இயக்குநர்கள் ,உதவி இயக்குநர்களின் வாரிசுகளுக்கு இயக்குநர் திருமதி.ஐஸ்வர்யா ரஜினிகாந்த் அவர்கள் வருடாவருடம் ரூ.10 லட்சம் கல்வி உதவி வழங்குவதாக உறுதி அளித்து முதற்கட்டமாக 2024 ஆம் ஆண்டிற்கு இன்று 13.09.2024 ரூ.5 லட்சம் சங்கத் தலைவர் ஆர். வி. உதயகுமாரிடம் வழங்க செயலாளர் பேரரசு , பொருளாளர் சரண் , பெப்ஸி தலைவர் ஆர்.கே. செல்வமணி ஆகியோர் இணைந்து பெற்றுக்கொண்டனர்.நிர்வாகிகள் இயக்குனர்கள் எழில், சி. ரங்கநாதன், மித்ரன் ஜவகர், எஸ்.ஆர்.பிரபாகரன் மற்றும் செயற்குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டு ஐஸ்வர்யாவிற்கு நன்றி தெரிவித்தனர்.
Read MoreMonth: September 2024
‘ஹிட் -3’ படத்தின் படப்பிடிப்பு தொடக்கம்!
‘நேச்சுரல் ஸ்டார்’ நானி – இயக்குநர் சைலேஷ் கொலானு – வால்போஸ்டர் சினிமா + யுனானிமஸ் புரொடக்ஷன்ஸ்- கூட்டணியில் தயாராகும் ‘ஹிட் : மூன்றாவது வழக்கு’ ( HIT : 3rd Case) எனும் படத்தின் படப்பிடிப்பு ஹைதராபாத்தில் தொடங்கி இருக்கிறது. ‘நேச்சுரல் ஸ்டார்’ நானி தனது 32 வது படமான ஹிட் : மூன்றாவது வழக்கு ( HIT : 3rd Case) எனும் திரைப்படத்தில் சக்தி வாய்ந்த கதாபாத்திரத்தில் நடிக்கவிருக்கிறார். யுனானிமஸ் புரொடக்ஷன் எனும் நிறுவனத்துடன் இணைந்து வால்போஸ்டர் சினிமா நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் பிரசாந்தி திபிர்னேனி தயாரிப்பில், இயக்குநர் டாக்டர் சைலேஷ் கொலனு இயக்கத்தில் உருவாகும் இந்த திரைப்படம் ஒரு க்ரைம் திரில்லர் ஜானரில் தயாராகிறது. இந்த திரைப்படத்தில் ஹிட் அதிகாரியாக நடிக்கும் நானியின் அபாயகரமான கதாபாத்திரத்தை பற்றி ஒரு கண்ணோட்டத்தை வழங்கும்…
Read Moreசஞ்சய் லீலா பன்சாலியின் ‘லவ் அண்ட் வார்’ திரைப்படம் வெளியாகும் தேதி அறிவிப்பு
சஞ்சய் லீலா பன்சாலியின் ‘லவ் அண்ட் வார்’ திரைப்படம்- 2026 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 20ஆம் தேதியன்று வெளியிடப்படும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டிருக்கிறது. ரன்பீர் கபூர், ஆலியா பட் மற்றும் விக்கி கௌசல் நடிப்பில் சஞ்சய் லீலா பன்சாலியின் அடுத்த காவிய கதையாக உருவாகும் திரைப்படத்திற்கு ‘லவ் அண்ட் வார்’ என பெயரிடப்பட்டிருக்கிறது. இந்த தலைப்பு வெளியானவுடன் பெரும் பரபரப்பையும் உண்டாக்கி இருக்கிறது. மேலும் இந்த திரைப்படத்தைப் பற்றிய கூடுதல் தகவல்களை தெரிந்து கொள்ள அனைவரும் ஆவலுடன் காத்திருக்கிறார்கள். இந்த தருணத்தில் படத்தைப் பற்றிய சுவாரசியமான தகவல் ஒன்றையும் படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர். இந்தத் திரைப்படம் எதிர்வரும் 2026 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 20ஆம் தேதி அன்று வெளியாகிறது. இந்த அறிவிப்பு உண்மையில் பெரிய ஆச்சரியத்தை அளித்துள்ளது. சஞ்சய் லீலா பன்சாலியின் ‘லவ் அண்ட் வார்’…
Read Moreகீர்த்தி சுரேஷின் அசத்தலான நடிப்பில், ZEE5 இல் ‘ரகுதாத்தா’ திரைப்படம், 50 மில்லியன் பார்வை நிமிடங்களைக் கடந்து சாதனை !
