வருகின்றனர். இன்று தனியார் மாலில், மிகப்பெரும் மக்கள் திரள் நிரம்பியிருக்க, படக்குழுவினர் கலந்துகொள்ள, ஹிட்லர் படத்தின் முன் வெளியீட்டு நிகழ்ச்சி கோலாகலமாக நடைபெற்றது. இந்நிகழ்வில் கலந்துகொண்ட நடிகர் விஜய் ஆண்டனி, அங்கிருந்த மக்கள் அனைவரையும், மேடைக்கு ஒவ்வொருவராக அழைத்து, அவர்களுடன் பாடல் பாடி, நடனமாடி, அவர்களின் ஆசைகளைக் கேட்டு நிறைவேற்றினார். அங்கிருந்த 5 வயது குழந்தையுடன் அவர் சேர்ந்து பாடிய பாடலைக் கேட்டு, அங்கிருந்த மக்கள் உற்சாகத்தில் கூக்குரலிட்டு வாழ்த்தினர். இந்நிகழ்வினில் கலந்துகொண்ட நடிகை ஐஸ்வர்யா தத்தா பேசியதாவது…, உங்கள்…

Read More

லப்பர் பந்து விமர்சனம் 4.5/5.. பறக்கும் பந்து

 கதை… தினேஷ் ஜோடி ஸ்வஸ்விகா… ஹரிஷ் கல்யாண் ஜோடி சஞ்சனா கிருஷ்ணமூர்த்தி.. தினேஷ் மற்றும் ஹரிஷ் இருவரும் கிரிக்கெட் வெறியர்கள்.. இதில் தினேஷ் (கெத்து) – அவர் விஜயகாந்த் ரசிகர்.. ஹரிஷ் (அன்பு) இவர் விஜய் ரசிகர் 20 வயது ஆகும் முன்பே தன் காதலியை கரம் பிடித்தவர் தினேஷ்.. இவருக்கு 20 வயது மகள் இருக்கும்போது இவருக்கு கிரிக்கெட் வீரன் ஆர்வம் குறையவில்லை இதனால் மனைவியுடன் அடிக்கடி பிரச்சினை வருகிறது.. மேலும் கிரிக்கெட் போட்டியின் போது தினேஷுக்கும் ஹரிஷுக்கும் ஈகோ மோதல் வெடிக்கிறது.. இந்த சூழ்நிலையில் கிரிக்கெட் வீரர் ஹரிசை காதலிக்கிறார் தினேஷ் மகள் சஞ்சனா.. ஏற்கனவே தினேஷின் கிரிக்கெட் ஆர்வத்தால் தன் வாழ்க்கையை தொலைத்து நிற்கும் ஸ்வஸ்விகா மகளின் காதலை எதிர்க்கிறார்.. இதன் பிறகு என்ன நடந்தது.? கிரிக்கெட் மருமகனை ஸ்வஸ்விகா தினேஷ் ஏற்றுக்…

Read More