அஜயனின் ரெண்டாம் மோஷனம்’ (அஜயனின் ரெண்டாவது திருட்டு) என்பதன் மலையாள சுருக்கம் தான் ‘ஏ.ஆர்.எம்’.
கதை…
வான்வெளியில் இருந்து விழும் எரிகட்களைக் கொண்டு, சியோதி என்ற அதிசய விளக்கு செய்யப்படுகிறது. அது ஒரே குடும்பத்தைச் சேர்ந்த தாத்தா மகன் பேரன் ஆகியோர் கைகளில் சிக்கியது எப்படி அதனால் அவர்களின் குடும்பம் பாதிக்கப்பட்டது எப்படி என்பதை சுவையாக சொல்லி இருக்கும் படம்.
ஏஆர்எம் (அஜயண்டே ரண்டாம் மோஷனம்).
கேரளாவில் ஒரு கிராமத்தில் வசிக்கும், அஜயன் களரியில் செம கில்லாடி.. மேலும் வாழ்வாதாரத்திற்காக எலக்ட்ரீசியன் பிளம்பர் பணிகளையும் செய்து வருகிறார்..
இவரது தாத்தா அந்த ஊரில் இருக்கும் பழம்பெரும் விலைமதிப்பில்லாத சியோதி விளக்கைத் திருடிச் சென்றதாக குற்றம் சாட்டுகின்றனர்.. இதனால் இவரது குடும்பம் மீது அந்த திருட்டுப்பழி தொடர்ந்து வருகிறது.. தலைமுறை தலைமுறையாக நீடித்து வரும் இந்தக் குற்றச்சாட்டை அஜயன் எப்படி சமாளித்தார்
இந்த நிலையில் கிராமத்து கோயிலைப் படமெடுக்க வந்திருக்கும் சுதேவ், அந்த அதிசய விளக்கை கொள்ளையடிக்க திட்டமிடுகிறார். அதன் பிறகு என்ன நடக்கிறது… என்பதுதான் மீதிக்கதை..
நடிகர்கள்…
Tovino Thomas, Krithi Shetty, Aishwarya Rajesh, Surabhi Lakshmi, Basil Joseph, Rohini, Harish Uthaman Nisthar Sait, Jagadish, Pramod Shetty, Aju Varghese, Sudheesh
இந்த ஒட்டுமொத்த படத்தையும் தாத்தா மகன் பேரன் என மூன்று பாத்திரங்களில் அருமையாக தோளில் சுமந்து ஏ ஆர் எம் படத்தை காவியமாக கொடுத்து கொடுத்திருக்கிறார் நாயகன் டோவினோ தாமஸ்.. அதிலும் அஜயன் மற்றும் மணியன் இரண்டு பாத்திரங்களிலும் அவரது நடிப்பு வேற லெவல் ரகம்..
தாத்தா மகன் பேரன் என மூன்று காலகட்டங்களில் இந்த படத்தை கதைக்களமாக அமைத்திருக்கிறார்.. அதற்கு ஏற்ப கலை இயக்குனர் தன்னுடைய முழு அர்பணிப்பை கொடுத்திருக்கிறார்.. முக்கியமாக மணியன் & அதுபோல அஜயன் கேரக்டரிலும் நாயகன் டோமினோ தாமஸின் உடல் மொழி சிறப்பான அம்சமாகும்..
நாயகிகளாக வரும் ஐஸ்வர்யா ராஜேஷ், சுரபி லட்சுமி, கீர்த்தி ஷெட்டி மூவரும், பாத்திரம் அறிந்து நடித்து உள்ளனர்.
பணக்கார வீட்டு பெண்ணாக கவர்கிறார் கீர்த்தி செட்டி.. நடிப்பில் பெரிய ஸ்கோப் இல்லை என்றாலும் தன் கண்களால் அழகான மொழி பேசி ரசிகர்களை கவர்கிறார்.. சுரபி லட்சுமியின் கதாபாத்திரம் சிறப்பானது.. மணியனின் மனைவியாக இவர் உணர்ந்து நடித்திருக்கும் பாத்திரம் பாராட்டுக்குரியது.
வில்லனாக வரும் ஹரீஷ் உத்தமன், பொற்கொல்லனாக ஜெகதீஷ், நாயகனின் தாயாக ரோகினி, நண்பனாக ஜோசப் படத்தின் கதை ஓட்டத்திற்கு பேரு உதவியாக இருந்திருக்கின்றனர்..
தொழில்நுட்ப கலைஞர்கள்…
கலை இயக்குநர் கோகுல் தாஸ்… ஒளிப்பதிவாளர் ஜோமன் டி.ஜான்…
கலை இயக்குனர் மற்றும் ஒளிப்பதிவாளர் ஆகிய இருவரின் அர்ப்பணிப்பை நீங்களே படத்தைப் பார்த்து வியந்து போவீர்கள்.
திபு நினன் தாமஸ் இசையில் ‘பூவே பூவே தாழம்பூவே’ பாடல் கவர்கிறது. பின்னணி இசை மிரட்டல் ரகம்.. தியேட்டரை விட்டு வெளியே வரும்போது கூட அந்த பின்னணி ஓசை ஒலித்துக் கொண்டே இருக்கும்
மக்களை யார் ஏமாற்றினாலும் அது ஒரு ஏமாற்று வேலை தான்.. ஆனால் அரசன் செய்தால் மட்டும் அதை ராஜதந்திரம் என்று சொல்கிறார்கள்.. அதற்கு ஏற்ப வசனங்களையும் வைத்திருப்பது சிறப்பு..
ஊர் மக்களுக்காக, அற்புத விளக்கை அரசிரடம் கேட்டுப் பெறுகிறார் தாத்தா.. ஆனால் அரசன் ஏமாற்றி விட்டார் எனும் போது தன் ஏமாற்றத்தை அழகான உடல் மொழியில் கொடுத்திருக்கிறார்.. அதன் பின்னர் அந்த விளக்கே அடைய அவர் போடும் திட்டங்களும் ரசிக்க வைக்கிறது..
ஒரு பாடல் காட்சியில் நாயகன் நாயகி தவிர அனைவரும் கேரளா கதகளி ஒப்பனை போட்டிருக்கும் அந்தப் பாடல் உருவான விதம் ரசிக்க வைக்கிறது..
ஒரு சிலையை கருவாக வைத்து 1900, 1950 மற்றும் 1990 ஆகிய மூன்று காலக்கட்டங்களில் பயணிக்கும் கதையை ஒரு ரசிக்க தகுந்த படைப்பாக கொடுத்திருக்கிறார் இயக்குநர் ஜிதின் லால்..
இத்துடன் கிராபிக்ஸ் காட்சிகளும் படத்தின் ஐ லைட்டாக கருதப்படும்.. காரணம் குறைந்த பட்ஜெட்டில் இப்படி ஒரு படத்தை கொடுக்க முடியுமா.? என வியக்க வைக்கின்றனர் தொழில்நுட்ப கலைஞர்கள்..
ஆக… ஓணம் பண்டிகைக்கு மலையாளிகளுக்கு ஏ ஆர் எம் படம் சிறப்பான விருந்தாகும்..