இந்தியாவின் முன்னணி ஸ்ட்ரீமிங் தளமாக, ரசிகர்களால் கொண்டாடப்படும் Zee5 தளத்தில், சமீபத்தில் வெளியான ‘ரகு தாத்தா’ திரைப்படம், வெளியான வேகத்தில், 50 மில்லியன் பார்வை நிமிடங்களைக் கடந்து , சாதனை படைத்துள்ளது. ஹோம்பாலே ஃபிலிம்ஸ் தயாரிப்பில், சுமன் குமார் இயக்கத்தில், தேசிய விருது நடிகை கீர்த்தி சுரேஷ் நடிப்பில், வெளியான ‘ரகுதாத்தா’ திரைப்படம், இந்தி திணிப்பு மற்றும் ஆணாதிக்கத்தைப் பற்றி அழுத்தமாகப் பேசுகிறது. சமூகப் பிரச்சினைகளின் வேரை ஆராயும் கதைக்களத்தில், மெலிதான நகைச்சுவையுடனும் அழுத்தமான திரைக்கதையுடனும், ஒரு புரட்சிகரமான பெண்ணின் பயணத்தைச் சொல்கிறது ‘ரகுதாத்தா’. பெண் விடுதலை, பெண் சுதந்திரம் பற்றிய பார்வைகளை அழுத்தமாக எடுத்துச்சொல்லும் படைப்பாக உருவாகியுள்ள “ரகுதாத்தா” திரைப்படம், வீட்டில் ஓடிடியில் குடும்பத்தோடு ரசித்துக் கொண்டாட மிகச்சரியான திரைப்படமாக அமைந்துள்ளது. முன்னதாக ZEE5 தளத்தில் வெளியான ‘அயலி’ மற்றும் தி ‘கிரேட் இண்டியன் கிச்சன்’…
Read More‘தலைவெட்டியான் பாளையம்’ எனும் இணைய தொடரின் முன்னோட்டம் வெளியீடு!!
பிரைம் வீடியோ – அதன் அசல் இணையத் தொடரான ‘தலைவெட்டியான் பாளையம்’ எனும் நகைச்சுவை இணைய தொடரின் வசீகரமான முன்னோட்டத்தை வெளியிட்டுள்ளது. தமிழ்நாட்டின் உள்ளார்ந்த கிராமத்தின் பின்னணியில் அமைந்திருக்கும் இந்த இணைய தொடர் எளிமையானதாகவும், அதே தருணத்தில் பிடிவாதமான கதையம்சத்தின் மூலம் மனதைக் கவரும் வகையிலும் நகைச்சுவையுடன் தயாராகி இருக்கிறது. இயக்குநர் நாகா இயக்கத்தில் உருவாகி இருக்கும் அசல் தமிழ் இணையத் தொடரான ‘தலைவெட்டியான் பாளையம்’ எனும் இந்த தொடருக்கு பாலகுமாரன் முருகேசன் கதை எழுத, தி வைரல் ஃபீவர் எனும் நிறுவனம் தயாரித்திருக்கிறது. இனிமையான மற்றும் ஆழமான கதைச் செழுமையுள்ள இந்த இணையத் தொடருக்கு எம். எஸ். கிருஷ்ணா இசையமைத்திருக்கிறார். ‘தலை வெட்டியான் பாளையம்’ இந்தியாவிலும் உலகெங்கிலும் உள்ள 240 நாடுகள் மற்றும் பிராந்தியங்களில் செப்டம்பர் 20 ஆம் தேதி அன்று பிரைம் வீடியோவில் பிரத்யேகமாக…
Read Moreநடிகை சாந்தி பாலச்சந்திரன் திரைக்கதை எழுதுவதிலும் தடம் பதிக்கிறார்!
நடிகர் துல்கர் சல்மானின் தயாரிப்பு நிறுவனமான வேஃபேரர் பிலிம்ஸின் அடுத்த படத்திற்கான கூடுதல் திரைக்கதையை நடிகை சாந்தி எழுதியுள்ளார். எழுத்தாளரும் இயக்குநருமான டொமினிக் அருண் இயக்கத்தில் கல்யாணி பிரியதர்ஷன் மற்றும் நஸ்லென் நடிக்கும் இப்படத்தின் பூஜை சமீபத்தில் நடைபெற்றது. சாந்தி நடிப்பில் வெளியான சமீபத்திய படங்கள் பல விருதுகளை வென்றுள்ளன. ‘சூரரைப் போற்று’ படத்தின் சிறந்த திரைக்கதைக்கான தேசிய விருதை வென்ற ஷாலினி உஷாதேவி இயக்கிய மலையாளத் திரைப்படம் ‘என்னென்னும்’-ல் சாந்தி நடித்திருந்தார். இந்தப் படம் கேரள மாநில விருதுகள் 2024 இல் சிறப்பு நடுவர் விருதை வென்றது. சுவிட்சர்லாந்தில் நடைபெற்ற நியூசெட்டல் இன்டர்நேஷனல் ஃபென்டாஸ்டிக் ஃபிலிம் பெஸ்டிவலில் இத்திரைப்படம் சர்வதேச விமர்சகர் விருதையும் வென்றது. சமீபத்தில் அறிவிக்கப்பட்ட தேசிய விருதுகளில் சாந்தியின் முதல் இந்தி படமான ‘குல்மோஹர்’ சிறந்த இந்தி படத்திற்கான விருது வென்றது. அமேசான்…
Read Moreஒன்ட்ராகா என்டர்டெயின்மென்ட்டின் அடுத்த ஒரிஜினல் படைப்பு ‘கடலோர கவிதை’ வெளியாகிறது!
ஒரு ஊரிலேயொரு ஃபிலிம் ஹவுஸுடன் இணைந்து ஒன்ட்ராகா என்டர்டெயின்மென்ட் தங்களின் அடுத்த தயாரிப்பை அறிவிப்பதில் பெருமிதம் கொள்கிறது. தமிழில் ‘கடலோரக் கவிதை’ மற்றும் மலையாளத்தில் ‘ஈ தீரம்’ எனப் பெயரிடப்பட்டுள்ள இந்தப் படைப்பை ப்ரீத்தி ஸ்ரீவிஜயன் தயாரித்துள்ளார். ஸ்வாதினி இயக்கத்தில், தர்ஷன் மற்றும் நிஹாரிகா ஆகியோர் முதன்மை கதாபாத்திரங்களில் நடித்திருக்கும் இந்த மியூசிக்கல் டிராமா நிச்சயம் பார்வையாளர்களைக் கவரும். இதற்கு விஷால் சுரேஷ் இசையமைத்துள்ளார். கான்செப்ட் மற்றும் ஒளிப்பதிவை இலை கையாண்டுள்ளார். படத்தொகுப்பை ரிச்சர்ட் கெவின் கவனித்துள்ளார். அருண் பிரபா எழுதியிருக்கும் இந்தப் பாடலுக்கு தமிழில் அபிஜித் ஞரோலி மற்றும் ஸ்வேதா சுகதனும் மலையாளப் பதிப்பிற்கு அபிஜித் ஞரோலியும் குரல் கொடுத்துள்ளனர். ‘கடலோரக் கவிதை’யின் முதல் பார்வை போஸ்டர் இன்று வெளியாகி எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கிறது. இதுபோன்ற அடுத்தடுத்த உற்சாக அறிவிப்புகளைத் தெரிந்து கொள்ள ஒன்ட்ராகா என்டர்டெயின்மென்ட்டை…
Read Moreநந்தன் இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா
Era Entertainment தயாரிப்பில், Trident Arts ரவீந்திரன் வெளியிடும், இயக்குநர் இரா சரவணன் இயக்கத்தில், சசிகுமார் நடிப்பில் மாறுபட்ட களத்தில், மக்களின் அடிப்படை அரசியலை பேசும் சமூக அக்கறை மிக்க படைப்பாக உருவாகியுள்ள திரைப்படம் நந்தன். எதிர்வரும் இருபதாம் தேதியன்று உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகும் இப்படத்தின் டிரெய்லர் மற்றும் இசை வெளியீட்டு விழா இன்று படக்குழுவினர் கலந்துகொள்ள பத்திரிக்கை- ஊடக -பண்பலை- நண்பர்கள் முன்னிலையில் கோலாகலமாக நடைபெற்றது. இந்நிகழ்வினில் … ஒளிப்பதிவாளர் சரண் பேசியதாவது… முதலில் இந்த திரைப்படத்தில் பணிபுரிய அழைத்த, நண்பர், இயக்குநர் சரவணன் அவர்களுக்கு, நன்றி. இதற்கு முன் ‘கிடாயின் கருணை மனு’, ‘விழித்திரு’ திரைப்படங்களில் மட்டுமே பணியாற்றி இருந்தேன். அதைப் பார்த்துவிட்டு, என்னை அழைத்து இந்தப் படத்தில் பணியாற்றும் வாய்ப்பபை அளித்தார். அவருக்கு என் நன்றிகள். நடிகர் சசிகுமார் எனக்கு மிகவும்…
Read Moreஏஆர்எம் (அஜயண்டே ரண்டாம் மோஷனம்) விமர்சனம் 4/5
அஜயனின் ரெண்டாம் மோஷனம்’ (அஜயனின் ரெண்டாவது திருட்டு) என்பதன் மலையாள சுருக்கம் தான் ‘ஏ.ஆர்.எம்’. கதை… வான்வெளியில் இருந்து விழும் எரிகட்களைக் கொண்டு, சியோதி என்ற அதிசய விளக்கு செய்யப்படுகிறது. அது ஒரே குடும்பத்தைச் சேர்ந்த தாத்தா மகன் பேரன் ஆகியோர் கைகளில் சிக்கியது எப்படி அதனால் அவர்களின் குடும்பம் பாதிக்கப்பட்டது எப்படி என்பதை சுவையாக சொல்லி இருக்கும் படம். ஏஆர்எம் (அஜயண்டே ரண்டாம் மோஷனம்). கேரளாவில் ஒரு கிராமத்தில் வசிக்கும், அஜயன் களரியில் செம கில்லாடி.. மேலும் வாழ்வாதாரத்திற்காக எலக்ட்ரீசியன் பிளம்பர் பணிகளையும் செய்து வருகிறார்.. இவரது தாத்தா அந்த ஊரில் இருக்கும் பழம்பெரும் விலைமதிப்பில்லாத சியோதி விளக்கைத் திருடிச் சென்றதாக குற்றம் சாட்டுகின்றனர்.. இதனால் இவரது குடும்பம் மீது அந்த திருட்டுப்பழி தொடர்ந்து வருகிறது.. தலைமுறை தலைமுறையாக நீடித்து வரும் இந்தக் குற்றச்சாட்டை அஜயன்…
Read Moreசிபி சக்ரவர்த்தி – ஸ்ரீ வர்ஷினி சிபி திருமணத்திற்கு பின் பத்திரிக்கையாளர்களை சந்தித்தனர்!
எஸ்.கே. புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில் வெளிவந்த ‘டான்’ படம் மூலம் இயக்குநராக அறிமுகமான சிபி சக்ரவர்த்திக்கும் இன்ஃபோசிஸ் நிறுவனத்தில் சாஃப்ட்வேர் இன்ஜினியராக பணிபுரியும் ஸ்ரீ வர்ஷினிக்கும் இந்த மாதம் ஐந்தாம் தேதி ஈரோட்டில் திருமணம் இனிதே நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் திரையுலக பிரபலங்கள் பலர் கலந்து கொண்டு புதுமணத் தம்பதிகளுக்கு மனமார்ந்த வாழ்த்துகளை தெரிவித்தனர். திருமணத்திற்குப் பின் சிபி சக்கரவர்த்தியும் அவரது மனைவி ஸ்ரீ வர்ஷினி சிபியும் இன்று மதியம் பத்திரிக்கையாளர்களை சந்தித்தனர். ‘டான்’ படத்திற்கு பத்திரிக்கையாளர்கள் கொடுத்த ஆதரவிற்கு நன்றி தெரிவித்த சிபி, அடுத்த படத்திற்கும் பத்திரிக்கையாளர்கள் மற்றும் ரசிகர்கள் ஆதரவு தேவை என்றார். வெளியூரில் திருமணம் நடந்ததால் யாரையும் அழைக்க முடியவில்லை என்பதற்காகவே இந்த சந்திப்பு என்றார்.
Read More